திங்கள், 16 ஆகஸ்ட், 2010

"அண்டம் கிடுகிடுங்க...

"அண்டம் கிடுகிடுங்க...
லண்டன் நடுநடுங்க...'
பறங்கியரை பதறவைத்த வீர பாடகிகள் தேவராஜன்
( 15.8.10 தினமலர்சுதந்திர தின சிறப்பிதழில் பிரசுரமான கட்டுரை)
ஆங்கிலேயரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து பாரத மாதா விடுதலை பெற உடல், பொருள், ஆவி தந்தோர் ஒன்றா, இரண்டா? கண்ணீரும், செந்நீரும் சிந்தியர்வர்களை விரல்விட்டு எண்ண இயலாது. ஆங்கிலேயரை எதிர்த்து பல முனை போராட்டங்கள் வெடித்தன.
இதில் பாட்டாலே ஆங்கிலேயரை பயமுறுத்திய பெண்மணிகள்
சுதந்திர போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில், தங்கள் குடும்ப நிகழ்ச்சியிலும், அரசியல் கூட்டங்களிலும் தேசபக்தி பாடல்கள் பாடி மக்கள் மனதில் சுதந்திர எழுச்சியை தட்டி எழுப்பினர்.
அந்நாளில் தேசபக்திப் பாடல்கள் பாடி, சுதந்திரக் கனலை ஊதி வளர்த்த பெருமைக்குரிய, பெயர் பெற்ற பெண்மணிகளில் கோதை நாயகி, கே.பி. சுந்தரம்பாள், டி.கே. பட்டம்மாள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் தங்களின் உணர்சி ததும்பும் குரலில், கணீரெனப்பாடும் தேசபக்தி பாடல்களால் ஈர்க்கப்பட்டு, உந்தப்பட்டு சுதந்திர போராட்டங்களில் குதித்த இளைஞர்கள் பட்டாளம் ஆயிரம்... ஆயிரம்!
பாட்டில் ராஜபாட்டை நடத்தும் பாரதியின் பாடல்களை சிறப்பாக பாடும் வல்லமை பெற்ற கோதை நாயகி காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் இவ்வம்மையார் பெயர் இடம் பெற்றாலே மக்கள் கூட்டம் அலைகடலென கூடும். மதுரகவி பாஸ்கரதாசர் இயற்றிய பாடல்களான "காந்தியோ பரம ஏழை சந்நியாசி' " தாயிடம் அன்பில்லாத ஜென்மம்' "வீணை நம்பிக்கை கொண்டோர் எல்லாம் ராட்டை சுற்றுவோம்' " காந்தி லண்டன் சேர்ந்தார்' போன்ற பாடல்களை கே.பி. சுந்தரம்பாள் அருமையான முறையில் இசைத்தட்டில் பாடி மக்களிடையே கொண்டு சேர்த்தார். பாரதியாரின் பாடல்களை சென்னை அரசு தø ட செய்ததை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டங்களில்" இவர் நெஞ்சு பொறுக்குதில்லையே!' என்ற பாடலைப் பாடி மக்களை வீறுகொண்டு எழச் செய்தார்.
உப்பு சத்யாக்கிரத்தை ஒட்டி காந்தி சிறை சென்ற போது" காந்தியோ பரம ஏழை சந்நியாசி' என்ற பாடல் இவரால் பாடப்பட்டு இசை தட்டில் பதிவு செய்து நாடெங்கும் பரப்பப்பட்டது.
1932ம் ஆண்டு பகத்சிங், இராச குரு, சுகதேவ் ஆகியோரை துõக்கிலிட்டு ஆங்கிலேயர் கொன்ற போது, அதை கண்டித்து எழுதப்பட்ட பாடலான "பகத்சிங், ராச குரு, சுகதேவ் சிறைவாயிலில் கண்ணீர் வடித்தாள் பாரத மாதா பெறற்கரிய பகவத் சிங், ராச குரு, சுகதேவைப் பிரிந்தே வருந்துகிறாள் நம் அன்னை' என்ற பாடலை கே.பி. சுந்தரம்பாள் பாடி இசைத்தட்டில் பதிவு செய்துள்ளார். இந்தப்பாடலை அரசு தடை செய்தது. இருப்பினும் தெரு முனை நாடகங்களில், நாடக கலைஞர்கள் மூலம் இந்தப் பாடலை நாடெங்கும் ஒலிக்க வைத்தார்.
எஸ்.ஆர். ரமாமணிபாய் பாடிய "ஆடு ராட்டே மகிழ்தாடு ராட்டே சுய ஆட்சியைக் கண்டோமென்றாடு ராட்டே' என்ற பாடல் மக்களிடையே தேச பக்தியை கிளரச் செய்து, கதராடை உற்பத்தி மூலம் சுய ஆட்சியை பெற முடியும்என்ற கருத்தை வலியுறுத்தியது.
மதுரை கண்ணம்பாள் பாடிய " சத்யமெங்குமே தளராநாடு இந்து தேசமதைப் புகழ்ந்துபாடு' என்று பாடினார்.
பண்டிதை அசலாம்பிகை அம்மையார் இயற்றிய நுõல்களான காந்தி புராணம் மற்றும் திலகர் புராணம் தேபற்றிற்கு உதாரணம் ஆகும்.
புகழ்பெற்ற ஹார்மோனியக் கலைஞரான எம்.ஆர். கமலவேணி பல தேசியப் பாடல்கள் பாடியவர். மக்களின் தேசிய உணர்வை துõண்டிய இவரது பாடல்களில் ஒன்று " அண்டம் கிடுகிடுங்க லண்டன் நடுநடுங்க அகிம்சை போர்த்தொடுத்தார் காந்தி மகான்' என்ற பாடல் வெள்ளையனை கிடுகிடுக்கவைத்தது.
டி.கே. பட்டம்மாள் சிறுவயதிலேய பாரதியின் பாடல்களைப்பாடி தேப்பற்றினை வளர்த்தார். " வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?'
"கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கினால் கை கொட்டி சிரியாரோ' என்ற பாடலைப்பாடி இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டார்.
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று' என்று பாரதியின் பாட்டைப் பாடிய எம். எஸ். சுப்புலட்மி அம்மையார் எண்ணற்ற விடுதலை வேட்கையூட்டும் பாடங்களையும், காந்தி புகழ்பாடும் பாடல்களைப் பாடி இந்திய சுதந்திரத்திற்கு உதவினார்.
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக