வியாழன், 10 ஜனவரி, 2013
மனப் பொங்கல்!
மனப் பொங்கல்!
*தை முதல் நாள்
தமிழர் திருநாள்
தமிழர் நெஞ்சங்களில்
அன்பை அறுவடை
செய்யும் இனிய நாள்.
*கவலைகளை அறுத்து
ஏமாற்றங்களை அடித்து
பகைமையை துõற்றி
மானுட நெல்விதையை
முத்து முத்தாய் எடுப்போம்.
*<நம்மை இந்நாளில்
புதிதாய் புதுப்பித்து
நேற்றை துயரங்களை
போகியில் பொசுக்கிடுவோம்.
*சுற்றங்கள் கூடி
ஏற்றங்கள் காண
சூரிய பொங்கல் வைப்போம்
அதில் கனவுகள்
அரிசியாய் சேர்ப்போம்
ஆசைகள் பால் வார்ப்போம்
நம்பிக்கைகள் எனும்
வெல்லாம் கலப்போம்
எல்லாம் சேர்ந்து
மன பானையில்
சந்தோஷமாய் பொங்கட்டும்
பொங்கட்டும் பொங்கட்டும்!
<
<*வாயில்லா ஜீவனுக்கும்
பொங்கல் வைப்போம்
மாடுகள் பசியாற
பசுமை எங்கும் காப்போம்!
பசுமையோடு இத்திருநாள்
நினைவுகள் மனதில் தங்க
சந்தோஷமாய் பொங்கிலிடுவோமே!
- தே.ச. சிவசண்முகம், திருக்கண்ணபுரம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக