சனி, 19 ஜனவரி, 2013
குட்டீஸ் கேள்வி பதில்38
குட்டீஸ் கேள்வி பதில்38
*26.10.2012
கழுகுப் பார்வை என்கிறார்களே, ஏன்?
- எஸ். சவுமியா, தேவனாங்குறிச்சி.
கூர்மையான பார்வைத்திறன் கொண்டவரை அவருக்கு கழுகுப் பார்வை என்று சொல்வதுண்டு.
கோல்டன் ஈகிள் என்ற பொன் கழுகு ஒரு முயலின் அசைவை 2 கி.மீ. உயரத்திலிருந்து கூடகண்டு கொண்டுவிடும் என்று தி கின்னஸ் புக் ஒப்ஸ் அனிமல் ரெக்கார்ட்ஸ் விளக்குகிறது.
கழுகினால் அந்தளவுக்கு கூர்மையாக பார்க்க காரணமாக இருப்பது கோல்டன் ஈகிளின் இரண்டு பெரிய கொட்டைக் கண்கள் அதன் தலையில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து விடுகின்றன. கோல்டன் ஈகிளின் கண்கள் எந்தளவுக்கு பெரியதாக இருக்க முடியுமோ அந்தளவுக்கு பெரிதாக இருக்கின்றன. அதே சமயம் இடைஞ்சல் உண்டாக்கும் அளவுக்கு அவை பெரிதாக இருக்கவில்லை என்று புக் ஒப் பிரிட்டிஷ்குறிப்பிடுகின்றது.
மேலும் நமக்குள்ளததை விட ஐந்து மடங்கு அதிகமான ஒளி உணர்வு செல்கள் கழுகின் கண்களில் உள்ளன. நமக்கு ஒரு சதுர மில்லி மீட்டரில் 2லட்சம் கூம்பு செல்களே இருக்கின்றன. கழுகிற்கு ஒரு கோடி கூம்பு செல்கள் உள்ளன. ஒவ்வொரு உள்வாங்கியும் ஒரு நியுரோனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கண்களிலிருந்து மூளைக்கு செய்திகளை சுமந்து செல்லும் கழுகினுடைய பார்வை நரம்பில் மனிதனுக்கு உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகமான நார்கள் காணப்படுகின்றன.
மேலும் சக்திவாய்ந்த லென்ஸ் உண்டு. இதனால் ஒரு அங்குலம் துõரமுள்ள பொருட்களில்இருந்து வெகு தொலைவில் உள்ள பொருட்கள் வரை எதையும் சட்டென ஜூம் செய்து பார்க்கக்கூடிய திறன் கழுகுக்கு உள்ளது.
*கண் சிமிட்டு ஏற்படுவது எதனால்?
- எஸ். திலகவதி, திருவாரூர்.
கண்கள் உலர்ந்து போகாமல் இருக்க ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள்தான் கண்கள் உலர்ந்து போவதில் காக்கின்றன. இமைகளின் விளிம்பில் 20முதல் 30 வரை சுரப்பிகள் உள்ளன. கண் சிமிட்டும் போதெல்லாம் கண் விழியை இவை ஈரப்படுத்துகின்றன.
கண்ணில் துõசு படியும்போது அதனை நீக்கவும் சிமிட்டல் தேவைப்படுகிறது. கண்ணீர் விடும்போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளில் இருந்து கண்ணீர் வருகிறது. இவைகளை நீக்கவும் கண் சிமிட்டல் தேவைப்படுகிறது.
***********************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக