சனி, 19 ஜனவரி, 2013
குட்டீஸ் கேள்விபதில் 11
குட்டீஸ் கேள்விபதில் 11
* கூடங்குளம் அணு உலை வி.வி.இ.ஆர் 1000 தொழில் நுட்பம் கொண்டது என்று படித்தேன். அதுபற்றி விளக்குங்க அங்கிள்!
- எஸ். திலகவதி, திருவாரூர்.
நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க. சபாஷ்!
கூடங்குளம் அணு உலை ரஷ்ய நாட்டின் வி.வி.இ.ஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
இதில் யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு பிளக்கப்படும் போது 2000 டிகிரி செல்சியஸ் வெப்பம் உருவாகிறது.
இது நீரின் கொதி நிலையான 100 டிகிரி செல்சியஸ்-ஐ விட 20 மடங்கு அதிகம். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உருவாக்கப்பட்டு, அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. மிக அதிக வெப்பம் உருவாவதால், இந்த அணு உலையைக் குளிர்விக்க கடலிலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரித்து உப்பு அகற்றி, நன்னீராக மாற்றி இந்த உலையில் பயன்படுத்தப்படுகிறது.
விவிஇஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தை தமிழில்
நீர்-நீர் ஆற்றல் அணுஉலை என்று கூறலாம்.
ஙணிஞீணி-ஙணிஞீதூச்ணணிடி உணஞுணூஞ்ஞுtடிஞிடஞுண்டுதூ கீஞுச்ஞிtணிணூ; ஙிச்tஞுணூ-ஙிச்tஞுணூ உணஞுணூஞ்ஞுtடிஞி கீஞுச்ஞிtணிணூ என்பதின் சுருக்கம் தான் விவிஈஆர் (ஙஙஉகீ) அல்லது ஙிஙிஉகீ.
இந்த தொழில் நுட்பம் அழுத்த நீர் அணுஉலை வடிவமைப்பில் அமைந்த ரஷ்ய அணுக்கரு உலைகளாகும்.
முன்னாள் சோவியத் யூனியன், இந்நாள் ரஷ்யாவில் உள்ள ஓகேபி கிட்ரோபிரெஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டவை.
இவற்றின் ஆற்றல்திறன் 440 Mஙிஞு முதல் 1200 Mஙிஞு வரை உள்ளன. இவ்வகை அணுமின் நிலையங்கள் ஆர்மீனியா , பல்கேரியா , சீனா , செக் குடியரசு, பின்லாந்து , அங்கேரி, இந்தியா, ஸ்லோவேக்கியா , உக்ரைன், மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
விவிஈஆர்-1000 தொழில் நுட்பம் 1975ம் ஆண்டில் உருவாக்கப்படது; இதில் கதிர்வீச்சுக் காப்புக் கட்டிடத்தில் நான்கு சுற்று அமைப்பும் நீராவி தெளிப்பு அடக்கு முறைமைகளும் இருந்தன. மேலும் மேற்கத்திய மூன்றாம் தலைமுறை அணுக்கரு உலைகள் போன்று தானியங்கி கட்டுப்பாடு, இயக்கியற்ற பாதுகாப்பு மற்றும் காப்புக் கட்டிட அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
*கங்காரு எவ்வளவு நாட்கள் குட்டியை தன் பையில் வைத்திருக்கும்?
- அ. முத்துமீனாள், திருச்சி.
கங்காரு பாலுõட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன.
இயற்கை அமைப்பின்படி கங்காரு குட்டி முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பே பிறந்துவிடுகின்றது. மீதி வளர்ச்சி எல்லாம் கங்காருவின் வயிற்றுப் பகுதியில்தான் நடக்கும். குட்டி, பிறந்த உடனேயே வயிறு வழியாக ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். அம்மாவின் பாலைத்தவிர மற்ற உணவை செரிக்கக்கூடிய திறன் வரும்போதுதான் உட்கொள்ளும். இத்திறன் வரும் வரை குட்டி அம்மாவின் பைக்குள்ளேயே தான் இருக்கும். குட்டியின் உடற் பகுதிகள் எல்லாம் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகுதான் கங்காரு, தன் குட்டியை கீழே இறக்கிவிடும்.
எப்போதாவது நரியோ, கழுகோ மற்ற விலங்குகளேமா பிடிக்க வரும்போது குட்டி ஓடி வந்து தன் தாயின் பைக்குள் ஒளிந்துகொள்ளும்.
குறைந்தது கங்காரு குட்டி ஒன்பது மாதங்கள் வரை தாயின் பையில் வளர்கிறது. பின்னர் தாயின் வயிற்று பையில் இருந்து வெளிவருகின்றது.
*குதிரை நின்று கொண்டுதான் துõங்குமாமே! உண்மையா?
- எம். சுபலேகா, சத்தியமங்கலம்.
உண்மை தான்! குதிரைகள் எப்போதும் நின்றவாறேதான் துõங்கும். நின்று கொண்டே துõங்குவதால் அவற்றின் உறுதியான கால் தசைநார்கள் களைப்படைந்து போகும் நேரத்தில் அவை சுதாரித்துக் கொண்டு விடும். குதிரைகள் நின்றுகொண்டே துõங்கினால்தான் அவைகளுக்கு நிம்மதியான துõக்கம் கிடைக்கிறது என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
********************************************************************************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக