சனி, 19 ஜனவரி, 2013
குட்டீஸ் கேள்வி பதில்33
குட்டீஸ் கேள்வி பதில்33
21.9.2012
*நிலவில் முதலில் கால்பதித்த ஆம்ஸ்ட்ராங் நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரே! அவரைப்பற்றி கூறுங்கள் அங்கிள்!
- எல். ஸ்ரீமதி, திருச்சி.
நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82வது வயதில் காலமானார்.
அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில்உள்ள வாபா கோனெட்டா என்ற சிறிய நகரில் பிறந்த ஆம்ஸ்ட்ராங், புருடியூ பல்கலைகழகத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். பின்னர் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விமானியாக பணியில் சேர்ந்தார்.
நாசா விண்வெளி ஆராய்ச்சிமையம் நிலவு குறித்த பல சோதனைகள் மேற்கொண்டு வந்தது.
இதற்காக அப்பல்லோ விண்கலம் தயார் செய்யப்பட்டது. அப்பல்லோ 11 என்ற விண்கலம் மூலம் விண்ணில்பறந்தார்.
நிலவில் இறங்கி நடக்க துவங்கியதை அடுத்து 20 நிமிடங்களுக்கு பின்னர் தன்னுடைய சக விஞ்ஞானியான புஷ் ஆல்ட்ரின் உடன் இணைந்து கொண்டுநடந்து சென்று நிலவின் ஈர்ப்பு சக்தி மற்றும்பாறை மாதிரிகள் மற்றும் போட்டோக்களை எடுத்து கொண்டார்.
பூமிக்கு திரும்பிய ஆம்ஸ்ட்ராங் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சிமற்றும்தொழில் நுட்பபிரிவில் ஆலோசகராக பணிபுரிந்தார். சின்சினாட்டி பல்கலை கழகத்தில் இன்ஜினியரிங் பாட பரிவில் பேராசிரியராக பணிபுரிந்தார்.
* பெண்களுக்கு தலையில் வழுக்கை விழுவதில்லை, ஏன்?
- ஏ. சந்தான லட்சுமி, வாழைப்பந்தல்.
பெரும்பாலும் வழுக்கை ஆண்களுக்கே விழுகிறது. பெண்களுக்கும் வழுக்கை விழுவதில்லை என்று உங்களைப்போல பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பெண்களுக்கு வழுக்கை விழுவதில்லை என்று சொல்வது தவறு. ஆண்களுக்கு வழுக்கை விழுவது போல, பெண்களுக்கும் வழுக்கை விழவே செய்கிறது. அதில் என்ன வித்தியாசம் என்றால் பெண்களுக்கு விழும் வழுக்கை ஆண்களுக்கு விழும் வழுக்கை போல இருக்காது.
ஆண்களுக்கு வழுக்கை விழுந்தால் தலையச் சுற்றி மட்டும் முடி இருக்கும். மற்றபடி உச்சிமண்டையில் முடியில்லாமல் வழுக்கையாக இருக்கும்.
ஆனால், பெண்களுக்கு முன்னாடி கொஞ்சம் முடி இருக்கும். நடுவில் காலியாகிவிடும். பின்னாடி கொஞ்சம் முடி இருக்கும். பார்த்தால் வழுக்கை இருப்பது வெளியே தெரியாது. அவ்வளவுதான்!
ரத்த வகையில் ஆர் எச் வகைப்பிரிவு ரத்தம் பற்றி சொல்லுங்க அங்கிள்!
- எஸ். சவுமியா, தேவனாங்குறிச்சி.
ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு அதே ரத்தபிரிவு வகையை செலுத்திய போதும் சில பிரச்னைகளும் பல எதிர்விளைவுகளும் ஏற்பட்டன. இதை கண்டுபிடித்த மருத்துவ அறிஞர்கள் ரத்தம் சம்பந்தமான தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். அப்படி கண்டுபிடிக்கப்பட்டதுதான். ஆர்எச்(கீட) ரத்த வகைகள்.
அ, ஆ, அஆ, O ரத்த வகைகள் 1900லும், ஆர்எச் ரத்த வகைகள் 1940லும் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆர்எச் புதிய ரத்த வகையானது கீடஞுண்தண் என்ற குரங்கிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் ஆர் எச் குரூப் என்று பெயரிடப்பட்டது. இது ஆர்எச் பாசிட்டிவ் குரூப் என்றும் ஆர்எச் நெகட்டிவ் குரூப் என்றும் பிரிக்கப்பட்டது.
இதன் பின்னர், ஏ வகை ரத்தம் உள்ள ஒருவருக்கு ஏ வகை ரத்தம் செலுத்தும்போது ஆர்எச்வகையும் ஒற்றுமையாக அமைய வேண்டும் என்ற புதிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது.
அதாவது அ வகையினர் கீட+ ஆக இருந்தால் அவர்களுக்கு அ வகை கீட+ ரத்தம்
தான் கொடுக்க வேண்டும். கீட நெகடிவ் உள்ளவருக்கு கீட நெகடிவ் ரத்தமே சேரும்.
****************************************************************************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக