சனி, 19 ஜனவரி, 2013
குட்டீஸ் கேள்வி பதில் 26
குட்டீஸ் கேள்வி பதில் 26
*பறவைகளுக்கு பற்கள் இல்லை. ஆனால் எப்படி உண்கின்றன? 3/8/2012
- வே. பழனிவேல், காட்டூர்.
கோழி, புறா,குருவி, வாத்து, வான்கோழி, ஈமு
போன்ற பறவைகள் விதைகள், தானியங்கள் போன்ற கடினமான
உணவுப் பொருட்களை சாப்பிடுகின்றன என்பது உண்மைதான். ஆனால்,அவை பற்கள் உதவிகொண்டு கூழாக்கிச் சாப்பிடாமல், கடினமான உணவுகளை வேறுவகையில் ஜீரணிக்கின்றன.
உடற்கூற்றின்படி, பறவைகளின் வயிற்றின் கீழ்ப்பகுதியில் கிஷார்ட் (எடித்த்ச்ணூஞீ) என்ற விஷேச உறுப்பு அமைப்பு இருக்கிறது.
மனிதர்களின் வாயில் பற்களின் உதவியால் கடித்து, அரைத்து கூழாக்கி
விழுங்குவதற்கு இணையான, உணவைக் கூழாக்கி செரிமானத்துக்கு தயார்
செய்வது இந்த உறுப்பின் வேலையாகும்.
கடைவாய்ப் பற்களின் பணியைச் செய்யும் கிஷார்ட் பகுதி பறவைகள் விழுங்கும் சிறுசிறு கூழாங்கற்களையும், மணற்துகள்களையும் பயன்படுத்தி கடினமான உணவுகளை உடைத்து செரிமானத்திற்கு
தயார்ப்படுத்துகிறது.
சில நாட்களுக்கு ஒருமுறை தேய்மானமான கற்களைக்
கழிவாக கழித்துவிட்டு, புதிதாக கற்களையும், மணலையும் உணவுடன்
எடுத்துக் கொள்கிறது.
இந்த கிஷார்ட் பகுதி தடிமனான தசைகளால் ஆனது. இதன் உட்புறத்தைப்
பாதுகாக்கவும், செரிமானத்திற்கும் என்சைம்ஸ் இருக்கும்.
ஒரு சில பூச்சியினங்களின் பகுதியில் கடினமான செதில்களும், சிறு சிறு பற்கள் போன்ற அமைப்பும் இருப்பதுண்டு. எனவே பறவைகளுக்கு கிஷார்ட் உறுப்புதான் பற்களாக செயல்பட்டு உணவு செரிமாணத்துக்கு உதவுகின்றது.
*கத்தரிக்காய், காயா அல்லது பழமா ?
- ஆர். கீதாவாணி, நாமக்கல்.
எவை எல்லாம் விதைகளைக் கொண்டிருக்கிறதோ அவை எல்லாம்
பழம் வகையைச் சார்ந்தது என்பது தாவரவியல் கோட்பாடு . எனவே, இந்த வரையறைப்படி பார்த்தால் கத்திரி பழம்தான்.
அது போல தக்காளி, வெள்ளரி ஆகியவையும் பழம்தான்.
கத்தரிக்காய், தக்காளிக்காய், வெள்ளரிக்காய் என்று சொல்வதே பழக்கமாக இருப்பதால், இவற்றைப் பழம் என்று சொல்லும் பழக்கம் பரவலாகயில்லை.
*கிரிக்கெட்டில் ‘டாஸ்’ போடும் பழக்கம் எப்படி வந்தது?
- வ.கி. நாகராஜன், வடக்காலத்துõர்.
கிரிக்கெட் நம் நாட்டு பாரம்பரிய விளையாட்டு இல்லை. அது இங்கிலாந்துகாரர்கள் கண்டுபிடித்த விளையாட்டு.
இந்த விளையாட்டில் யார் முதலில் விளையாடுவது என்பதை தீர்மானிக்க பூவா, தலையா- டாஸ் போட்டு பார்க்கும் பழக்கம் கிரிக்கெட்டில் இருந்து வருகிறது.
ஜூலியஸ் சீசர் காலத்தில் உபயோகத்தில் இருந்த நாணயத்தில் அவரின் தலை ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் சூழ்நிலை வந்தால் அப்போது பேரரசர் இல்லாத போது அவரின் சார்பாகவும், கடவுளின் சாட்சியாகவும் நாணயத்தைத் துõக்கிப் போட்டு மேல் பாகத்தில் தலை பக்கம் விழுந்தால் சரியா ? தவறா ? என இவர்கள் கேட்ட கேள்வியின் பதிலாக எடுத்துக் கொண்டார்கள். அந்த பழக்கம் தொடர்ந்து கடைசியில் கிரிக்கெட் விளையாட்டு வரை வந்து விட்டது.
******************************************************************************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக