சனி, 19 ஜனவரி, 2013
குட்டீஸ் கேள்வி பதில்40
குட்டீஸ் கேள்வி பதில்40
16.11.2012
*சீனப்பெருஞ்சுவரை கட்டியவர், காலம், அதன் நீளம் பற்றி விளக்கமா சொல்லுங்க.
- பெ. காவியா, செம்மாண்டப்பட்டி.
ஜி.கே. மோகன சுந்தரன், பெரணமல்லுõர்.
ஆறாம் நுõற்றாண்டிலிருந்து மங்கோலியாவில் இருந்தும், மஞ்சூரியாவில் இருந்தும் வந்த ’சியோங்னு’களின் படை எடுப்புகளிலிருந்து
சீனப் பேரரசைக் காப்பதற்காக, சீனாவின் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட நீண்டஅரணே சீனப் பெருஞ்சுவர் என்று சொல்லப்படுகிறது.
இந்த பெருஞ்சுவர் ஒரே காலக்கட்டத்தில், ஒருவரால் கட்டப்பட்டது அல்ல. பல காலப்பகுதிகளில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அல்ல; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே ஆகும்.
பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது. இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருந்தது.
சீனப் பெருஞ்சுவர் யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது.
மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது
இந்த சுவர்ப்பகுதியில் 10 லட்சம் படையினர் வரை காவலில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நுõற்றாண்டுகளாக இடம் பெற்ற இந்த சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 30 லட்சம் பேர் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.
*ஈசல் பற்றி சொல்லுங்க அங்கிள்!
- ஆர். ஸ்ரீஜாராம்குமார், ஸ்ரீரங்கம்.
மழைக்காலத்தில், வயது முதிர்ந்த கறையான்கள் இறக்கை முளைத்து, ஈசல்களாக வெளியில் வந்து, கொஞ்ச நேரத்திலேயே இறக்கையை இழந்து, ஒரே நாளில் உயிரை விட்டுவிடும்.
கறையான்கள் கூட்டமாக வாழும் இயல்புடைய ஒரு சமுதாய பூச்சி வகையாகும். இவை தனித்து வாழாமல், கூட்டமாக வாழும் இயல்புடையது. கறையான் கூட்டத்தில் 500 முதல் 5 லட்சம் வரை கறையான்கள் இருக்கும்.
கறையான்கள் முதிர்வடையும் போது, ஈசல்கள் எனப்படுகின்றன. ஈசல்களின் முன்பின் இறக்கைகள் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியாக இருப்பதால், இவைகளைச் சமஇறகிகள் என்ற உயிரினவரிசையில் தொகுத்துள்ளனர்.
இவை எறும்புகளைப் போல காணப்பட்டாலும், உயிரின வகைப்பாட்டின்
கறையான்கள், எறும்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன.
*வவ்வால்கள் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்?
- எஸ். தையல்நாயகி, வடக்காலத்துõர்.
வவ்வால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும்.
அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது. அதனால், வவ்வால்களால் நீண்ட நேரம் நிற்கவோ நடக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது. தலைக் கீழாகத் தொங்குவது வவ்வால்களுக்கு வசதியாக இருக்கிறது. ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. தொங்கும் போது
அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதான விஷயமாக உள்ளது.
*******************************************************************************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக