சனி, 19 ஜனவரி, 2013
குட்டீஸ் கேள்வி பதில் 24
குட்டீஸ் கேள்வி பதில் 24
ஜூலை20
*தண்ணீரில் இருக்கும் மீனை தரையில் போட்டால் துடிதுடித்து இறந்துவிடுவது ஏன்?
- கூ. சீனிவாசன், திருச்சி.
ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ இயற்கையாகவே சில உடலமைப்புடன் படைக்கப்பட்டுள்ளன.
தரையில் ஒரு உயிரினம் உயிர்வாழ சுவாசிக்க வேண்டும். சுவாசிப்பதற்கு நுரையீரல் உறுப்பு வேண்டும். மீனுக்கு நுரையீரல் கிடையாது. அதனால் தரையில் மீனைப்போட்டால் சுவாசிக்க முடியாமல் இறந்துவிடுகிறது.
ஒரு பூனையைப் பிடித்து நீரில் மூழ்கடித்தால் அது தண்னீரில் சுவாசிக்க முடியாமல் இறந்து விடும். ஒரு செடியை நிலத்திலிருந்து பிடிங்கி தரையில் போட்டால் அது விலங்குகள் போல உணவை தேடிசெல்ல முடியாமல் இறந்து விடும். இப்படி ஒரு மாற்றுச் சூழ்நிலையை சந்திக்கும் போது தாக்குப்பிடிக்க முடியாமல் விலங்குகளும் தாவரங்களும் இறந்துவிடுவது இயற்கை.
*மழைக்காலங்களில் மட்டும் மரங்கள் அதிகம் துளிர்விடுவது எப்படி?
- ச. சந்தானகிருஷ்ணன், ஓசூர்.
தாவரங்கள் உயிர்வாழ பூமியில் இருந்து நீரை உறிஞ்சுகின்றன. அப்படி உறிஞ்சும் நீரின் அளவை சம நிலையில் வைத்துக் கொள்வதற்காக, நீராவிப்போக்கு என்னும் செயலைச் செய்கின்றன. அப்படி சம நிலையில் வைத்து கொள்ளவில்லை என்றால் தாவரங்கள், மரங்கள் அழுகி இறந்துவிடும்.
மரங்கள் உறிஞ்சும் நீரை நீராவிப்போக்கை இலைகளின் வழியாக செய்கின்றன.
வெயில் காலத்தில் மரத்தைச் சுற்றி எவ்வளவு நீர் ஊற்றினாலும் சுற்றுப்புறத்திலுள்ள வெப்பத்தின் காரணமாக, நீரின் அளவு அதைப் பாதிப்பதில்லை. அதோடு அதிக இலைகள் இருந்தால் இருக்கின்ற நீரையும் அவை வெளியேற்றிவிடும்.
ஆனால் மழைக்காலத்தில் சுற்றுப்புறத்திலும், வேருக்கு அடியிலும் தேங்கி நிற்கும் தண்ணீரை அவை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. எனவே விரைவில் துளிர்த்து இலைகளின் வழியாக நீரை வெளியேற்றுகின்றன.அதனால் தான் வெயில் காலத்தைவிட மழைக் காலத்தில் மரங்கள் விரைவாகத் துளிர்க்கின்றன.
*சாப்பிட்டப்பிறகு துõக்கம் வருவது ஏன்?
எம்.சுப்ரமணி, அசநல்லிகுப்பம்.
பொதுவாக நம் உடலின் ரத்த ஓட்டத்தில் 40 சதவீதம் மூளைக்கு, அதாவது தலைப்பகுதிக்கு போய்விடும். சாப்பிட்டவுடன், செறிமானம், மற்றும் உட்கிரகித்தலுக்குகாக அதிக ரத்தஓட்டம் வயிற்றின் பக்கம் திருப்பப்படும். எனவே மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதனால் ஒரு மந்தமான நிலை ஏற்படும். அதுவே துõக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
சாப்பிட்ட பிறகு துõக்கம் வருவது இயல்பு. ஆனால் அதன் செரிமானத்தின் இறுதியில் உற்சாகம் சுறுசுறுப்பு போன்றவை வரவேண்டும்.
ஆனால், தினமும் சாப்பிட்டப்பிறகு துõக்கம் வரும் பழக்கம் இருந்தால் உடல் அளவில் சிறுகுறைபாடு இருப்பதாக அர்த்தம்.
சாப்பிட்டப்பிறகு, அரை ஸ்பூன் சீரகம், ஓமம், சோம்பு, ஏலக்காய் விதை, கிராம்பு ஆகியவற்றை கொஞ்சம் வாயில் போட்டு மென்று அதிலிருந்து வரும் சாற்றை எச்சிலுடன் விழுங்கினால் இவற்றிலுள்ள சூடான வீரீயம் உணவை வயிற்றில் அதிக நேரம் தேங்கவிடாமல் விரைவாக செரிக்க செய்துவிடும். அதனால் துõக்கம் வருவது தடுக்கப்படும்.
*******************************************************************************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக