சனி, 19 ஜனவரி, 2013
குட்டீஸ் கேள்வி பதில் 25
27.7.2012
*சிறு எடை உள்ள ஆணி நீரில் மூழ்கிவிடுகிறது. அதிக எடையுள்ள கப்பல் எப்படி மிதக்கிறது?
- பி. ஆபித், கிருஷ்ணகிரி.
தண்ணீரில் விழும் ஒரு பொருள் தனது எடைக்கு சமமான நீரை இடம் மாற்றினால், அது மிதக்கும் ; ஒரு பொருளின் எடை அது இடம்மாற்றும் நீரின் எடையைவிடக் குறைவாக இருந்தால், அது மூழ்கிவிடும். இது ஒரு அறிவியல் விதி.
தண்ணீரைவிட காற்றின் அடர்த்தி குறைவு . எனவே, காற்றைக் கொண்டிருக்கும் பொருட்களும் தண்ணீரில் மிதக்கும் .
கப்பலின் வடிவமைப்பு, அது தனது எடைக்கு சமமான கடல் நீரை இடம்மாற்றும் வகையில் உள்ளது . அதோடு , கப்பலுக்குள் காற்றோட்டமும் உள்ளது . இதனால் , கடலில் கப்பல் மிதக்கிறது .
சிறிய இரும்பு ஆணி தமது எடைக்கு சமமான நீரை இடம்மாற்றும் வகையில் இல்லை . அவை தமது எடையை விடக் குறைந்த எடையிலான நீரையே இடம் மாற்றுகின்றன . அவற்றுக்குள் காற்றோட்டமும் இல்லை . இதனால் , அவை கடலில் மூழ்கிவிடுகின்றன.
*ஆன் லைன் ஷாப்பிங் என்றால் என்ன?
-எல். ஸ்ரீராம், திருச்சி.
இணையம் மூலம் ஒரு பொருளை வாங்குவதும், விற்பதும் இன்றைய தேதியில் ஒரு ஆச்சரியகரமான விஷயமே அல்ல!
தினம் ஒரு ஷாப்பிங் தளம் புதியதாய் உருவாகிக் கொண்டிருக்கிறது! ரயில் ,பிளைட் டிக்கெட் புக்கிங் முதல், காலணிகள், ஆடைகள், கண்ணாடிகள், கம்ப்யூட்டர் பாகங்கள், சுற்றுலா பயணங்கள், பூக்கள், மளிகை சாமான்கள், மொபைல்கள், புத்தகங்கள், பர்னிச்சர்கள் இப்படி ஆன் லைனில் ஷாப்பிங் பண்ணலாம்.
இச்சேவைகளை வழங்கும் அனைத்து தளங்களும் நம்பத்தகுந்தவைதானா? அவ்வாறு வாங்கிடும் அனைத்து சேவைகளும், பொருட்களும் சிறந்தவைதானா? இணையத்தில் கிடைக்கும் கவர்ச்சிகர சலுகைகள் நிஜம்தானா? இணையம் மூலம் பண பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதுதானா? என்பதை எல்லாம் நீங்கள்தான் தீர்மானித்து கொள்ள வேண்டும்.
*நாக்கில் நரம்பு இல்லாம பேசாதே! என்கிறார்களே, நாக்கிற்கு நரம்பு உண்டா, இல்லை?
-ஆர். நிஜா ராம்குமார், ஸ்ரீரங்கம்.
நம்முடைய நாக்கு என்பது, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை.
இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றார்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும் தரும் உறுப்பு. உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்கு. நாக்கு பலவாறு வளையவல்லது, எனவே பேசுவதற்கும் துணை செய்கின்றது. வாயில் ஊறும் உமிழ்ந்நீரினால் நாக்கு எப்பொழுதும் ஈரமாக இருக்கும். நாக்கின் மேற்புறத்தில் உள்ள நுண்புடைப்புகளில் நான்கு வகையான நுண்புடைப்புகள் உள்ளன. சுவையுணர் நுண்புடைப்புகளுக்கு நாமுடிப்பு என்று பெயர்.
நாவின் நுண்புடைப்புகளாகிய நாமுடிப்புகளின் நான்கு வகைகளில் ஒருவகையான நாமுடிப்பு மெல்லிய இழைபோல் உள்ளது ( டிடூடிஞூணிணூட்) , இன்னொருவகையான நாமுடிப்பு, நாய்க்குடை அல்லது காளான் போல் தலைப்பகுதி பருத்து உள்ளது (ஞூதணஞ்டிஞூணிணூட்). மூன்றாவது வகை நாமுடிப்பு ஒரு வளையம் போன்ற வடிவில் உள்ளது. இதுவே நாமுடிப்புகளில் பெரியது (ஞிடிணூஞிதட்திச்டூடூச்tஞு). நான்காவது வகை தட்டையாக உள்ளது (ஞூணிடூடிச்tஞு).மற்றபடி நாக்கில் நரம்புகள் கிடையாது.
****************************************************************************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக