சனி, 19 ஜனவரி, 2013
குட்டீஸ் கேள்வி பதில் 32
குட்டீஸ் கேள்வி பதில் 32
* சுண்ணாம்பில் நீர் ஊற்றினால் புகை வருவதேன்? 14/9/12/
- மதி தேவதர்ஷன், கயத்துõர்.
நாம் பயன்படுத்தும் சுண்ணாம்பு சுட்ட சுண்ணாம்பு. இதன் அறிவியல் பெயர் கால்ஷியம் ஆக்ஸைடு. சுட்ட சுண்ணாம்பில் தண்ணீரை ஊற்றும் போது, கால்ஷியம் ஆக்ஸைடும் நீரும் சேர்கிறது. இதனால் கால்ஷியம் ஹைட்ராக்ஸைடு உண்டாகிறது. கால்சியம் ஆக்ஸைடும் நீரும் சேரும்போது நிகழும் வேதிவினையில் வெப்பம் வெளிப்படுகிறது. அப்போது நீரின் ஒரு பகுதி நீராவியாக மாறும். கூடவே சுட்ட சுண்ணாம்புத் துõள்களும், நீராவியோடு கலந்து வருவதால் புகை மண்டலம் போல் காட்சி தருகிறது. இது தான் சுண்ணாம்பில் தண்ணீர் ஊற்றினால் புகைபோல வருகிறது. இந்த கால்ஷியம் ஹைட்ராக்ஸைடு நீர்மத்தை சுவரில் பூசிய பின், அது காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு உடன் வினை புரிந்து கால்ஷியம் கார்பனேட்டாக மாறுகிறது. இது சுவருக்கு வெண்மையைக் கொடுக்கும்.
* பியானோவை கண்டுபிடித்தவர் யார்? அதன் விவரங்கள் தேவை.
- ஜே. கிருத்திகா, திருவெறும்பூர்.
பியானோ இசைக்கருவி முதன் முதலில் இத்தாலியில் தோன்றியது. கடிச்ணணி என்கிற ஆங்கில சொல் இத்தாலிய மொழியிலிருந்து வந்தது. பியானோ என்பது பியானோபோர்டே என்பதன் சுருக்கம்.
பியானோ முதன்முதலில் 1700ல் கிறிஸ்திபோரி என்கிற இத்தாலியரால் உருவாக்கப்பட்டது. இவர் வடிவமைப்பில் இசைக்கருவியின் நரம்புகள் சுத்தியல்களால் அடிக்கப்பட்டு விடப்பட்டன.
1790 லிருந்து 1860க்குள் பியானோவில் பயன்படுத்தும் நரம்புகளின் தரம் மிகவும் உயர்ந்தது. நரம்புகள் எஃகினால் கட்டப்பட்டது. பியானோவில் உள்ள இரும்புச் சட்டங்கள் துல்லியமாக வார்ப்படமிடப்பட்டது. ஒலிநீடிப்பும் மேம்படுத்தப்பட்டது. 1821ல் எரார்டு இரட்டை விடுவிப்பு முறையை (ஞீணிதஞடூஞு ஞுண்ஞிச்ணீஞுட்ஞுணt) உருவாக்கினார். இதனால் ஒரு சுரத்தின் மறுவிசைவு மற்றும் வாசிக்கும் வேகம் அதிகப்பட்டது. 1820க்குள் பியானோவில் 7 சுரங்கள் வருமாறு உருவாக்கப்பட்டன.
* பிறக்கும் போதே தலையில் கொம்புடன் பிறக்கும் விலங்கு உண்டா?
- எஸ். சவுமியா, தேவனாங்குறிச்சி.
பொதுவாக விலங்குகளுக்கு பிறந்த பிறகுதான் கொம்பு முளைக்கின்றது. விதிவிலக்காக ஒட்டசிவிங்கிகளுக்கு பிறந்தபோதே கொம்புகள் காணப்படுகின்றது.
ஆண், பெண் என பேதம் இல்லாமல் ஒட்டசிவிங்கிகளுக்கு இரண்டு எலும்பினால்ஆன குட்டை கொம்புகள் தோலால் போர்த்தப்பட்டு காணப்படுகின்றன.
ஆண் ஒட்டகசிவிங்கிக்கு பெரிய கொம்பு, அதில் குஞ்சம் இருக்காது!
பெண் ஒட்டகசிவிங்கிக்கு சிறிய கொம்பு! அதில் குஞ்சம் போல் முடி அலங்காரம் இருக்கும்.
பிறக்கும் போதே கொம்புகளோடு தோன்றும் விலங்கினம் என்ற பெருமை ஒட்டசிவிங்களுக்கு இருக்கிறது.
********************************************************************************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக