இதுவும் புண்ணியம்தான்!/88/
ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்றார்கள் முன்னோர்கள்.
நாம் தினமும் ஆலயம் சென்று வணங்குகிறோமா, என்ன? எல்லாராலும் தினமும் ஆலயம் சென்று, இறைவனை வணங்கி வருவது என்பது இக்காலத்தில் இயலாத செயலாக இருக்கிறது. அதற்கு பல பணி நிமித்த காரணங்கள் இருக்கிறது.
தினமும் ஆலயம் சென்று இறைவனை தரிசிக்க இயலாத சைவர்கள்
வாரத்தில் திங்கள் கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளிலும், மாதத்தில் பிரதோஷம் , பவுர்ணமி , அம்மாவசை , திருவாதிரை , கார்த்திகை , மாசப்பிறப்பு , சூரிய கிரகணம் , சந்திர கிரகணம் , சிவராத்திரி , நவராத்திரி , விநாயக சதுõர்த்தி , விநாயக சஷ்டி , கந்த சஷ்டி முதலிய புண்ணிய காலங்களிலாவது தவறாது ஆலய சென்று இறைவனை தரிசனம் செய்தல் வேண்டும். அப்படி செய்து வந்தால் புண்ணியம் உண்டு என்று ஆலய தரிசன விதி சொல்கிறது.
சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ள புண்ணிய தீர்த்தத்தில் குளித்து, உடைகளை தோய்த்து, அதை உலர்த்தி அணிந்து கொண்டு சுத்தமாக கோயிலுக்கு போதல் வேண்டும். அப்படி போகும் போது சும்மா கை வீசிக்கொண்டு செல்லாமல் ஒரு பாத்திரத்திலே தேங்காய் , பழம் , பாக்கு , வெற்றிலை , கற்பூரம் , பத்திர புஷ்பம் , முதலியன எடுத்துக்கொண்டு போதல் வேண்டும். கோயில் அருகே வந்ததும் ஸ்துõல லிங்கமாகிய திருக்கோபுரத்தை வணங்கி, இரண்டு கைகளையும் தலைமேல் குவித்துக் கடவுளை மனதிலே தியானித்துக் கொண்டே உள்ளே சென்று, பத்திர லிங்கமாகிய பலிபீடத்தின் அருகே நமஸ்காரம் செய்ய வேண்டும்.
கோயிலுக்கு செல்வது மட்டுமல்ல; கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் இறைவனை நம் வீட்டு விருந்தினர் போலப் பாவித்து பதினாறு வகையான பணிவிடைகள் செய்யலாம். அப்படி செய்வதிலு<ம் புண்ணியம் உண்டு.
பதினாறு வகையான பணிவிடைகள் எவை என தெரிந்து கொள்ளுங்கள்:
ஆசனம் -அமர்வதற்கு தவிசு அளித்தல் .
பாத்யம் - கால் அலம்ப நீர் தருதல் .
அர்க்யம் -கை கழுவ நீர் கொடுத்தல் .
ஆசமனீயம் - பருகுவதற்கு நீர் வழங்குதல் .
அபிஷேகம் -திருமுழுக்கு நீர் ஆட்டுதல் .
வஸ்திரம் - அணிந்து கொள்ள ஆடைகள் வழங்குதல் .
கந்தம் -நறுமணப் பொருட்கள் தருதல் .
புஷ்பம் - மலர் மாலைகள் சூட்டுதல் .
துõபம் -அகில் சந்தனம் முதலிய நறுமணப் புகையிடுதல் .
தீபம் -ஒளி விளக்குகள் ஏற்றி மும்முறை வலமாகச் சுற்றுதல்.
இந்த பதினாறு வகையான பணிவிடைகள் செய்வதும், கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் நாம் வாழும்போதே தேடிக் கொள்ளும் புண்ணியச் செயல்களாகும். மனிதர்களாகப் பிறந்த நாம் கட்டாயம் செய்ய வேண்டியதுமான இந்தப் புண்ணியச் செயல்களை இன்று முதல் செய்யலாமே!
- தேவராஜன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக