கண்களை இமைப்பதன் ரகசியம்
மழை பெய்யும் பொழுது கார், பஸ்சில் சென்றால் நாம் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம்.
காரின் கண்ணாடியில் இருக்கும் ‘வைப்பர்’ அசைந்து அசைந்து கண்ணாடி மீது விழும் நீர்த் துளிகளைத் துடைத்து , டிரைவர் தெளிவாகப் பார்க்க உதவுகிறது. இந்த வைப்பர் நம் கண்
இமைகளுக்கு நிகரானது.
நம் கண் இமைகள் மேலும் கீழும் அசைந்து வைப்பரை போல் பணிபுரிகின்றன.
மெல்லிய தோலால் ஆன இமைகள் நமது பார்வையைத் தடுக்காதபடி அவ்வளவு
வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே தமது பணியைச் செய்கின்றன.
ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். அதாவது மனிதன் தன்
வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான்.
இமையில் உள்ள முடிகள் விரிவாக அமைந்தவை. அதன் பணி, துõசுகள்
கண்ணில் விழாமல் பாதுகாப்பதே. மழை பெய்யும்போதோ, காற்று மணலைச் சுற்றி
வீசும்போதோ இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. மழைநீர், வியர்வை
ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன.
மேலும், இமைப்பதால் கண்கள் ஈரத்துடன் இருக்கவும், எளிதில் சுழலவும் முடிகிறது.
கண் இமையோரங்களில் இருபது, முப்பது சிறு சுரப்பிகள் உள்ளன. இமைகளுக்கு
இடையே இவற்றின் திறப்பு அமைந்துள்ளது. கண் இமைகள் மூடும்போது
இந்தச் சுரப்பிகள் நீரைச் சுரக்கின்றன. இந்த நீர், கண்களுக்கு நன்மை பயக்கிறது.
கண்ணீர்ச் சுரப்பியில் உள்ள கண்ணீர் இவ்வாறுதான் பயன்படுகிறது. அதனால்
ஒவ்வொரு முறை இமைக்கும்போதும் நாம் அழுகிறோம் என்றே கூறலாம்.
*
சிப்பியின் வயது வளையங்கள்
மரத்தின் வயதைக் கண்டுபிடிக்க மரத்தை அறுத்து அதன் உள்ளே இருக்கும் வளையங்களைக் கணக்கிட்டு வளையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வயது தீர்மானிப்பர்.
சிப்பியின் வயதைக் கண்டுபிடிக்கவும் அதன் மேல் படிந்திருக்கும் வளையங்கள் உதவுகின்றன.
சிப்பியின் மேல் பகுதியில் உள்ள வளையங்களின் எண்ணிக்கையை வைத்து அதன் வயதைக் கணக்கிடும் முறையை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த டாக்டர். இடா தாம்ப்ஸன் என்பவர் கண்டறிந்தார். இதற்காக அவர் பத்து ஆண்டுகள் ஆய்வு செய்தார். அவரின் ஆய்வுபடி சிப்பியின் மேல் ஓட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வளையம் உருவாகிறதாம். கடற்கரையின் நீர்ப்பரப்பில் கிடைக்கும் சிப்பிகளில் இந்த வளையத்தைக் காணமுடியும்.
*
தினமும் புயல்தான்!
நாம் வசிக்கும் ஊரில் எப்போதாவதுதான் புயல் அடிக்கும். அதையே நம்மால் தாக்குபிடிக்க முடியாது.
அண்டார்க்டிகாவில் உள்ள காமன்வெல்த் விரிகுடா பகுதியில்தான் தினசரி புயல் அடிக்கிறதாம். உலகிலேயே அதிகமாக காற்றடிக்கும் இடமும் இதுதானாம்!
இப்பகுதியில் வீசும் கடுமையான காற்றின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 200 மைல்!
*
ஸ்கூலுக்கு போறீங்களா?
பள்ளிக்கூடத்தை ஸ்கூல் என்று சொல்கிறோம். இந்தச் சொல் கிரக்க மொழியில் இருந்து வந்திருக்கிறது. கிரேக்க மொழியில் இதன் பொருள் ஓய்வு நேரம் என்பதைக் குறிக்கிறதாம்!
*
ஆடும் நாற்காலி
நம்மூர் காரர்கள் சாய்வு நாற்காலியை கண்டுபிடித்தனர். ஆடும் நாற்காலியைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? அவர் தான் பெஞ்சமின் பிராங்க்ளின்.
*
வரி வித்தியாசம்!
நம் ஒவ்வொருவருக்கும் கை ரேகையில் வித்தியாசம் காணப்படுவது போல வரிக்குதிரையின் வரிகளும் வித்தியாசப்படும்.
வரிக்குதிரை உடலில் உள்ள வரிகள் அனைத்து வரிக்குதிரைக்கும் ஒன்றுபோல இருக்காது. ஒவ்வொரு குதிரைக்கும் ஒவ்வொரு விதமாக இருக்குமாம்!
**************
ஒரு மா மரத்தின் கதை
முடிகொண்டான் ஆற்றங்கரையோரம் ஒரு பெரிய மா மரம் இருந்தது.
தன் அப்பாவுடன் வயலுக்கு வரும் சிறுவன் சீனு, அந்த மாமர நிழலில் விளையாடுவது வழக்கம்.
அந்த மரத்திற்கும் சீனுவை மிகவும் பிடிக்கும். சீனு மரத்தைச்சுற்றி ஓடி விளையாடுவான். மரத்தில் இரும் விழும் மாம் பழங்களை உண்ணுவான். பின் அந்த மரத்தடியிலேயே படுத்து உறங்குவான். மாலையில் அப்பாவுடன் வீடு திரும்புவான்.
சில ஆண்டுகளுக்குப்பிறகு சீனு வளர்ந்துவிட்டான்.
ஒரு நாள் மரத்திடம் வந்தான். அந்த மரம் வந்து என்னுடன் விளையாடு என்றது. எனக்கு உன்னுடன் மட்டும் விளையாடமுடியாது எனக்கு விளையாட்டுப்பொருட்கள் வேண்டும் என்று கேட்டான் சீனு.
“ என்னிடம் பணமில்லை நீ வேண்டுமானால் என் பழங்களை விற்று, அதில் வரும் காசில் விளையாட்டுப்பொருட்கள் வாங்கிக்கொள்” என்றது.
சீனு மகிழ்ச்சியுடன் அனைத்துப் பழங்களையும் பறித்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
அதன்பின்னர் அவன் அந்தப்பக்கம் வரவே இல்லை.
சில ஆண்டுகள் உருண்டோடின.
வாலிபனாக வளர்ந்திருந்தான் சீனு. மரத்திடம் வந்தான்.
“வா வந்து என்னுடன் விளையாடு” என்றது மரம்.
“உன்னுடன் விளையாட எனக்கு நேரமில்லை. நான் எனது குடும்பத்தைக்காப்பாற்றவேண்டும் அதற்கு உழைத்து பணம் திரட்ட வேண்டும். நானும் என் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க ஒரு இடம் வேண்டும் நீ எனக்கு உதவி செய்வாயா?” என்று கேட்டான்.
“என்னிடம்இருப்பிடம் ஏதும் இல்லை நீ என் கிளைகளை வெட்டி வீடு அமைத்துக்கொள்” என்றது மரம்.
உடனே அவனும் அனைத்துக்கிளைகளையும் வெட்டியெடுத்துக்கொண்டு போய்விட்டான்.
மீண்டும் சில ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் சீனு வந்தான், இப்போது முதியவனாக.
மரமும் வழக்கம்போல வந்து என்னுடன் விளையாடு என்றது, ”எனக்குவயதாகிவிட்டது, உன்னுடன் விளையாட முடியாது, நான் எனது முதுமைகாலத்தில் ஓய்வெடுக்க ஒரு படகு வேண்டும்” என்றான்.
“என்னிடம் ஏது படகு இதோ என் உடலைவெட்டி படகு செய்துகொள்” என்றது மரம்.
அவனும் மரத்தை வெட்டி படகு செய்து கொண்டான்.
மேலும் சிலகாலங்கள் உருண்டோடின.
மாமரம் பட்டுபோய் இருந்தது. வேர்ப்பகுதி மட்டுமே இருந்தது. தள்ளாடித்தள்ளாடி அந்த முதியவர் வந்தார்.
அந்த மரம், “ தம்பி மன்னித்துவிடு. என்னிடம்
இப்போது தருவதற்கு எதுவுமில்லை” என்றது.
அதற்கு அவன் “எனக்கு நடந்து வந்தது மிகவும் களைப்பாக இருக்கிறது,
ஓய்வெடுக்க இடம்வேண்டும்” என்று அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் அமர்ந்துகொண்டான்!
***************
பறக்கும் அணில்
பறவைகள் பறப்பது சகஜம்! விலங்குகள் பறக்குமா? அப்படி பறந்தால் அது அதிசயம்தானே? ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் அணிகள் மரம் விட்டு மரம் தாவி பறக்கிறதாம்! ஆஸ்திரேலியா அணில்களுக்கு சிறகுகள் உண்டா என்ற கேள்வி கேட்க வேணாம். அதற்கு சிறகுகள் எல்லாம் கிடையாது. அப்புறம் எப்படி பறக்கிறது? என்று சந்தேகம் வருகிறதுதானே!
அதற்கு விடை இதோ! இந்த அணில்கள் பறப்பது என்பது சிறகுகளால் அல்ல. காற்றடிக்கும் திசையில் நழுவிச் சென்று ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு செல்லும்.
இந்த பறக்கும் அணில்களுக்கு அதன் உடலின் தோல் பகுதியைச் சுற்றி பெரிய சிறகு போன்ற அமைப்பு இருக்கிறது. இது முன்னங்கால்களையும், பின்னங்கால்களையும் இணைக்கிறது. ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு தாவும் போது, அதனுடைய கால்களை நன்றாக விரித்துக் கொள்ளும். அதனுடைய தோல் சிறகும் விரிந்து ஒரு பாராசூட்போல விரிகிறது. இந்த பாராசூட் உடல் அமைப்பால் காற்று போக்கில் அது பறக்கிறது. இதுதான் அந்த அணிலின் பறக்கும் டெக்னிக்!
இந்தவகை அணில்களால் 40 முதல் 50 மீட்டர் துõரம் வரை பறக்க முடியுமாம்!
*
குரங்குக்கு இரண்டு மூளை!
மரம் விட்டு மரம் தாவும் குரங்குகளின் சேட்டைகளை சொல்லி மாளாது. குறும்புக்கார குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டாம்! ஒரு மூளை அதன் உடலைக் கட்டுப்படுத்துகிறாதாம். இன்னொரு மூளை அதனுடைய வாலைக் கட்டுப்படுத்துகிறாதாம்!
மாதத்துக்கு ஒரு முட்டைதான்!
பெட்டை வான் கோழிகள் ஆண்டு ஒன்றுக்கு 12 முட்டைகள் இடுகின்றதாம்! அதாவது மாசத்துக்கு ஒண்ணே ஒண்ணு! சிக்கனக்கார வான்கோழிகள்!
******
தெரிஞ்சுகோங்க!
*மிகச் சிறிய மீன்!
சுமத்ரா தீவில் உள்ள பேடோசைபிரிள் என்ற ஒரு வகை மீன், சேற்றுத் தண்ணீரில் வாழ்கிறது.
79 மில்லி மீட்டர் நீளமே உள்ள இந்த மீன், உலகிலேயே முதுகெலும்பு உள்ள உயிரினங்களில் மிகவும் சிறிய உயிரினமாகும்.
*மரத்தில் ஏறும் மீன்!
பிலிப்பைன்ஸ் நாட்டில் அனபாஸ், ஸ்காண்டன்ஸ் என்னும் இரண்டு வகை அபூர்வ மீன்கள் காணப்படுகின்றன. இவை மரத்தில் ஏறக் கூடியவை. பெரும்பாலான நேரங்களில் நீரில் வாழ்ந்தாலும் கூட சிறிது நேரத்திற்கு மரத்தில் ஏறி ஜாலியாக ஓய்வு எடுக்கின்றன. பின்னர் அப்படியே நீருக்குள் பாய்ந்து விடுகின்றன.
*தொட்டா சிணுங்கி
தொட்டா சிணுங்கி என்பது தரையில் படரும் ஒரு வகைச் செடி. இதன் இலைகளைத் தொட்டால் அவை அசைகின்றன. இவ்வாறு அசையும்போது, காம்பு செல்களில் இருக்கும் நீர் தண்டிற்குள் செல்கிறது. இதனால் செல்கள் சுருங்கி, விரிந்திருந்த இலைகள் மடிந்து ஒட்டிக் கொள்கின்றன. சிறிது நேரத்திற்குப் பின் அவை தானாக சரியாகி இலைகள் மறுபடியும் விரிந்து விடுகின்றன.
*ஆ... அப்படியா?
* நாய்க்கு நிற வேறுபாடு தெரியாது.
* யானைக்கு குதிக்கத் தெரியாது.
*கண்களை இமைக்காமல் தவளையால் இரையை விழுங்க முடியாது.
*கோலா கரடிகள் தினமும் 22 மணி நேரம் துõங்கியே பொழுதைக் கழிக்கின்றன.
* பாம்புக்கு கேட்கும் சக்தி இல்லை.
* ஈமு, கிவி பறவைகளுக்கு பறக்கும் சக்தி இல்லை.
* குதிரைக்கு படுத்து உறங்கத் தெரியாது.
* காகம் தனது இடது காலைத்தான் அதிகமாகப் பயன்படுத்தும்.
*********************************
நீர் மூழ்கி கப்பல்
* உலகில்முதன் முதலாக நீர்மூழ்கி கப்பலுக்கான வடிவ வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே. இவர் இங்கிலாந்துக்காரர்.
1578ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார்.
இருப்பினும் , முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் இவர், நெதர்லாந்து நாட்டுக் காரர். இவர்,1620ம் ஆண்டு நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்தார். அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.
ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். பல வசதிகளுடன் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும், சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.
*********
வெங்காயம்!
*வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது.
****
அட அப்படியா!
மங்கோலியர்கள் இந்தியாவை ‘தெய்வத்தின் நாடு’ என்பர்.
இந்தியாவின் வரைபடத்தை வரைந்தவர் டா ஆன்வில்.
இந்தியாவில் முதலில் உருவான மாநிலம் உத்திரப்பிரதேசம்.
இந்தியாவில் காபி பானம் 1600ல் அறிமுகமானது.
இந்தியாவில் கம்ப்யூட்டர் 1986ல் அறிமுகமானது.
இந்திய மொழிகளில் முதல் கலைக் களஞ்சியம் தமிழில்தான் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் அதிக ஆயுள் கொண்டவர்கள் பஞ்சாபியர்கள்.
இந்தியாவில் ஆண்களே பெண்களைவிட அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள்.
இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா 1912 வரை இருந்தது.
*****************
தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் சில சிறப்புகள்
* தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்துõர் ஆண்டாள் கோபுரம்
* தமிழகத்தின் நுழைவாயில் – துõத்துக்குடி
* தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்துõர்
*மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
* மிகப் பெரிய பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
*மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
*மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
*மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
* மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
* மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
* மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
* மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா
*மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை
* மிக நீளமான ஆறு – காவிரி
* மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை
*மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை
* மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
* கோயில் நகரம் – மதுரை
*தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
*மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
*மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி) —
******************
*சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
*இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது
*ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
*இந்தியாவில் தமிழில் தான் “பைபிள் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
*வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
* கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
* பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
***************
ஊர் புகழ் பொருட்கள்!
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு, ஒவ்வொரு ஊரின் பெயரையும் குறிப்பிட்டு அந்த ஊரில் எதற்கு சிறப்பான அந்தஸ்து வழங்கப் ப டுகிறது என்பதன் பட்டியல் இது:
அரியலூர் – கொத்தமல்லி
ஆலங்குடி – நிலகடலை
ஆடுதுறை – நெல்
ஆற்காடு – பிரியாணி
ஆரணி – லுங்கி
ஈரோடு – மஞ்சள்
உறையூர் – சுருட்டு
உடன்குடி – கருப்பட்டி
ஊட்டி – ஆப்பிள்
ஊத்துக்குளி – வெண்ணை
காஞ்சிபுரம் – பட்டு
காரைக்குடி – சமையல்
குடியாத்தம் – நுங்கு
கொடைக்காணல் – பேரிக்காய்
கோவில்பட்டி – கடலை மிட்டாய்
கோவை – பஞ்சு
சாத்துõர் – காரசேவு
சிவகாசி – வெடி
சேலம் – மாம்பழம்
தஞ்சாவூர் – கதம்பம்
தருமபுரி – புளி
திருநெல்வேலி – அல்வா
திருவல்லிபுத்தூர் – பால்கோவா
திருப்பதி – லட்டு
திருப்பூர் - பனியன்
திருப்பாச்சி – வீச்ச?ரிவாள்
கும்பகோணம் – வெற்றிலை
திருவாரூர் - தேர்
திண்டுக்கல் – பூட்டு
துõத்துக்குடி – முத்து
நாகை - கோலா மீன்
நாமக்கல் – முட்டை
நீலகிரி - தைலம்
பழனி – பஞ்சாமிர்தம்
பத்தமடை – பாய்
பண்ருட்டி – பலாபழம்
பவானி – ஜமுக்காளம்
பாண்டிச்சேரி – மது
பொள்ளாச்சி – தேங்காய்
மார்த்தாண்டம் – தேன்
மணப்பறை – முறுக்கு
மதுரை – மரிக்கொழுந்து, மல்லிகை
மாயவரம் – கருவாடு
மானாமதுரை – மல்லிகைப்பூ
விழுப்புரம் - கொய்யா
வேதாரணியம் – உப்பு
ராஜபாளையம் - நாய்
*********************
*மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.
*நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும்.
*நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
*ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.
*மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.
*கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.
*ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
*பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.
*நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
*ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடும்.
*புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.
*காண்டாமிருகத்தின் காலில் மூன்று பாதங்கள் இருக்கின்றன.
*பூச்சி இனங்களில் அறிவாற்றல் அதிகமுடையது எறும்பு.
*உலகில் அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான்.
*கடல் பிராணியான ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
அதிசய ஆங்கில வாக்கியம்:
“கச்ஞிடு ட்தூ ஞணிது தீடிtட ஞூடிதிஞு ஞீணித்ஞுண டீதஞ்ண் ணிஞூ டூடிணுதச்ணூ” இது ஓர் அதிசயமான ஆங்கில வாக்கியம் ஆகும்! என்ன என்கிறீர்களா? மேற்கண்ட வாக்கியத்தில் ஆங்கில எழுத்துகள் 26ம் அடங்கி இருப்பதுதான் அந்த அதிசயம்.
“கூஏஅNஓ ஙுOக்” நன்றி கூறுவதை சட்டமாக்கியிருக்கும் நாடு எது தெரியுமா?
சுவீடன்.
************************
*அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.
*மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாப்ரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
*முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.
*************
புரட்சி!
பசுமைப் புரட்சி என்பது விவசாய உற்பத்தியை பெருக்குவதாகும்.
இளஞ்சிவப்புப் புரட்சி என்பது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.
நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை பெருக்குவதாகும்.
வெண்மைப் புரட்சி என்பது பால் உற்பத்தியைப் குறிப்பதும் ஆகும்.
மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.
****************
ஆஹா!
நீங்கள் உங்கள் கைவிரல்களை ’நெட்டி’ முறிக்கும்போது ஏற்படும் சத்தத்திற்கு காரணம் என்ன தெரியுமா? நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடையும் சத்தமாகும்.
ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம் கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.
***************
அணைகளும் மாநிலங்களும்
1. நாகர்ஜூன சாகர் நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம் ) -
கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.
2. கக்கார்பாரா நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம்)-
தபதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக கட்டப்பட்டுள்ளது.
3. கோஷி நீர்த்தேக்கம் (பீகார் மாநிலம்)-
கோஷி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அபாயகரமான வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும், நீர்மின்சக்தித் திட்டத்துக்கும் இந்த நீர்த்தேக்கம் பயன்படுகிறது.
4. சபரிகிரி நீர்த்தேக்கம் (கேரள மாநிலம்)-
பம்பா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது.
5. சாராவதி நீர்த்தேக்கம் (கர்நாடக மாநிலம்)-
ஜோக் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள சாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி உற்பத்திக்காக இத்திட்டம் பயன்படுகிறது.
6. மகாநதி டெல்டா நீர்த்தேக்கம் (ஒரிசா மாநிலம்)-
மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டிற்காக படுகிறது
7. பக்ராநங்கல் நீர்த்தேக்கம் (ஹிமாச்சலப் பிரதேசம்)-
சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் சந்திப்பு எல்லையில் கட்டப்பட்டுள்ளது, விவசாயம், நீர்மின்சக்தி உற்பத்திக்காக இது பயன்படுகிறது.
8. தாமோதர் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் –
தாமோதர் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், இந்த அணையின் நீரை மேற்கு வங்களாமும் பகிர்ந்துகொள்கிறது. வெள்ள நீரை தடுப்பதற்காகவும்,விவசாயத்திற்கும் இந்த அணை பயன்படுகிறது.
9. சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் –
நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெறுகின்றன. விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இது பயன்படுகிறது.
10. மேட்டூர் (தமிழ்நாடு)-
காவேரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி மற்றும் விவசாயத்திற்காக பயன்படுகிறது.
**************
*மிகச் சிறிய மீன்!
சுமத்ரா தீவில் உள்ள பேடோசைபிரிள் என்ற ஒரு வகை மீன், சேற்றுத் தண்ணீரில் வாழ்கிறது.
79 மில்லி மீட்டர் நீளமே உள்ள இந்த மீன், உலகிலேயே முதுகெலும்பு உள்ள உயிரினங்களில் மிகவும் சிறிய உயிரினமாகும்.
*மரத்தில் ஏறும் மீன்!
பிலிப்பைன்ஸ் நாட்டில் அனபாஸ், ஸ்காண்டன்ஸ் என்னும் இரண்டு வகை அபூர்வ மீன்கள் காணப்படுகின்றன. இவை மரத்தில் ஏறக் கூடியவை. பெரும்பாலான நேரங்களில் நீரில் வாழ்ந்தாலும் கூட சிறிது நேரத்திற்கு மரத்தில் ஏறி ஜாலியாக ஓய்வு எடுக்கின்றன. பின்னர் அப்படியே நீருக்குள் பாய்ந்து விடுகின்றன.
*தொட்டா சிணுங்கி
தொட்டா சிணுங்கி என்பது தரையில் படரும் ஒரு வகைச் செடி. இதன் இலைகளைத் தொட்டால் அவை அசைகின்றன. இவ்வாறு அசையும்போது, காம்பு செல்களில் இருக்கும் நீர் தண்டிற்குள் செல்கிறது. இதனால் செல்கள் சுருங்கி, விரிந்திருந்த இலைகள் மடிந்து ஒட்டிக் கொள்கின்றன. சிறிது நேரத்திற்குப் பின் அவை தானாக சரியாகி இலைகள் மறுபடியும் விரிந்து விடுகின்றன.
* நாய்க்கு நிற வேறுபாடு தெரியாது.
* யானைக்கு குதிக்கத் தெரியாது.
*கண்களை இமைக்காமல் தவளையால் இரையை விழுங்க முடியாது.
*கோலா கரடிகள் தினமும் 22 மணி நேரம் துõங்கியே பொழுதைக் கழிக்கின்றன.
* பாம்புக்கு கேட்கும் சக்தி இல்லை.
* ஈமு, கிவி பறவைகளுக்கு பறக்கும் சக்தி இல்லை.
* குதிரைக்கு படுத்து உறங்கத் தெரியாது.
* காகம் தனது இடது காலைத்தான் அதிகமாகப் பயன்படுத்தும்.
*********************************
தமிழகத்தில் உள்ள பறவைகள் காப்பகங்கள்
*பழவேற்காடு பறவைகள் சரணாலயம்
சென்னையில் இருந்து 90 கி.மீ., தொலைவிலும், பொன்னேரியில் இருந்து 19 கி.மீ., தொலைவிலும் பழவேற்காடு பறவைகள் காப்பகம் அமைந்துள்ளது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் சரணாலயத்தைக் காண ஏற்ற நாடகளாகும்.
*வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
ஈரோடு மாவட்டத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஆண்டின் கடைசி நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் காணலாம்.
*கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
மதுராந்தகம், செங்கல்பட்டிற்கு அருகில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. செப்டம்பர் மாத துவக்கம் மற்றும் மார்ச், ஏப்ரல் வரை பறவைகள் காணப்படுகின்றன.
*கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் கரைவெட்டி சரணாலயம் அமைந்துள்ளது. டிசம்பர், சனவரி ஏற்ற மாதங்கள் ஆகும்.
*உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
திருவாருரில் இருந்து 65 கி.மீ., தொலைவில் உதயமார்தாண்டபுரம் அமைந்துள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்கள்ஏற்ற காலமாகும்.
*வடுவூர் பறவைகள் சரணாலயம்
தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. ஆகஸ்ட் துவங்கி டிசம்பர், சனவரி வரையிலான காலத்தில் பறவைகள் இங்கு வந்து செல்லும்.
*சித்திரன்குடி பறவைகள் சரணாலயம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் வட்டத்தில் சித்திரன்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது. பறவைகளை காண சனவரி மாதம் ஏற்ற காலமாகும்.
*கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
திருநெல்வேலியில் இருந்து 33 கி.மீட்டரில் அமைந்துள்ளது கூந்தன்குளம்,
ஆண்டுதோறும் டிசம்பர், சனவரி மாதங்களில் பூநாரைகள் தமிழத்தை நோக்கி வருகின்றன.
*மேல்செல்வனூர் - கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம்
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் அமைந்துள்ள மேல்-கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம்.
*கஞ்சிரன் குளம் பறவைகள் சரணாலயம்
முதுகுளத்தூரில் இருந்து 8 கி.மீ., தொலைவில் கஞ்சிரன் குளம் அமைந்துள்ளது.ஆண்டு தோறும் குளிர் காலங்களில் இங்கு வந்து செல்கின்றன.
*வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
காரைகுடியில் இருந்து 32 கி.மீ., தொலைவில் வேட்டங்குடி அமைந்துள்ளது.
*வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
செங்கல்பட்டில் இருந்து 30 கி.மீ., தொலைவில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் பறவைகளை காண ஏற்ற காலங்களாகும்.
*கோடியக்கரை பறவைகள் சரணாலயம்
வேளாங்கண்ணியில் இருந்து 28 கி.மீ., தூரத்திலும், வேதாரண்யத்தில் இருந்து 13 கி.மீ., தொலைவிலும் கோடியக்கரையில் இந்தச் சரணாலயம் உள்ளது.
****************************
ஏ.கே.47 ரக துப்பாக்கிக்கு ஏ.கே.47 என்று பெயர் வந்தது சுவாரஸ்யமானது.
இந்தத் துப்பாக்கியைக் கண்டு பிடித்தவர் ஆட்டோமேட்டிக் கோ- காலஸ் என்பவர். அப்போது அவருக்கு வயது 47. அதனால், அவர் வயதை குறிக்கும்படி ஏ.கே. 47 என்று பெயர் வைத்து விட்டார்கள்!
*****
ஒரு ஊருக்கு 12 பெயர்கள்!
உலகிலேயே 12 பெயர்கள் கொண்ட ஒரு ஊர் உண்டு. அது தமிழகத்தில் சிதம்பரத்திற்கு அடுத்து இருக்கும் சீர்காழி என்ற ஊர்தான்! இதற்கு, பிரம்மரம், வேணுபுரம், புகலி, பெரிய வெங்குருகு, திருத்தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வரும்புருவம், கண்பை நகர், வளரும் காழி, கொச்சைவயம், திருக்குழுமலம் ஆகியனவாகும்.
*****
***அப்படியா!***
மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.
நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.
நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.
நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.
வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.
ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
****
****விடுகதை***
* அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?
* காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?
* காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?
*சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?
* ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்?
* நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன?
விடைகள்:
*வாழைப்பூ
* பேனா
* நாவல் பழம்
* காய்ந்த மிளகாய்
* பம்பரம்
*பூனை
*************************
அதிசய தொங்கும் பாலம்!
படத்தில் காணப்படுவது ஜப்பான் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘அகாசி கைக்ஜோ‘தொங்கு பாலம்.
அகாசி கைக்ஜோ பாலம் உலகின் மிக நீளமான தொங்கு பாலம். இந்த பிரமாண்டமான பாலத்திற்கு
பவள பாலம் என்ற பெயரும் உண்டு.
ஜப்பான் நாட்டின் முதன்மை நிலப்பகுதியிலுள்ள அகாசி பிரதேசத்தினையும் அவாஜி தீவினையும் இணைப்பதற்காக
அகாசி நீரிணை மேலாக இந்த அகில புகழ் பாலமானது கட்டப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் இரு நிலப்பகுதிகளை ஊடறுக்கும் 4 கி.மீ. அகலமான நீரிணை சர்வதேசத்திலும் உள்ளூரிலும் மிகவும் பிரசித்தமானது. இராட்சத பால கட்டுமானம். பலவருட திட்டமிடலின் பின்னர் 1986 ம் மே மாதம் தொடங்கிய கட்டுமான வேலைகள் 1998 ம் ஏப்பிரல் 5 இல் முடிவுற்றது (12 வருடங்கள்).
ஆரம்பத்தில் தொடர்வண்டி பாதையும் அமைப்பதாக இருந்த போதிலும் பூர்த்தியான பாலம் கார்களுக்கான
3 வழி (போக , வர மொத்தம் 6 வழி) பாதைகளை மட்டும் கொண்டுள்ளது.
‘அகாசி கைக்ஜோ‘ தற்போது சுற்றுலா பயணிகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருந்து வருவதனால் அதுசார்ந்த
துறைகள் பெருமளவில் பாலத்தின் சுற்றுவட்டத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
***
யுர்நோ ரூபிக்
1974 ம் வருடம் ஹங்கேரி நாட்டினைச் சேர்ந்த பல்கலைக்களக பேராசிரியர் யுர்நோ ரூபிக் என்பவரால்
உலகப் புகழ்பெற்ற ‘ரூபிக்‘ (படத்தில்) எனும் பொழுதுபோக்கு (விளையாட்டு) கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
கட்டிடகலைஞரும் வடிவமைப்பாளருமான ‘யுர்நோ ரூபிக்‘ தனது காப்புரிமம் செய்யப்பட்ட ரூபிக் விற்பனை
மூலமாக பெருமளவு பணத்தினையும் புகழையும் பெற்றுள்ளார். 30 வருடங்களின் மேலாக உலகின் எல்லா மட்டங்களிலு
முள்ள மக்களையும் ஈர்த்துவிட்ட ரூபிக் பற்றிய சுவையான தகவல்கள் வருமாறு. 1974 ம் வருடம் பல்கலைக்களகத்தில்
முப்பரிமான கற்பித்தல் தேவைக்கு வடிவமைக்கப்பட்ட மாதிரி காட்சிபொருள் ‘ரூபிக்‘ எனும் புரட்சிகர
கண்டுபிடிப்பாக வரலாற்றில் மாறியது.
ரூபிக் கட்டையானது 9 சிறு சதுரங்களைக் கொண்ட 6 வித்தியாசமான வர்ணங்களிலால் ஆக்கப்பட்ட முப்பரிமான சதுர குற்றியாகும்.
ஆரம்பத்தில் ‘மஜிக் கியூப் என அழைக்கப்பட்ட போதிலும் 1980 ம் வருடத்திலிருந்து ‘ரூபிக்ஸ் கியூப்‘
(கீதஞடிடு’ண் இதஞஞு) எனும் பெயர் மாற்றம் பெற்று விற்பனைக்கு வந்தது முதல் இன்றுவரை மாறாது நிலைத்துவிட்டது.
1982 ம் வருடம் ஒக்ஸ்போர்ட் அகராதியில் ‘கீக்ஆஐஓ‘ எனும் சொல் முதல்முதலாக சேர்க்கப்பட்டது.
ஹங்கேரிய நாட்டில் 1982 ம் வருடம் நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த நபர்
(Mடிணட கூடச்டி) 22.95 செக்கனில் ரூபிக் தீர்வுகண்டதன் மூலம் முதலாவது உலகசாதனை பதிவு செய்தார்.
ரூபிக் ஆர்வம் காரணமாக பல தொலைக்காட்சி , மேடை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் சர்வதேசரீதியில்
நடைபெறு வருகின்றது. அத்துடன் ரூபிக் பற்றியதான பல மில்லியன் கணக்கிலான புத்தகங்களும் இதுவரை
வெளியாகியுள்ளமை இதன் மகிமையை காட்டுவதாக உள்ளது.
1981 ம் வருடம் 12 வயது பிரித்தானிய மாணவன் (கச்tணூடிஞிடு ஆணிண்ண்ஞுணூt) எழுதி வெளியிட்ட
‘உங்களாலும் ரூபிக் புதிர் செய்ய முடியும்‘ (ஙுணித இச்ண ஈணி tடஞு இதஞஞு) எனும் புத்தகம் மட்டும்
1.5 மில்லியன் பிரதிகள் விற்பனையானது குறிப்பிடத்தக்க செய்தி.
உலக வரலாற்றில் இந்த புதிர் கட்டை மட்டு மே விளையாட்டு பொருட்களில் அதிகம் விற்பனையானது
என்ற சாதனையை படைத்துள்ளது
***
*முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க முடியும்.
*நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலுõட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும்.
* இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள டெப்டும் லுõசிடம்( tச்ணீஞுtதட் டூதஞிடிஞீதட்) என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான்.
*கிரீச்லி ( எணூடித்த்டூதூ ஆஞுச்ணூ), இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.
* பூனைகளால் தாடையினை வல இட புறமாக அசைக்க முடியாது.
* உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும்.
* தெள்ளு பூச்சி (ஊடூஞுச்) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.
* நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.
* தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.*முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க முடியும்.
*நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலுõட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும்.
* இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள டெப்டும் லுõசிடம்( tச்ணீஞுtதட் டூதஞிடிஞீதட்) என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான்.
*கிரீச்லி ( எணூடித்த்டூதூ ஆஞுச்ணூ), இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.
* பூனைகளால் தாடையினை வல இட புறமாக அசைக்க முடியாது.
* உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும்.
**************************
சுட்டி ரோபோ!
குழந்தையைப்போல உணர்ச்சிகளைக் காட்டும் ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
இந்த ரோபோவை கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஹான்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹான்சன் என்பவர் தயாரித்துள்ளார்.
ஒன்னரை வயது குழந்தையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு டியாகோசான் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ரோபோ குழந்தையை போன்று அழுவது, சிரிப்பது, கோபப்படுவது, மகிழ்ச்சி அடைவது போன்று பல உணர்ச்சிகளை இந்த ரோபோ வெளிப்படுத்துகிறது.
இந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்றாற் போன்று நெகிழும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்குகளை வைத்து ரோபோவின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோவுக்கு செயற்கை அறிவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்களாம்!
**
பசுமை சுவர்
பிரிட்டனில், 68 அடி உயர சுவர் முழுவதும், 20க்கும் மேற்பட்ட, தாவரங்களை பயிர் செய்து, “பசுமை சுவர்’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் கொடையான தாவரங்களை காக்கவும், சுற்றுச் சூழல் சீர்க்கேட்டை கட்டுப்படுத்தவும் நகரின் உயரமான கட்டடங்களின் பக்கச் சுவர்களில், ஏராளமான அரிய வகை தாவரங்களை நட்டு வைத்து, பராமரிக்கும், புதிய பசுமை புரட்சி திட்டத்தை லண்டன் மேயர் அறிமுகம் செய்துள்ளார்.
ஒரு கோடி ரூபாய் செலவில், லண்டன் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, பிரபல நட்சத்திர ஓட்டலின், பக்க சுவர்களில், தாவரங்களை நட்டு வைத்து புதுமை செய்துள்ளனர். விக்டோரியா நிலையம் அருகில், சுற்றுலா பயணிகள் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள, “ரெட் கார்னேஷன்’ ஓட்டலை தேர்வு செய்து,
கடந்த ஓராண்டாக, ஓட்டல் சுவர்களில் தோட்டம் அமைக்கும் பணிகள் நடத்தப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளன. பல நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தங்கும், ரெட் கார்னேஷன் ஓட்டலின், 68 அடி உயர சுவரில், தோட்டம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக. 16 டன் வளமான மண் சேகரிக்கப்பட்டது. அதன் பின், சுவரில், பக்கவாட்டில் மண் கொட்டுவதற்கான விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதில், 20க்கும் மேற்பட்ட பல அரிய வகை தாவரங்கள் நட்டு வைக்கப்பட்டன. ஒரே நேரத்தில், 10 ஆயிரம் லிட்டர் நீரை உறிஞ்சி சேமித்து வைத்துக்கொள்ளும் வகையில், இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
‘லண்டன் நகரம் முழுவதும், இது போன்ற பசுமை சுவர்கள் அமைக்கப்படும்.
கட்டடங்களுக்காக, தாவரங்கள் அழிப்படுவதால், கட்டடங்களிலேயே, தாவரத்தை வளர்க்கும்
புதிய முறையை அறிமுகம் செய்துள்ளோம். உலகின் பல நாடுகளும் இந்த முறையை பின்பற்றினால்,
உலகம் வெப்பமயமாதலை தவிர்க்கலாம். இவ்வகை தோட்டங்கள், மழைநீரை சேமிக்கும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளதால், இதில் வளர்க்கப்படும் தாவரங்களுக்கு அதிக நீர் தேவைப்படாது.
வெள்ளம் ஏற்படும் காலங்களில், கட்டடத்தின் சுவர்கள் பாதிப்படையாமலும், சுவர்
அரிப்பை தடுக்கும் வகையிலும் இந்த தாவரங்கள் உதவி புரியும்’- என்கிறார் லண்டன் மேயர், போரிஸ் ஜான்சன்.
******************
கண்களில் விநோதம்!
* மனிதர்களுக்கு ஒரு கண்ணில் ஒரு லென்ஸ் மட்டுமே உள்ளது . ஆனால், தட்டான் பூச்சிகளுக்கு ஒரே கண்ணில் ஆயிரக்கணக்கான லென்ஸ்கள் உண்டு !
* தேனீக்கு மொத்தம் 5 கண்கள் . இரண்டு கூட்டுக் கண்கள் . மூன்று ஒற்றைக் கண்கள் . ஒற்றைக் கண்களால் அருகில் உள்ள பொருள்களைக் காணலாம் . கூட்டுக் கண்கள் தொலைவில் உள்ள பொருள்களின் தன்மையை அறியப் பயன்படுகின்றன .
* நம் கண்களின் மேல் இமையில் 90 முதல் 160 முடிகளும், கீழ் இமையில் 75 முதல் 80 முடிகளும் இருக்கும் . இமை முடி வளர 30 நாட்களாகும் . வாழ்நாள் வெறும் 5 மாதங்கள்தான் .
*சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய ஒரே பறவை கழுகு.
கொடியும் சின்னமும்!
*தனது நாட்டு தேசியக்கொடியில் கோவிலைக் கொண்டுள்ள நாடு கம்போடியா (அங்கோர் வாட் கோவில் கொடியில் உள்ளது.)
*உலகில் தேசியக் கொடிகளில் அதிக அளவில் இடம்பெற்றுள்ள சின்னம்
நட்சத்திரம். இதனை 44 நாடுகளின் தேசியக் கொடியில் காணலாம்.
*பூவரசம்பூவை தேசிய சின்னமாக வைத்திருக்கும் நாடுகள் ஹங்கேரி, ருமேனியா.
*ஜனவரி முதல் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடும் நாடு சூடான்.
*********************
அதிசய பன்றி!
குவாண்டமாலா நாட்டில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் அதிசயமான பன்றிக் குட்டி ஒன்று பிறந்துள்ளது. அதன் தலை மற்றும் அதன் தோற்றம் பன்றி போல இல்லாமல் விசித்திர முகம் கொண்டதாக இருந்தது.
இக் கிராமத்தில் அடிக்கடி வேற்றுக்கிரக வாசிகள் வந்துசெல்வதாக ஊர்மக்கள் சொல்லுகின்றனர். வேற்றுக்கிரக வாசிகள் வந்துசெல்லும் பறக்கும் தட்டைத் தாம் கண்டதாவும் சிலர் தெரிவித்துள்ளனர். கிராமத்தில் உள்ள பண்ணைகளில் இரவுநேரங்களில் வேற்றுக் கிரக மனிதர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாகவே இப் பன்றிக் குட்டி இவ்வாறு பிறந்திருக்கிறது என அக் கிராம மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இப் பன்றிக்குட்டி வேற்றுக்கிரக மனிதர்களின் ஆராய்ச்சியால் அல்லது அவர்களின் பறக்கும் தட்டில் இருந்து வெளிப்பட்ட கதிரியக்கத்தால் இப்படி பிறந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நெற்றியில் மூக்கு!
சீனாவை சேர்ந்த ஜியோலியன் என்பவருக்கு நெற்றியில் மூக்கு வளர்ந்துள்ளது. சீனாவை சேர்ந்த ஜியோலியன்(22) என்பவருக்கு ஒரு சாலை விபத்தில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால் குருத்தெலும்பு முற்றிலுமாக சேதமடைந்து மூக்கு உருக்குலைந்தது. இதனை மருத்துவர்களால் சரிசெய்ய முடியவில்லை. அதற்காக தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையில் புதிய மூக்கை உருவாக்க முடிவு செய்தனர். இதற்காக இடுப்பெலுப்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது. நெற்றியில் மூக்கு முளைத்த அந்த அதிசய மனிதனைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். இந்த மூக்கு முழு வளர்ச்சியடைந்ததும், அந்த இடத்தில் இருந்துவிரைவில் அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு பொருத்தப்பட உள்ளதாம்!
அபூர்வ கிளி!
சாதாரண கிளிகள், பஞ்சவர்ண கிளிகள், வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் வெள்ளை, நீல வண்ண சிறிய கிளிகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை, பலர் தொழிலாக கொண்டுள்ளனர். ஆப்ரிக்காவை சேர்ந்த சாம்பல் வண்ண கிளி ஒரு அபூர்வமான கிளி. பொதுவாகவே கிளிகள் பேசும் திறன் கொண்டவை. அதிலும், ஆப்ரிக்க காடுகளில் வாழும் சாம்பல் வண்ணக் கிளிகள், மனிதர்கள் பேசும்போது, ஒலியை துல்லியமாக கவனித்து, மீண்டும் உச்சரிக்க கூடியவை. 120 வகையான ஒலிகளை எழுப்பக் கூடியவை. நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டவை. இவற்றின் ஆயுள் காலம், 80 முதல், 95 ஆண்டு. ஒரு வயதான சாம்பல் கிளி விலை, 35 ஆயிரம் ரூபாய். நன்கு வளர்ந்த கிளி, ஒரு லட்சம் ரூபாய் வரை விலை கூறப்படுகிறது. வீடுகளில் அழகுக்காகவும், பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வாஸ்துக்காகவும் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்
*******************
நீர் மூழ்கி கப்பல்
* உலகில்முதன் முதலாக நீர்மூழ்கி கப்பலுக்கான வடிவ வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே. இவர் இங்கிலாந்துக்காரர்.
1578ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார்.
இருப்பினும் , முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் இவர், நெதர்லாந்து நாட்டுக் காரர். இவர்,1620ம் ஆண்டு நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்தார். அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.
ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். பல வசதிகளுடன் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும், சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.
*********
வெங்காயம்!
*வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது.
****
அட அப்படியா!
மங்கோலியர்கள் இந்தியாவை ‘தெய்வத்தின் நாடு’ என்பர்.
இந்தியாவின் வரைபடத்தை வரைந்தவர் டா ஆன்வில்.
இந்தியாவில் முதலில் உருவான மாநிலம் உத்திரப்பிரதேசம்.
இந்தியாவில் காபி பானம் 1600ல் அறிமுகமானது.
இந்தியாவில் கம்ப்யூட்டர் 1986ல் அறிமுகமானது.
இந்திய மொழிகளில் முதல் கலைக் களஞ்சியம் தமிழில்தான் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் அதிக ஆயுள் கொண்டவர்கள் பஞ்சாபியர்கள்.
இந்தியாவில் ஆண்களே பெண்களைவிட அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள்.
இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா 1912 வரை இருந்தது.
****************
சின்ன சின்ன தகவல்கள்
*கடல் உயிர்கள்:
கடலில் வாழ்வன என்றால் மீன், நண்டு, தாவரங்கள் தவிர சிப்பிகள் மட்டும் தான் நமது நினைவில் இருக்கும். ஆனால் கடலில் வாழும் உயிரினங்கள் நிறைய உண்டு. அதாவது கடல் அல்லி, கடல் தாமரை, அல்கா, நோநேரியா என்பவை அதில் முக்கியமானவையாகும்.
கடல் அல்லி:
கடல் அல்லி என்பது, கடல் நீரில் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டு வசிக்கும். முன் பகுதியில் வாயைச் சுற்றி பல கைகள் காணப்படுகின்றன. இவை இரையைப் பிடிப்பதற்கும், எதிரிகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்கும் பயன்படுத்துகின்றன.
பார்ப்பதற்கு செடி போன்று காட்சி அளிக்கும் இது ஒரு அரிய வகை உயிரியாகும். அதன் அருகில் வரும் மீன்களை பிடித்து உண்ணும்.
கடல் தாமரை
கடல் தாமரையின் வாய்ப் புறத்தைச் சுற்றிக் காணப்படும் கைகள் ஒரு தாமரை மலரின் இதழ்கள் போன்று தோற்றமளிக்கும். இது ஓர் ஈரடுக்கு உயிரி.
முனிவன் எனப்படும் உயிரியோடு இது கூட்டு வாழ்க்கை நடத்துகிறது. இது தன் அடிப்பகுதியை துறவி நண்டின் ஓட்டின் மீது ஒட்ட வைத்துக் கொள்கிறது. இதனால் நன்டு நகர்ந்து செல்லும் இடங்களுக்கெல்லாம் இதனால் செல்ல முடிகிறது.
அதனால் இவ்வுயிரியின் உணவுப் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. இதனிடமுள்ள கொட்டும் செல்கள் என்ற தனிச்சிறப்பு வாய்ந்தவை. இதனால் உயிரிகளைப் பிடிக்கவும் முடியும். எதிரிகளை அழிக்கவும் முடியும்.
அட, அப்படியா!
*யானைகள்
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை!
யானைக்கு கிட்டப் பார்வை மட்டும்தான் உள்ளதாம்.
இந்திய பெண் யானைகளுக்கு தான் தந்தம் கிடையாது. ஆனால் ஆபிரிக்க பெண்யானைகளுக்கு தந்தம் உள்ளது.
பொதுவாகவே பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதே கிடையாதாம்.
யானைகளுக்கு என்று ஒரு மருத்துவமனை கேரளாவில் உள்ளது.
யானையின் இரண்டு தந்தங்களும் சம அளவில் இருப்பதில்லை.
யானைக் குட்டிக்கு 3 முதல் 5 வயதுக்குள் தந்தம் முளைக்கிறது.
***************
பாம்பு புராணம்!
*பாம்புக்கு காது கிடையாது.ஆனால் நம்ம எல்லாரையும் விட அதிகமா சப்தங்களை உணரும் சக்தி பாம்புக்கு உண்டு.
*பாம்புகளுக்கு மூக்கு கிடையாது, ஆனால் வாசனை/ நாற்றங்களை மிகச்சரியாக உணரும் திறன் கொண்டிருக்கும்!
*பாம்புகள் உணவே இல்லாமல் பல மாதங்கள் வாழ மட்டுமல்ல, வளரவும் செய்யுமாம்!
*உலகத்தில் ரொம்பச் சின்ன பாம்பை 2008-ல் “பார்படோஸ்” இடத்துல கண்டுபிடிச்சாங்களாம். அதோட அளவு 10 செ.மீ தானாம்!
*சில வகை நல்ல பாம்புகளை “துப்பும் நாகம்”அப்படின்னு சொல்றாங்க. இந்த வகை நல்ல பாம்புகள், விஷத்த கிட்டத்தட்ட 2 மீட்டர் துõரம் வரை துப்பக்கூடியது. அதுமட்டுமல்ல; இந்த பாம்பு கண்ணைக் குறி வச்சுத்தான் விஷத்தத் துப்புமாம். துப்புற விஷம் கண்ணுல பட்டா, உடனே கண் குருடாயிடுமாம்!
*மலைப்பாம்பு தன்னோட இரை முழுசையும் (எலும்பு கூட!) தின்றுவிடுமாம்!
மலைப்பாம்புகள் மாசக்கணக்கில் சாப்பிடாமலே இருக்குமாம்.அதேசமயத்துல, சாப்பிடும்போது ஒரு சின்ன துண்டு கூட விடாம, அப்படியே சாப்பிடுமாம்! அதுக்கு காரணம், இந்தப்பாம்புகளுக்கு எலும்பைக்கூட செரிக்க வைக்கிற அளவுக்கு சிறப்பான உடலமைப்பாம்!
*ஒரு வகை பாம்பு 50 அடி துõரம் வரை பறக்குமாம்!
**************
****விடுகதை***
* அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?
* காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?
* காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?
*சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?
* ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்?
* நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன?
விடைகள்:
*வாழைப்பூ
* பேனா
* நாவல் பழம்
* காய்ந்த மிளகாய்
* பம்பரம்
*பூனை
**
****மிகப்பெரிய வியாழன் கிரகம்***
சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகம் எ?ன்ற பெருமையைப் பெற்றது வியாழனாகும். மிகப்பெரிய கிரகமாக விளங்கும் வியாழனை, ஆங்கிலத்தில் ரோமானிய ஆட்சிக் கடவுளான ஜூபிடரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
சூரியனிலிருந்து ஐந்தாவதாக உள்ள வியாழன் கிரகம், விண்வெளியில் சூரியன், நிலா, வெள்ளி கிரகங்களுக்கு அடுத்தபடியாக பிரகாசமாகத் தெரியக் கூடிய கிரகமாகும். வியாழனின் சுற்றளவு பூமியைப் போல 11 மடங்கு அதிகமாகும்.
வியாழன் கிரகத்திற்கு உள்ளத் துணைக் கிரகங்களில் இதுவரை 28 கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த கிரகம் முழுவதும் வாயுக்களால் நிரம்பி உள்ளது. இந்த வாயுக்களின் பிரதிபலிப்பால்தான் இந்த கிரகம் பிரகாசமாகக் காட்சி அளிக்கிறது.
ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற கனமற்ற வாயுக்கள் நிரம்பியிருப்பதால் பூமியை விட வியாழன் அடர்த்தி குறைவானதாக உள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அனுப்பிய கலீலியோ விண்கலத்தில் இருந்த சென்ற ஆய்வுக்கலம், வியாழன் கிரகத்தின் உள்பகுதி படங்களை எடுத்து அனுப்பியது.
**
***அப்படியா!***
மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.
நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.
நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.
நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.
வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.
ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
************************************
இரண்டு தலை ஆமை!
அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் சான் ஆண்டனியோ என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அவ்வப்போ ஒன்று 2 தலை விலங்கு பிறக்குமாம். இங்கு, சமீபத்தில் கடல் ஆமை 2 தலையுள்ள குட்டி போட்டது. அது நல்ல உடல்நலத்துடன் இருப்பதால் பார்வைக்கு வைக்க கால்நடை மருத்துவர்கள் சிபாரிசு செய்தனர். அந்த அரிய விலங்கினை சிறுவர்கள் முதல் முதியோர் வரையில் கண்டுகளிக்கிறார்கள். அதுமட்டுமல்ல இந்த பூங்காவில் இதற்கு முன்பு 2 தலை எலி, 2 தலை பாம்பு ஆகியவை பிறந்து பார்வையாளர்களை கவர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
**
பேசும் யானை!
தென் கொரியாவில் வன விலங்கு பூங்காவில் உள்ள ஆசிய யானை ஒன்று, கொரிய மொழி பேசுகிறது. அதை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆச்சரியப்படுகின்றனர்.
கசகஸ்தான் நாட்டில் யானை ஒன்று மனிதர்களை போலவே பேசியது குறித்து தகவல்கள் வெளியாயின. அந்த யானை ரஷ்ய மற்றும் கசக் மொழியில் சில வார்த்தைகளை பேசியதாக கூறப்பட்டது.
ஆனால், யானை பேசுவது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு எதுவும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், தென் கொரியாவின் எவர்லேண்ட் வன விலங்கு உள்ள பூங்காவில் உள்ள கோஷிக் என்ற ஆசிய யானை மனிதர்களை போலவே மிமிக்ரி செய்து வருகிறது. இந்த யானை கொரிய மொழியில் ஹலோ, நோ, சிட் டவுன், குட் போன்ற வார்த்தைகளை உச்சரிக்கிறது. தனது துதிக்கையை வாய்க்கு திணித்து ஒலி எழுப்புவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கொரிய மொழியில் சில வார்த்தைகளை கோஷிக் யானை பேசினாலும், அதன் அர்த்தம் அதற்கு தெரியவில்லை.
***
பாலப்பழம் கணக்கு
சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.
‘பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை.‘
- கணக்கதிகாரம்
விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால்
வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !
*******************
07/06/13/ சிறுவர்மலர்/ தெரிஞ்சுகுங்க
நமது உடல் ஆச்சரியங்கள்!
*குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
*நமது உடல் எடையில் 14சவீதம் எலும்புகளால் ஆனது.
* உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு.
* உடல் எடையில் 7 சதவீதம் ரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் ரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
*உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் ரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
*நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
*நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
*நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் ரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
*மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
*ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் ரத்தத்தை ரத்த குழாயில் செலுத்துகிறது.
*மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.
*நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20 சதவீதம் மூளைக்கு செல்கிறது.
*நமது மூளை 80 சதவீதம் நீரால் ஆனது.
*நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
*மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
*மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்,
கண்கள் 31 நிமிடங்கள் , மூளை 10 நிமிடங்கள் , கால்கள் 4 மணி நேரம்,
தசைகள் 5 நாட்கள் , இதயம் சில நிமிடங்கள் மட்டுமே!
****
முட்டை சிறிது குஞ்சு பெரிது!
முட்டையில் இருந்து வெளிவந்தப்பின் முதலைக்குட்டி, தான் இருந்த முட்டையைவிட மூன்று மடங்கு பெரிதாக இருக்குமாம்!
நீல நிறம் தெரியும்!
பறவைகளில் ஆந்தைகளுக்கு மட்டும்தான் நீல நிறத்தைப் பார்க்க முடியும்!
**********************
அப்படியா!
*உலகத்தில் இயற்கையாக இறப்பவர்களைவிட விபத்துகளினால் கூட்டம் கூட்டமாக உயிரிழப்பு ஏற்பட்டுகொண்டிருகிறது . இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இதுபோன்று விபத்துக்கள் அதிகமாக எந்த நாளில் ஏற்படுகிறது என்பதையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள். உலகத்தில் அதிகமான விபத்துக்கள் சனிக்கிழமைகளில்தான் ஏற்படுகிறதாம் .
* ஜப்பானீஷ் கிரேன்ஸ். இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும்.
மனிதர்களில் நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.இப்ப எல்லோருக்கும் உங்க விரல்களை ஒரு முறை பார்க்கத் தோன்றுமே .
*உலகத்தில் உள்ள விலங்கினகளில் கேட் பிஷ்வகை விலங்குகளுக்குத்தான் சுவை உணரும் சக்தி அதிகமாம் .அதாவது 27, 000 சுவை மொட்டுகள் அவைகளின் நாவில் காணப் படுகிறதாம் .
*இந்தியாவின் பெருமைகள்
1) உலகிற்கு முதன்முதலில் யோகா கலையினை அறிமுகப்படுத்திய நாடு இந்தியா
2) உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா
3) ஒரே நிறுவனத்தில் உலகில் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் இடத்தினைக் கொண்ட நாடு இந்தியா- இந்தியன் ரயில்வே .
4) உலகில் மிக உயரத்தில் அமையப்பெற்ற பாலத்தினைக் கொண்ட நாடு இந்தியா .பெய்லி பாலம்(இமயமலை பிராந்தியம்)
5) உலகில் மிக உயரமான கற்கோபுரத்தினைக் கொண்ட நாடு இந்தியா - குதுப் மினார்
6) உலகில் மிகப் பெரிய பாடசாலையினைக் கொண்ட நாடு இந்தியா - குணிதtட கணிடிணt ஏடிஞ்ட குஞிடணிணிடூ
7) உலகில் மிகப் பெரிய அரசியலமைப்பு சட்டத்தினைக் கொண்ட நாடு இந்தியா
8) உலகில் மிக நீளமான சாலையினைக் கொண்ட நாடு இந்தியா- (சென்னை- கொல்கத்தா இடையிலானது)
9) உலகில் மிக உயரமான மலைத்தொடரினைக் கொண்ட நாடு இந்தியா - இமய மலை
10) உலகிற்கு முதன்முதலில் இலக்க முறையினை அறிமுகப்படுத்திய நாடு இந்தியா
**************
ஆ... ஆச்சரியம்!
*கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே துõங்கும்.
*குவாரின் என்ற பறவை மல்லாந்து துõங்கும்.
*வாத்துக்கள் நீரில் வட்டமடித்துக் கொண்டே துõங்கும்.
*ராபின் இனப்பறவை பாடிக் கொண்டே துõங்கும்.
*பாம்புகள் கண்களைத் திறந்து கொண்டேக் கூட துõங்கும்.
*டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டே துõங்கும்.
*வரிக்குதிரை நின்று கொண்டேத் துõங்கும்.
*மாடுகள், ஒட்டகங்கள் அசை போட்டுக் கொண்டேத் துõங்கும்.
*கோழிகள் நின்று கொண்டேத் துõங்கும்.
*குரங்குகள் மரத்தில் தொங்கியபடியேத் துõங்கும்.
* நாய்க்கு நிற வேறுபாடு தெரியாது.
* யானைக்கு குதிக்கத் தெரியாது.
* பாம்புக்கு கேட்கும் சக்தி இல்லை.
* ஈமு, கிவி பறவைகளுக்கு பறக்கும் சக்தி இல்லை.
* குதிரைக்கு படுத்து உறங்கத் தெரியாது.
அப்படியா!
*பல்லி போன்ற ஊர்ந்து செல்லும் பிராணிகள் தங்களின் நாக்கினால் பூச்சிகளைச் சுண்டி இழுத்துப் பிடிக்கும். சில நேரம் நாக்கில் ஊறும் திரவத்தால் தரையைத் தொட்டு உணவைச் சேகரித்துக் கொள்ளும். பாம்பு, உடும்பு போன்ற பிராணிகளும் உணவு தேடிக்கொள்ள நாக்கை வெளியே சுழற்றிக் கொள்கின்றன.
*அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.
*முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.
*மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.
*******************
*மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.
*நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும்.
*நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
*ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.
*மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.
*கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.
*ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
*பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.
*நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
*ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடும்.
*புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.
*காண்டாமிருகத்தின் காலில் மூன்று பாதங்கள் இருக்கின்றன.
*பூச்சி இனங்களில் அறிவாற்றல் அதிகமுடையது எறும்பு.
*உலகில் அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான்.
*கடல் பிராணியான ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
அதிசய ஆங்கில வாக்கியம்:
“கச்ஞிடு ட்தூ ஞணிது தீடிtட ஞூடிதிஞு ஞீணித்ஞுண டீதஞ்ண் ணிஞூ டூடிணுதச்ணூ” இது ஓர் அதிசயமான ஆங்கில வாக்கியம் ஆகும்! என்ன என்கிறீர்களா? மேற்கண்ட வாக்கியத்தில் ஆங்கில எழுத்துகள் 26ம் அடங்கி இருப்பதுதான் அந்த அதிசயம்.
“கூஏஅNஓ ஙுOக்” நன்றி கூறுவதை சட்டமாக்கியிருக்கும் நாடு எது தெரியுமா?
சுவீடன்.
************************