





ஆவிகளுக்காக ஒரு பிரமாண்ட மாளிகை!
- தேவராஜன்
நாம் நேசித்த ஒருவருக்காக நினைவு சின்னம் எழுப்புவது வழக்கமான ஒன்றுதான்!
அந்த நினைவுச்சின்னம் யாருக்காக வேண்டுமானாலும் இருக்கலாம். பாசமான அம்மாவுக்காக, அன்பான அப்பாவுக்காக, அண்ணன்- தம்பி, அக்காள்- தங்கை, நண்பருக்காக, காதலுக்காக என பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்!
ஆனால், பேய் அல்லது ஆவிகளுக்காக ஒரு பிரமாண்ட மாளிகையை யாராவது கட்டுவார்களா?
கட்டியிருக்கிறார் ஒருவர்! ஆம் ஆச்சரியமாக இருக்கிறதா? இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி? இந்த மாளிகையைப் பற்றி இன்னும் தெரிந்து கொண்டால் நீங்கள் வியப்பின் உச்சத்திற்கே செல்வீர்கள்!
அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் ஒரு பிரமாண்டமான மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகையை ஒருமுறை பார்த்தவர்கள் அப்பாடா! இப்படி ஒரு மாளிகையா! என்பார்கள்.
இந்த மாளிகைக்குச் சொந்தக்காரர் ஒரு பெண். அந்தப் பெண்ணின் பெயர் சாரா. சாரா 1840 ல் பிறந்தவள். 1862ல் திருமணம்.
சாராவின் கணவர் பெயர் வின்செஸ்டர். இந்த தம்பதிக்கு இரு மகள்கள். சாரா பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவள். அவள் பெரிய பணக்காரி. 1866ல் தன்னுடைய குழந்தைகளைப் பறிக்கொடுத்தாள்! 1881 தன் கணவனையும் பறிக்கொடுத்தாள்.
இந்த அடுக்கடுக்கான சோக நிகழ்வுகளுக்குப் பிறகுதான்
சாராவுக்கு எப்படியோ இந்த மாளிகையை கட்டிப் பார்க்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தன் வீட்டில் அதிகப்படியான ஒரு அறையைக் கட்டினாள் சாரா.
இப்படி தொடர்ந்து 36 ஆண்டுகள் கட்டிக் கொண்டே இருந்தாள் அந்த மாளிகையை!
சாரா எதிர்பாராமல் 1922ல் இறந்து விட்டாள்! அவள் இறந்த போது அவள் கட்டியிருந்த மாளிகையை பெரும் நிலப்பரப்பில் பரவி இருந்தது. மாளிகையில் 160 அறைகள் இருந்தன.
சாரா வின்செஸ்டரின் வீட்டில் பல அறைகள் பயன்படுத்தப்படவே இல்லை.
சில அறைகளின் அகலம் வெகுசில அங்குலங்களே இருந்தன. மாளிகையில் இருக்கும் மாடிப்படிகள் எங்கே போகிறதென்றே தெரியாது.
சாளரங்கள் வெற்றுச் சுவரை நோக்கி இருந்தது. எட்டுமாடிக் கட்டடமான
இதில் 3 லிப்டுகள். 2,000 கதவுகள். 10,000 ஜன்னல்கள்.
பல மைல்கள் நீளத்துக்கு ரகசியப் பாதாளப் பாதைகள், கூடங்கள்.
எப்பப்பா...
இன்று வின்செஸ்டர் மாளிகை ஒரு மியூசியம் ஆகிவிட்டது. உலகின் விந்தையான இந்தமாளிகையைக் காண பலரும் வருகின்றனர்.
வின்செஸ்டர் மாளிகை உருவானது எப்படி?
சாரா வின்செஸ்டர் ஒரு இளம்பெண். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்தாள். அவள் ஒரு பங்களாவைக் கட்டி வந்தாள். இவளது குழந்தைகள் சிறுவயதிலேயே நோய்வாய்பட்டு இறந்துவிட்டன.
அடுத்து அவர் கணவரும் இறந்து விட்டார். அவளை துன்பம் துரத்திக் கொண்டே இருந்தது. சோதனைமேல் சோதனை. இந்த மீளா துயரில் இருந்து மீள்வது எப்படி என்று யோசித்தாள்.
ஒருநாள் ஒரு பாதிரியாரைச் சந்தித்தாள். அவரிடம் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் தான் இழந்ததையும் சொல்லி சொல்லி அழுதாள்.
இதை எல்லாம் கேட்ட அந்த பாதிரியார், “உனக்கு ஒரு சாபக்கேடு இருக்கிறது. உன் கணவர் போர்க்கருவிகள் செய்து கொடுத்ததால் இரண்டாம் உலகபோரில் ஏராளமானவர்கள் கொல்லபட்டனர். அவர்களின் ஆத்மாக்கள் உன் குடும்பத்தை பழி வாங்குகின்றன. அதுதான் உன் குழந்தைகள் இறக்கக் காரணம். அந்த ஆத்மாக்கள்தான் உன் மாளிகையில் வசிக்கின்றன. அந்த மாளிகையை ஆவிகளுக்கு வசதியாகக் கட்டு. மாளிகையை நீ கட்டிக் கொண்டே இருக்கணும். கட்டுவதை இடையில் நிறுத்தினால் நீ இறந்துபோவாய்” என்றார்.
இதைக் கேட்ட அதிர்ந்தவள் என்ன செய்வது சற்று குழம்பினாள். பிறகு, பாதிரியார் சொன்னதை முழுமையாக நம்பிய சாரா, தனது பங்களா முழுவதும் நுõற்றுக்கணக்கான ஜன்னல்கள், நுõற்றுக்கணக்கான கதவுகளும் வைத்துக் கட்டினாள்.
அப்படி கட்டிக்கொண்டிருக்கும் போது 1906ம் ஆண்டு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவும் ஆத்மாக்களின் கோபம் என்று எண்ணிய அவள் மேலும் ஜன்னல், கதவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தாள். மாளிகை முழுமையாக கட்டி முடிக்கும் முன்பே சாரா இறந்துவிட்டாள். இப்படி ஒரு கதை இந்த மாளிகை உருவான விதம் பற்றி கூறப்படுகிறது.
இன்றைக்கும் இந்த மாளிகை சுற்றுலா பயணிகளை திகைக்கவும், ஆச்சரியபடவும் வைக்கும் மாளிகையாகத் திகழ்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக