அமலி( அருள்மொழி)சொல்லாமல் போனதென்ன?
8.11.13 சாலை நடந்த கோர விபத்தில் என் ப்ரியமான தோழி அமலி என்கிற அருள்மொழியும் அவரது கணவரும் பலியானார்கள் என்ற செய்தி கேட்டதும் துடிதுடித்துப்போனேன்!
திருகண்ணபுரம் என்றால் நினைவுக்கு வரும் நினைவுகளில் ஒன்று அமலியின் நினைவு. அந்த நினைப்பே இப்படி மரணித்துவிடும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.
கடந்த 10 தினங்களுக்கு முன்பு கூட பேஸ்புக்கில் என் மகனின் புகைப்படத்தைப் பார்த்து விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கு மறுமொழி கூட நான் இன்னும் இடவில்லை! அதற்குள் இப்படி நடந்து விட்டதே!
அமலியைப் பற்றி எழுத ஆயிரம் உண்டு. எழுதி என்ன செய்ய? அவர் படிக்கவா போகிறார்?
என்னுடைய பிரார்த்தனை எல்லாம் அமலியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்.
என்றென்றும் இறைவன் திருபாதத்தில் இளைப்பாற வேண்டும் என்பதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக