சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்கள் -1

குட்டீஸ் கேள்வி பதில்கள் -1 *டிவிடி என்றால் என்ன? - ஆர். கோகுல், பள்ளூர். டிவிடி (ஈடிஞ்டிtச்டூ ஙஞுணூண்ச்tடிடூஞு ஈடிண்ஞி) என்பது சிடிக்களின் அடுத்த நிலை. சி.டி.க்களில் (இணிட்ணீச்ஞிt ஈடிண்டு) 600 எம்.பி. அளவுள்ள டேட்டாக்களை மட்டுமே பதிந்து கொள்ள முடியும். ஆனால் டிவிடிக்களில் 4 ஜி.பி. அளவு டேட்டாக்களை பதிந்து கொள்ள முடியும். இது சிடியை காட்டிலும் 5 மடங்கிற்கு மேல் ஆகும். இப்போது சிடியைக் காட்டிலும் டிவிடிக்களைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிடிக்களின் விலையை விட டிவிடிகளின் விலையும் சற்றுதான் அதிகம். *சிம்கார்டு கண்டுபிடித்தது யார்? - ரா. வீரபாண்டியன், புதுக்கோட்டை. செல்போன்களில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள சர்வீஸ் புரொவைடர்களால் வழங்கப்படும் ஒரு சிறிய அட்டைக்குப் பெயர் தான் சிம்கார்டு. சிம் என்பதன் விரிவாக்கம் குதஞண்ஞிணூடிஞஞுணூ ஐஞீஞுணtடிtதூ Mணிஞீதடூஞு (குஐM). முதல் சிம் கார்டு 1991ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த சிம் கார்டை முனிச் ஸ்மார்ட் கார்டு தயாரிப்பாளர் கீய்செக்கெ - டெவ்ரியன்ட் உருவாக்கினார். முதல் 300 சிம் கார்டுகளை, பின்லாந்து கம்பியற்ற நெட்வொர்க் வழங்குனர் ரேடியோலின் ஜாவுக்கு விற்றார். * வலிப்பு வந்தவர்களுக்கு சாவிகொத்தைக் கொடுப்பது ஏன்? - அருள்மொழி, நாகை. வலிப்பு வந்தவர்களுக்கு சாவி கொத்து கொடுப்பது, இரும்பு கம்பிகளைப் பிடிக்கக் கொடுப்பது, முகத்தில் குளிர்ந்த தண்ணீரைத் தெளிப்பது எல்லாம் மருத்துவ ரீதியான செயல்பாடுகள் இல்லை. வலிப்பு வந்தவர்களின் ஆடைகளைத் தளர்த்திவிட வேண்டும். நல்ல காற்றைச் சுவாசிக்க வழி செய்ய வேண்டும். காற்றை அடைத்துக்கொண்டு நிற்கக் கூடாது. வலிப்பு நோயாளியை ஒருக்களித்துபடுக்கும்படி செய்ய வேண்டும். இதனால் வாயிலிருந்து வழியும் கோழை வெளியேறும். தொண்டையை அடைத்துக் கொள்ளாது. வாயில் பற்களுக்கு இடையில் ஒரு துணியைச் சுருட்டி வைக்க வேண்டும். இதன் மூலம் நாக்கைக் கடித்துக் கொள்ளாமல் தடுக்கலாம்.வலிப்பு நோயாளிகளுக்குச் செய்யும் முதல் உதவிகள் இவை. பின்னர் அவருக்கு தெளிவு ஏற்பட்டதும் நன்றாகத் துõங்கச் செய்ய வேண்டும். *******************************************************************************************

வெள்ளி, 18 ஜனவரி, 2013

சுவரா(ஹா)ஸ்யம் பக்கம் /பாகம்-2/

சுவாரஸ்யம்/18/ 4.01.2013/ (தினமலர்- சிறுவர் மலரில் 7.9.2012 முதல் நான் எழுதி வரும் தொடர்கட்டுரைகளின் பாகம் இரண்டு.) ஆயிரம் அர்ச்சுனர்கள் காந்திஜி எங்கிருந்தாலும் கடிதம் எழுதும் பழக்கத்தை விடவே மாட்டார். தினசரி சபர்மதி ஆசிரமத்துக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் படித்துவிட்டு, பதில் தரவேண்டிய கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் கடிதம் எழுதி அனுப்பிவிடுவார். ஒருசமயம் காந்திஜி சிறையில் இருக்கும் போதும் சபர்மதி ஆசிரமத்திலிருந்த சிறுவர் சிறுமியர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆசிரம சிறுவர்கள் எழுதி அனுப்பும் கடிதங்களுக்கு காந்திஜியும் நகைச்சுவையோடு சுருக்கமாக பதில்களை எழுதி அனுப்பி வைப்பார். அவருடைய சுருக்கமான பதில்கள் சிறுவர், சிறுமியர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர்கள் காந்திஜிக்கு, “காந்திஜி அவர்களே, பகவான் கிருஷ்ணன், அர்ச்சுனன் கேட்ட சிறு சிறு கேள்விகளுக்குக் கூட அத்தியாயம் அத்தியாயமாய் பதில் அளித்தார். ஆனால் உங்கள் பதில்கள் ஓரிரு வார்த்தைகளாகவே இருக்கிறதே! ஏன் அப்படி?” என்று கேட்டு கடிதம் அனுப்பினார்கள். அதற்கு காந்திஜியும் பதில் அனுப்பினார். “குழந்தைகளே, பகவான் கிருஷ்ணருக்கு ஒரு அர்ச்சுனர் மட்டும்தான் கேள்வி கேட்பவராக இருந்தார். ஆனால், எனக்கு உங்களைப் போல் பல ஆயிரம் பேர் கடிதம் எழுதுகிறார்கள், கேள்வி கேட்கிறார்கள். எல்லாருக்கும் பதில் எழுத வேண்டியதிருக்கிறதே...” என்று நகைச்சுவையாகப் பதில் எழுதி அனுப்பினார். சிறுவர், சிறுமியர்கள் காந்திஜியின் விளக்கம் படித்து, அவரின் சுருக்கமான பதிலைப் படித்து மகிழ்ந்து போனார்கள். தாத்தா- பேரன் இருவர் ஒரு ஓட்டலுக்கு சாப்பிட போனார்கள். அங்கே ஒரு பலகையில் ‘இங்கே நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். பணத்தை உங்கள் பேரப்பிள்ளைகள் செலுத்தினால் போதும்’ என்று அறிவிக்கப் பட்டிருந்தது. சாப்பிட போன அந்த இருவரும் அந்த அறிவிப்பை படித்து மகிழ்ந்தார்கள். நாம சாப்பிடறதுக்கு நம்ம பேரன்கள் அல்லவா காசு கொடுக்கப் போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு அந்த ஓட்டலில் சாப்பாட்டை வெளுத்து கட்டினார்கள். பெரிய ஏப்பத்துடன் கையை கழுவி விட்டு வந்தவுடன், சர்வர் ஒரு பெரிய தொகையை பில்லாக கொடுத்தார். சாப்பிட்ட இருவருக்கும் கோபம்னா அப்படி ஒரு கோபம், “என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? என்ன எழுதி போட்டு இருக்கு? என்ன இது பில்லு?” என்று கத்தினார்கள். சர்வர் அமைதியாக சொன்னார் “எல்லாம் சரிதான். ஆனா, இது உங்க தாத்தா சாப்பிட்ட பில்லாச்சே....” என்றார். .......................................................... ***************************************************************************************************** சுவாரஸ்யம்/19/ 11.01.2013/.................................................. விவேகானந்தரின் துணிச்சல்!..................................................... ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் சென்றிருந்தார். நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். கூடவே, நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார். அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர். மனைவியைத் துõக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதைக் கண்ட நண்பர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது. ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். “சிறிதுகூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார். ..................................................... *************************************************************************************************************** கோணமண்டையா/20/ 18.01.13........................................................... அந்தச் சிறுவன் ஓஹையோ நகரத்தில் மிலான் என்ற ஊரில், பிப்ரவரி11, 1847ம் ஆண்டு பிறந்தான். அவன் பெற்றோருக்கு 7 வது குழந்தை. அதுவும் கடைசி குழந்தை. அந்தச் சிறுவனுக்குச் சிறுவயதிலேயே காது செவிடாய் போய்விட்டது. அதுமட்டுமா? அவனுக்கு பிறக்கும் போதே பின்னந்தலை பின்புறம் சற்று நீட்டிய நிலையில் இருந்தது. அவன் வளர்ந்த பிறகும் மண்டையின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவன் பள்ளியில் சேர்க்கப்பட்டான். ஒரு சில நாட்கள் பள்ளிச் சென்றவன், திடீரென்று இனி பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடித்தான். ஏனென்று காரணம் கேட்டார் தாய். அதற்கு, அவன், “பள்ளியில் எல்லாரும் என்னை ‘கோணமண்டையா கோண மண்டையா” என்று கேலி செய்வதாகக் கூறினான். தாய் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்தார். பள்ளிக்குச் சென்று வந்தான் அவன். மீண்டும் ஒரு நாள் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடித்தான். இம்முறை காரணமாக அவன் சொல்லியது: “ என்னை வகுப்பில் எல்லார் முன்னாடியும் மூளைக்கோளாறு உள்ளவன்” என்று ஆசிரியர் திட்டிவிட்டதாகக் கூறினான். மீண்டும் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பப்பட்டான். வழக்கம் போல மீண்டும் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தான். கடுப்பான தாய், “உனக்கு கோணமண்டை, அதான் படிப்பு ஏறவில்லை” என்றார். அன்றுடன் அவன் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. உலகத்தில் அதிக கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி சாதித்தவர்களின் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார் அந்தச் சிறுவன். அவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன். எடிசன் இறந்த பிறகு, அவரின் தலையை ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் நமக்கு இருக்கும் அதே அளவு மூளை எடிசனுக்கும் இருக்கிறது. ஆனால், பின்புறத்தலையின் நீண்டப் பகுதியில்தான் ஏதோ கண்டறிய இயலாத மிகப்பெரிய மர்மம் மறைந்து இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தார்களாம்! * பிரிட்டிஷ் ராஜாவையே கவுத்துட்டியே! வேலைக்காரரை அழைத்து, ‘தபால் தலையை ஒட்டிக் கொண்டுவா’ என்றார் ராஜாஜி. பிரிட்டிஷ் மன்னர் தலையிட்ட தபால்தலையைத் தலைகீழாக ஒட்டிக்கொண்டு வந்தார் வேலைக்காரர். இந்தச் செயலுக்கு நாமாக இருந்தால் கோபப்பட்டிருப்போம். ராஜாஜி சொன்னார்: “பரவாயில்லையே! நாங்களெல்லாம் செய்ய முடியாத காரியத்தை நீ செஞ்சுட்டியே, பிரிட்டிஷ் ராஜாவையே கவுத்துட்டியே!” என்றாராம். ................................ ******************************************************************************************************************************************* எட்டேகால் லட்சணம்/21/ 25.01.13/........................................................... ஒரு நாள் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது புலவர் ஒருவர் அவ்வையாரை நோக்கி ஆரைக் கீரைக்கும் அவ்வைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள்படும் படியாக ஒப்பிட்டு, ‘ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ‘ என்று கூறினார். இதற்கு அவ்வையார், ‘எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க் கூறையில்லா வீடே, குலராமன் துõதுவனே ஆரையடா சொன்னாயது.’ என்று பதில் பாட்டு கொடுத்தார். தமிழில் ‘அ‘ அன்பது எண் 8 ஐக் குறிக்கும் ‘வ‘ 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் ‘அவ‘ என வரும். எட்டேகால் லட்சணமே என்றால் ‘அவ லட்சணமே‘ எனப் பொருள்படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் ‘எருமையே‘ எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் ‘மூதேவியின் வாகனமே‘ என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் ‘குட்டிச் சுவரே‘ என்று பொருள். ‘குலராமன் துõதுவனே‘ என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் துõது சென்ற அனுமானான ‘குரங்கே‘ என்றும் பொருள் படும். ‘ஆரையடா சொன்னாயது‘ என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் ‘அடா‘ என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை ‘அடி‘ என்றதற்குப் பதிலடி கொடுத்தார். * எங்கே விழுது? கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன. இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர். பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை. கி.வா.ஜ அவனை நோக்கி, ‘என்ன?‘ என்று கேட்க, ‘நெய்ங்க...‘ உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது‘ என்று சொன்னான். கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, ‘விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!‘ என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர். .......................................................................................................... ******************************************************************************************************************************** அதிர்ச்சி நகைச்சுவை/22/ 1.02.2013/........................................................................... கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் நகைச்சுவையாக பேசக்கூடியவர். அவர் பேச்சுகள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும். இதோ ஒரு அதிர்ச்சி நகைச்சுவை. என்.எஸ். கிருஷ்ணன் குடும்பமும் பக்கத்து வீட்டு குடும்பமும் திருப்பதிக்கு செல்வதாக திட்டுமிட்டு இருந்தனர். இது தொடர்பாக பக்கத்து வீட்டு பெண்மணி, என்எஸ் கிருஷ்ணனை பார்த்து பேச வந்தார். அந்தப் பெண்மணி , என் எஸ் கிருஷ்ணனைப்பார்த்துக் கேட்டாங்க ...... “நாம நாளானிக்கு திருப்பதி போறதா ஒரு பிளான் வச்சிருந்தோமே!, யார், யார் போறோம்னு முடிவு பண்ணியாச்சா?” என்று கேட்டார். அதற்கு, என்எஸ் கிருஷ்ணன் சிலேடையாக அந்த பெண்மணியைப் பார்க்காமலேயே....“அதெல்லாம் எனக்குத் தெரியாது , நா ஓம் புருஷன் , நீ என் பொண்டாட்டி ..... அவ்வளவு தான்”என்றார் . இப்படி அவர் சொல்லி முடித்ததும்,அந்தப் பெண்மணி அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டு வாயடச்சுப் போயி இருந்தாங்க. பிறகு, கொஞ்சம் நேரம் கழித்து அவர் சொன்னதை ஆழமாக யோசிச்ச போது தான் அந்தப் பெண்மணிக்கு வாய் நிறைய சிரிப்பு வந்து சிரிச்சாங்க. என் எஸ் கிருஷ்ணன் சொன்னதின் அர்த்தம்- நான் ஓம் புருஷன் என்பது நானும், உன் புருஷனும். நீ என் பொண்டாட்டி என்பது நீயும் என் பொண்டாட்டியும் திருப்பதி போறோம் என்று இரட்டை அர்த்தம் வரும்படி பேசினார். ** நானா பொய்யன்? அமெரிக்காவில் 1961ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் நிக்சனும், ஜான் எப். கென்னடியும் போட்டி யிட்டனர். பொதுக் கூட்டத்தில் பேசிய நிக்சன், “கென்னடி நம்பிக்கைக்குரியவர் அல்லர்; அவர் மகா பொய்யர்” என்று பேசினார். இதனைக் கேட்ட கென்னடி, “நண்பர் நிக்சன் என்னை ஒரு பொய்யர் என்று குறிப்பிட்டுப் பேசினார். நான் பொய்யன் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இப்போது இந்தக் கூட்டத் தில் நான் பேசுபவை பொய் என்றால் தைரியமாகக் கூறுங்கள். இப்போது நான் சொல்கிறேன், இந்தக் கூட்டத்திலிருக்கும் ஆண்கள் அனைவரும் சிறந்த அறிவாளிகள்; அதேபோல் இங்கே கூடியிருக்கும் பெண்கள் அனைவரும் சிறந்த அழகுடையவர்கள். நான் சொன்னது பொய்யெனில், இப்போதே தைரியமாக மறுத்துக் கூறுங்கள்” என்று சாதுரியமாகப் பேசினார். கூட்டத்திலிருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரித்தனர். தேர்தலில் வெற்றிபெற்று, குறைந்த வயதிலேயே குடியரசுத் தலைவரானவர் என்ற பெருமையையும் பெற்றார் கென்னடி. ****************************

வியாழன், 10 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்! (11.01.2013 தினமலர் சிறுவர் மலரில் இடம் பெற்ற எனது கட்டுரை:) நாம் பூமிக்கு, மழைக்கு, சூரியனுக்கு, பயிர்களுக்கு,மாடுகளுக்கு மொத்த இயற்கைக்குமாக நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடுவதே பொங்கல் திருநாள். வடநாட்டில் இது சங்கராந்தி எனவும், பிறநாடுகளில் அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது இந்த விழா. தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரீசியஸ் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. போகி போகி, தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள் ’பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். பொங்கல் பண்டிகை < தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து, பொங்கல் செய்வது மரபு.< கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூறி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.< மாட்டுப்பொங்கல் மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினை சுத்தம் செய்து, கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். காணும் பொங்கல் நான்காவது நாள் காணும் பொங்கல். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் இந்நாளில்தான். இந்த நாளில் பல விளையாட்டுப் போட்டிகள், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகள், இரவில் இசை கச்சேரிகள், நாடகம் என்று ஊருக்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று தொன்மையான கலைகள் இரவு விளக்கு வெளிச்சத்தில் நடை பெறுவதும் உண்டு. ***பாக்ஸ் மேட்டர்*** *ஜல்லிக் கட்டு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும். தமிழகத்தில் மதுரை மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் அலங்காநல்லுõரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடை பெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜப்பான்,மலேசியா, சிங்கப்பூர், ஆ ஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் வந்து குவிந்து விடுவார்கள். *கிராமிய கலைகள் கிராமப்புறங்களில் கிராமியக் கலைகள் இந்த நாளில் நடத்தப்படும். கரகா ட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம் நடைபெறும். *சாவக்கட்டு ‘ சாவக் கட்டு’ என்றழைக்கப்படும் கோழிச் சண்டைகள் தமிழகத்தில் பரவலாக நடை பெறுகிறது. கோழிச் சண்டை என்று சொன்னாலும் சேவல்களைத்தான் சண்டை போடவிடுவார்கள். சேவல்களை கோழிச் சண்டைக்காகவே வளர்ப்பார்கள். *ரேக்ளா ரேஸ் ‘ ரேக்ளா ரேஸ்’ எனப்படும் ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டிப் பந்தயம் பல இடங்களில் நடை பெறும். இதற்கும் ஏராளமான கூட்டம் கூடும். எந்த வண்டி ஜெயிக்கும் என்று வேடிக்கை பார்ப்பவர்கள் பந்தயம் கட்டுவது வழக்கம். ...........................................

உலக நாயகன் ஆதவன்

*** உலக நாயகன் ஆதவன் ஆதவனின் சக்தியாகிய வெப்பம் மற்றும் வெளிச்சத்தின் சக்தியைக் கொண்டுதான், இப்புவியில் மரம், செடி, கொடி, புல் பூண்டு மற்றும் மிருகம், பறவை இன்னும் புழு, பூச்சி இனங்கள் முதல் மனித குலம் வரை அனைத்துமே தோன்றி வளர்ந்து, இப்புவியைத் தழைக்கச் செய்கின்றன. சூரியனின் உதவியின்றி எந்த ஓர் உயிரினமும் பூமியில் தனது உணவைப் பெற்றுவிட முடியாது. அதுமட்டும் அன்றி, புவியின் அனைத்து உயிரினங்களின் வாழ்வுக்கும் ஒவ்வாதவற்றை அழித்து, அவற்றின் சுகாதாரமான நலவாழ்வை உறுதி செய்வதும் சூரியனே! இயற்கைப் படைப்புகளின் இயக்கத்திற்கும், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கும் மூலாதாரக் காவலனாக விளங்குவதும் சூரியன்தான். சூரிய வழிபாடு பழைய வழிபாடு உலகின் தொன்மைப் படைப்பான வேதங்களில்,சூரியனின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. பண்டைய எகிப்தில் பல சூரியக் கோயில்கள் இருந்துள்ளன. சூரிய வழிபாடு நடந்துள்ளன. இங்கிலாந்தின் பூர்வ குடிகள், திறந்த வெளியில் சூரிய பூஜையை நடத்தினர். வேறு சில நாடுகளில் சூரியச் சிலைகள் அரசனின் உருவத்தில் அமைக்கப்பட்டன. அவற்றுக்குத் தலைக் கவசம், உடற் கவசம் மற்றும் காலணிகள் இருந்தன. நேபாளத்தில் இன்றும் சூரியக் கோயில்கள் உள்ளன. அங்கு முறைப்படி சூரிய வழிபாடு நடைபெறுகிறது. பொங்கல் பலவிதம் பொங்கல் பண்டிகை இந்தியா முழுவதும் பல பெயர்களில் கொண்டாடப் படுகின்றது. அஸ்ஸாம்,மணிப்பூர் போன்ற இடங்களில் ‘போகாலி பிகு’ என்ற பெயரில் இந்த விழா அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் ‘லோகிரி‘ என்று அழைக்கப் படுகின்றது. குஜராத், மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் ‘மகர சங்கராந்தி‘ என்ற பெயரில் அழைக்கப் படுவதுடன் அன்று எள்ளுடன் சேர்த்த இனிப்புகளையும் பரிமாறிக் கொள்வார்கள். பஞ்சாப், ஹரியானாவில் சோளப்பொரி, அரிசி போன்றவற்றில் இனிப்புச் சேர்த்து நெருப்பில் இட்டு ஆடிப் பாடுவார்கள். காஷ்மீரத்தில் இந்நாளில் பருப்பு, அரிசி, நெய் கலந்த கிச்சடி செய்து அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டாடுகின்றனர். சூரிய நமஸ்காரம் செய்யலையா? <தை அமாவாசைக்குப்பின் வரும் சப்தமி நாளன்று சூரியனின் சக்தி அதிகமாக இருப்பதால், இதுவரை சூரிய நமஸ்காரம் முறையாகச் செய்யாதவர்கள், அன்று முறைப்படி தொடர்ந்து கடைப்பிடித்தால் உடல் நலம் வளம் பெறும்; கண்ணொளி பிரகாசிக்கும்.< <சூரியனுக்குப் பல பெயர்கள் சூரியன் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெயரைப் பெறுகிறான். தை மாதத்தில் விஷ்ணு, மாசியில் வருணன், பங்குனியில் பூஜா, சித்திரையில் அம்சுமான், வைகாசியில் தாதா, ஆனியில் சவிதா, ஆடியில் அரியமான், ஆவணியில் விஸ்வான், புரட்டாசியில் பகன், ஐப்பசியில் பர்ஜன்யன், கார்த்திகையில் துவஷ்டா, மார்கழியில் மித்திரன்.< குதிரை பொங்கல்! <பொங்கல் விழா ஜப்பானிலும் கொண்டாடப்படுகிறது. நாம் பால் பொங்கும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று குரல் கொடுப்பதுபோல், ஜப்பானியர்கள் ‘ஹங்கரோ... ஹங்கரோ...’ என்று குரல் கொடுப்பார்களாம். பொங்கலுக்கு மறுநாள் நாம் மாட்டுப்பொங்கல் கொண்டாடுவதுபோல, ஜப்பானில் குதிரைப் பொங்கல் கொண்டாடுவார்கள். அன்று குதிரைகளை நன்கு தேய்த்துவிட்டு அலங்காரம் செய்து, மலர் மாலைகள் சூட்டி, குதிரைகளுக்கு இனிப்புக் கொடுப்பது வழக்கம். - தேவராஜன்.

மனப் பொங்கல்!

மனப் பொங்கல்! *தை முதல் நாள் தமிழர் திருநாள் தமிழர் நெஞ்சங்களில் அன்பை அறுவடை செய்யும் இனிய நாள். *கவலைகளை அறுத்து ஏமாற்றங்களை அடித்து பகைமையை துõற்றி மானுட நெல்விதையை முத்து முத்தாய் எடுப்போம். *<நம்மை இந்நாளில் புதிதாய் புதுப்பித்து நேற்றை துயரங்களை போகியில் பொசுக்கிடுவோம். *சுற்றங்கள் கூடி ஏற்றங்கள் காண சூரிய பொங்கல் வைப்போம் அதில் கனவுகள் அரிசியாய் சேர்ப்போம் ஆசைகள் பால் வார்ப்போம் நம்பிக்கைகள் எனும் வெல்லாம் கலப்போம் எல்லாம் சேர்ந்து மன பானையில் சந்தோஷமாய் பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்! < <*வாயில்லா ஜீவனுக்கும் பொங்கல் வைப்போம் மாடுகள் பசியாற பசுமை எங்கும் காப்போம்! பசுமையோடு இத்திருநாள் நினைவுகள் மனதில் தங்க சந்தோஷமாய் பொங்கிலிடுவோமே! - தே.ச. சிவசண்முகம், திருக்கண்ணபுரம்.

புதன், 9 ஜனவரி, 2013

பாரத மாதா போற்றுதும்! /73/ 27.01.2013/

பாரத மாதா போற்றுதும்! /73/ 27.01.2013/ நேற்று குடியரசு தினம் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள். சுதந்திர தினம், குடியரசு தினம் கொண்டாடுவதிலும் பக்தி கலந்திருக்கிறது. இது தேசபக்தி. நம் தேசத்தை தாயாக நினைத்து மதிக்கவும், வணங்கவும் செய்கிறோம். பூமியையும் வணங்கிட கற்றுத்தந்தது இந்து மதத்தின் சிறப்பு! பூமியின் மகள்களாக சீதையையும், ஆண்டாளையும் உருவகம் செய்து பெருமை சேர்த்தது இதிகாசம். பூமி பூஜை கடைப்பிடிக்கப்படுவதும் ஒருவகையில் வழிபாடுதானே! ஒரு முறை தமிழகம் வந்த விவேகானந்தர் இப்போதைய கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு பகலாக தியானம் செய்தார். பாரத மாதாவை மனதில் நிறுத்தி அந்த தியானம் நடந்தது. முதல் நாள் தியானத்தில் விவேகானந்தருக்கு மனக்கண்ணில் பாரத மாதா சோகமாக காட்சியளித்தாள். இரண்டாம் நாள் உடம்பினில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கண்ணீர் வடித்தாள். மூன்றாவது நாள் சங்கிலிகள் உடைத்தெறியப்பட்டு சந்தோஷமாக காட்சியளித்தாள். “தாயே, தாங்கள் எனக்குக் காட்சி தந்த காட்சிகளில் எனக்கு என்ன உணர்த்துகிறாய்?” என்றார் விவேகானந்தர். “ இப்போது அந்நியரிடம் அடிமைப்பட்டு பல இன்னல் படுகிறேன். கை, கால்கள் கட்டப்பட்டு சுதந்திரம் இல்லாமல் அல்லல்படுகிறேன். விரைவில் நான் சுதந்திரம் பெற்று பூர்ண நிம்மதியில் இருப்பேன்!” என்றுரைத்தாள் பாரத மாதா. இந்த சம்பவம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு நிகழ்ந்தது. பிறகு, விவேகானந்தருக்கு தியானத்தில் உணர்த்தியபடி, பாரத மாதா சுதந்திரம் பெற்றாள். பாரதமாதாவை வழிபட்டு, பாரதமாதாவிடம் பேசிய இந்த தேச பக்தியை விவேகானந்தர் வாழ்க்கையில் இருந்து நாம் அறிகின்ற விஷயம். இறைவனுக்கு பள்ளியெழுச்சி தோத்திரங்கள் இருப்பது போல. பாரத மாதாவுக்கும் பாரதமாதா பள்ளியெழுச்சி தோத்திரம் பாடினார் பாரதியார். நாம் பாரத மாதாவை வணங்குவதன் மூலம் நாம் செய்ய வேண்டிய கடமைகள் சில இருக்கின்றன. ஒரு தாய் பெற்ற குழந்தைகளில் ஒரு குழந்தை திருடனாக, ஒரு குழந்தை முரடனாக, ஒரு குழந்தை குடிகாரனாக, ஒரு குழந்தை நல்லொழுக்கம் இல்லாதவனாக, ஒரு குழந்தை ஆதரவற்றவனாக, ஒரு குழந்தை ஏமாற்றுக்காரனாக, ஒரு குழந்தை வன்முறையாளனாக, இப்படியெல்லாம் இருந்தால் அந்த தாய் எப்படித் துன்புறுவாளோ, அதுபோலத்தான் எல்லாரையும் காக்கும் இந்த பூமித்தாயும் துன்புறுவாள். ஒரு தாய்க்கு தன் பிள்ளைகள் எல்லாருமே நல்ல பிள்ளைகளாக, கெட்டிக்காரர்களாக, நேர்மையானவராக, இருந்தால்தானே மகிழ்ச்சி. பாரத தாய்க்கு பாரதப் புதல்வர்களான நாம் அவள் மகிழ்ச்சி பெறும் வகையில் வாழ்வதுதான் பாரத மாதவுக்கு நாம் செய்யும் வழிபாடாகும். அதை நினைவுபடுத்தும் வகையில் சுதந்திர தினமும் குடியரசு தினமும் கொண்டாடுவதுதான் தேச பக்தி! - தேவராஜன். ***********************

இறைவனின் மனசாட்சி/72/ 20.1.2013/

இறைவனின் மனசாட்சி/72/ 20.1.2013/ மாமிச உணவுகளை உண்ணாமல் இருப்பவர்கள்தான் உயிர்களின் மீது இரக்கம் கொண்டவர்கள் என்று கூற முடியாது. மனதளவில் மற்றவர்களை புண்படுத்தாமல், சகமனிதர்களை மதிப்பதே உயிர் இரக்கமாகும். நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வின் நிகழும் சுகதுக்கங்களுக்கும் நம் மனப்பாங்கிற்கும் ஏற்ப செயல்படுகிறோம். நாம், நம்மை வெறுகின்றவர்களை வெறுக்கின்றோம். நம்மைப் பகைக்கின்றவர்களை பகைக்கின்றோம். நம்மிடம் பொருள், பணம் கேட்பவர்களுக்கு உடனே அதைக் கொடுப்பதற்கு மனம் வராமல் தயங்குகின்றோம். காரணம் இரக்கம் இல்லாமைதான். நம்மை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்து,புறங் கூறுபவர்களை ஆசிர்வதித்து, நிந்திக்கிறவர்க்கு மன்னிப்போ, பிரார்த்தனையோ செய்து பாருங்கள் மனம் நிம்மதி பெறும். மனிதர்கள் எல்லாரிடமும் இருக்க வேண்டிய நற்பண்புகள் அன்பு, இரக்கம் , கருணை ஆகும் . அது எல்லோரிடமும் இருந்தால் சண்டை, சச்சரவுகளே வராது . அடுத்தவரிடம் இரக்கம் காட்டுவது என்பது நல்லொழுக்க நெறி என்பதை புத்தர், ஸ்ரீஅரவிந்தர், விவேகானந்தர், தாயுமானவர், பட்டினத்தார் போன்ற தவசீலர்கள் பலவகையில் எடுத்துரைத்திருக்கிறார்கள். அதனைக் கடைப்பிடிக்கிறோமா நாம்? ஒரு சிறு கற்பனை. ஒரு ஐந்து நிமிடம் இந்த உலகம் முழுவதும் அன்பிற்கு கட்டுப்பட்டு இரக்க குணத்துடன் செயல்பட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்! போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் வேளையில் ஒதுங்கி வழிவிடும் நல்ல எண்ணம், ரேஷன் கடையில் நீண்ட வரிசையின் இறுதியில் நிற்பவருக்கு, அவருடைய அவசரம் கருதி, அவர் முதலில் பொருளை வாங்கிக்கொள்ளஅனுமதி அளிக்கும் இரக்க குணம், பயணச்சீட்டு வாங்கும் வரிசையில் அவசரமாக பயணம் மேற்கொள்ள வேண்டியவருக்கு தன் பயணச்சீட்டை விட்டுக்கொடுக்கும் உன்னத குணம், பசியோடு கையேந்தி நிற்பவருக்கு சாப்பிடும் உணவு ஒருபிடி எடுத்து தரும் நல்லமனசு இப்படியெல்லாம் நடந்தால் வாழ்க்கை எல்லாருக்கும் எவ்வளவு அருமையாக இருக்கும்? உலகில் அன்பும், இரக்கமும் வேண்டி நிற்போர் பலர். முதியோர் இல்லத்தில் விடப்பட்டு உறவுகள் இன்றி தனிமையில் வாடுபவர்களுடன் ஒருசில மணித்துளிகளாவது நம் நேரத்தை செலவிட்டு அன்பாகவும், ஆதரவாகவும் பேசலாம்; மருத்துவமனையில் உதவியின்றி சிரமப்படும் அனாதை நோயாளிகளுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்; கஷ்டப்படுபவர்களுக்காக பிரார்த்தனை செய்யலாம் இப்படி சின்ன, சின்ன விசயங்களில் இரக்கம் காட்டும் போது, நம் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கும்! நம்மோடு வாழும் சக மனிதர்களுக்கு நாம் காட்டும் இரக்கம்கூட தெய்வாம்சம்தான். இரக்கம் என்பது இறைவனின் மனசாட்சி. இதை நம்பினால் நாளும் நலம் பெறலாம்! - தேவராஜன். ******************