







பேய்கள் உலாவும் பிரமாண்டமான கப்பல்!
- தேவராஜன்.
ஆர். எம். எஸ். குயின் மேரி கப்பல் மிகபிரம்மாண்ட கப்பல். இது டைட்டானிக் கப்பல் கட்டப்பட்டுவதற்கு முன்பே கட்டப்பட்டது.
இந்த பிரம்மாண்ட கப்பலின் நீளம் 1019.5 அடி. உயரம் 181 அடி. எடை 81,237 டன்கள். இதன் எஞ்சின் 1 லட்சத்து 60 ஆயிரம் குதிரைதிறன் கொண்டது . 3 ஆயிரம் பேர் சொகுசாக பயணிக்கலாம்.
ஜான் பிரவுன் கம்பெனி (ஸ்காட்லாந்து) மற்றும் குனார்ட் ஸ்டீம்சிப் நிறுவனத்தால் உருவானது. பொருளாதார நெருக்கடியினால் ஒன்பது தளங்கள் கொண்டு முழுமையாக முடியாத நிலையில் 1931 ல் இருந்தது.
பின்னர் இந்த நிறுவனம் “வைட் ஸ்டார் லைன் (டைட்டானிக் கப்பலை நடத்தி வந்த நிறுவனம்) கம்பெனியுடன் இணைந்து இந்த கப்பலை 1936 ல் உருவாக்கினார்கள்.
1936 ம் ஆண்டு மே 27ல் இதன் முதல் பயணத்தை எட்டாம் எட்வர்ட் அரசர், ராணி மேரி, இளவரசி எலிசபத்,டச்சு பிரபுக்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
1001 அட்லாண்டிக் பயணங்களை முடித்தது. செப்டம்பர் 19, 1967 ல் ஓய்வு பெற்றது. இது 31 ஆண்டுகள் உழைத்தது.
இந்த கப்பல் இப்போது கலிபோர்னியாவின் லாங் பீச் கடற்கரை மணல் திட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது ஓட்டலாக செயல்படுகிறது. இந்த ஓட்டலுக்கு ஆண்டுக்கு 1.4 மில்லியன் பேர் வந்து செல்கிறார்கள்.
இவ்வளவு பிரமாண்ட கப்பல் இன்னொரு வகையில் இந்த உலகத்தை மிரட்டி வருகிறது. அந்த மிரட்டலின் முதல்படியாக இக்கப்பலுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘கிரே கோஸ்ட்!
இந்தக் கப்பல் ஆவி மற்றும் பிசாசு அனுபவங்களுக்குப் புகழ் பெற்றது.
அமானுஸ்யம் மற்றும் ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்பவர் பீட்டர் ஜேம்ஸ். இவர் 1991 ம் ஆண்டில் இருந்து இக்கப்பலில் ஆய்வுகளை மேற்கொண்டவர். இந்தக் கப்பலில் வாழும் பேய், பிசாசுகளின் அட்டகாசங்கள் பற்றி, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கிறார்:
“எனது ஆராய்ச்சியின்படி குயின் மேரி கப்பலில் அதிகமாக பேய்கள் நடமாட்டம் இருப்பதாக கருதுகிறேன். இந்தக்கப்பலில் இன்றும் 600 பேய்கள் இருக்கிறது.
பல துர் மரணங்கள் இந்த கப்பலில் ஏற்பட்டது காரணமாக இருக்கலாம்.
இந்தியப் பெருங்கடலின் அதிக வெப்பத் தாக்குதல் காரணமாக அதிக அளவில் இறந்துள்ளனர்.
ஜெர்மன் மற்றும் இத்தாலிய போர்க்கைதிகள் இதில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். சிறைக்கொடுமைக்கு பயந்து பலர் தற்கொலை செய்து கொண்டனர்.
சரியான மருத்துவ வசதி மறுக்கப்பட்டும் பலர் இறந்தனர். இப்படி இறந்தவர்களின் ஆவிகள் இந்தக்கப்பலில் நடமாடுகிறது.
இக்கப்பலில் விநோத சப்தங்களும், காப்பாற்றச் சொல்லும் கூக்குரல்கள்களின் ஓலங்களும் சில பகுதிகளில் கேட்கிறது.
கப்பலின் மையப்பகுதியில் முதல் தர நீச்சல் குளத்தின் அருகில் 5 வயதுள்ள சிறுமி தன்னோடு பேசியதாகவும்; கப்பலின் மற்றொரு நீச்சல் குளத்திற்கு அழைத்ததாகவும்; இச்சிறுமியின் பெயர் ஜாக்கி எனவும்; சில சமயங்களில் இவளைத் தேடி சாரா எனும் நடுத்தர பெண்மணி ஒருவரும் வந்து சென்றதாக ஒருவர் மூலம் அறிந்தேன். அந்த குறிப்பிட்ட நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது.
கப்பலில் ஆங்காங்கே இருக்கும் அலுவலக ஜன்னல்கள் அடைக்கப்பட்ட நிலையில் தானாக திறந்து மூடும் கதவுகள்... பழங்கால உடையணிந்த உருவங்களின் நடமாட்டம்...
கப்பலின் பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்ட தலைகள், கைகள் கால்கள்... கிடந்து மறைகின்றன.
அடிக்கடி பல இடங்களில் அடையாளம் தெரியாத பல உருவங்கள் தோன்றி மறைதல் என பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன.
அவ்வப்போது திடீரென்று முணு முணுக்கும் குரல்கள்... அடித் தொண்டையில் வெளிப்படுத்தப்பட்ட கரகரப்பான சப்தங்கள்... அணைக்கப்பட்டிருந்த விளக்குகள் தானாகவே எரிந்து அணையும் மர்மம்...”
இப்படி ஏதோ சினிமாவில் இடம் பெறும் காட்சிகள் போல பீட்டர் ஜேம்ஸ் பயம் கலந்த நடுக்கமான குரலில் பேய்களைப் பற்றிய அனுபவத்தை பதிவு செய்கிறார்.
கப்பலில் பேய், பிசாசுகள் இருப்பது உண்மை என்கிறார்கள் சிலர்.
இவையெல்லாம் அந்த ஓட்டலை நடத்த ஏற்படுத்தப்பட்ட வியாபார தந்திரங்கள் என்கின்றனர் சிலர்.
எது உண்மை, எது பொய் என்பது முழுமையாக வெளிபடும் வரை ஆர்.எம். எஸ். குயின்மேரி கப்பலின் பிரமாண்டம் போலவே அதன் மர்மங்களும் பிரமிக்க வைக்கின்றது!
****
பாக்ஸ்
குயின் மேரி 2- கடந்த 2004ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கியது. இது கனார்டு லைன் நிறுவனத்துக்கு சொந்தமானது. 3 கால் பந்தாட்ட மைதானங்களை விட பெரியது. 1,130 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 1,48,528 டன் எடையும் உடையது. இந்த கப்பலில் அதிகபட்சமாக 3,090 பயணிகள் தங்கும் வசதி கொண்டது. உலகின் மிகப்பெரியதும் ஆடம்பரமானதுமான குயின் மேரி - 2 21-23 அடுக்குகளைக் கொண்ட ஆடம்பர கப்பல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக