




தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவின் மர்மங்கள்!
- தேவராஜன்.
* தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ளது ஒரு குட்டி தீவு.
இது ஐரோப்பியர்களால் 17ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்டது.
இத் தீவு பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ளது. இதன் இப்போதைய பெயர் பொலினீசியத் தீவு. இது சிலியின் ஆளுகைக்கு உட்பட்டது.
ராப்ப நூயீ மக்களினால் அமைக்கப்பட்ட மோவாய் என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இத்தீவுக்கு சிறப்பு சேர்ப்பவை. இத்தீவு ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய இடமாகும்.
இந்தத் தீவுக்கு ‘ஈஸ்டர் தீவு‘ என்று பெயர். இப் பெயர் முதன் முதலாக இங்கு வந்திறங்கிய டச்சுப் பயணியான ஜேக்கப் ரகவீன் என்பவரால் கொடுக்கப்பட்டது.
இவர் இத்தீவில் 1722 ம் ஆண்டு ஈஸ்டர் நாளன்று வந்திறங்கினார். அதைக்குறிக்கவே இப்பெயர் வந்தது.
இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது.
இத்தீவில் 887 மனித உருவச்சிலைகள் அமைந்துள்ளது .
இத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட து. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது. ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது.
இத்தீவு முழுவதும் 60ற்கும் மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன. இத்தீவுக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், இந்தச் சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்தது.
இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர்.
இதனால் ஈஸ்டர் தீவு மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட தீவாக இருக்கிறது.
தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் இத்தீவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், வேளாண்மை, மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும், மக்கள் தொகை 12 ஆயிரம் இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின.
1990களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 15 மோவாய்கள் மனித முகம் போல் தோற்றமுடைய மோவாய்கள் என்ற நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன.
இவற்றின் உயரம் சராசரியாக 10 மீட்டரும் எடை 80 டன்னும் உள்ளன.
முன்னூறுக்கும் மேற்பட்ட இச்சிலைகள் ஓரிடத்தில் நிலைத்து இருத்தாது, பத்து மைல் தூரம் வரை தீவு முழுமையும் நகர்த்தப்பட்டு வந்துள்ளன.
ஏன் சிலைகள் வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டன என்பது குறித்த ஆய்வுகள் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு சவாலாக அமைந்தன.
ஒவ்வொரு முறையும் இச்சிலைகளை நகர்த்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. ஒரு கட்டத்தில் இந்தத் தீவின் வனப்பகுதி முற்றிலும் அழிந்தது. பெரும் மழை வெள்ளம் வண்டல் மண்ணை அடித்துச் செல்ல விவசாயம் பொய்த்தது.
மீன் பிடிக்க படகு செய்ய மரம் இல்லாததால் தீவுவாசிகள் பெரும் உணவுப்பிரச்சனைக்கு ஆளானார்கள்.
உணவுப் பற்றாக்குறையால் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு இறந்தார்கள்.
கூடவே மோவாய்களையும் முடிந்தவரை சிதைத்தார்கள்.
மக்கள் தொகை பெருமளவு குறைந்தது. எஞ்சியிருந்தவர்கள் மெதுவாக பழைய வாழ்க்கைக்கு திரும்பத்தொடங்கியிருந்தனர்.
அந்த சமயத்தில் ஜேக்கப் ஈஸ்டர் தீவில் காலடி எடுத்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து அடிமை வணிகத்திற்காக தீவுவாசிகளை பிடித்துக்கொண்டு போனார்கள்.
சில ஆண்டுகளுக்குப்பின்னர் ஒரு சிலர் தப்பி வந்தனர்.
அவர்கள் மூலமாக சின்னம்மை போன்ற தொற்றுநோய்கள் பரவின.
இது போன்ற நோய்களுக்கு எதிர்ப்பு திறன் கொண்டிராத தீவுவாசிகள் இவற்றுக்கு எளிதில் பலியானார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தனக்கென்று ஒரு மொழி, எழுத்து, நாகரீகம், கலை என கொண்டிருந்த இந்த தீவு மக்கள் எப்படி அழிந்து போனார்கள்? இவர்கள் எதற்காக கலைநயம் மிக்க கற்சிலைகளை தீவு எங்கிலும் செதுக்கினார்கள்? அந்தச் சிலைகள் எல்லாம் அவர்கள் வழிபடும் கடவுள்களா?
பொதுவாக மக்கள் வாழும் பகுதி என்றால், ஆங்கே ஆண்டுதோறும் மக்கள் தொகை வளர்ச்சி அடைவதும், அந்தப்பகுதி செழுமை அடைவதுதானே இயல்பு! இந்த ஈஸ்டர் தீவில் மக்கள் படிப்படியாக அழிந்து வந்திருப்பது ஏனோ மர்மமாகவே இருக்கிறது.
உலகில் கண்டுபிடிக்க முடியாத மர்மங்களில் ஈஸ்டர் தீவும் ஒன்று .
பாக்ஸ் செய்தி
ஈஸ்டர் தீவின் ஆதி குடிகள் தங்களுக்கு என்று ஒரு மொழியை வைத்திருந்தனர். அந்த மொழியின் பெயர் ரொங்கோரொங்கோ. இந்த மொழி குறியீட்டு எழுத்துக்களை பயன்படுத்தியுள்ளனர்.
ஸ்பானியர்கள் இந்த தீவிற்குள் நுழைந்ததற்கு பின்னே அதாவது 1770க்கு பின் ஸ்பானிஸ் வார்தைகளை லத்தீன் எழுத்துகளில் எழுதிவந்திருக்கிறார்கள்.
1860க்கு பின் நுழைந்த மிஷனரியை சேர்ந்தவர்கள் ஈஸ்டர் தீவின் குறியீட்டு எழுத்துக்களை வடிவங்களின் புதிர்களை விடுவிக்க முயன்றார்கள். முயற்சி தோல்வி .
********************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக