





விமானம் எம்எச் 370 மர்மங்கள்!
- தேவராஜன்.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம் எம் எச் 370 கடந்த மார்ச் 8ம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.
சீனக்கடலுக்கு மேலே 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் 25-க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டன. களத்தில் உள்ளன.
விமானத்தை தேடுவதற்காக 40க்கும் அதிகமான கப்பல்கள், 30க்கும் அதிகமான விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டும் கூட ஒரு சிறிய தடயத்தையும் கண்டறிய முடியவில்லை.
எந்த முன்னேற்றமும் இல்லை.
விமானம் மாயமாய் மறைந்த மர்மங்கள் குறித்து பல கோணங்களில் பல தகவல்கள் சொல்லப்பட்டு வருகின்றன.
விமானம் மர்மம் குறித்த புத்தகம்:
விமானம் எம் எச் 370 மர்மம்(ஊடூடிஞ்டt Mஏ370 கூடஞு Mதூண்tஞுணூதூ) பிளைட் எம்எச் 370 தி மைஸ்ட்ரி என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
லன்டனை சேர்ந்த எழுத்தாளர் நைஜல் கோவ்தோன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
அந்தப் புத்தகத்தில், மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று கிட்டத்தட்ட நிச்சயமாக எதுவும் தெரிந்திருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாயமான மலேசிய விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்ததை அடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் மாயமானபோது தெற்கு சீன கடலில் தாய்லாந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் மற்ற பணியாளர்கள் இணைந்து போர் பயற்சி நடத்தினர்.பயிற்சியின் துப்பாக்கி சூடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான பறந்து சென்ற பாதை:
மாயமான விமானத்தின் பாதையை கண்டுபிடிக்க உதவிய இங்கிலாந்தின் இன்மார்சாட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு வெளியிட்டது. 47 பக்கங்கள் கொண்ட அந்த தகவலில் விமானம் சென்ற பாதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மலேசிய பிரதமரின் கருத்து:
விமானம் மாயமானது குறித்து மலேசிய பிரதமர்,
“வேண்டுமென்றே யாரோ ஒருவராலோ, சிலராலோ விமானம் திசைதிருப்பி கொண்டு செல்லப்பட்டது என்று புலனாய்வில் இருந்து தெரியவருகிறது. விமானத்தை அதன் வழக்கமான பாதையில் இருந்து திருப்பி, மேற்கு நோக்கி கொண்டு சென்றவர்கள், அதன் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர்” என்று கூறினார்.
விமானிகள் மீது சந்தேகம்:
ஒரு வேலை விமானிகளே விமானத்தை கடத்தி இருப்பார்களோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்தது.
விமானியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். விமானி, கேப்டன் ஜகாரி அஹ்மத் ஷா, மலேசியாவின் எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிமின் தீவிர ஆதரவாளர் என தெரிந்தது.அன்வர் இப்ராஹிமுக்கு மலேசிய நீதிமன்றம், 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இப்ராஹிமுக்கு தண்டனை வழங்கப்பட்ட தினம், மாயமாக மறைந்த மலேசியன் ஏர்லைன்ஸ் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டுச் சென்ற தினமும் ஒன்று என்பதால் இந்த கோணத்திலும் சந்தேகம் வலுபெற்றது.
மங்கோலியாவில் தரை இறங்கியதா?
விமானம் மங்கோலியாவில் அல்லது சோமாலியாவில் தரை இறங்கியிருக்கலாம் என்பது இன்னொரு பக்க சந்தேகம்.
அந்த நாடுகளில் ஒரு விமானத்தை தரையிறக்க முன் அனுமதி பெறத் தேவையில்லாயாம். கார் பார்க்கிங் செய்வது போல் செய்து விட்டு போகலாமாம். மலேசியாவில் இருந்து ஏழு மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது மங்கோலியா.
சோமாலியாவில் முறையான அரசும் இல்லை. அங்குள்ள போராளிகளுக்கும், கொள்ளையர்களுக்கும் பணம் கொடுத்தால் போதும். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
இந்த வகையிலும் சந்தேகம் ஏற்பட்டது.
மாயமான விமானம் குறித்து ஒரு திரைப்படம்:
எம் எச் 370 விமானம் மாயமானது தொடர்பாக தி வானிசிங் ஆக்ட்: தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் த மிஸ்சிங் மலேசியன் பிளேன் “கூடஞு ஙச்ணடிண்டடிணஞ் அஞிt: கூடஞு க்ணtணிடூஞீ குtணிணூதூ ணிஞூ tடஞு Mடிண்ண்டிணஞ் Mச்டூச்தூண்டிச்ண கடூச்ணஞு” என்ற பெயரில் திரைபடமாகிறது. கோலாலம்பூரில் இருந்து பீய்ஜிங் செல்லவேண்டிய மலேசிய விமானம் எம் எச் 370, வானில் மாயமானது. அந்த மர்மம் தொடர்பாக பலவித தியரிகள் உள்ளன. மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக, செய்தியாளர் ஒருவர் தயாரித்த புலனாய்வு ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து, இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புலனாய்வு:
இன்னொரு புறம் அமெரிக்க அரசு அதிகாரிகளோ, அந்த விமானம் காணாமல் போனதில் கொள்ளையர்கள் கைவரிசை இருக்குமோ என்றும் விவாதித்து வருகிறார்கள்.
ஒரு பயணியில் அதிர்ச்சி எஸ்எம்எஸ்:
இந்த விமான மர்மத்தின் உச்ச கட்ட ஆச்சரியமாக ஒரு தகவல் வெளியானதாக சொல்லப்படுகிறது.
அந்த மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி, தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து, தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளாராம்.
மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, டைஙகா கார்சியா என்ற தீவில் ஒளித்து வைத்திருப்பதாக அந்தச் செய்தி பரவியது.
இந்த தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த தீவில் அமெரிக்க போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தீவில்தான் மலேசிய விமானம் இருப்பதாக, அந்த விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி பிலிப்வுட் என்பவர் தனது நண்பரும் பத்திரிகையாளருமான ஜிம் ஸ்டோன் என்பவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளதாம்.
பழங்குடியினரின் சாட்சியங்கள்:
மலேசிய நாட்டில் உள்ள கிராமவாசிகளில் சிலர் நாட்டின் வட கிழக்கு பகுதியை நோக்கி மாயமான மலேசிய விமானம் பறந்து சென்றதை தாங்கள் பார்த்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். மலேசியாவின் கெலாண்டன் பகுதியை சேர்ந்த டுனா மீனவர்கள், விவசாயிகள் மற்றும் கிராமத்தினர் என 9 பேர் போலீசாரிடம் கூறுகையில், வானில் வெளிச்சம் தெரிந்ததை நாங்கள் பார்த்தோம் என தெரிவித்துள்ளனர். மேலும், மார்ச் 8ம்தேதி மலேசிய ஏர்லைன்ஸ் அடையாளங்களுடன் கூடிய ஒரு விமானத்தை தாங்கள் பார்த்ததாக மாலத்தீவின் தாலு அடால் பகுதியிலுள்ள சிறிய தீவில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை விமானம் பற்றி முழுமையான ஆதாரங்களுடன் எதுவுமே கண்டுபிடிக்க வில்லை என்பது தான் விஞ்ஞான உலகத்துக்கு ஏற்பட்ட மாபெரிய தலைக்குனிவு!
*
பாக்ஸ் செய்தி:
இதுவரை மாயமான விமானங்கள்
* 1937ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பெண் பைலட் அமெலியா இயர்ஹார்ட், துணை பைலட் நூன்னுடன் விமானத்தில் சென்றார். அட்லான்டிக் கடல் பகுதியில் ஹாவ்லாந்து தீவு பகுதியில் பறந்த விமானம் மாயமானது.
* 1945ம் ஆண்டு 14 வீரர்களுடன் சென்ற 5 போர் விமானங்கள் பெர்முடா முக்கோண பகுதிக்கு மேலே பறந்த போது மாயமானது.
* 1947ம் ஆண்டு இங்கிலாந்தின் ஸ்டார் டஸ்ட் ரக விமானம் 11 பேரோடு ஆண்டிஸ் மலை பகுதியில் பனிப்புயலில் சிக்கி மாயமானது.
* 1962ம் ஆண்டு 107 அமெரிக்க வீரர்களுடன் வியட்நாம் சென்ற விமானத்தின் கதியும் அதே கதிதான்.
* கடந்த 2009ம் ஆண்டு 228 பேருடன் அட்லான்டிக் கடல் பகுதியில் பறந்த ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் விமானம் மாயமானது. சுமார் 2 ஆண்டுகள் கழித்து அதன் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அது விபத்தில் வெடித்து சிதறியது உறுதியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக