










29/ கடலுக்குள் ஒரு கோட்டை
- தேவராஜன்.
********************************************************************************************************************************************************************
தரங்கம்பாடி போல கடலோர கோட்டைகள் பற்றி நமக்கு தெரியும். கடலுக்குள் ஒரு கோட்டை இருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு?
அந்தக் கோட்டை 300 ஆண்டுகள் பழமையானது. அதன் பெயர் கொலாபா கோட்டை. அதைக் கட்டியவர் மராட்டிய மாவீரர் சிவாஜி மஹாராஜா.
இந்தக் கோட்டையை கடல்அலை இறக்கம் உள்ள நாட்களில், அலிபாக் கடற்கரையிலிருந்து நடந்தே சென்று பார்க்கலாம்.
மும்பையில் 98 கி.மீ. தொலைவில் இருப்பது அலிபாக்.
இந்த அலிபாக் கடற்கரையை ஒட்டிதான் கொலாபா கோட்டை அமைந்துள்ளது . இந்தக் கோட்டை மாவீரர் சிவாஜியின் இறுதிக்காலத்தில் கட்டப்பட்டது.
இந்தக் கோட்டைக்குச் செல்ல, மும்பை கேட் வே ஆஃப் இண்டியாவிலிருந்து படகுப்போக்குவரத்தும் உண்டு.
இந்த கடல் திடீரென்று உள்வாங்கும். ரெண்டு மூணு கிலோமீட்டர்வரைக்கும் கடல் நீர் உள்ளே போயிடும். பிறகு நாலஞ்சு மணி நேரத்துக்கு அப்புறம் பழையபடி அலையோடு அலைமோதும் காட்சியை ரசிக்கலாம்.
கரையிலிருந்து பாக்கிறப்ப கடல் கோட்டை பக்கத்துல இருக்கிற மாதிரி இருக்கும். ஆனால், அங்க போக 20 நிமிஷத்துக்கு மேல் ஆகும்.
மராட்டியத்தில் மன்னர் சிவாஜியின் ஆட்சி காலத்தில்
1698 ல் முதன்மை தளபதியா இருந்த சிடோஜி குஜார் மறைவுக்குப்பின்னால், துணை தளபதியாக இருந்த கங்கோஜி அங்க்ரே என்பவர் முதன்மை தளபதியானார்.
கங்கோஜி கடற்படை தளபதி. கடற்படையில் அவருக்கு இருந்த திறமை மற்றும் அனுபவத்தின் காரணமாக, கொலாபாவும் மற்ற கடற்புர கோட்டைகளும் அவருடைய கண்காணிப்பில் வந்தன.
இந்த கொலாபா கோட்டைக்குள்ள அவருக்குன்னு ஒரு அரண்மனையும் இருந்தது.
அவரோட மனைவி பெயரால் மரியாதையா ‘நானி சாகேப் அரண்மனை’ன்னு அழைக்கப்பட்டது.
அவரோட மனைவி பேர் லஷ்மிபாய். ஆனா, மக்கள் ஒரு பிரியத்தால நானின்னு கூப்பிடுவாங்களாம். இப்போது இந்தக் கோட்டை சிதிலமடைஞ்சு இருந்தாலும், வரலாற்று நினைவுகளை அது பேசற மாதிரி இருக்கிறது ஒரு ஆச்சரிய அனுபவம்தானே!
இந்தக்கோட்டையில் ஒரு காலத்தில் 700 படைவீரர்கள், குதிரைகள், இன்னபிற விலங்குகள் எல்லாம் இருந்ததுண்டு.
இப்போ அங்கு இருக்கிற கோயில்களுக்குப் பூஜை செய்ற பண்டிட்டுகளும், அவங்க குடும்பங்களுமா, பத்துப்பதினஞ்சு பேர் கோட்டைக்குள்ளேயே குடியிருக்காங்க அவ்வளவுதான்!
கோயிலுக்கு பின்பக்கம் மஹிஷாசுரமர்த்தினி தெய்வமும் முன்புறம் பாதையின் இடது பக்கம் நானிசாகிப்பின் அரண்மனை. இதுக்கு பக்கத்தில்தான் அவரோட மகன் ரகுஜி அங்க்ரே கிபி 1816 ல் இன்னொரு அரண்மனை கட்டியிருக்கார்.
ஐந்து மாடி கட்டடமா இருந்தது. இப்போது முதல் நிலை வரைமட்டும் எஞ்சி இருக்கு. இந்த அரண்மனைகளுக்கு முன்புறம் குதிரைகள், சண்டை ஆடுகள், செல்லப்பறவைகள் இவையெல்லாம் தங்குறதுக்கான இடமாக இருந்திருக்கு.
அரண்மனைக்கு கிழக்குப்பக்கத்தில் கிட்டங்கிகளும் இன்னபிற சின்னச்சின்ன கட்டடங்களும் இருந்திருக்கு.
கோட்டையின் நடுவில் பிள்ளையார் கோயில். சித்தி புத்தியோட, வலதுபக்கம் அப்பாவும், இடதுபக்கம் மாமனும், மாமாவோட பின்னால மஹிஷாசுர மர்த்தினியும், அமர்ந்த நிலையில் பிரம்மாவும் காட்சியளிக்கிறார்.
இந்த கோயிலுக்கு வலதுபுறம் சிவனும் , இடதுபுறம் வாலில் மணிகட்டிய ஆஞ்சனேயரும் தனிக்கோயில்களில் இருக்காங்க.
மேற்குப்பக்கத்துல ரெண்டு இடங்களில் அரைவட்ட வடிவமா பதுங்கு குழிகள் இருக்கிறது. கோட்டையின் வடக்குப்பக்கத்தில் கடலைப்பார்த்தமாதிரி ரெண்டு பீரங்கிகள் இருக்கு. இது எதிரிகளை தாக்குறதுக்கு மட்டுமல்ல, மழை மற்றும் புயல் காலங்களில் ஏதாவது கப்பல் தெரியாத்தனமா கோட்டைக்கு பக்கத்துல வந்துட்டா வெடி மூலம் எச்சரிக்கை செய்வாங்களாம்.
தேசியக்கொடியேத்த கொடிமரம் ஒண்ணு இருக்குது. இந்த கோட்டைக்குள் செல்ல இந்திய தொல்பொருள் துறை நுழைவுக் கட்டணம் வசூலிக்கின்றது.
*
பாக்ஸ் செய்தி
*ஒரு காலத்தில் இந்த கொலாபா கோட்டையில் ஒரு இனிப்பு நீர் கிணறு இருந்துள்ளது
*சிவாஜி மஹராஜாவின் இஷ்ட தெய்வமான பவானிக்கு , இங்கே ஒரு கோயில் இருக்கு. எந்த போருக்கு புறப்பட்டாலும் பவானியின் காலடியில் தன்னோட வாளை வெச்சு ஆசிர்வாதம் வாங்கிட்டுத்தான் புறப்படுவாராம்.
*வடக்குப்பார்த்த பிரதான நுழைவாயில் இரண்டு ஆர்ச்சுகளால் ஆனது. இதை மஹா தர்வாஜான்னு சொல்றாங்க. தர்வாஜான்னா வாசல், கதவு என்று பொருள்.
கோட்டையின் தெற்குக்கடைசியில் இருக்கும் யஷ்வந்த் அல்லது தர்யா தர்வாஜான்னு சொல்லப்படுற நுழைவாயில், கடலைப்பார்த்தவாறு அமைஞ்சிருக்கு. இது படைவீரர்கள் தற்காலிக ஓய்வுக்கான இடம்.
*************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக