தமிழ் பக்தி மொழி!/97/ 14.7.2013/
உலகில் பல மொழிகள் இருக்கின்றன. நம் தமிழ் மொழிக்கென்று தனிச்சிறப்பு உள்ளது.
பக்தி இலக்கியங்கள் அதிகமுள்ள ஒரே மொழி நம் தமிழ்மொழி மட்டுமே.
தமிழ் பக்தி மொழி. தமிழ் பேசினாலே தெய்வ அருள் கிட்டிவிடும்.
ஆழ்வார்களில் ஒருவர் திருமாழிசையாழ்வார். திருமாலே அவர்முன் தோன்றி, எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்துள்ளார்.
‘ நாராயணனை தொழுதால் நல்ல குலம், சிறந்த செல்வம், அருளுடன் கூடிய பணம் கிடைக்கும்’ என்பதை தனது பாசுரத்தில் தெளிவாக குறிப்பிடுகிறார்.
குலசேகர ஆழ்வார், தன்னை தசரதனாக பாவித்து, பெருமாளை ராமனாக பாவித்து, துõய தமிழில் தெய்வத்துக்கே தாலாட்டு பாடினார்.
தமிழகத்தில் தோன்றிய மகான்கள் நாம் சிறப்பாக வாழ்வதற்கு ஏராளமான கருத்துக்களைத் தமிழில் கூறிச் சென்றுள்ளனர்.
தவறுகளை திருத்திக் கொள்வதற்காக, திருவள்ளுவர் நமக்கு திருக்குறளை கொடுத்துள்ளார்.
ஆழ்வார், நாயன்மார் பாடல்கள் தெய்வத்தின் குரல் என்றே சொல்லலாம். அவர்கள் பாடல்கள் துறவறத்தை பழிக்கவில்லை; இல்லறத்தை வெறுக்கவில்லை. நிலையாமை உணர்த்தப்படுகிறது. இந்த உலக இன்பங்களைஅனுபவித்து இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம் என்ற தெளிவை பன்னிரு திருமுறைகளும், நாலாயிரம் திவ்விய பிரபந்தமும் தருகிறது.
உலக வாழ்வைக் கண்டு அஞ்சும் அச்சம் நீங்கி, மக்கள் கூடி வழிபாடு செய்து பக்தியில் “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்கிறது திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்.
ஆழ்வார் நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் கடவுளுக்குமுன் மக்கள் எல்லோரும் சமமானவர்கள். கடவுள் ஒருவரே எல்லா மக்களுக்கும் தலைவர் என்ற கருத்தை வலியுறுத்தின.
தமிழுக்கென்று, தமிழர்களுக்கென்று பண்பாடு இருக்கிறது. மற்ற மொழியினர் தங்கள் குழந்தைகளுக்கு பொருட்களை காட்டித்தான் எழுத்துக்களை அறிமுகப்படுத்துவர். நாம் மட்டும் தான், ‘அ’ அறம் செய்ய விரும்பு என்று மொழியோடு சேர்த்து பண்பையும் கற்றுக்கொடுக்கிறோம்.
அ + உ + ம் = ஓம்
இதனை- தனித்தனியாக உச்சரித்துப்பாருங்கள்!
‘அ’என்னும் அகாரம் அடிவயிற்றிலிருந்து ஒலிக்கும்.
‘உ’ என்னும் உகாரம் நெஞ்சுக்குழியிலிருந்துஒலிக்கும்.
‘ம்‘ என்னும் மகாரம் தொண்டையிலிருந்து ஒலிக்கும்.
இம்மூன்றையும் சேர்த்து ஒன்றாக உச்சரிக்கும்போது, நம் உடலில் மூலாதாரம் தொடங்கி... ஆக்கினை வரையிலான ஆறு ஆதாரங்களும் (சக்கரங்கள்) சீரடையும்.
இந்த ஓங்காரத்தை நாம் இயல்பாக பயன்படுத்தும் வழியை தமிழ் தந்திருக்கிறது.
வருவோம் = வரு + ஓம்
செல்வோம் = செல் + ஓம்
இப்படி பல வார்த்தைகள் ஓங்காரத்தை இயல்பாக நம்மை உச்சரிக்க வைத்துவிடுகிறது தமிழ்!
நாம் தமிழை சரியாக உச்சரித்து, பேசினால் அதுவே பெரிய யோகப்பயிற்சிதான்!
மனிதனாய் பிறப்பது அரிது. தமிழனாய் பிறந்து தெய்வத்தமிழில் பேசுவது அதனினும் அரிது!
-தேவராஜன்.
*************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக