சனி, 19 ஜனவரி, 2013
குட்டீஸ் கேள்வி பதில் 16
குட்டீஸ் கேள்வி பதில் 16
மே18
*நிபுரூ என்று ஒரு கோள் இருக்கிறதா, அந்தக்கோள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலகத்தை அழிக்கும் என்பது உண்மையா?
-சு. ஸ்ரீப்ரதா, மேட்டூர்.
நிபுரூ என்று ஒரு கோள் இல்லை. அப்படி இருக்க, அந்தக்கோள் எப்படி டிசம்பர் 2012ல் உலகத்தை அழிக்க முடியும்? என்று விண்வெளி விஞ்ஞானிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் ஸ்ரீப்ரதா அச்சப்படவேண்டாம்.
நிபுரூ கோள் பற்றி பல வதந்திகள் உலாவருகின்றன. அவை:
நிபுரூ என்பது நாசா நிறுவனம் அனுப்பிய கபுள் என்ற செயற்கைக் கோள் தொலைநோக்கியால் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கருஞ்சிவப்பு கோள்.
இதற்கான போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை. நிபிரூ கோளானது பிளானட் எக்சு எனவும் அறியப்படுகிறது.
இது பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் அது 2012 ல் பூமியை நெருங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இது ஒளியற்ற கோள் என்பதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை என்றும் நம்புகின்றனர்.
இந்தக் கோள் இருக்கும் நிலையில், சாதாரண தொலைநோக்கிகளால் இது நமக்கு தெரிவதற்கு சாத்தியமில்லாத துõரத்தில் இருப்பதாகவே பலர் கருதுகிறார்கள்.
1984ம் ஆண்டு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 ம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது.7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி எதுவும் கூறவில்லை.
நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபுரூ” தான் என்கின்றனர்.
*அணுக்கடிகாரம் பற்றி சொல்லுங்க அங்கிள்!
- ஏ. சந்திரசேகர், செல்லாண்டிபாளையம்.
அணுக் கடிகாரம் என்பது நேரத்தைக் காட்ட அணு சார்ந்த ஒத்ததிர்வு அலைவரிசையை ஒப்பிட்டு மாதிரியாகக் கொண்டு இயங்கும் கடிகாரம் .
நேரம், அலை வரிசை ஆகியவற்றுக்கான மிகத் துல்லியமான தரம் வாய்ந்த கடிகாரமாக அணுக் கடிகாரமே உள்ளது.
சர்வதேச நேரக் கட்டுப்பாட்டுக்கும், தொலைக்காட்சி போன்றவற்றின் அலைவரிசை ஒப்பீட்டுக்கும் அணுக் கடிகாரமே அடிப்படையாக உள்ளது. அணுக்கடிகாரங்கள் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி இயங்குவது கிடையாது. ஒரு பொருளின் கட்டமைப்பில் இலத்திரன்கள் பல வட்டப் பாதைகளில் சுழன்று கொண்டிருக்கும். அவ்வாறு கழன்று கொண்டிருக்கும் இலத்திரன்கள் வட்டம் விட்டு வட்டம் தாவவும் செய்யும். அப்போதெல்லாம் அந்தக் தாவலுக்கு இலத்திரன்கள் செலவழித்து வெளியிடும் சக்தியை மட்டுமே பலமாகக் கொண்டு அணுக்கடிகாரங்கள் இயங்குகின்றன.
நடுக்கடலில் பல நாட்கள் பயணமாகும் கப்பல்களில் நேரம் அறிவது, கதோட்டுக் கதிர்களைக் கொண்டு இயங்கும் தொலைக்காட்சி போன்ற நவீன உபகரணங்களின் அலைவரிசைகள், ரேடியோ அலைவரிசைகள் சார்ந்த பிரபஞ்சக் கதிர்களின் ஆய்வு, விண்வெளி ஆய்வு போன்றவற்றில் எல்லாம் அணுக்கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது.
*மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?
-ச. பாவனா, ராமநந்தீஸ்வரம்.
உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. நமது சைக்கிள் டைனமோவில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான்.
பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம்.
காற்றின் மூலம் விசிறியைச் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம்.
நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம்.
(இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது).
டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும் கிடைக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம்.
*********************************************************************************************************
குட்டீஸ் கேள்வி பதில் 16
குட்டீஸ் கேள்வி பதில் 16
மே18
*நிபுரூ என்று ஒரு கோள் இருக்கிறதா, அந்தக்கோள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலகத்தை அழிக்கும் என்பது உண்மையா?
-சு. ஸ்ரீப்ரதா, மேட்டூர்.
நிபுரூ என்று ஒரு கோள் இல்லை. அப்படி இருக்க, அந்தக்கோள் எப்படி டிசம்பர் 2012ல் உலகத்தை அழிக்க முடியும்? என்று விண்வெளி விஞ்ஞானிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் ஸ்ரீப்ரதா அச்சப்படவேண்டாம்.
நிபுரூ கோள் பற்றி பல வதந்திகள் உலாவருகின்றன. அவை:
நிபுரூ என்பது நாசா நிறுவனம் அனுப்பிய கபுள் என்ற செயற்கைக் கோள் தொலைநோக்கியால் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கருஞ்சிவப்பு கோள்.
இதற்கான போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை. நிபிரூ கோளானது பிளானட் எக்சு எனவும் அறியப்படுகிறது.
இது பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் அது 2012 ல் பூமியை நெருங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இது ஒளியற்ற கோள் என்பதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை என்றும் நம்புகின்றனர்.
இந்தக் கோள் இருக்கும் நிலையில், சாதாரண தொலைநோக்கிகளால் இது நமக்கு தெரிவதற்கு சாத்தியமில்லாத துõரத்தில் இருப்பதாகவே பலர் கருதுகிறார்கள்.
1984ம் ஆண்டு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 ம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது.7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி எதுவும் கூறவில்லை.
நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபுரூ” தான் என்கின்றனர்.
*அணுக்கடிகாரம் பற்றி சொல்லுங்க அங்கிள்!
- ஏ. சந்திரசேகர், செல்லாண்டிபாளையம்.
அணுக் கடிகாரம் என்பது நேரத்தைக் காட்ட அணு சார்ந்த ஒத்ததிர்வு அலைவரிசையை ஒப்பிட்டு மாதிரியாகக் கொண்டு இயங்கும் கடிகாரம் .
நேரம், அலை வரிசை ஆகியவற்றுக்கான மிகத் துல்லியமான தரம் வாய்ந்த கடிகாரமாக அணுக் கடிகாரமே உள்ளது.
சர்வதேச நேரக் கட்டுப்பாட்டுக்கும், தொலைக்காட்சி போன்றவற்றின் அலைவரிசை ஒப்பீட்டுக்கும் அணுக் கடிகாரமே அடிப்படையாக உள்ளது. அணுக்கடிகாரங்கள் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி இயங்குவது கிடையாது. ஒரு பொருளின் கட்டமைப்பில் இலத்திரன்கள் பல வட்டப் பாதைகளில் சுழன்று கொண்டிருக்கும். அவ்வாறு கழன்று கொண்டிருக்கும் இலத்திரன்கள் வட்டம் விட்டு வட்டம் தாவவும் செய்யும். அப்போதெல்லாம் அந்தக் தாவலுக்கு இலத்திரன்கள் செலவழித்து வெளியிடும் சக்தியை மட்டுமே பலமாகக் கொண்டு அணுக்கடிகாரங்கள் இயங்குகின்றன.
நடுக்கடலில் பல நாட்கள் பயணமாகும் கப்பல்களில் நேரம் அறிவது, கதோட்டுக் கதிர்களைக் கொண்டு இயங்கும் தொலைக்காட்சி போன்ற நவீன உபகரணங்களின் அலைவரிசைகள், ரேடியோ அலைவரிசைகள் சார்ந்த பிரபஞ்சக் கதிர்களின் ஆய்வு, விண்வெளி ஆய்வு போன்றவற்றில் எல்லாம் அணுக்கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது.
*மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?
-ச. பாவனா, ராமநந்தீஸ்வரம்.
உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. நமது சைக்கிள் டைனமோவில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான்.
பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம்.
காற்றின் மூலம் விசிறியைச் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம்.
நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம்.
(இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது).
டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும் கிடைக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம்.
*********************************************************************************************************
குட்டீஸ் கேள்வி பதில் 15
குட்டீஸ் கேள்வி பதில் 15
*ஆறறிவு என்றால் என்ன? அவை எவை? மே11
-கே.அபிஜித், ஸ்ரீரங்கம்.
ஆறறிவு என்பவை பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு மற்றும் பகுத்தறியும் அறிவு போன்றவையாகும்.
விலங்கினத்திற்கு ஐந்தறிவு மட்டுமே உள்ளன என்றும், மனிதனுக்கு அதனையும் விட ஒரு சிறப்பு அறிவான பகுத்தறிவையும் கொண்டு பார்க்கப்படுகின்றது. மனிதனுக்கு இருக்கும் இப்பகுத்தறிவே மற்றைய விலங்கினத்தில் இருந்து வேறுபட்டும், உயர்ந்தும் இருப்பதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது.
1. உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு - இது தாவரங்களுக்கு.
2. உடல், நாக்கால் உணர்வது ஈரறிவு - இது கடல்வாழ் உயிரினங்களுக்கு.
3. உடல், நாக்கு, மூக்கால் உணர்வது மூன்றறிவு- இது ஊர்வனங்களுக்கு.
4. உடல், நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வது நான்கறிவு- இது பூச்சி இனங்களுக்கு.
5. உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகிய ஐந்தால் உணர்வது ஐந்தறிவு- இது விலங்கினங்களுக்கு.
6. உடல், நாக்கு, மூக்கு, கண், காது, மூளை ஆகியவற்றால் அறிவது ஆறறிவு- இது மனிதர்களுக்கு.
* அக்னி ஏவுகணை பற்றி விரிவாக சொல்லுங்க அங்கிள்!
- எம். நிகேஷ்குமார், காட்டூர்.
அக்னி ஏவுகணை இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர துõர ஏவுகணை வகைகளைக் குறிக்கும்.
2007ம் ஆண்டு வரையில் அக்னி திட்டத்தில் பின்வரும் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன: அக்கினி தாக்குகணை - எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்துõர ஏவுகணை , அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் துõரம் : 2,500 கி.மீ. உலகிலேயே இது போன்ற தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா கருதப்படுகிறது.
1989ல் அக்கினி-1 ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது. 2007 ஏப்ரல் 12 ம் தேதி 3000 கி.மீ. பயணம் செய்யும் அக்கினி-3 பரிசோதிக்கப்பட்டது. 2012 ஏப்ரல் 12 ம் தேதி 3,000 கி.மீ. பயணம் செய்யும் அக்கினி-5 பரிசோதிக்கப்பட்டதன் மூலம், இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது.
அக்னி-1 குறுகிய துõரம் பாயும் துõரம்: 700- 800 கிமீ.
அக்னி-2 நடுத்தர துõரம் பாயும் துõரம்: 2000- 2,500 கிமீ.
அக்னி-3 இடைத்தர துõரம் பாயும் துõரம்: 3,500- 5,000 கிமீ.
அக்னி-4 இடைத்தர துõரம் பாயும் துõரம்: 3,000 கிமீ.
அக்னி-5 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் துõரம்: 5,000- 6,000 கிமீ.
அக்னி- 1 மற்றும் அக்னி-2 சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றைக் குறி பார்த்து ஏவக்கூடியவை.
அக்னி-2 சீனாவின் மேற்கு, நடு, மற்றும் தெற்குப் பகுதிகளை சென்றடையக்கூடியன.
அக்னி- 3 இது சீனாவின் முக்கிய நகரங்களான பெய்ஜிங் , மற்றும் ஷங்காய் ஆகியவற்றை தாக்கக்கூடியன.
அக்னி-5 மே19, 2012ல் ஏவப்பட்டது. இது பாயும் துõரம்: 5,000 முதல் 7,000 கி.மீ வரை.
*கொட்டாவி எப்படி உருவாகிறது?
-ஆர். எம். ராமகிருஷ்ணா, திருச்செங்கோடு.
நமது மூளையில் துõக்கம் வருவதற்கான அறிகுறிகள் தொடங்கிய உடனேயே இதயம் மூச்சுவிடும் வேகத்தை சற்று குறைத்துக்கொள்கிறது. இதை ஈடுசெய்து மூளைக்கு அதிக ரத்தத்தை ஏற்றுவதற்கு பிராணவாயு வேகமாக உள் எடுக்கப்பட்டு, கரியமில வாயு வெளியேறி இதயம் சுருங்கி விரிந்து ரத்தம் சுத்திகரிக்கவேண்டும். இதற்கு வசதியாக நமது வாய் அகல திறந்து காற்றினை உள்ளே இழுத்துக்கொள்கிறது. இந்த செயல்பாடு தான் கொட்டாவி. கொட்டாவி விலங்குக்கும் வரும்.
*******************************************************************************************************
குட்டீஸ்கேள்வி பதில் 14
குட்டீஸ்கேள்வி பதில் 14
*அணில் ஏன் தன் முன் பற்களைக் கொரித்துக்கொண்டே இருக்கிறது?
- ம. முரளிதரன், மல்லசமுத்திரம்.
அணில்கள் கொரிக்கும் பாலுõட்டி இனத்தை சேர்ந்தவை.
இதன் வாயின் முன்பக்கத்தில் மேலும் கீழுமாக இரண்டிரண்டு உளிப்பற்கள் இருக்கும்.
இவை தினமும் வளரும். அதனால் கடின ஓடுகள், மரக் கிளைகள் இவைகளை எலிகளைப் போலவே துருவும். எதுவும் கிடைக்கவில்லை என்றால், மேலும் கீழுமாக அதுவே பற்களை அரைத்துக் கரைத்துக் கொள்ளும்.
இப்படிப் செய்யவில்லையாயின் உளிப்பற்கள், நீளமாக வளர்ந்து எதுவும் சாப்பிட முடியாமல் இவை இறந்து விடும்.
உலகெங்கிலும் 250வகையான அணில்கள் உள்ளன. ஆஸ்திரேலியா, அண்டார்டிகா பகுதிகளில் இவை காணப்படுவதில்லை. மர அணில் ,தரை அணில், பறக்கும் அணில் போன்றவை நாம் அன்றாடம் பார்க்கும் வகைகளில் சில.
ஆப்ரிக்க பிக்மி அணில்கள் உருவில் மிகச் சிறியவை. இவை 7 முதல்10 செ.மீ நீளமும், 10 கிராம் எடையும் கொண்டவை. நீர் நாய் வகை அணில்கள் 5 முதல் 8 கிலோ எடையும், 50--70 செ.மீ நீளமும் கொண்டதாக உள்ளன.
*இடிதாங்கி பற்றி விளக்கமா சொல்லுங்க அங்கிள்!
- ஏ. சந்திரசேகர், பசுபதிபாளையம்.
இடிதாங்கி என்பது கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் இடி, மின்னல் தாக்காமல் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கருவி. இதன் முனைப்பகுதி காந்தச் சக்தியால் ஆனது. இந்தக் கருவியைக் கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் வைத்து தடித்த காப்பர் பட்டையின் மூலம் பூமியில் எர்த் செய்து விடுவார்கள். இடி தாக்கும்போது இடிதாங்கி, மின்னலை ஈர்த்து பட்டை வழியாக பூமியைச் சென்றடைய செய்கிறது. இதனால், கட்டடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதோடு சேர்ந்து நாமும் பாதுகாக்கப்படுகிறோம்.
இடி, மின்னலில் உண்டாகும் மின்சாரம் பல லட்சக்கணக்கான வோல்ட் அழுத்தமுடையது. இந்த உயர்ந்த அழுத்த மின்சாரம் நம்மையும், கட்டடங்களையும் தாக்குவதால் பேரிழப்பு ஏற்படுகிறது.
இடிதாங்கி கூர்மையான அம்பு போன்ற அமைப்பு உடையதாகக் காணப்படுகிறது. கூர்மையானப் பகுதியில் எலக்ட்ரான், புரோட்டான்கள் மிக வேகமாக தயார் நிலையில் இருக்கும். தட்டையான வடிவமுடையதாக இருந்தால் எலக்ட்ரான், புரோட்டான் சிதறிய நிலையில் காணப்படும். இடி தாக்கும்போது இடிதாங்கி கூர்மையான பகுதியாக இருந்தால் எலக்ட்ரான், புரோட்டான்கள் வேகமாக செயல்பட்டு தன்னகத்தே இழுத்து பூமிக்குச் செலுத்த வசதியாக இருக்கிறது.
அதனால்தான் கூரிய அமைப்பைக் கொண்டதாக இடிதாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
*சோலார் சக்தி, அதில் இயங்கக்கூடிய மின்சாதனங்கள் எவை பற்றி கூறுங்கள்.
-ஆர். சண்முகம், ராமநந்தீஸ்வரம்.
மின்சாரத்துக்கு மாற்றாக சோலார் பவர் பயன்படுத்தப்படுகிறது.
நம் நாட்டில் 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் அபரிமிதமான சூரிய சக்தியைக் கொண்டு ஆண்டு முழுவதும் தடை இல்லாமல் மின்சாரம் கிடைக்கும்படி செய்யலாம். ஆனால் நம் நாட்டில் ஒரு சதவிகிதம் சூரிய சக்தியைத்தான் உபயோகிக்கிறோம். சூரிய சக்தியைக்கொண்டு நாம் மிகப் பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கலாம். நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவையான மின்சாரம் மிகச் சுலபமாக கிடைக்கும்படி செய்யலாம். வீடுகளில் சிறிய கருவிகளைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.
இவ்வளவு இருந்தும், மக்களிடையே சூரிய சக்தி மூலம் மின்சாரம் எடுப்பது பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை.
சோலார் பவர் மூலம் வாட்டர் ஹீட்டர்கள், மின் விளக்குகள், மின் விசிறி, கணினி, வாஷிங் மெஷின், ஏ. சி. முதலியவற்றை இயக்கலாம்.
சோலார் சாதனங்களை அமைக்க ஆரம்ப செலவு அதிகம் என்றாலும்,
நாளடைவில் நாம் உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை விட செலவு குறைவு தான்.
*******
*************************************************************************
குட்டீஸ் கேள்வி பதில் 13
குட்டீஸ் கேள்வி பதில் 13
ஏப்20
*வாயில் உமிழ்நீர் சுரப்பது ஏன்? அதன் பயன் என்ன?
- ஆர். ஸ்ரீஜா, ஸ்ரீரங்கம்.
புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.
உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.
உமிழ்நீர் அதிக என்சைம்களைக் கொண்டது. இதில் ஆன்ட்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1,500 மி.லி. அளவு சுரக்கிறது. உமிழ்நீர் சுரப்பு அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறும் மாறுபடுகிறது.
உமிழ் நீரின் முக்கிய பணி ஜீரணமாக்குவது.
உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.
பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.
* நட்சத்திரம் என்றால் என்ன? அவை எப்படி மின்னுகின்றன?
- எம். கோகுல், பசுபதிபாளையம்.
நட்சத்திரம் என்பது பல வாயுக்கள் கலந்த மேகம் போன்ற ஒரு தொகுப்பு.
இந்த மேகத்திற்குள் ஹைட்ரஜன் வாயு இருக்கும். வாயுத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து ஒரு பெரிய வாயுக் கூட்டமாக மாறிவிடும். அதன் அளவு கூடும்போது வெப்பமும் கூடுகிறது. அது ஒரு வெடிகுண்டைப்போல வெடிக்கும் வரை சேர்ந்துகொண்டே இருக்கும். அது வெடிக்கும்போது, எரியும் தன்மைகொண்ட ஹீலியம் வாயு வெளியிடப்படும்.
நட்சத்திரங்கள் வெளியிடும் ஒளியும் வெப்பமும் மிக நீண்ட தொலைவைக் கடந்து வருகின்றன. அப்படி வரும்போது மிகச் சொற்பமான வெளிச்சமே தொடர்ச்சியாக நம்மை வந்தடைகிறது.
அப்படி, நம்மை வந்தடையும் முன் பூமியின் வளி மண்டலம் வழியாக அந்த ஒளி பயணிக்கிறது. வளி மண்டலத்தில் உள்ள துõசுகள் அவ்வப்போது அந்த ஒளி பயணிக்கும் பாதையின் இடையே செல்கின்றன. எனவே நட்சத்திரங்கள் சில நேரம் நமக்குத் தெரிகின்றன. துõசு அதிகமாக இருக்கும்போது தெரிவதில்லை. இது வேகமாகவும் தொடர்ந்தும் மாறி மாறி நடப்பதால்தான் நட்சத்திரங்கள் மின்னுவதுபோன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகிறது.
நட்சத்திரம் எல்லா நேரமும் மின்னுவதில்லை. மேலும் சில நட்சத்திரங்கள் எப்போதுமே மின்னுவதில்லை. இதற்குக் காரணம் அவை நட்சத்திரங்கள் அல்ல, கோள்கள். கோள்கள் மின்னுவதில்லை.
*செல்போனில் புளுடூத் என்ற ஒன்று இருக்கிறதே, புளுடூத் என்றால் என்ன?
- அ.தனுஷ், பள்ளூர்.
புளுடூத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயர் தரும் பொருளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள்.
இந்த விஞ்ஞானிகளுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது மதிப்பும், மரியாதையும் பிரியமும் இருந்தது.
அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர்.
அவர் அப்படி என்ன சாதனை செய்தார்? என்று கேள்வி எழுகிறதா, தனுஷ்? 900ம் ஆண்டில் ஹெரால்ட் புளுடூத் மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார்.
பின்னர், கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார்.
986ல் போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது, கிறித்தவ மதத்தை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்.
********************************************************************************************************
குட்டீஸ்÷ கள்வி பதில் 12
குட்டீஸ்÷ கள்வி பதில் 12
ஏப்ரல்13/
*கப்பல் மிதப்பது எப்படி?
- ரா. வீரபாண்டியன், புதுக்கோட்டை.
கப்பல் தண்ணீரில் மிதப்பது ஆர்க்கிமடிஸ் விதி படியாகும்.
ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும்.
10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். பொதுவாக ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்கு, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள்.
அதாவது ஒரு கப்பலின் டிஸ்பிளேஸ்மென்ட் 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள்.
அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை அழுத்துகின்றன. ஒன்றையொன்று அமிழ்த்தி சமநிலையை ஏற்படுத்துகின்றன. இதனால் கப்பல் தண்ணீரில் மிதக்கிறது.
*சிவப்பு மலர் நீல நிறக்கண்ணாடியில் பார்த்தால் கறுப்பாகத் தோன்றுவது எவ்வாறு?
சிவப்பு மலரிலிருந்து சிவப்பு ஒளிதான் வெளிப்படும். இந்த ஒளியை நீலநிறக்கண்ணாடி உட்கவர்ந்துவடும். ஏனெனில் நீலக்கண்ணாடி வழியாக நீலநிற ஒளி மட்டுமே ஊடுருவிச் செல்ல முடியும். சிவப்புநிற ஒளியை நீலநிறக்கண்ணாடி தடுத்துவிடுவதால் மலர் கருப்பாகத் தெரியும்.
*துõக்கத்தில் நடப்பது எப்படி?
- ச. சரண்ராஜ், ஊத்துக்குளி.
-வி. சுப்ரமணியம், பி. கொமாரபாளையம்.
துõக்கத்தில் மூன்று நிலைகள் இருக்கிறது.
விழிப்பு நிலை, விழி அசைவுகளில்லாத துõக்க நிலை,
விழி அசைவு துõக்க நிலை( இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை!).
துõக்கத்தில் நடப்பது என்பது ‘மனிதர்களின் ஒருவகையான துõண்டப்பட்ட, குழப்பமான மனநிலை’ என மருத்துவர்கள் கருதுகிறார்கள். அறிவியல்பூர்வமா சொல்வது என்றால், துõக்கத்தில் நடப்பது விழிப்பு நிலை மற்றும் விழி அசைகளில்லாத துõக்க நிலையில் நடைபெறும் ஒரு செயல்.
சிலர் மட்டும் ஏன் துõக்கத்தில் நடக்கிறாங்க மத்தவங்க ஏன் நடக்கிறதில்லைங்கிற கேள்விக்கு இன்னும் திட்டவட்டமான பதில் இல்லை!
பொதுவா துõக்கத்தில் நடப்பதற்க்கு, குடும்ப மரபணுவியல் சம்பந்தமான காரணங்களாக இருக்கலாமாம். பெரியவங்கள விட, குழந்தைங்கதான் பெரும்பாலும் துõக்கத்துல நடப்பாங்களாம். அதுக்கு காரணம், குழந்தைங்க துõங்கும்போது, ஆழமான விழி அசைவுகளில்லாத துõக்க நிலை நிலையில்தான் இருப்பாங்களாம். இந்த நிலையிலதான் துõக்கத்துல நடக்கிற செயல் நடக்கிறது.
சரியான துõக்கமின்மை, ஜூரம், மன உளைச்சல், ஊக்க மருந்துகள் சாப்பிடுதல் காரணங்களால் துõக்கத்தில் நடப்பது சாத்தியமாகலாம்.
சரியான நேரத்தில் உறங்குவது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பது. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்குவது போன்றவற்றை கடைபிடித்தால் தவிர்க்கலாம். மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு மருந்துகளும் கொடுக்கப்படுகிறது!
*லாப்ராடர் நாய் இனத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க, அங்கிள்!
-ந. விக்னேஷ், வேலுõர்.
நாய் இனங்களில் லாப்ரடர் நாய் ஒரு வகை. கனடா, ஆஸ்திரேலியாவில் இந்த நாய்கள் மிக பிரபலம்.
ஆண் நாய் 27 முதல் 40 கி.கி எடையும் 56 முதல் 63 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். பெண் நாய் 27 முதல் 35 கி.கி. எடையும் 54 முதல் 60 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். கறுப்பு, மஞ்சள், சாக்லேட் நிறங்களில் இருக்கும்.
பழங்குடி இனத்தினர் வேட்டையாடுவதற்கும், மீன்பிடி தொழிலுக்கும் இந்த நாயை பயன்படுத்துகின்றனர்.
சமீபத்தில் நுரையீரல் புற்று நோயை கண்டறிய இவ்வகை நாய்களை பயன்படுத்தும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
ஜெர்மனியில் உள்ள ஸ்கில்லர் ஜோக் ஆஸ்பத்திரியின் நிபுணர்கள் இந்த ஆய்வு மேற்கொண்டனர். அவை தனது மோப்ப சக்தி மூலம் மனிதர்களின் மூக்கு வழியாக வெளியேறும் சுவாசத்தின் மூலம் நுரையீரல் புற்று நோயை கண்டறிய முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் நோய் அறிகுறி தொடங்கும் நிலையில் உள்ள 71 சதவீதம் பேரின் நுரையீரல் புற்று நோயை தெரிந்து கொள்ள முடியும்.
நுரையீரல் புற்று நோயை கண்டுபிடிக்க 2 ஜெர்மன்ஷெப்பர்டு, ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு, மற்றும் லாப்ராடர் ரக நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
*******************************************************
குட்டீஸ் கேள்விபதில் 11
குட்டீஸ் கேள்விபதில் 11
* கூடங்குளம் அணு உலை வி.வி.இ.ஆர் 1000 தொழில் நுட்பம் கொண்டது என்று படித்தேன். அதுபற்றி விளக்குங்க அங்கிள்!
- எஸ். திலகவதி, திருவாரூர்.
நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க. சபாஷ்!
கூடங்குளம் அணு உலை ரஷ்ய நாட்டின் வி.வி.இ.ஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
இதில் யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு பிளக்கப்படும் போது 2000 டிகிரி செல்சியஸ் வெப்பம் உருவாகிறது.
இது நீரின் கொதி நிலையான 100 டிகிரி செல்சியஸ்-ஐ விட 20 மடங்கு அதிகம். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உருவாக்கப்பட்டு, அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. மிக அதிக வெப்பம் உருவாவதால், இந்த அணு உலையைக் குளிர்விக்க கடலிலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரித்து உப்பு அகற்றி, நன்னீராக மாற்றி இந்த உலையில் பயன்படுத்தப்படுகிறது.
விவிஇஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தை தமிழில்
நீர்-நீர் ஆற்றல் அணுஉலை என்று கூறலாம்.
ஙணிஞீணி-ஙணிஞீதூச்ணணிடி உணஞுணூஞ்ஞுtடிஞிடஞுண்டுதூ கீஞுச்ஞிtணிணூ; ஙிச்tஞுணூ-ஙிச்tஞுணூ உணஞுணூஞ்ஞுtடிஞி கீஞுச்ஞிtணிணூ என்பதின் சுருக்கம் தான் விவிஈஆர் (ஙஙஉகீ) அல்லது ஙிஙிஉகீ.
இந்த தொழில் நுட்பம் அழுத்த நீர் அணுஉலை வடிவமைப்பில் அமைந்த ரஷ்ய அணுக்கரு உலைகளாகும்.
முன்னாள் சோவியத் யூனியன், இந்நாள் ரஷ்யாவில் உள்ள ஓகேபி கிட்ரோபிரெஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டவை.
இவற்றின் ஆற்றல்திறன் 440 Mஙிஞு முதல் 1200 Mஙிஞு வரை உள்ளன. இவ்வகை அணுமின் நிலையங்கள் ஆர்மீனியா , பல்கேரியா , சீனா , செக் குடியரசு, பின்லாந்து , அங்கேரி, இந்தியா, ஸ்லோவேக்கியா , உக்ரைன், மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
விவிஈஆர்-1000 தொழில் நுட்பம் 1975ம் ஆண்டில் உருவாக்கப்படது; இதில் கதிர்வீச்சுக் காப்புக் கட்டிடத்தில் நான்கு சுற்று அமைப்பும் நீராவி தெளிப்பு அடக்கு முறைமைகளும் இருந்தன. மேலும் மேற்கத்திய மூன்றாம் தலைமுறை அணுக்கரு உலைகள் போன்று தானியங்கி கட்டுப்பாடு, இயக்கியற்ற பாதுகாப்பு மற்றும் காப்புக் கட்டிட அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
*கங்காரு எவ்வளவு நாட்கள் குட்டியை தன் பையில் வைத்திருக்கும்?
- அ. முத்துமீனாள், திருச்சி.
கங்காரு பாலுõட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன.
இயற்கை அமைப்பின்படி கங்காரு குட்டி முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பே பிறந்துவிடுகின்றது. மீதி வளர்ச்சி எல்லாம் கங்காருவின் வயிற்றுப் பகுதியில்தான் நடக்கும். குட்டி, பிறந்த உடனேயே வயிறு வழியாக ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். அம்மாவின் பாலைத்தவிர மற்ற உணவை செரிக்கக்கூடிய திறன் வரும்போதுதான் உட்கொள்ளும். இத்திறன் வரும் வரை குட்டி அம்மாவின் பைக்குள்ளேயே தான் இருக்கும். குட்டியின் உடற் பகுதிகள் எல்லாம் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகுதான் கங்காரு, தன் குட்டியை கீழே இறக்கிவிடும்.
எப்போதாவது நரியோ, கழுகோ மற்ற விலங்குகளேமா பிடிக்க வரும்போது குட்டி ஓடி வந்து தன் தாயின் பைக்குள் ஒளிந்துகொள்ளும்.
குறைந்தது கங்காரு குட்டி ஒன்பது மாதங்கள் வரை தாயின் பையில் வளர்கிறது. பின்னர் தாயின் வயிற்று பையில் இருந்து வெளிவருகின்றது.
*குதிரை நின்று கொண்டுதான் துõங்குமாமே! உண்மையா?
- எம். சுபலேகா, சத்தியமங்கலம்.
உண்மை தான்! குதிரைகள் எப்போதும் நின்றவாறேதான் துõங்கும். நின்று கொண்டே துõங்குவதால் அவற்றின் உறுதியான கால் தசைநார்கள் களைப்படைந்து போகும் நேரத்தில் அவை சுதாரித்துக் கொண்டு விடும். குதிரைகள் நின்றுகொண்டே துõங்கினால்தான் அவைகளுக்கு நிம்மதியான துõக்கம் கிடைக்கிறது என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
********************************************************************************************************
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)