சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ்கேள்வி பதில் 14

குட்டீஸ்கேள்வி பதில் 14 *அணில் ஏன் தன் முன் பற்களைக் கொரித்துக்கொண்டே இருக்கிறது? - ம. முரளிதரன், மல்லசமுத்திரம். அணில்கள் கொரிக்கும் பாலுõட்டி இனத்தை சேர்ந்தவை. இதன் வாயின் முன்பக்கத்தில் மேலும் கீழுமாக இரண்டிரண்டு உளிப்பற்கள் இருக்கும். இவை தினமும் வளரும். அதனால் கடின ஓடுகள், மரக் கிளைகள் இவைகளை எலிகளைப் போலவே துருவும். எதுவும் கிடைக்கவில்லை என்றால், மேலும் கீழுமாக அதுவே பற்களை அரைத்துக் கரைத்துக் கொள்ளும். இப்படிப் செய்யவில்லையாயின் உளிப்பற்கள், நீளமாக வளர்ந்து எதுவும் சாப்பிட முடியாமல் இவை இறந்து விடும். உலகெங்கிலும் 250வகையான அணில்கள் உள்ளன. ஆஸ்திரேலியா, அண்டார்டிகா பகுதிகளில் இவை காணப்படுவதில்லை. மர அணில் ,தரை அணில், பறக்கும் அணில் போன்றவை நாம் அன்றாடம் பார்க்கும் வகைகளில் சில. ஆப்ரிக்க பிக்மி அணில்கள் உருவில் மிகச் சிறியவை. இவை 7 முதல்10 செ.மீ நீளமும், 10 கிராம் எடையும் கொண்டவை. நீர் நாய் வகை அணில்கள் 5 முதல் 8 கிலோ எடையும், 50--70 செ.மீ நீளமும் கொண்டதாக உள்ளன. *இடிதாங்கி பற்றி விளக்கமா சொல்லுங்க அங்கிள்! - ஏ. சந்திரசேகர், பசுபதிபாளையம். இடிதாங்கி என்பது கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் இடி, மின்னல் தாக்காமல் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கருவி. இதன் முனைப்பகுதி காந்தச் சக்தியால் ஆனது. இந்தக் கருவியைக் கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் வைத்து தடித்த காப்பர் பட்டையின் மூலம் பூமியில் எர்த் செய்து விடுவார்கள். இடி தாக்கும்போது இடிதாங்கி, மின்னலை ஈர்த்து பட்டை வழியாக பூமியைச் சென்றடைய செய்கிறது. இதனால், கட்டடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதோடு சேர்ந்து நாமும் பாதுகாக்கப்படுகிறோம். இடி, மின்னலில் உண்டாகும் மின்சாரம் பல லட்சக்கணக்கான வோல்ட் அழுத்தமுடையது. இந்த உயர்ந்த அழுத்த மின்சாரம் நம்மையும், கட்டடங்களையும் தாக்குவதால் பேரிழப்பு ஏற்படுகிறது. இடிதாங்கி கூர்மையான அம்பு போன்ற அமைப்பு உடையதாகக் காணப்படுகிறது. கூர்மையானப் பகுதியில் எலக்ட்ரான், புரோட்டான்கள் மிக வேகமாக தயார் நிலையில் இருக்கும். தட்டையான வடிவமுடையதாக இருந்தால் எலக்ட்ரான், புரோட்டான் சிதறிய நிலையில் காணப்படும். இடி தாக்கும்போது இடிதாங்கி கூர்மையான பகுதியாக இருந்தால் எலக்ட்ரான், புரோட்டான்கள் வேகமாக செயல்பட்டு தன்னகத்தே இழுத்து பூமிக்குச் செலுத்த வசதியாக இருக்கிறது. அதனால்தான் கூரிய அமைப்பைக் கொண்டதாக இடிதாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. *சோலார் சக்தி, அதில் இயங்கக்கூடிய மின்சாதனங்கள் எவை பற்றி கூறுங்கள். -ஆர். சண்முகம், ராமநந்தீஸ்வரம். மின்சாரத்துக்கு மாற்றாக சோலார் பவர் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் அபரிமிதமான சூரிய சக்தியைக் கொண்டு ஆண்டு முழுவதும் தடை இல்லாமல் மின்சாரம் கிடைக்கும்படி செய்யலாம். ஆனால் நம் நாட்டில் ஒரு சதவிகிதம் சூரிய சக்தியைத்தான் உபயோகிக்கிறோம். சூரிய சக்தியைக்கொண்டு நாம் மிகப் பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கலாம். நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவையான மின்சாரம் மிகச் சுலபமாக கிடைக்கும்படி செய்யலாம். வீடுகளில் சிறிய கருவிகளைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இவ்வளவு இருந்தும், மக்களிடையே சூரிய சக்தி மூலம் மின்சாரம் எடுப்பது பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. சோலார் பவர் மூலம் வாட்டர் ஹீட்டர்கள், மின் விளக்குகள், மின் விசிறி, கணினி, வாஷிங் மெஷின், ஏ. சி. முதலியவற்றை இயக்கலாம். சோலார் சாதனங்களை அமைக்க ஆரம்ப செலவு அதிகம் என்றாலும், நாளடைவில் நாம் உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை விட செலவு குறைவு தான். ******* *************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில் 13

குட்டீஸ் கேள்வி பதில் 13 ஏப்20 *வாயில் உமிழ்நீர் சுரப்பது ஏன்? அதன் பயன் என்ன? - ஆர். ஸ்ரீஜா, ஸ்ரீரங்கம். புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும். உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிக என்சைம்களைக் கொண்டது. இதில் ஆன்ட்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1,500 மி.லி. அளவு சுரக்கிறது. உமிழ்நீர் சுரப்பு அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறும் மாறுபடுகிறது. உமிழ் நீரின் முக்கிய பணி ஜீரணமாக்குவது. உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான். * நட்சத்திரம் என்றால் என்ன? அவை எப்படி மின்னுகின்றன? - எம். கோகுல், பசுபதிபாளையம். நட்சத்திரம் என்பது பல வாயுக்கள் கலந்த மேகம் போன்ற ஒரு தொகுப்பு. இந்த மேகத்திற்குள் ஹைட்ரஜன் வாயு இருக்கும். வாயுத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து ஒரு பெரிய வாயுக் கூட்டமாக மாறிவிடும். அதன் அளவு கூடும்போது வெப்பமும் கூடுகிறது. அது ஒரு வெடிகுண்டைப்போல வெடிக்கும் வரை சேர்ந்துகொண்டே இருக்கும். அது வெடிக்கும்போது, எரியும் தன்மைகொண்ட ஹீலியம் வாயு வெளியிடப்படும். நட்சத்திரங்கள் வெளியிடும் ஒளியும் வெப்பமும் மிக நீண்ட தொலைவைக் கடந்து வருகின்றன. அப்படி வரும்போது மிகச் சொற்பமான வெளிச்சமே தொடர்ச்சியாக நம்மை வந்தடைகிறது. அப்படி, நம்மை வந்தடையும் முன் பூமியின் வளி மண்டலம் வழியாக அந்த ஒளி பயணிக்கிறது. வளி மண்டலத்தில் உள்ள துõசுகள் அவ்வப்போது அந்த ஒளி பயணிக்கும் பாதையின் இடையே செல்கின்றன. எனவே நட்சத்திரங்கள் சில நேரம் நமக்குத் தெரிகின்றன. துõசு அதிகமாக இருக்கும்போது தெரிவதில்லை. இது வேகமாகவும் தொடர்ந்தும் மாறி மாறி நடப்பதால்தான் நட்சத்திரங்கள் மின்னுவதுபோன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகிறது. நட்சத்திரம் எல்லா நேரமும் மின்னுவதில்லை. மேலும் சில நட்சத்திரங்கள் எப்போதுமே மின்னுவதில்லை. இதற்குக் காரணம் அவை நட்சத்திரங்கள் அல்ல, கோள்கள். கோள்கள் மின்னுவதில்லை. *செல்போனில் புளுடூத் என்ற ஒன்று இருக்கிறதே, புளுடூத் என்றால் என்ன? - அ.தனுஷ், பள்ளூர். புளுடூத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயர் தரும் பொருளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள். இந்த விஞ்ஞானிகளுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது மதிப்பும், மரியாதையும் பிரியமும் இருந்தது. அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர். அவர் அப்படி என்ன சாதனை செய்தார்? என்று கேள்வி எழுகிறதா, தனுஷ்? 900ம் ஆண்டில் ஹெரால்ட் புளுடூத் மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார். பின்னர், கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். 986ல் போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது, கிறித்தவ மதத்தை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார். ********************************************************************************************************

குட்டீஸ்÷ கள்வி பதில் 12

குட்டீஸ்÷ கள்வி பதில் 12 ஏப்ரல்13/ *கப்பல் மிதப்பது எப்படி? - ரா. வீரபாண்டியன், புதுக்கோட்டை. கப்பல் தண்ணீரில் மிதப்பது ஆர்க்கிமடிஸ் விதி படியாகும். ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும். 10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். பொதுவாக ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்கு, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் டிஸ்பிளேஸ்மென்ட் 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள். அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை அழுத்துகின்றன. ஒன்றையொன்று அமிழ்த்தி சமநிலையை ஏற்படுத்துகின்றன. இதனால் கப்பல் தண்ணீரில் மிதக்கிறது. *சிவப்பு மலர் நீல நிறக்கண்ணாடியில் பார்த்தால் கறுப்பாகத் தோன்றுவது எவ்வாறு? சிவப்பு மலரிலிருந்து சிவப்பு ஒளிதான் வெளிப்படும். இந்த ஒளியை நீலநிறக்கண்ணாடி உட்கவர்ந்துவடும். ஏனெனில் நீலக்கண்ணாடி வழியாக நீலநிற ஒளி மட்டுமே ஊடுருவிச் செல்ல முடியும். சிவப்புநிற ஒளியை நீலநிறக்கண்ணாடி தடுத்துவிடுவதால் மலர் கருப்பாகத் தெரியும். *துõக்கத்தில் நடப்பது எப்படி? - ச. சரண்ராஜ், ஊத்துக்குளி. -வி. சுப்ரமணியம், பி. கொமாரபாளையம். துõக்கத்தில் மூன்று நிலைகள் இருக்கிறது. விழிப்பு நிலை, விழி அசைவுகளில்லாத துõக்க நிலை, விழி அசைவு துõக்க நிலை( இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை!). துõக்கத்தில் நடப்பது என்பது ‘மனிதர்களின் ஒருவகையான துõண்டப்பட்ட, குழப்பமான மனநிலை’ என மருத்துவர்கள் கருதுகிறார்கள். அறிவியல்பூர்வமா சொல்வது என்றால், துõக்கத்தில் நடப்பது விழிப்பு நிலை மற்றும் விழி அசைகளில்லாத துõக்க நிலையில் நடைபெறும் ஒரு செயல். சிலர் மட்டும் ஏன் துõக்கத்தில் நடக்கிறாங்க மத்தவங்க ஏன் நடக்கிறதில்லைங்கிற கேள்விக்கு இன்னும் திட்டவட்டமான பதில் இல்லை! பொதுவா துõக்கத்தில் நடப்பதற்க்கு, குடும்ப மரபணுவியல் சம்பந்தமான காரணங்களாக இருக்கலாமாம். பெரியவங்கள விட, குழந்தைங்கதான் பெரும்பாலும் துõக்கத்துல நடப்பாங்களாம். அதுக்கு காரணம், குழந்தைங்க துõங்கும்போது, ஆழமான விழி அசைவுகளில்லாத துõக்க நிலை நிலையில்தான் இருப்பாங்களாம். இந்த நிலையிலதான் துõக்கத்துல நடக்கிற செயல் நடக்கிறது. சரியான துõக்கமின்மை, ஜூரம், மன உளைச்சல், ஊக்க மருந்துகள் சாப்பிடுதல் காரணங்களால் துõக்கத்தில் நடப்பது சாத்தியமாகலாம். சரியான நேரத்தில் உறங்குவது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பது. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்குவது போன்றவற்றை கடைபிடித்தால் தவிர்க்கலாம். மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு மருந்துகளும் கொடுக்கப்படுகிறது! *லாப்ராடர் நாய் இனத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க, அங்கிள்! -ந. விக்னேஷ், வேலுõர். நாய் இனங்களில் லாப்ரடர் நாய் ஒரு வகை. கனடா, ஆஸ்திரேலியாவில் இந்த நாய்கள் மிக பிரபலம். ஆண் நாய் 27 முதல் 40 கி.கி எடையும் 56 முதல் 63 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். பெண் நாய் 27 முதல் 35 கி.கி. எடையும் 54 முதல் 60 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். கறுப்பு, மஞ்சள், சாக்லேட் நிறங்களில் இருக்கும். பழங்குடி இனத்தினர் வேட்டையாடுவதற்கும், மீன்பிடி தொழிலுக்கும் இந்த நாயை பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் நுரையீரல் புற்று நோயை கண்டறிய இவ்வகை நாய்களை பயன்படுத்தும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ஜெர்மனியில் உள்ள ஸ்கில்லர் ஜோக் ஆஸ்பத்திரியின் நிபுணர்கள் இந்த ஆய்வு மேற்கொண்டனர். அவை தனது மோப்ப சக்தி மூலம் மனிதர்களின் மூக்கு வழியாக வெளியேறும் சுவாசத்தின் மூலம் நுரையீரல் புற்று நோயை கண்டறிய முடியும் என கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நோய் அறிகுறி தொடங்கும் நிலையில் உள்ள 71 சதவீதம் பேரின் நுரையீரல் புற்று நோயை தெரிந்து கொள்ள முடியும். நுரையீரல் புற்று நோயை கண்டுபிடிக்க 2 ஜெர்மன்ஷெப்பர்டு, ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு, மற்றும் லாப்ராடர் ரக நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். *******************************************************

குட்டீஸ் கேள்விபதில் 11

குட்டீஸ் கேள்விபதில் 11 * கூடங்குளம் அணு உலை வி.வி.இ.ஆர் 1000 தொழில் நுட்பம் கொண்டது என்று படித்தேன். அதுபற்றி விளக்குங்க அங்கிள்! - எஸ். திலகவதி, திருவாரூர். நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க. சபாஷ்! கூடங்குளம் அணு உலை ரஷ்ய நாட்டின் வி.வி.இ.ஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. இதில் யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு பிளக்கப்படும் போது 2000 டிகிரி செல்சியஸ் வெப்பம் உருவாகிறது. இது நீரின் கொதி நிலையான 100 டிகிரி செல்சியஸ்-ஐ விட 20 மடங்கு அதிகம். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உருவாக்கப்பட்டு, அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. மிக அதிக வெப்பம் உருவாவதால், இந்த அணு உலையைக் குளிர்விக்க கடலிலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரித்து உப்பு அகற்றி, நன்னீராக மாற்றி இந்த உலையில் பயன்படுத்தப்படுகிறது. விவிஇஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தை தமிழில் நீர்-நீர் ஆற்றல் அணுஉலை என்று கூறலாம். ஙணிஞீணி-ஙணிஞீதூச்ணணிடி உணஞுணூஞ்ஞுtடிஞிடஞுண்டுதூ கீஞுச்ஞிtணிணூ; ஙிச்tஞுணூ-ஙிச்tஞுணூ உணஞுணூஞ்ஞுtடிஞி கீஞுச்ஞிtணிணூ என்பதின் சுருக்கம் தான் விவிஈஆர் (ஙஙஉகீ) அல்லது ஙிஙிஉகீ. இந்த தொழில் நுட்பம் அழுத்த நீர் அணுஉலை வடிவமைப்பில் அமைந்த ரஷ்ய அணுக்கரு உலைகளாகும். முன்னாள் சோவியத் யூனியன், இந்நாள் ரஷ்யாவில் உள்ள ஓகேபி கிட்ரோபிரெஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டவை. இவற்றின் ஆற்றல்திறன் 440 Mஙிஞு முதல் 1200 Mஙிஞு வரை உள்ளன. இவ்வகை அணுமின் நிலையங்கள் ஆர்மீனியா , பல்கேரியா , சீனா , செக் குடியரசு, பின்லாந்து , அங்கேரி, இந்தியா, ஸ்லோவேக்கியா , உக்ரைன், மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. விவிஈஆர்-1000 தொழில் நுட்பம் 1975ம் ஆண்டில் உருவாக்கப்படது; இதில் கதிர்வீச்சுக் காப்புக் கட்டிடத்தில் நான்கு சுற்று அமைப்பும் நீராவி தெளிப்பு அடக்கு முறைமைகளும் இருந்தன. மேலும் மேற்கத்திய மூன்றாம் தலைமுறை அணுக்கரு உலைகள் போன்று தானியங்கி கட்டுப்பாடு, இயக்கியற்ற பாதுகாப்பு மற்றும் காப்புக் கட்டிட அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. *கங்காரு எவ்வளவு நாட்கள் குட்டியை தன் பையில் வைத்திருக்கும்? - அ. முத்துமீனாள், திருச்சி. கங்காரு பாலுõட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இயற்கை அமைப்பின்படி கங்காரு குட்டி முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பே பிறந்துவிடுகின்றது. மீதி வளர்ச்சி எல்லாம் கங்காருவின் வயிற்றுப் பகுதியில்தான் நடக்கும். குட்டி, பிறந்த உடனேயே வயிறு வழியாக ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். அம்மாவின் பாலைத்தவிர மற்ற உணவை செரிக்கக்கூடிய திறன் வரும்போதுதான் உட்கொள்ளும். இத்திறன் வரும் வரை குட்டி அம்மாவின் பைக்குள்ளேயே தான் இருக்கும். குட்டியின் உடற் பகுதிகள் எல்லாம் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகுதான் கங்காரு, தன் குட்டியை கீழே இறக்கிவிடும். எப்போதாவது நரியோ, கழுகோ மற்ற விலங்குகளேமா பிடிக்க வரும்போது குட்டி ஓடி வந்து தன் தாயின் பைக்குள் ஒளிந்துகொள்ளும். குறைந்தது கங்காரு குட்டி ஒன்பது மாதங்கள் வரை தாயின் பையில் வளர்கிறது. பின்னர் தாயின் வயிற்று பையில் இருந்து வெளிவருகின்றது. *குதிரை நின்று கொண்டுதான் துõங்குமாமே! உண்மையா? - எம். சுபலேகா, சத்தியமங்கலம். உண்மை தான்! குதிரைகள் எப்போதும் நின்றவாறேதான் துõங்கும். நின்று கொண்டே துõங்குவதால் அவற்றின் உறுதியான கால் தசைநார்கள் களைப்படைந்து போகும் நேரத்தில் அவை சுதாரித்துக் கொண்டு விடும். குதிரைகள் நின்றுகொண்டே துõங்கினால்தான் அவைகளுக்கு நிம்மதியான துõக்கம் கிடைக்கிறது என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ********************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில் 10

குட்டீஸ் கேள்வி பதில் 10 மார்ச்30/ *உலகின் மிக நீளமான பாம்பு எது, எங்கு உள்ளது? - கே. எழிலரசன், ஆற்காடு. உலகில் இப்போது உயிருடன் உள்ள பாம்புகளில் மிக நீளமான பாம்பு என்ற சாதனையை, அமெரிக்காவின் ஓகைய்யோ மாநிலத்தின் தலைநகரான கொலம்பஸ்சில் (இணிடூதட்ஞதண் -Oடடிணி) உள்ள மிருகக்காட்சி சாலையில் வளர்க்கப்பட்டு வரும் ஒரு மலைப்பாம்பு பெற்றுள்ளது. இந்தப் பாம்பு 300 பவுண்டு எடையும், 24 அடி நீளமும் கொண்டதாக காணப்படுகிறது. 15 வயதுடைய இந்த மலைப்பாம்பு ஊடூதஞூஞூதூ என அழைக்கப்படுகிறது. கடந்த 2005ம் ஆண்டில் உலகின் மிக நீளமான பாம்பாக 32 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு காணப்பட்டது. இந்தப்பாம்பு இந்தோனேசியாவில் கொல்லப்பட்டது. இதன் பின்னர் உலகில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மிக நீளமான பாம்பு என்ற சாதனை இந்தப் பாம்புக்கு கிடைத்துள்ளது. இது 2011ம் ஆண்டிற்கான உலகசாதனை புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. *மருந்து சீட்டுகளில் ஆர்எஸ் என குறிப்பிடுவதேன்? - ராம. மம்தாராம், டால்மியாபுரம். சமீபத்தில் டாக்டரை பார்த்து வந்திருக்கீங்களா மம்தாராம்? இப்ப உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கு? சரி, நீங்கள் கேட்ட சந்தேகத்திற்கு வருகிறேன். பொதுவாக எல்லா டாக்டர்களும், தாங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எழுதும் சீட்டில் கீது என்று எழுதுவது வழக்கம். சில டாக்டருடைய மருந்து சீட்டில் கீது அச்சிடப்பட்டிருக்கும். உயிர் காக்கும் மருத்துவம், தொழில் மட்டுமல்ல அது... கடவுளுக்கு நிகரானவர்களாக டாக்டர்களை ஜீபிடர் கடவுளாக பாவித்தனர் பண்டைய ரோமானியர்கள். கீ என்பது லத்தீன் சொல்லான ணூஞுஞிடிணீணூஞு என்பதிலிருந்து வருகிறது. அதாவது, இதை பரிந்துரைக்கிறேன் எடுத்து கொள்ளலாம் என்பதாகும். சின்ன து, கடவுளின் அரசர் அதை ஏற்பதற்கான குறீயீடு. அதாவது அந்த ஜீபிடர் கடவுளே மருத்து சீட்டை எழுதுவதாகும். அவரின் கருணையோடு நோய் குணமாகும் என்பது அவர்களது ஐதீகம். இது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது. * அமரர் கல்கி பற்றி சொல்லுங்க அங்கிள்! -எம். நிகேஷ்குமார், காட்டூர் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்கி. இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள் , கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நுõல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகவும் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமிபுதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கல்கி, 1899ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புட்டமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப் பள்ளி படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த அவர், திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். ஒத்துழையாமை இயக்கம் துவங்கிய போது, அதன் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட கல்கி, தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். அவர், ‘நவசக்தி’ என்னும் பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் 1927ல் வெளியானது. சமஸ்கிருதமும், தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலக்கட்டத்தில் தமிழிசைக்காக, சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி. தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகள், ‘தரம் குறையுமா’ எனும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. ************************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில் 9

குட்டீஸ் கேள்வி பதில் 9 மார்ச்23 *அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? - எம். நிகேஷ் குமார், காட்டூர். பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில் பூமிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட துõரம் சற்று குறையும். அதனால் சூரியனிடம் இருந்து வரும் கதிர் வீச்சு பூமியில் செங்குத்தாக விழும். இதனால் சாதாரண நாட்களை விட இந்த இரு மாதங்களில் பூமியில் சூரிய வெப்பம் சற்று கூடுதலாக இருக்கும். பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த கடும் கோடை பகுதியாகும். இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும் இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பம் தகிக்கும். இப்படி தகிக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்பது நடைமுறை. இந்த ஆண்டு மே 3ம் தேதியிலிருந்து மே 28ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். *பனி மழை பொழிவது எப்படி? - எஸ். சரண்குமார், கோபி. வானத்தில் வெப்பநிலை மிக குறைவாக இருக்கும் போது மழை பனியாகிறது. அந்தப் பனி பூமி வரும் வரை வெப்பநிலை குறைவாகவே இருந்தால் மழை பனியாக பொழிகிறது. வெப்பநிலை, நீர் உறையும் அளவோ, அதைவிட குறைவாகவோ (மைனஸில்) இருந்தால் மழை பனியாக பொழிய வாய்ப்புண்டு, இந்த வெப்பநிலை கூணூணிணீணிண்ணீடஞுணூஞு முழுவதும் நிலவ வேண்டும் . மேலே சொன்ன அதேப்பனி காற்று மண்டலத்தில் ஏற்படும் வெப்ப மாற்றம் காரணமாக சிறு பனி கட்டி மழையாக பெய்யும். பனியாக ஆரம்பிக்கும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில், காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம், உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது மீண்டும் நீராகி, நிலத்தை நெருங்கும் முன் மீண்டும் குறைந்த வெப்பம் காரணமாக சிறு ஐஸ் கட்டிகளாக விழும். இந்த கட்டிகள் சிறு கற்கண்டு அளவிலோ இல்லை அதை விட கொஞ்சம் பெரியதாகவோ இருக்கும். * விமானம் பறப்பது எவ்வாறு என்பதை விளக்குங்க. - ஆர். கோகுல், பாலா, பள்ளூர். ஒரு பறக்கும் பொருளில் நான்கு விதமான விசைகள் உண்டு. < அவை மேல்நோக்கி இழுக்கும் லிப்ட், முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட், கீழ்நோக்கி இழுக்கும் எடை , பின்னோக்கி இழுக்கும் டிராக். ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க வெயிட்= லிப்ட் டிராக்= த்ரஸ்ட் சமமானதாக இருக்க வேண்டும். த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக், த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும். விமானத்தின் எடை, லிப்ட் விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும். விமானத்தின் லிப்ட் விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும். விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது விமானத்தின் எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை. விமானத்தின் மேல் நோக்கு துõக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணி . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் துõக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது. ஒரு டெயில் பீஸ்: இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி விண்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது *************************************************************************************************************

குட்டீஸ் கேள்விபதில் 8

குட்டீஸ் கேள்விபதில் 8 மார்ச்9/ பேஸ் புக் என்றால் என்ன? - ஏ. முத்து, வாழைப்பந்தல். பேஸ்புக் 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு பேஸ்புக்கில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். இதை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் பல்கலை நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களும் பேஸ்புக்கில் சேர்ந்தனர். 2008ல், பேஸ்புக்கின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப்பட்டது. 2010ல், பேஸ்புக்கின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகுள் , அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது. 2011ல் பேஸ்புக் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விவரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். ஏப்ரல் 2011ல் பேஸ்புக்கில் அரட்டை அடிப்பதை நேரடிக் குரல் அழைப்பு மூலம் உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் பேசும் முறை கொண்டு வரப்பட்டது. ஜூலை 2011ல், ஸ்கைபை என்ற நிறுவனத்தின் உதவியுடன் நேரடி ஒளிப்பதிவாக ஒருவருக்கொருவர் பேசுவதைப் பார்க்கும் முறையைக் கொண்டு வந்தனர். * கரப்பான் பூச்சிக்கு ரத்தம் வெள்ளையாக இருக்கும் என்பது உண்மையா? - ரா. வீரபாண்டியன், புதுக்கோட்டை. ஆமாம்! கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய ஒரு அனைத்துண்ணி இனம். இதன் உடலில் ஓடும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் ரத்தம் வெள்ளை நிறமாக இருக்கும். * நாம் துõங்கும் போது ஏன் கனவு வருகிறது? கனவு பற்றிய நம்பிக்கைகள் உண்மையா? - கே. விக்னேஷ், ஆரணி. கனவு என்பது மனிதனின் துõக்கத்தில் உலாவரும் உள்மன வெளிப்பாடு. கனவு காணாத மனிதனே இல்லை என்னும் அளவிற்கு மனிதனின் இயல்பான செயலாய் இது இருக்கிறது. கனவு என்பது ஒருவர் துõங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவதும் உண்டு. கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக இதுவரை ஒரு நிச்சயமான அறிவியல் புரிதல் இல்லை. இருப்பினும், வாழ்வில் பின்னர் நிகழப்போவதைக் குறிப்பால் உணர்த்தும் ஒன்றாகக் கனவு நம்பப்படுகிறது. கனவில் வரும் நிகழ்வின் அடிப்படையில் நல்ல கனவு, கெட்ட கனவு என்றும் கருதப்படுகிறது. கனவில் நல்லது நிகழ்ந்தால் வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாகத் தீயது நடக்கும். கனவில் தீயது நிகழ்ந்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும். இது கனவு நம்பிக்கைகளுக்கு மட்டுமே உரிய சிறப்புத் தன்மை. இப்படி நாட்டுப்புற மக்களிடம் கனவு குறித்த நம்பிக்கைகள் நிறைய காணப்படுகின்றன. கனவு நிகழ்வுகளோடு நனவு நிகழ்வுகளைப் பொருத்திப் பார்த்து வியந்து பேசும் வழக்கமும் மக்களிடம் உள்ளது. உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கனவுகள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார். கனவு பற்றிய நம்பிக்கைகள் சில: ஏர் உழுவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியங்கள் தாமதமாகும். திருமணம் பற்றிக் கனவு கண்டால் தீயது நடக்கும். கனவில் தாமே இறந்துவிட்டதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும். மரணத்தைக் கனவில் கண்டால் சுகமாகும். இறந்தோர் கனவில் வந்து அழைத்தால் மரணம் வரும். அதிகாலையில் காணும் கனவு பலிக்கும். ******************************************************************************************************