






மா நோ உமி மர்மங்கள்!
- தேவராஜன்
மா நோ உமி! முதியவர் ஒருவர் வெற்றிலைப்பாக்கு போட்டு,வாயில் குதக்கிக்கொண்டு சொல்லிய வார்த்தை என்று நினைத்து விட்டீர்களா!
இந்த வார்த்தை ஜப்பான் மொழி வார்த்தை. இதன் பொருள் பிசாசு கடல் என்று அர்த்தமாகும்.
ஜப்பான் கடற்கரை பகுதியில் உள்ள இந்த பிசாசு கடலுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது ‘டிராகன் டிரையாங்கிள்’. அதாவது டிராகன் முக்கோணம்.
டிராகன் முக்கோணப் பகுதி கடல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது மியாகே தீவு. இப் பகுதியில் இருக்கிறது பிசாசு கடல்.
இந்தக் கடல் பகுதி வழியாக சென்ற யாரும் உயிரோடு திரும்பியதில்லையாம்! இப்பகுதியை கடந்து சென்ற பல கப்பல்கள், படகுகள் மர்மமான முறையில் மாயமாகியிருக்கின்றன. அதில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும் இல்லை. இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவாவதும், இருக்கும் தீவுகள் மறைவதும் பீதியை ஏற்படுத்துவது பயங்கரமான மர்மமாகவே இருந்து வருகிறது.
இந்த மர்மத்தீவு, பெர்முடா முக்கோணத்தின் நேராக, பூமி உருண்டையின் மறு பக்கத்தில் இருக்கிறது.
பெர்முடா முக்கோணம் கடல் பகுதி வழியாகச் செல்லும் கப்பல்கள்,விமானங்கள் போன்றவை காணாமல் போவது போலவே, இந்த பிசாசுக் கடல் பகுதி வழியாகச் செல்லும் கப்பல்களும்,விமானங்களும் மாயமாக மறைந்து போவதாக கூறப்படுகிறது.
இந்த மர்மமான தொலைதல்கள் பற்றி ஜப்பான் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், 1952 ம் ஆண்டிற்கும் 1954 ம்ஆண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இக்கடல் பகுதி வழியாக ஜப்பானின் ராணுவக் கப்பல்கள் சென்றன.இந்தப் பிசாசு கடல் பகுதியை கடந்தபோது அவை என்னவாயின என்பதும்அதில் பயணித்த 700 பேரின் நிலைஎன்ன ஆனது என்பது தெரியவில்லை.
இந்த அதிர்சிகரமான சம்பவத்திற்குப் பிறகு ஜப்பான் அரசு இது பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்காக 31 விஞ்ஞானிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்தது.
இந்த விஞ்ஞானிகள் குழு உடனடியாக டிராகன் முக்கோணம் நோக்கி பயணித்தது. ஆனால் இதில் பயங்கரம் என்ன என்றால், ஆராய்வதற்குச் சென்ற விஞ்ஞானிகளின் அந்த கப்பலின் நிலையும் என்ன ஆனதென்று தெரியவில்லை.
இந்த மாய, மர்மங்கள் புரியாமல்,எதற்கு வம்பு என்று ஜப்பான் அரசாங்கம் அதனை ஆபத்தான பகுதியாக அறிவித்தது.
இந்த மர்மங்கள் ஒருபுறம் இருக்கட்டும். உண்மை நிலை என்ன என்பது பற்றி விஞ்ஞானிகள் என்ன கருதுகிறார்கள் தெரியுமா?
விஞ்ஞானிகள் ஆய்வின் படி ஜப்பானிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் எரிமலைகள் வெடிப்பதும்,நிலஅதிர்வுகள் ஏற்படுவதும் சர்வ சாதாரணமான ஒன்றே.
இதே போன்ற நிகழ்வுதான் கடலுக்கடியிலும் எரிமலைகள் வெடிக்கின்றன. இதனால் கடலுக்கடியில் நில அதிர்வு ஏற்படுகிறது . இதனால் கடல் பரப்பின் மேல்பகுதியில் திடீர் திடீரென்று அலைகள் உருவாகின்றது. அப்பொழுது அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் அதில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன.
என்கிறார்கள்.
ஜப்பான் நாட்டினர் ஒரு சிலர் என்ன கருதுகிறார்கள் தெரியுமா? ஒரு சுவாரஸ்யமான நம்மூர் புராணக்கதைப்போல ஒன்றை சொல்கிறார்கள். அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
நெருப்பை கக்கும் டிராகன்கள்தான் இதற்கு காரணம் என்று நம்புகிறார்கள். அதற்கு, ஜப்பானிய புராண கதைகளை உதாரணம் காட்டுகின்றனர். “மியாகே தீவுப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான டிராகன்கள் வாழ்ந்தன. அந்த இனம் அழிந்துவிட்டாலும், அவற்றின் அமானுஷ்ய சக்தி இன்னமும் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மியாகே தீவுப்பகுதியை தங்களது சாம்ராஜ்யமாக அவை கருதுகின்றன. தங்களது சாம்ராஜ்யத்துக்குள் வருபவர்களை டிராகன் சக்திகள் விடுவதில்லை. அந்த வழியாக வரும் கப்பல்கள், படகுகளை அழிக்கின்றன” என்கின்றனர் அவர்கள்.
உண்மை என்னவென்று இதுவரை பெர்முடா முக்கோணத்தைப் போலவே, டிராகன் முக்கோணப் பகுதியும் கண்டுபிடிக்கப் படவில்லை.
மர்மங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
பாக்ஸ் செய்தி:
டிரையாங்கிள் முக்கோணம் பற்றி பத்திரிகைகளில் வந்த முதல்
கட்டுரை ஈ.வி.டபிள்யூ. ஜோன்ஸ் செப்டம்பர் 16,1950 அன்று வெளியிட்ட துதான்.
பேட் இதழ் ’நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்’ என்ற தலைப்பில் ஜார்ஜ் எக்ஸ். சாண்ட் எழுதிய ஒரு சிறு கட்டுரையை வெளியிட்டது.
அமெரிக்கன் லெஜன் இதழ் வெளியிட்ட ஏப்ரல் 1962 இதழில் பிளைட்
19 பற்றிய செய்தியை மட்டும் கொண்டு செய்திக் கட்டுரை வெளியானது.
வின்சென்ட் காடிஸ் என்பவர் 1964 பிப்ரவரியில் அர்கோசி இதழில் பிளைட் 19 காணாமல் போனதை பிற மர்மமான தொலைதல்களுடன் இணைத்து
அவற்றை ‘மரண பெர்முடா முக்கோணம்
‘ (ஆரம்பத்தில் தலைப்பு நம்பிக்கையிழக்கச் செய்யும் நீர்ப்பரப்பு என்கிற வகையில் இருந்தது)
பிறகு, அந்த கட்டுரையை விரிவுபடுத்தி, கண்ணுக்குத் தெரியாத வெளிகள் , என்னும் தலைப்பில் ஒரு விரிவான புத்தகம் ஒன்று எழுதினார் ஜான் வாலஸ் ஸ்பென்சர்
(லிம்போ ஆஃப் தி லாஸ்ட் , 1969); சார்லஸ் பெர்லிட்ஸ் (தி பெர்முடா டிரையாங்கிள் , 1974);
ரிச்சார்டு ஒயினர் (தி டெவில்’ஸ் டிரையாங்கிள், 1974)ஆகியோரின்
மற்ற பல படைப்புகளும் வெளியாயின.
******************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக