திங்கள், 6 ஆகஸ்ட், 2012
சிறுவர்களுக்கான விடுகதை விளையாட்டு(பாகம் இரண்டு)/ தேவராஜன்/

விடுகதை விளையாட்டு/பிப்.23/
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்,
‘ராஜ்ஜியம் இல்லாத ராஜா ராணி உண்டு
கிளை இல்லாத இலைகள் உண்டு
ஏ,ஜே, கே, கியூ, 1,2,3 இருக்கும் வாய்ப்பாடு அல்ல
உடை, நகைகள் இருக்கும் கடை அல்ல?’ நான் யார்? என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘அது சீட்டுக்கட்டு!’ என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
‘வெள்ளை வெளேர்னு இருப்பான்
கோபம் வந்தால் கறுத்துப்போவான்
தன்னையும் அறியாமல் கண்ணீர் சிந்துவான்- அவன் யார்?’ என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்,
‘அது மேகம்!’ என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
‘வளைந்து நெளிந்து செல்வேன் குழாய் அல்ல
வழிநெடுக தண்ணீர் தருவேன் மழையும் அல்ல
காடு மலை மேடு பள்ளம் சுற்றுவேன் சிங்கம் புலி அல்ல
கடைசியில் கடலில் மூழ்கி குளித்துடுவேன்-‘ நான் யார்? என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: நதி
**********
விடுகதை விளையாட்டு
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவரை கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்,
“இரு கொம்புகள் உண்டு
மாடு அல்ல;
வேகமாய் ஓடும் மான் அல்ல;
கால்கள் உண்டு மனிதனல்ல - அது என்ன? ” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “அது சைக்கிள்!” என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“ஆயிரம் தச்சர் கூடி
அழகான மண்டபம் கட்டி
ஒருவன் கண்பட்டு
உடைந்ததாம் மண்டபம். அது என்ன ? ”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்,
“அது தேன் கூடு!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“ கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டு வீடு!
ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!
வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம் அது என்ன?” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: தேங்காய்
***************
விடுகதை விளையாட்டு
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்,
“நாலு உலக்கைக் குத்தி வர
இரண்டு முறம் புடைத்து வர
துடுப்புத் துழாவி வர
துரைமக்கள் ஏறி வர- அது என்ன?” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘அது யானை!’ என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும்.
மூன்றாவது நபர்,“பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக் காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்,
“அது முருங்கை மரம்!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“ கழுத்துண்டு; கையில்லை
நாக்குண்டு; பேச்சில்லை
வாயுண்டு; அசைவில்லை
தொப்பி உண்டு; தலைமுடியில்லை. அது என்ன? ” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: பேனா
*************
விடுகதை விளையாட்டு
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்,
“அந்தரத்தில் பறக்கும் பறவையல்ல;
அந்திக்குப் பின் இரைதேடும் ஆந்தையல்ல;
தலைகீழாய் நின்றிருக்கும் தவசியுமல்ல
அது என்ன?”
என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘அது வவ்வால்!’என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“ பறக்காத பூப்பந்து; விளையாட்டுக்கு உதாவது மஞ்சள் பந்து; பகட்டான சிறுபந்து ,வாயில்
இட்டால் தேன்பந்து - அது என்ன?”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்,
“அது லட்டு!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“ தண்ணீர், உரம் இல்லாமல் முளைக்கிறான்; கிளை, இலை, பூ,கனி இல்லாமல் இருக்கிறான்; பிச்சு பிச்சு எறிந்தாலும் பின்னாலேயே முளைக்கிறான்,
வெட்டி வெட்டி எறிந்தாலும் எட்டு நாளில் முளைக்கிறான்;
-அவன் யார்?”
என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: விரல் நகம்
**************
விடுகதை விளையாட்டு ஏப்ரல்6/
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்,
“வயல்வெளியில் வீடு இருக்கும். கடலோரம் ஆற்றோரம் விளையாடுவான்.எட்டு கால் ஊன்றி, இரு கால் படமெடுத்து வட்டக்குடை
பிடித்து பக்கவாட்டில் குலுங்கி குலுங்கி வருகின்றவனுக்கு முன்னும், பின்னும் நடக்கத்தெரியாது அவன் யார்?” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘அது நண்டு!’என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“செடிக்கு எட்டுக்காய். இலைக்கு எட்டு முள்ளு. முட்டைபோல வயிறு. தலைக்கு குடை பிடித்திருக்கும் மயில் நிறத்து காய் அது என்ன காய்?? ”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்,
“அது கத்தரிக்காய்!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“ இறக்கை இல்லை உயர வானில் பறக்கும். அது பறவை இல்லை. சுருள் சுருளான நீண்ட வால் இருக்கும். அது குரங்கும் இல்லை. படமெடுத்து தலையாட்டும். அது பாம்பும் இல்லை. இதை கையில் வைத்திருந்தால் சிறுவனுக்கும் சிறப்பு கிடைக்கு கல்லுõரிக்கு போகாமலே கிடைத்த சிறப்பு? அது என்ன??”என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர்.
குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: பட்டம்.
*************
விடுகதை விளையாட்டு
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்,
“அடிப்பக்கம் மத்தளம். இலையோ ஒரு பாய். குலை பெரிது. காயின் சுவை துவர்ப்பு. பழம் தின்னால் இனிப்பு அது என்ன?” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘ அது வாழைமரம்!’என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“ அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; கால்கள் இருக்கும் நடக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால் கடிக்க முடியாது; வாய் இருக்கும். ஆனால் பேச முடியாது. கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்,
“ அது பொம்மை!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“ என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியுமா? ”
என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: கடிகாரம்
***************
விடுகதை விளையாட்டு
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்,
“கையுண்டு காலில்லை. கழுத்து உண்டு தலை இல்லை.பல் உண்டு நாக்கு இல்லை. உடல் உண்டு உயிர் இல்லை. அது என்ன” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “சட்டை!” என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
‘கத்திபோல் இலையிருக்கும். கவரிமான் கொம்பு போல பூ பூக்கும். தின்ன பழம் பழுக்கும். தின்னாத காய் காய்க்கும். அது என்ன?”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்,
“ ஈச்சம் பழம்!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“ அதிவேகக் குதிரை இரைச்சல் போடும். ஓடிக்கொண்டே ஆடும். கூகூ என்று கத்தும். ஆனால் இந்தக் குதிரை போட்ட கோட்டைத் தாண்டாமல் ஓடும் அது என்ன? ” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன
விடை கண்டுபிடியுங்க!
- விடை: ரயில்.
***************
விடுகதை விளையாட்டு 27.4.12
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்,
“குளம் குட்டைக்குளம்
பாம்பு ரெட்டைப் பாம்பு
குருவி மஞ்சள் குருவி
குளம் வத்திப் போச்சு
பாம்பு செத்து போச்சு
குருவி பறந்து போச்சு அது என்ன” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘அது விளக்கு!’என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“ வெற்றிலை வரலாறு :
பூக்கவும் செய்யாமல்
காய்க்கவும் செய்யாமல்
வெற்று இலையாக மட்டுமே இருக்கும் வெற்றிலை தின்னாள். கற்றாழைமடல் நிறத்தாள் . மீனாட்சி கையில் இருப்பாள்.உதடு சிவந்திருப்பாள் அவள் யார்?”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்,
“அது கிளி!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“ தலைக் கொண்டைக்காரி
கைத்தேர்ந்த கெட்டிக்காரி
பால் இல்லாமல் பிள்ளை வளர்ப்பதில்
இவள் பலே கெட்டிக்காரி அவள் யார்?”என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: கோழி
**************
விடுகதை விளையாட்டு
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்,
“ கும்மிருட்டு. நடு ராத்திரி. அடைமழை பெய்து முடிஞ்ச வேளை. எல்லாரும் துõங்கையில, புதுமாம்பிள்ளை வெள்ளை குடை பிடிச்சாராம்! அது என்ன?” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘அது காளான்’என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“ பச்சை பசேல் மரம். இலை இருக்கும். கிளை இருக்காது. அது அடுப்பெரிக்க விறகும் ஆகாது. சீப்பு உண்டு. அதை வைத்து தலைவார முடியாது. பூ பூக்கும். அந்தப் பூவை பறித்து கொண்டையிலே சூட முடியாது. அது என்ன மரம்?”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்,
“அது வாழை மரம்!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“முதுகிலேயே வீடு கட்டி வைத்திருப்பார். பொடிநடையாக நடப்பார். ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு. இவருக்கு மட்டும் ஒத்தைக்கொம்பு. ஆசையாக கொம்பு பிடிச்சா... அப்படியே மாயமா மறைச்சிடுவார். இவர் யார்? ”என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: நத்தை
***********
விடுகதை விளையாட்டு
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்,
“ தண்ணியிலே பிறந்ததை எடுத்து வந்து தணலிலே போட்டு வேகவைத்து தண்ணியைத் தெளிச்சா வெண்ணையாகும் அது என்ன?” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘ அது சுண்ணாம்பு!’ என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“ கண்ணான கண்ணழகி, கதிர் கம்பி நெட்டழகி, கார்மேகம் தொட்டு இழுக்க கண்சிமிட்டும் ஓர் நொடிக்குள் கடந்து செல்லும் பல துõரம். அது என்ன?”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்,
“ மின்னல்!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“ வெள்ளை வெளேர்னு பூவாக மலைப்போல குவிந்து கிடக்குது இந்த அரிசி. இதன் விலையோ சொற்ப காசு. நிறைய விளைஞ்சு கிடக்குது வாங்கி, ஆக்கித் தின்ன ஆள் இல்லை அது என்ன ?”
என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர்.
குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடிங்க!
- விடை: உப்பு!
**********
விடுகதை விளையாட்டு
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்,
“சின்னச் சின்ன அறைகள் உண்டு அது வீடு அல்ல. சிறந்த அழகு கொண்டிருக்கும் அது சித்திரம் அல்ல. காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு. அது கோட்டையும் அல்ல. அது என்ன” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “ அது தேன் கூடு!”என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“ஓரிடத்தில் பிறந்த சகோதரர்கள் அவர்கள். எல்லாரும் சிகப்பு தொப்பி அணிந்திருப்பார்கள். ஒற்றுமையாக ஒரே அறையில் இருப்பார்கள். ஒருவர் வீட்டின் சுவற்றில் உரசிகொண்டால் அத்தனை பேரும் எரிந்து விடுவார்கள்! அது என்ன? ”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்,
“ அது தீபெட்டி!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“ வானத்தில் பறக்கும் அது பறவை அல்ல. நீண்ட வால் உண்டு அது குரங்கும் அல்ல. வானத்தில் ஆட்டம் போடும் அழகு மயிலும் அல்ல. அது என்ன?”என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: பட்டம்.
***********
விடுகதை விளையாட்டு
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்,
“படபடக்கும். துடிக்கும். நீர் சுரக்கும். அக்கம் பக்கம் சுழலும். அடிக்கடி மூடித்திறக்கும். அருகருகே இருந்தாலும் தொட்டுக்கொள்ளாதது. அது என்ன?” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “அது கண்கள்!” என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“ அருகருகே இருப்பார்கள் இரட்டைப்பிறவிகள். இருவருக்கும் வைக்கும் பங்கு ஒருவருரைவிட ஒருவருக்கு குறைந்தால் போச்சு. அண்ணன் மேலே சென்று ஆடுவான். தம்பி கீழே இருந்து குதித்து ஆடுவான். இருவருக்கும் சமமாக பங்கு வைத்தால் இருவரும் ஆடாமல், குதிக்காமல் இருப்பார்கள். அது எது?”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்,
“ அது தராசு!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“ உச்சியிலே குடுமி உண்டு, சிறுமி அல்ல. உருண்டை வடிவம் உண்டு ஆனால் முட்டை அல்ல. நீர் நிறைந்திருக்கும். ஆனால் அது குடம் அல்ல. மூன்று கண் இருக்கும். ஆனால் சிவனும் அல்ல. அது என்ன?” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: தேங்காய்!
************
விடுகதை விளையாட்டு ஜூன்1
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்.
“ வெட்டரிவாள் இலை இருக்கும். வெள்ளரிவிதை பூ பூக்கும். கசக்கும்படி காய்காய்க்கும். விறலி மஞ்சள் நிறத்தில் பழம் பழுக்கும். அது என்ன?” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “வேப்பம் பழம் ” என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“உயர்ந்த மரத்திலே உச்சாணிக் கொம்பிலே மூணு கண்ணு கருப்பர்கள் பதுக்கி வைத்த மூணு முட்டையை. வெட்டிப் பார்த்தால் மூன்று குழியில் முத்தான முட்டை இருக்கும். சாப்பிட்டால் அத்தனை ருசி. அது என்ன? ”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்
“ பனம் நுங்கு” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“பத்து வெள்ளை வேட்டியை சுற்றிக்கொண்டு உள்ளே பதுங்கி இருப்பான். ஒவ்வொரு வேட்டியா எடுத்து விட்டு பார்த்தால், உள்ளுக்குள்ளே ஒளிஞ்சிருப்பான் ஒல்லிக்குச்சி வெள்ளையன். அவன் யார் ?”
என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: வாழைத்தண்டு .
****************
விடுகதை விளையாட்டு
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்.
“ ஆனை போல அசையும். ஆமை போல நடக்கும். மூணு உருளைக் கொண்டிருக்கும். சாலையில் இது உருளாவிட்டால் ஊருக்கு வழி கரடுமுரடாகவே இருக்கும். அது என்ன?” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “ ரோடு ரோலர் வண்டி ” என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“காகிதத்தைப் பார்த்தால் தாரைதாரையாய் கண்ணீர் சிந்தும். தலைக்கு தொப்பி போட்டால் தப்பித்து தலை மறைக்கும் அது என்ன? ”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்
“ பேனா!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“முற்றத்து முன்பு முளைத்த மரம் ஐந்து. அதை மடக்க முடியும். பிடுங்க முடியாது அது என்ன ?”
என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: கைவிரல்.
**************
விடுகதை விளையாட்டு
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்.
“ வட்டமான அறையில் அண்ணன் தம்பி இரண்டு பேர். அவர்களைச் சுற்றி பன்னிரண்டு நண்பர்கள். அண்ணன் தம்பி இரண்டு பேரும் நண்பர்களை தொட்டு தொட்டு விளையாடுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அண்ணன் தம்பி இரண்டு பேரும் இணைந்து ஒவ்வொரு நண்பர்களாக தொட்டு பிடிப்பார்கள். அது யார்? ” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “ கடிகாரம்! ” என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“நின்றால் ஒரு பெயர். ஓடினால் ஒரு பெயர். விழுந்தால் ஒரு பெயர். அது எது? அந்தப் பெயர்கள் என்ன”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்
“ அது தண்ணீர்! நின்றால் குளம். ஓடினால் நதி. விழுந்தால் அருவி!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“ ஓடும் கால் நான்கு. <உறிஞ்சும் கால் நான்கு. முட்டும் கால் இரண்டு. உடம்புக்கு விசிறிகொள்ள முடி விசிரி ஒண்ணாம்! அது என்ன?”
என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: பசு.
**********************
விடுகதை விளையாட்டு
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்,
“வீதியில் கொட்டி வைத்து வெள்ளை வெள்ளை பஞ்சுப் பொதிகள் காற்றடித்தால் நகர்ந்து விடும். அங்கும் ஓடித்திரியும். கொஞ்சம் கறுத்துவிட்டால் போச்சு! கண்ணீர் விட்டு அழுதுவிடும். அது என்ன? ” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “ அது மேகம் ” என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“வீட்டு வாசலில் போட்ட பூ ப்போல தடுக்கு இருக்கு. அதை பார்க்கத்தான் முடியுது, கையில் எடுக்க முடியல. துடப்பத்தால் கூட்டிவிட்டால் போச்சு, காணாமல் போய்விடும் அது என்ன?”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்,
“ கோலம்!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“அடி மலர்ந்து நுனி மலராத பூ. கறிசமைக்க உதவும் பூ. ஆனால், தலையில் சூடிக்கொள்ள முடியாத பூ. அது என்ன பூ?” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர்.
குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: வாழைப்பூ!
***********
விடுகதை விளையாட்டு ஜூலை13
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்.
“ ஆண்டு தொடக்கத்தில் பெருத்த தொப்பை வயிறுடன் இருப்பான். ஒவ்வொரு நாளும் இளைத்துக் கொண்டிருப்பான். ஆண்டு முடிவில் முழுவதுமாக தொப்பை குறைந்து இருப்பான் அவன் யார்? ” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “ அது தினசரி காலண்டர் ” என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“கடல் அன்னைக்கும் சூரிய தந்தைக்கும் பிறந்தவன். வெள்ளை நிறத்தில் இருப்பான். எல்லார் வீட்டிலும் இவன் இருப்பான். சமையல் அறையில் இவன் இல்லா விட்டால் செய்த உணவு பொருள் அத்தனையும் பாழ்! அது என்ன?”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்
“ அது உப்பு!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“அறிவு இருக்கும் ஆனால் சிந்தனை செய்யாது. கால் இருக்கும் ஆனால் நடக்காது. வாய் இருக்கும் ஆனால் பேசாது. அது என்ன ?”
என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: பிறந்த குழந்தை!
**********
புதிர் விளையாட்டு
இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர்.
“ தண்ணீரில் வளர்ந்தவன். தண்ணீரில் வாழ்பவன். இருந்தாலும் தன் மேல் ஒரு சொட்டு தண்ணீர் கூட ஒட்டவிடமாட்டான். அவன் யார்? ” என்று புதிர் போடுகிறார்.
உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “ அது தாமரை இலை ! ” என்கிறார்.
இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,
“ கமகமக்கும் ருசியான உணவை வாசம் கண்டு வந்தவர் ஒருவர். உணவை கண்டவர்கள் இரண்டு பேர். அதை எடுத்தவர்கள் ஐந்து பேர். சாப்பிட்டவரோ ஒரே ஒருவர். அவர்கள் யார்?”
என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர்
“ மூக்கு, கண்கள், விரல்கள், வாய்!” என்கிறார்.
இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும்.
“ பதுங்கி பதுங்கி வருவார். எதையும் சட்டென்று பாய்ந்து பிடிப்பார். வீட்டுக்குள்ளே திரிவார். ஆளைக்கண்டால் காலடியில் சுற்றுவார். இரவில் இவருக்கு பார்வை தெரியும். யார் இவர்?”
என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க!
- விடை: பூனை!
( தினமலர் -சிறுவர்மலரில் நான் எழுதி வரும் விடுகதை விளையாட்டுத் தொடர் இரண்டாம் பாகம்)
***************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக