சனி, 15 மார்ச், 2014

ஆதி மனிதனின் காலடி தடங்கள்... - தேவராஜன்


ஆதி மனிதனின் காலடி தடங்கள்... - தேவராஜன் ******************************************************************* குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது டார்வின் கோட்பாடு. டார்வின் கோட்பாட்டை கேள்வி குறி ஆக்கிவிட்டது சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சி! குரங்கு இனம் இருந்ததற்கு முன்னாதாகவே மனித இனம் இருந்திருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் ஆதி மனிதனின் காலடி தடங்களை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்! எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் மூதாதையர்களின் காலடித் தடங்களை இங்கிலாந்தின்நார்போக்கில் உள்ள ஹப்பிஸ் பர்க் கடல் பகுதியின் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் காலடி தடங்கள் வடக்கு ஐரோப்பிய பகுதியில் வாழ்ந்தபழங்குடிகளின் காலடித் தடம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதுவரை ஹப்பிஸ் பர்க் கடல் பகுதியின் கரையில் விலங்குகளின் எலும்புகளும், கல் ஆயுதங்களும்தான் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. ஆனால், இப்போதுதான் முதன்முறையாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம்கிடைத்துள்ளது. இப்போது இருக்கும் இங்கிலாந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கண்டத்துடன் நிலப்பரப்பில் இணைந்து இருந்துள்ளது. அதன் பிறகே கடல் இடையில் புகுந்து இங்கிலாந்தை, ஐரோப்பாவில் இருந்து துண்டாக்கி விட்டது. இங்கிலாந்தில் வாழ்ந்த பூர்வகுடிகள், முகத்துவாரமாக இருந்த இந்தப் பகுதி வழியாக ஐரோப்பிய கண்டத்துக்கு குடி பெயர்ந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ ஆன்டஸர் இனத்தை சேர்ந்தவர்கள். 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த இனம் அழிந்து விட் டது” என்கிறார் பிரிட்டன் அருங்காட் சியக ஆராய்சியாளர் ஆஸ்டன். இங்கு அகழாய்வில் கிடைக்கப் பெற்ற மொத்தம் 50 காலடித் தடங்கள். 2 ஆண்கள், 2 பெண்கள், 3 அல்லது 4 குழந்தைகளின் காலடித் தடங்கள். கடல் நீர் பின்வாங்கியதால், இந்தக் காலடித் தடங்கள் வெளியே தெரிய வந்துள்ளன. இவற்றை பிரிட்டன் அருங்காட்சியக ஆய்வளர்கள் முப்பரிமாண (3டி) படங்களாக ஆவணப்படுத்தி உள்ளனர். ‘ஹோமோ அன்டஸர்’ குரங்கில் இருந்து மனிதன் உருவானபோது, வாழ்ந்த இனம் இது. ஏறக்குறைய 12 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த ஆதி மனிதர்களின் உயரம் 5.5 அடி முதல் 6 அடி வரை. எடை 90 கிலோ வரை. இவர்களின் மூளைதான் சற்று சிறியதாக இருந்திருக்கிறது. நமக்கு சராசரியாக 1,350 கியூபிக் செ.மீ. ஆனால் ஹோமோ அன்டஸர் மக்களுக்கு 1000 முதல் 1150 கியூபிக் செ.மீ. வரைதான் இருந்திருக்கிறது. நம்மை போலவே வலதுகை பழக்கம் கொண்டிருந்திருக்கிறார்கள். இதுதான் மனிதக் குரங்கில் இருந்து இவர்களை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது. சைகை மொழியை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஐரோப்பாவில் 6 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ ஹெய்டல் பெர்ஜென்சிஸ் இனத்தவரும் இவர்களும் ஒன்றுதான் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். நதிக்கரையோரம் காட்டுப் பகுதிகளில் விலங்கோடு விலங்காக ஹோமோ அன்டஸர் இனம் வாழ்ந்திருக்கிறது. குதிரை, யானை, மான், காட்டெருமை, நீர்யானை, காண்டா மிருகம், எலி மற்றும் சில வித்தியாசமான விலங்குகளுடன் வாழ்ந்திருக்கிறான் ஆதி மனிதன். அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள ஆதாரங்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது. மம்மத் எனப்படும் மெகாசைஸ் யானைகள், குதிரைகளின் எலும்புகள் இங்கு கிடைத்துள்ளன. கல் ஆயுதங்கள் மற்றும் கூர்மையான மரக் குச்சிகள் மூலம் விலங்குகளை வேட்டையாடி பசியை போக்கி வாழ்ந்திருக்கிறார்கள். மரம், செடி, கொடிகளின் மிச்சங்கள், கிழங்குகள், காய், கனிகள் போன்ற தாவர உணவுப் பழக்கம் இருந்ததை காட்டுகிறது. லிவர்பூல் ஜான்மூர் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் காலடித் தடம் சென்ற வழியை பார்க்கும்போது, அவர்கள் ஐரோப்பிய கண்டத்தை நோக்கி சென்றிருக்கலாம் என்கிறார் அவர். அகழ்வு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளைப் பார்த்தால், ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி’ என்று தமிழில் சொல்லப்படும் ஒரு சொல் வழக்கு உண்மையாக இருக்குமோ? * பாக்ஸ் செய்தி *தன்ஸானியாவின் லாட்டோலி என்ற இடத்தில் கிடைத்த காலடித் தடங்கள் 35 இலட்சம் ஆண்டுகள் பழமையானவை. *கென்யாவில் கூபி போராவில் கிடைத்தவை 15 லட்சம் ஆண்டு பழமையானவை. களிமண் பூமியாக இருந்து பாறையாக மாறிய பகுதி இது. இதனால் மனித காலடித் தடங்கள் தெளிவாக உள்ளன. *மெக்ஸிகோவின் வடகிழக்கு பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த காலடிகள், 10,500 ஆண்டுகள் பழமையானவை. ஆனால் ஆபிரிக்காவுக்கு வெளியே, கண்டறியப்பட்ட காலடித் தடங்களில் இங்கிலாந்தில் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடங்கள்தான் மிகவும் பழமையானவை. ******************** ***********************

ANGAMPAKKAM -SRI AMBALAVAANESWARAR TEMPLE - DEVARAJAN SHANMUGAM (அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில்)


அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் - தேவராஜன் சண்முகம். *********************************************************************************************** அங்கம் பாக்கம் அழகிய கிராமம். அமைதியான ஊர். பாலாற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த ஊருக்கு எப்போதும் குளிர் காற்றை இலவசமாக தந்து கொண்டிருக்கிறது பாலாறு. முதன் முதலாக இந்த ஊருக்கு 2010ம் ஆண்டில் ஓர் நாள் வந்தேன். அதுவும் எனக்கு பொண்ணு பார்க்க. பொண்ணு வீட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே எனக்கு காட்சி கொடுத்தது இந்த ஈஸ்வரன் கோயில் கோபுரம் தான்! மூலவரை பார்க்காமலேயே மானசீகமாக வழிபாடு செய்து கொண்டேன்! ஏனோ பார்த்த மாத்திரத்திலேயே இந்தக்கோயில் எனக்கு பிடித்து விட்டது. கோயிலுக்கு முன்பாக உள்ள குறுக்குத் தெருவில் வசிக்கும் ஏ.எஸ். வெங்கடேச முதலியார் பெண்ணை தான் பார்க்க போகிறேன். பெண் பார்க்கும் படலம், திருமணம் என நடந்த சம்பவங்களை விவரித்தால் கட்டுரை நீண்டுவிடும் அல்லது அலுப்பு தட்டிவிடலாம்! அதலால் கோயில் பற்றி தெரிந்து கொள்ளலாமா? கோயிலின் முகப்பில் இருக்கும் நாகலிங்க மரம் பாலாற்று காற்றுக்கு ‘சிவ சிவ’ என்று தலையாட்டியபடியே இருந்தது. நாகலிங்க பூ வாசம் நம்மை பின் தொடர்ந்து அதுவும் அம்பலவாணரைத் தரிசிக்க நம் கைப்பிடித்து வருவது போல இருந்தது. மொட்டை கோபுரம். பெரிய கனமான மரக்கதவு. இதைக்கடந்தால் பலிபீடம். பக்கத்தில் பெரிய கம்பீரமான கொடி மரம். அதை அடுத்து நந்தி. நந்தி முன்பாக சிறிய கல் மண்டபம். வலபக்கம் சித்தி விநாயகர். இடது பக்கம் சித்தி முருகன் நமக்கு முதலில் அருள் பாலிக்கிறார்கள். கல் மண்டபம் கடந்தால் நேரே அம்பலவாணர் சந்நிதி. கம்பீரமான துவார பாலகர்கள். வலது பக்கம் அம்பாள் சந்நிதி.அம்பாள் திருநாமம் ஸ்ரீ சிவகாமி. மூலவர் இருக்கும் சந்நிதியில் நடராஜர், சமயகுரவர்கள் மற்றும் சில தெய்வச் சிலைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. உள் பிரகாரம். கோஷ்டா தெய்வங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி இருக்கிறார்கள். காசி விஸ்வநாதர்,வள்ளி தேவசேனா சமேத முருகன், திருமால், துர்க்கை, சண்டீகேஸ்வரர், சூரியன்,நவகிரகம் மற்றும் நால்வர் சன்னதிகள் உள்ளன. இந்த ஸ்தலம் உத்திர சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் வாலாஜாபாத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு பிரகாரத்துடன் கூடிய இந்த ஆலயத்தில் ஸ்ரீ அம்பலவாநீச்வரர் சதுர வடிவ ஆவுடையாரில் சிறிய பாணமாக காட்சி அளிக்கிறார். தல விருட்சம் வன்னி, நாகலிங்கம். தலவரலாறு ஒரு அந்தணன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் கரைக்க வேண்டி, யாத்திரை மேற்கொண்டபோது இத்தலத்தில் தங்கி வழிபட்டபின் அஸ்தி கலசத்தை பார்க்கும்போது எல்லாம் மணம் வீசும் மல்லிகை பூக்களாக மலர்ந்தன. இறைவன் அருளால் அங்கம் பூவாக மாறியதால் இத்தலம் அங்கம்பாக்கம் என்ற பெயர் பெற்றது. தல சிறப்பு இத்தலத்தில் மூதாதயார்க்கு செய்யப்படும் தர்ப்பணம், திதி காசியில் செய்வதற்கு சமானமாக கருதப்படுகிறது. சிதம்பரம் போன்று இங்குள்ள ஸ்ரீ நடராஜர் மிகவும் விசேஷம். வருடத்தில் நடராஜருக்கு 6 அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. சிவாலயத்தில் நடக்கும் எல்லா உற்சவங்களும் நடைபெறுகின்றன. ************** தொடர்புக்கு: கிருபாசேகரன்- 9976592940 சந்திராமணி தேவராஜன்- 8883727365 ***************************** ஆலயத்தை செல்லும் வழி: காஞ்சிபுரம்-&அங்கம்பாக்கம் (69ஏ) பேருந்து காலை மற்றும் மாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துச் செல்கிறது. வாலாஜாபாத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது. கட்டணம் ரூ.150 **************************

ANGAMPAKKAM -SRI ABALAVANESWARAR TEMPLE - DEVARAJAN SHANMUGAM


அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் - தேவராஜன் சண்முகம். அங்கம் பாக்கம் அழகிய கிராமம். அமைதியான ஊர். பாலாற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த ஊருக்கு எப்போதும் குளிர் காற்றை இலவசமாக தந்து கொண்டிருக்கிறது பாலாறு. முதன் முதலாக இந்த ஊருக்கு 2010ம் ஆண்டில் ஓர் நாள் வந்தேன். அதுவும் எனக்கு பொண்ணு பார்க்க. பொண்ணு வீட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே எனக்கு காட்சி கொடுத்தது இந்த ஈஸ்வரன் கோயில் கோபுரம் தான்! மூலவரை பார்க்காமலேயே மானசீகமாக வழிபாடு செய்து கொண்டேன்! ஏனோ பார்த்த மாத்திரத்திலேயே இந்தக்கோயில் எனக்கு பிடித்து விட்டது. கோயிலுக்கு முன்பாக உள்ள குறுக்குத் தெருவில் வசிக்கும் ஏ.எஸ். வெங்கடேச முதலியார் பெண்ணை தான் பார்க்க போகிறேன். பெண் பார்க்கும் படலம், திருமணம் என நடந்த சம்பவங்களை விவரித்தால் கட்டுரை நீண்டுவிடும் அல்லது அலுப்பு தட்டிவிடலாம்! அதலால் கோயில் பற்றி தெரிந்து கொள்ளலாமா? கோயிலின் முகப்பில் இருக்கும் நாகலிங்க மரம் பாலாற்று காற்றுக்கு ‘சிவ சிவ’ என்று தலையாட்டியபடியே இருந்தது. நாகலிங்க பூ வாசம் நம்மை பின் தொடர்ந்து அதுவும் அம்பலவாணரைத் தரிசிக்க நம் கைப்பிடித்து வருவது போல இருந்தது. மொட்டை கோபுரம். பெரிய கனமான மரக்கதவு. இதைக்கடந்தால் பலிபீடம். பக்கத்தில் பெரிய கம்பீரமான கொடி மரம். அதை அடுத்து நந்தி. நந்தி முன்பாக சிறிய கல் மண்டபம். வலபக்கம் சித்தி விநாயகர். இடது பக்கம் சித்தி முருகன் நமக்கு முதலில் அருள் பாலிக்கிறார்கள். கல் மண்டபம் கடந்தால் நேரே அம்பலவாணர் சந்நிதி. கம்பீரமான துவார பாலகர்கள். வலது பக்கம் அம்பாள் சந்நிதி.அம்பாள் திருநாமம் ஸ்ரீ சிவகாமி. மூலவர் இருக்கும் சந்நிதியில் நடராஜர், சமயகுரவர்கள் மற்றும் சில தெய்வச் சிலைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. உள் பிரகாரம். கோஷ்டா தெய்வங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி இருக்கிறார்கள். காசி விஸ்வநாதர்,வள்ளி தேவசேனா சமேத முருகன், திருமால், துர்க்கை, சண்டீகேஸ்வரர், சூரியன்,நவகிரகம் மற்றும் நால்வர் சன்னதிகள் உள்ளன. இந்த ஸ்தலம் உத்திர சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் வாலாஜாபாத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு பிரகாரத்துடன் கூடிய இந்த ஆலயத்தில் ஸ்ரீ அம்பலவாநீச்வரர் சதுர வடிவ ஆவுடையாரில் சிறிய பாணமாக காட்சி அளிக்கிறார். தல விருட்சம் வன்னி, நாகலிங்கம். தலவரலாறு ஒரு அந்தணன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் கரைக்க வேண்டி, யாத்திரை மேற்கொண்டபோது இத்தலத்தில் தங்கி வழிபட்டபின் அஸ்தி கலசத்தை பார்க்கும்போது எல்லாம் மணம் வீசும் மல்லிகை பூக்களாக மலர்ந்தன. இறைவன் அருளால் அங்கம் பூவாக மாறியதால் இத்தலம் அங்கம்பாக்கம் என்ற பெயர் பெற்றது. தல சிறப்பு இத்தலத்தில் மூதாதயார்க்கு செய்யப்படும் தர்ப்பணம், திதி காசியில் செய்வதற்கு சமானமாக கருதப்படுகிறது. சிதம்பரம் போன்று இங்குள்ள ஸ்ரீ நடராஜர் மிகவும் விசேஷம். வருடத்தில் நடராஜருக்கு 6 அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. சிவாலயத்தில் நடக்கும் எல்லா உற்சவங்களும் நடைபெறுகின்றன. தொடர்புக்கு: கிருபாசேகரன்- 9976592940 சந்திராமணி தேவராஜன்- 8883727365 ஆலயத்தை செல்லும் வழி: காஞ்சிபுரம்-&அங்கம்பாக்கம் (69ஏ) பேருந்து காலை மற்றும் மாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துச் செல்கிறது. வாலாஜாபாத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது. கட்டணம் ரூ.150 **************************

அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில்


அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் - தேவராஜன் சண்முகம். அங்கம் பாக்கம் அழகிய கிராமம். அமைதியான ஊர். பாலாற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த ஊருக்கு எப்போதும் குளிர் காற்றை இலவசமாக தந்து கொண்டிருக்கிறது பாலாறு. முதன் முதலாக இந்த ஊருக்கு 2010ம் ஆண்டில் ஓர் நாள் வந்தேன். அதுவும் எனக்கு பொண்ணு பார்க்க. பொண்ணு வீட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே எனக்கு காட்சி கொடுத்தது இந்த ஈஸ்வரன் கோயில் கோபுரம் தான்! மூலவரை பார்க்காமலேயே மானசீகமாக வழிபாடு செய்து கொண்டேன்! ஏனோ பார்த்த மாத்திரத்திலேயே இந்தக்கோயில் எனக்கு பிடித்து விட்டது. கோயிலுக்கு முன்பாக உள்ள குறுக்குத் தெருவில் வசிக்கும் ஏ.எஸ். வெங்கடேச முதலியார் பெண்ணை தான் பார்க்க போகிறேன். பெண் பார்க்கும் படலம், திருமணம் என நடந்த சம்பவங்களை விவரித்தால் கட்டுரை நீண்டுவிடும் அல்லது அலுப்பு தட்டிவிடலாம்! அதலால் கோயில் பற்றி தெரிந்து கொள்ளலாமா? கோயிலின் முகப்பில் இருக்கும் நாகலிங்க மரம் பாலாற்று காற்றுக்கு ‘சிவ சிவ’ என்று தலையாட்டியபடியே இருந்தது. நாகலிங்க பூ வாசம் நம்மை பின் தொடர்ந்து அதுவும் அம்பலவாணரைத் தரிசிக்க நம் கைப்பிடித்து வருவது போல இருந்தது. மொட்டை கோபுரம். பெரிய கனமான மரக்கதவு. இதைக்கடந்தால் பலிபீடம். பக்கத்தில் பெரிய கம்பீரமான கொடி மரம். அதை அடுத்து நந்தி. நந்தி முன்பாக சிறிய கல் மண்டபம். வலபக்கம் சித்தி விநாயகர். இடது பக்கம் சித்தி முருகன் நமக்கு முதலில் அருள் பாலிக்கிறார்கள். கல் மண்டபம் கடந்தால் நேரே அம்பலவாணர் சந்நிதி. கம்பீரமான துவார பாலகர்கள். வலது பக்கம் அம்பாள் சந்நிதி.அம்பாள் திருநாமம் ஸ்ரீ சிவகாமி. மூலவர் இருக்கும் சந்நிதியில் நடராஜர், சமயகுரவர்கள் மற்றும் சில தெய்வச் சிலைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. உள் பிரகாரம். கோஷ்டா தெய்வங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி இருக்கிறார்கள். காசி விஸ்வநாதர்,வள்ளி தேவசேனா சமேத முருகன், திருமால், துர்க்கை, சண்டீகேஸ்வரர், சூரியன்,நவகிரகம் மற்றும் நால்வர் சன்னதிகள் உள்ளன. இந்த ஸ்தலம் உத்திர சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் வாலாஜாபாத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு பிரகாரத்துடன் கூடிய இந்த ஆலயத்தில் ஸ்ரீ அம்பலவாநீச்வரர் சதுர வடிவ ஆவுடையாரில் சிறிய பாணமாக காட்சி அளிக்கிறார். தல விருட்சம் வன்னி, நாகலிங்கம். தலவரலாறு ஒரு அந்தணன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் கரைக்க வேண்டி, யாத்திரை மேற்கொண்டபோது இத்தலத்தில் தங்கி வழிபட்டபின் அஸ்தி கலசத்தை பார்க்கும்போது எல்லாம் மணம் வீசும் மல்லிகை பூக்களாக மலர்ந்தன. இறைவன் அருளால் அங்கம் பூவாக மாறியதால் இத்தலம் அங்கம்பாக்கம் என்ற பெயர் பெற்றது. தல சிறப்பு இத்தலத்தில் மூதாதயார்க்கு செய்யப்படும் தர்ப்பணம், திதி காசியில் செய்வதற்கு சமானமாக கருதப்படுகிறது. சிதம்பரம் போன்று இங்குள்ள ஸ்ரீ நடராஜர் மிகவும் விசேஷம். வருடத்தில் நடராஜருக்கு 6 அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. சிவாலயத்தில் நடக்கும் எல்லா உற்சவங்களும் நடைபெறுகின்றன. தொடர்புக்கு: கிருபாசேகரன்- 9976592940 சந்திராமணி தேவராஜன்- 8883727365 ஆலயத்தை செல்லும் வழி: காஞ்சிபுரம்-&அங்கம்பாக்கம் (69ஏ) பேருந்து காலை மற்றும் மாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துச் செல்கிறது. வாலாஜாபாத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது. கட்டணம் ரூ.150 **************************

வெள்ளி, 7 மார்ச், 2014

நூறு ஆண்டுகள் சூரியன் பார்க்காத நகரம்! - தேவராஜன்


நூறு ஆண்டுகள் சூரியன் பார்க்காத நகரம்! - தேவராஜன் -------------------------------------------------16------------------------------------------- ************************************************************************************ இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு எத்தனையோ கிராமங்கள் மின்சார வசதியில்லாமல் இருந்தது உண்டு. இப்போதும் சில மலைக்கிராமங்களில் குக்கிராமங்களில் மின்வசதியோ சாலை வசதியோ இருப்பதில்லை. இது ஜனநாயக சாபம்! ஒரு நகரம் முழுதும் சூரிய வெளிச்சமே படாமல் இருக்குமா? அதுவும் நூறாண்டுகளாக? கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? கடந்த நூறாண்டுகளாக சூரிய ஒளியைக்காணாத நகரத்தில் வசிக்கும் மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள்? வியப்பாக இருக்கிறதல்லவா? ஐரோப்பிய நாடான நார்வே, கனிமம் மற்றும் பெட்ரோல் வளமிக்க நாடாகும். இங்கு மழை பொழிவும் அதிகம். இந்த நார்வே நாட்டின் தென்பகுதியில் அடர்ந்த மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் நிறைய இருக்கின்றன. அப்படி ஒரு பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது மிக அழகான, பசுமையான, அமைதியான எழில் மிகும் கிராமம் ஒன்று இருக்கிறது. அந்தக் கிராமத்தின் பெயர் ரூஜூக்கான். இந்தப் பள்ளத்தாக்கு கிராமத்தில் சொல்லும்படி பெரிய வசதிகள் ஏதுமில்லைதான்! இந்தக் கிராமத்தில் உள்ள நீராதாரத்தை அடிப்படையாக கொண்டு ஓர் உரத் தொழிற்சாலையும் ரெயில் பாதையும் மட்டும் உண்டு. இந்த உரத்தொழிற்சாலையை நம்பியும் இப்பகுதியில் வளமான மண் வளம் உள்ளதால் விவசாயம் செய்து பிழைத்து கொள்ளலாம் என நம்பி 1900ம் ஆண்டு வாக்கில் கிட்டதட்ட 300 பேர் இங்கு வந்து குடியேறினார். இப்போது கிட்டதட்ட 3500 அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இந்த கிராமம் ஆண்டில் 6 மாதங்கள் (மழை மற்றும் குளிர் காலம்) சூரியனோ சூரிய ஒளியோ துளிக்கூட படமாமல் இருக்கும். காரணம் இந்த கிராமத்திதைச் சுற்றிலும் உள்ள மலை முகடுகள் தடைக்கற்களாக இருந்து, சூரிய ஒளிக்கதிர்களை நுழையவிடமால் தடுத்துவிடும். இங்குள்ள மக்களின் உடலில் சூரியனின் கதிர்கள் விழ வேண்டும் என்றால் பல மைல்களுக்கு அப்பால் மலையை கடந்து செல்ல வேண்டும். இப்படித்தான் சூரிய வெளிச்சத்தை பார்க்க இயலாமல் இந்தக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் நூறாண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தக்கிராம மக்களின் சோகத்தை,கவலை போக்க ஒருவர் வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிசில் இருந்த இங்கு வந்த அவர் பெயர் மார்ட்டின் ஆண்டர்சன். அவர் இந்த கிராமத்தை கவ்வியிருந்த இருளை போக்க ஒரு வழியை கண்டுபிடிக்க தீவிரமாக முயன்றார். அதற்கு இப்போதுள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாமா என்று யோசித்தார். இந்நகரத்திற்கு சூரிய ஒளியை கொண்டு வருவது குறித்து பலவாறாகதிட்டமிடப்பட்டு வந்தநிலையில் தற்போது சரியான ஒரு தீர்வு கண்டறியப்பட்டுள்ளது. சூரிய காந்தி பூவைப் போல் சூரியன் போகும் திசையில் எல்லாம் அதை பின்தொடர்ந்து செல்லும் தொழில்நுட்பத்துடன் கூடிய கம்ப்யூட்டர்களின் உதவியுடன் இயங்கும் ராட்சத நிலைக் கண்ணாடிகளை மலைகளின் வடக்கு பகுதி உச்சியில் அமைக்க தீர்மானித்தார் மார்ட்டின் ஆண்டர்சன். அதன் படி, அருகில் உள்ள மலையில் 450 மீட்டர் உயரத்தில் மூன்று பெரிய கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளனர். அக்கண்ணாடிகளில் படும் சூரியவெளிச்சம் எதிரொளிப்பதன் மூலம் நகரின் மத்தியப்பகுதியில் சூரிய வெளிச்சம்படுகின்றது. 8 .5 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்ட இந்த நிலைக்கண்ணாடிகள் மூலமாக இந்த கிராமத்தின் மையப் பகுதியான சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதி ஆண்டின் 365 நாட்களிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கிறது. கிட்டதட்ட நூறு ஆண்டுகள்சூரிய ஒளியே படாமல் கடந்து விட்ட நார்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடியை கொண்டு சூரிய வெளிச்சத்தைப்பெற இருக்கிறது. பாக்ஸ் செய்தி *கடந்த 1907ம் ஆண்டு நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் ருஜூகான் நகரம் உருவானது. *இந்நகரம் குறுக்கலானபள்ளதாக்கில் அமைந்துள்ளதால், இங்கு சூரிய வெளிச்சம்இயற்கையாக விழுவதற்குவாய்ப்பே இல்லை. ஆகவே, இங்குள்ளமக்கள் குளிர்காலத்தில்கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உச்சிக்கு சென்றுசூரிய வெளிச்சத்தை அனுபவித்துத் திரும்புவதை வாடிக்கையாகக்கொண்டிருந்தனர். *ரூஜூகான்போஷன் எனும் அழகிய பெரிய நீர்வீழ்ச்சி இந்த மலை நகரத்தில் இருக்கிறது. இது 104 மீட்டர் நீளமான நீர்வீழ்ச்சி. இங்கு இந்த நீர்வீழ்ச்சி மூலமாக மின்சாரம் அதிக அளவில் உருவாக்கப்படுகிறது.

சனி, 1 மார்ச், 2014

கிருஷ்ணன் உருவாக்கிய அழகிய நகரம்! - தேவராஜன்


கிருஷ்ணன் உருவாக்கிய அழகிய நகரம்! - தேவராஜன் *********************************************************************************** துவாரகை அல்லது துவாரகா இந்தியாவின் குஜராத்து மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராகும். துவாரகை இந்திய நாட்டின் ஏழு மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். யதுகுல அரசர்கள் ஆண்ட ஆனர்த்தா நாட்டின் தலைநகராக விளங்கிய துவாரகையை, ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்ததாக நம்பப்படுகின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்தார் என்று சொல்லப்படுகின்ற துவாரகை நகரம் சுமார் 12000 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்நகரம் ஆழிப் பேரலை அழிக்கப்பட்டு, ஒருசிலபகுதிகள் கடலுக்குள் மூழ்கி கிடந்திருக்கிறது. இந்திய தேசிய கடல் நீர் ஆராய்ச்சி கழகம் மிக நீண்ட காலமாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்நகரம் கடலுக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நகரின் அமைப்பு துவாரகை நகரின் நிர்மாணம் மிகவும் வியப்புக்கு உரியதாகும். இந்த நகரம் அமைக்க கடலரசனை வேண்டிக் கொண்டு நிலம் பெறப் பட்டதாய் ஐதீகம். சௌராஷ்டிர மேற்குக் கடலில் இருந்து, கடல் விலகிச் சென்ற நிலத்தைப் பெற்றுக் கொண்டு, நகரம் ஒரு அற்புதமான திட்டமிடலுடம் கட்டப் பட்டது. இங்கு ஓடும் முக்கிய புண்ணிய நதி கோமதி ஆகும். இந்த நகரம் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறையப் பெற்றிருந்தது. நீர்வளம் கொண்ட பகுதிகளில் குடி இருப்புகள், வியாபாரத் தலங்கள் இருந்தன. நகரில் அகன்ற சாலைகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கான, சாலைகள், பொது நிகழ்ச்சிகள் நடக்கும் பொது அரங்கங்கள் எல்லாம் இருந்தன. மேலும் கடற்கரையில் பெரிய துறைமுகம் ஒன்றும் அங்கே இருந்துள்ளதாய் அகழ்வாராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ராவ் தெரிவிக்கின்றார். இந்த நகரின் சுவர் கல் 3600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கின்றன. கடலில் மூழ்கிய இந்நகரம் வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கிறது.இப்படி விரிவாக்கமான பகுதி ‘பெட் துவாரகை’ என்றழைக்கப்படுகிறது.இந்த தீவுப்பகுதி கிருஷ்ணர் மற்றும் அவர் மனைவியரான சத்யபாமா மற்றும் ஜாம்பவதிக்கான பொழுதுபோக்கு தலமாகவும் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. மஹாபாரத யுத்தம் நடந்து முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் துவாரகையைக் கடல் கொண்டது. ஸ்ரீவாசுதேவ கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கிணங்கி விலகிச் சென்று நிலத்தை அளித்த கடலரசன், துர்வாசரின் சாபத்தால் மீண்டும் அந்த நிலத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டான். இதை முன் கூட்டியே அறிந்த ஸ்ரீகிருஷ்ண வாசுதேவன், யாதவர்களைக் காக்க எண்ணி ப்ரபாஸ க்ஷேத்திரத்துக்கு (சோம்நாத்) அழைத்துச் செல்ல நினைத்தான். விதியை வெல்ல முடியாத யாதவர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டு அடியோடு அழிந்து போக, ஸ்ரீகிருஷ்ணனும், வேடன் ஒருவனின் அம்பால், குதிகாலில் அடிபட்டுத் தன்னுயிரை இழந்தார். விராவல் என்னும் ஊரில் அடிபட்ட கிருஷ்ணனை, அர்ஜுனனும், பலராமனும், மெல்ல, மெல்ல சோம்நாத்துக்குக் கொண்டு வந்ததாகவும், அங்கே பலராமன் தன் சுய உருவை அடைந்து ஆதிசேஷனாய் பாதாளம் வழியே வைகுந்தம் சென்றதாகவும், ஸ்ரீகிருஷ்ணர் அங்கேயே அப்படியே ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்ந்து தன் இன்னுயிரைத் தானே போக்கிக் கொண்டதாகவும், அர்ஜுனன் கலங்கிப் போய்த் திரும்பியதாகவும் சொல்கின்றனர். துவாரகை அழிந்த காட்சி துவாரகை எப்படி அழிந்தது என்பதை மஹாபாரதம் அர்ஜுனன் மூலம் வர்ணிக்கிறது. அந்தக்காட்சி: ‘அன்று வரையிலும் ஸ்ரீவாசுதேவ கிருஷ்ணனுக்குப் பணிந்து அடங்கி, ஒடுங்கி இருந்த கடலரசன், தன் அலைக்கரங்களால், அந்தப் பூமியைத் தொட்டுத் தொட்டுச் சென்று கொண்டிருந்தான். ஊறு ஏதும் விளைவிக்காமல் இருந்த கடலரசன், திடீரென வேகம் கொண்டு, பெரும் ஆவேசத்துடனேயே, துவாரகை நகருக்குள்ளே புகுந்தான். அவன் வேகம் தாங்க மாட்டாமல் அந்த அழகிய நகரின் மூலை, முடுக்குகள் எல்லாம் கடல் நீரால் நிறைந்தது. அர்ஜுனன் பார்த்துக் கொண்டு இருந்த போதே, மாட, மாளிகைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. ஸ்ரீகிருஷ்ணரின் அழகிய மாளிகை நீருக்குள் மூழ்கிப் போய், விரைவில் கண்மூடித் திறக்கும் முன்னர் துவாரகை என்பது ஓர் அழகிய முன் ஜன்மத்துக் கனவாகிப் போனது.’- என்று விவரிக்கிறது இக்காட்சியை. ************** பாக்ஸ் செய்தி இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ் தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒருபுத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். * ஹைதராபாத்தில் உள்ள பிர்லா ம்யூசியத்தில் கடல் அகழ்வாராய்ச்சியினர் மேற்கொண்ட தேடுதலில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஒரு மாதிரி துவாரகை நகரை உருவாக்கி அங்கே காட்சிப் பொருளாக வைத்திருக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணரின் காலத்தில் துவாரகை நகர் இப்படித் தான் இருந்திருக்கும் என அதன் மூலம் அனுமானிக்கின்றனர். ********************

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

காவல் காக்கும் கற்பனை பூதங்கள்! --தேவராஜன்.


காவல் காக்கும் கற்பனை பூதங்கள்! --தேவராஜன். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இப்போது இருக்கும் கிராப்பிக்ஸ் தொழில் நுட்பம் அப்போதும் இருந்திருக்கிறது போலும்! பண்டைய காலத்தில் கற்பனையான உருவங்களை கிராப்பிக்ஸ் தொழில் நுட்பத்தில் உருவாக்கி இருக்கின்றனர். எதற்காக? ஏன்? என்பது புரியாத மர்மமே! அன்னப்பறவை. இதுபற்றிய புராணக்கதை உண்டு. இப்படி ஒரு பறவை இருந்ததா, இல்லையா தெரியவில்லை. நம் ஊர் கோயில்களில் இருக்கும் துõண்களில், கோபுரங்களில், தேர்களில் பயமுறுத்தும் ஓர்உருவம் இருப்பதுண்டு. அதற்குப் பெயர் யாளி! இது ஒரு கற்பனை மிருகம்தான்! இதுதொடர்பான குறிப்புகள் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி இந்த உலகில் ஏதேதோ கற்பனை பறவைகள், விலங்குகள் இருக்கின்றன. இவற்றை படைத்ததன் நோக்கம் என்னவென்று இது புரியவில்லை! மர்மமாகவே இருக்கிறது. எகிப்து நாட்டில் ஒரு கற்பனை விலங்கு ஒன்று இருக்கிறது. அது பற்றிய எகிப்து புராணங்களில் பல கதைகள் சொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த கற்பனை விலங்கின் பெயர் சிபிங்ஸ். இந்த விலங்கின் உருவம் என்பது, சிங்கத்தின் உடலும், செம்மறி ஆடு, வல்லூறு, மனிதன் ஆகியவற்றுள் ஒன்றின் தலையுடனும் கூடிய ஒரு உருவத்தைக் குறிக்கும். இது பண்டைய எகிப்தியர்களின் பழைய அரசுக்காலத்து உருவாக்கம். இது கிரேக்கத் தொன்மங்களிலும் இடம் பெற்றுள்ளது. எகிப்திய சிற்ப மரபில் இவை காவலுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. சிபிங்ஸ்கள் மூன்று விதமான வடிவங்களில் காணப்படுகின்றன. அண்ட்ரோ சிபிங்கஸ் இவை சிங்க உடலும் மனிதத் தலையும் கொண்டவை. கிரியோ சிபிங்ஸ் சிங்க உடலும் செம்மறியாட்டுத் தலையும் கொண்டு அமைந்தவை. ஹையெரொகோ சிபிங்ஸ் சிங்க உடலும் வல்லூறு அல்லது பருந்தின் தலையும் கொண்டவை. எகிப்தில் உள்ளவற்றில் பெரியவையும், புகழ் பெற்றவையுமான சிபிங்ஸ்கள் கீசாவில், நைல் நதியின் மேற்குக் கரையில், வடக்கு நோக்கியபடி, அமைந்து இருக்கின்றன. இதன் பாதங்களுக்கு இடையில் சிறிய கோயிலொன்றும் உள்ளது. கீசாவின் பெரிய சிபிங்சின் தலை எகிப்திய பாரோவான கப்ரா என்பவருடையது அல்லது அவருடைய தம்பியான ஜெடெப்ரா என்பவருடையது எனக் கருதப்படுகின்றது. எகிப்தில் இருக்கும் பெரிய பெரிய பிரமிடுகள் முன்பாக இவ்வகையான சிபிங்கள் இருக்கின்றன. காலை மடித்துப் படுத்தபடி, தலையை நிமிர்த்தி நேர்ப் பார்வை பார்க்கும் சிங்கத்தின் உடலும் மனிதத் தலையும் கொண்ட சிபிங்ஸ் வடிவச் சிலை எகிப்தின் பிரமிடுகளுக்கு அருகில் காணப்படுகிறது. எகிப்தின் புராதனச் சின்னமான பிரமிடுகளைப் போல் அவற்றின் அருகாமையில் சிபிங்ஸ் சிலைகளும் இடம்பெறுகின்றன என்பது ஏதோ ஒரு முக்கியத்துவத்தை அவை சொல்லாமல் சொல்லுகின்றன. பொதுவாக பிரமிடுகள் என்பவை நம் ஊர் சமாதி போலதான். எகிப்தில் பிரமிடுகளுக்குள் அரச பரம்பரையினர், உயர்குடிப் பிறந்தோர் ஆகியோரின் உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரமிடுகளைத் காக்கும் காவல் தெய்வங்களாக சிங்க உடலும் மனிதத் தலையும் கொண்ட சிபிங்ஸ் சிலைகள் கருதப்படுகின்றன. அதாவது எல்லைச்சாமி மாதிரி. உண்மையில் அதற்காகத்தானா என்பது இதுவரை உறுதிபடுத்தவில்லை. இந்தச் சிபிங் சிலைகள் பற்றிய மர்மம் இன்னும் முற்றாகத் துலங்கவில்லை. கிறிஸ்துவின் பிறப்பிற்கு முந்திய 2,500-3,000 ஆண்டுகளுக்கு இடையே சிபிங்ஸ் சிலைகள் எழுப்பப்பட்டிருக்கலாம் என்பது தொல்பொருள் ஆய்வுகளின் முடிவு. அதாவது இன்றைக்கு 5000 வருடங்களுக்கு முந்தியவையாக அவை இருக்கலாம். மனிதத் தலையின் நுண்ணறிவும் சிங்கத்தின் உடற் பலமும் ஒரு சேர்ந்த இலட்சிய வடிவம் என்று சிபிங்ஸ் பற்றிக் கூறப்படுகிறது. சிபிங்ஸ் போன்ற சிலைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு உருவ அமைப்பில் பல காணப்படுகின்றன. அவைகளின்வடிவங்கள்,ö பயர்கள் வித்தியாசப் பட்டாலும் அவைகளின் உருவாக்க எண்ணம் அல்லது அவை பற்றிய தொன்ம கதைகள் பொதுமையாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பாக்ஸ் செய்தி ராம அவதாரத்தில் ஒன்று நரசிம்ம அவதாரம். இந்த அவதாரம் இரணியனை வதம் செய்வதற்காக மனிதனும் சிங்கமும் கலந்த உடலமைப்பைக் கொண்டதாக இடம்பெறுகிறது. இந்த அவதாரம் சிபிங்ஸ் சிலைக்குப் பிந்தியதாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர் * மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட உயிரினங்கள் பற்றிய தகவல்கள், தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் மரபு, தொன்மங்கள், சிற்பங்கள் முதலியவற்றில் காணப்படுகின்றன. இவை பலவிதமாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் புருஷமிருகம், நரசிம்ஹ என்றும், மனுசிஹ அல்லது மனுதிஹ என மியன்மாரிலும், நோரா நைர் அல்லது தெப்நோரசிங் எனத் தாய்லாந்திலும் சிபிங்சைக் குறிக்கப் பெயர்கள் வழங்குகின்றன. ********