சனி, 19 ஜனவரி, 2013
குட்டீஸ் கேள்விபதில் 7
குட்டீஸ் கேள்விபதில் 7
மார்ச்16
பிக் பேங் தியரி என்பது என்ன? விளக்கம் சொல்லுங்க அங்கிள்!
- ஜி. ஸ்ரீநிதி, ஸ்ரீரங்கம்
பெரு வெடிப்புக் கோட்பாடு என்பது இதன் பொருள். உலகம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடு.
இதுவரை முன்வைக்கப்பட்ட உலகின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இதுதான்.
இந்தக் கோட்பாடு 20ம் நுõற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உருவானது.
ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச்சார்புக் கோட்பாடு, மற்றது அண்டவியற் கொள்கை.
பொதுச்சார்புக் கோட்பாடு, உலக வெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும், காலமும் திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது.
உலக வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது அண்டவியற் கொள்கை.
பெரு வெடிப்புக் கொள்கையின்படி உலக வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவிலான தீப்பிழம்பாக இருந்திருக்கிறது.
இன்று அறியப்படுகின்ற உலகத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கி இருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது.
இத்தீப்பிழம்பானது, இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே பெரு வெடிப்பு எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக் கூட்டங்களாக உருவாகி இருக்கக்கூடும் என அவர்கள் கூறுகிறார்கள்.
* பனை வெல்லம் எப்படி தயாரிக்கப்படுகிறது?
- கணேசன், காரைக்கால்.
கரும்பு அல்லது பனையிலிருந்து வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கரும்புச் சாறோ பனம்பாலோ ஒரு பெரிய அகண்ட வாணலியில், திறந்தவண்ணம், 200 டிகிரி சென்டிகிரேட் சூட்டில் வெகு நேரம் கொதிக்க வைக்கப்படுகிறது. இதனால் கரும்புச்சாறில் அல்லது பனம்பாலில் உள்ள நீர் ஆவியாகி பாகு போன்ற பதம் பெறப்படுகிறது. கொதி நிலையில் உள்ள பாகை அச்சில் ஊற்றி, உலர வைத்த பின், வெவ்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கைகளால் பிடித்து உருட்டப்பட்ட வெல்லம், மண்டை வெல்லம் எனவும் அச்சுக்களில் ஊற்றி வடிவமைக்கப்பட்ட வெல்லம், அச்சு வெல்லம் எனவும் அழைக்கப்படுகிறது.
* அங்கிள்,கோபப்படும்போது சிலருக்கு கண்கள் சிவப்பது ஏன்?
- எஸ். செந்தில்குமார், தண்டராம்பட்டு.
செந்தில், உங்கள் கேள்விக்கான பதில் இதோ!
நம் உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் அவசர காலத்தில் அதாவது சண்டையிடுதல்,கோபப்படுதல், பயப்படுதல், ஓடுதல், அதிக எடையுள்ள பொருட்களை மூச்சைப் பிடித்து துõக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது, அதிக அளவில் ரத்தத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றது. இதன் விளைவாக நம் உடல் துரிதமாக செயல்படும். அப்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். ரத்தக்குழாய்கள் சுருங்கி, அழுத்தம் அதிகரிக்கும். இந்த சமயத்தில் காதுமடல், கண், மூக்கு நுனி, முகப்பரு அனைத்தும் சிவப்பேறி காணப்படும்.
*************************************************************************************************
குட்டீஸ் கேள்வி பதில்கள் 6
குட்டீஸ் கேள்விபதில் 6
மார்ச்2
இந்தியாவின் முதல் தியேட்டர், முதல் திரைப்படம் எது?
- டி.சி.சிவசண்முகம், அங்கம்பாக்கம்.
இந்தியாவில் தயாரான முதல் படம் ‘அரிச்சந்திரா’ 1913ல் வெளிவந்தது. மேல் நாட்டில் தயாரான ஊமைப்படங்கள், இந்தியாவிலும் திரையிடப்பட்டன. இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் திரைப்படத்தின் பெயர் ‘ஏசுவின் வாழ்க்கை.’ இந்த ஊமைப்படம், 1896ம் ஆண்டு மும்பையில் திரையிடப்பட்டது.
இந்தப் படத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் டுபான்ட் என்ற பிரெஞ்சுக்காரர். அவர், இந்தியாவில் ஒவ்வொரு நகரமாக அந்த பிலிம் பிரதியைக் கொண்டு வந்து திரையிட்டார்.
டுபான்ட், திருச்சிக்கு வந்து அப்படத்தை திரையிட்டார். அங்கு அப்படத்துக்கு ஏக வரவேற்பு.
டுபான்டிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கொடுத்து ‘ஏசுவின் வாழ்க்கை’ திரைப்பட பிரதியையும், படம் காட்டும் கருவியையும் வின்சென்ட் என்பவர் வாங்கிக்கொண்டார்.
வசூல் குவிந்தது. வடநாட்டுக்கும் சென்று, இப்படத்தை திரையிட்டார். இதற்கிடையே, மேல் நாட்டில் இருந்து மேலும் பல சார்லி சாப்ளின் படங்களும் வரலாயின. இதனால் படங்களைத் திரையிட வின்சென்ட், அவருடைய சொந்த ஊரான கோவையில் 1914ம் ஆண்டு நிரந்தர சினிமா கொட்டகையை கட்டினார். அந்த தியேட்டரின் பெயர் ‘வெரைட்டி ஹால்.’
தென் இந்தியாவின் முதல் நிரந்தர சினிமா கொட்டகை இதுதான். இப்போது ‘டிலைட்’ என்ற பெயரில் உள்ளது. இதன்பின் சென்னையிலும், மற்ற இடங்களிலும் தியேட்டர்கள் தோன்றின. சென்னையில் கட்டப்பட்ட முதல் தியேட்டர் ‘கெயிட்டி’.
*இரும்பு சத்தின் அவசியம் என்ன, அதிகம் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்தா?
- வை. காமாட்சி, திருவிடைமருதுõர்.
இரும்பு சத்து குறைவால் வரும் நோய்கள் தான், உலகில் உண்ணும் பழக்கத்தால் வரும் நோய்களில் முதன்மையானவை என்று உலக சுகாதார மைய தகவல்கள் கூறுகின்றன. உலகின் 80% மக்கள் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் என்றும், அதில் 30% மக்கள் இரும்பு சத்து குறைவால் வரும் ரத்தசோகை கொண்டவர்கள் என்றும் கூறுகிறார்கள்.
பெரும்பான்மையான புரதங்கள், நொதியங்கள் போன்றவற்றிற்கு இரும்புசத்து ஒரு இன்றியமையாத மூலப்பொருள். ஆக்சிஜனை ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு உடலில் எடுத்து செல்லும் ஹீமோகுளோபின், மயோகுளோபின் என்பவற்றின் உள்ளடக்கமாக இரும்பு சத்து உள்ளது. உடலில் மூன்றில் இரண்டு பகுதி இரும்பு சத்து ஹீமோகுளோபின் ஆக ரத்தச் சிவப்பணுக்களில் இருக்கிறது. இவை ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்து செல்லும். அதேபோல தசைகளில் உள்ள மயோகுளோபின் என்பது ஆக்சிஜனை தசைகளுக்கு மாற்றும்.
உயிரணுக்களின் பெருக்கம், வளர்ச்சி போன்றவற்றிற்கு இரும்பு சத்து முக்கியமான மூலப்பொருள். இரும்புச்சத்து குறைவால் போதிய ஆக்சிஜன் இல்லாமல் தளர்ச்சி, வேலை செய்ய திறமை இல்லாமை, நோய் எதிர்ப்பாற்றல் முறையில் குறைபாடு ஏற்படும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு இரும்பு சத்து அவசியம்? மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட மூன்று வகையான அளவு உண்டு. ஒன்று போதுமான அளவு. இரண்டாவது அதிகமான அளவு. மூன்றாவது இதற்கு மேலே இருந்தால் நச்சுப்பொருளாக மாறிவிடக்கூடிய அபாயத்தைக் குறிக்கும் அளவு என்று உள்ளது.
* சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள்?
- ஆர். ஸ்ரீநிஜா, ஸ்ரீரங்கம்
சாம்பிராணியானது பாஸ்வெல்லியா செர்ராட் எனப்படும் தாவர குடும்பத்தை சேர்ந்த பிரங்கின்சென்ஸ் எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும். இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணியாக மாறுகிறது. இவை எரிந்தால் மிகுந்த மணத்தை பரப்பும்.
பிரங்கின்சென்ஸ் மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிசா மற்றும் தமிழகத்தில் கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் அதிகம் காணப்படுகிறது.
சாம்பிராணியிலிருந்து ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. அந்த எண்ணையிலிருந்து வார்னிஷ் மற்றும் சோப்பு உருவாக்கப்படுகிறது.
******************************************************************************************************குட்டீஸ் கேள்வி பதில்கள் 5
பிப்.24/
*பாம்பு போல் தோலுரிக்கும் விலங்கு உண்டா? ஏன் தோலுரிக்க வேண்டும்?
-ஜெயகவிதா, மயிலாடுதுறை.
பாச்சை, வெட்டுக்கிளி, தேள் போன்ற சில பூச்சிகள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் கெட்டி அடைந்த தோலின் புறச் செல்களிலிருந்து நாம் சட்டையைக் கழற்றி விடுவது போல வெளியே எடுத்துவிடுகின்றன. நீங்கள் குறிப்பிட்டது போல பாம்பும் அவ்வப் போது தன் சட்டையைக் கழற்றிப் போடும்.
பாம்பு சட்டை உரிப்பது அதனுடைய வளர்ச்சிக்காக அல்ல. மேல் தோலினைக் கடித்து அதில் உள்ள சத்தினை உறிஞ்சும் பூச்சிகளிடமிருந்தும், வேறு பல கிருமிகளிடமிருந்தும் விடுதலை பெறவும், கீறல்கள், காயங்கள் மிகுந்த மற்றும் இறந்து போன வெளி செல்களை விட்டெறியவும் பாம்பு தன் தோலை உரிக்கின்றன.
பாம்பு சட்டை உரிக்கும் நேரம் வந்தால், வெளிப்புறச் செல்களுக்கு உள்ளாக அருகில் இருக்கும் செல்கள் திரவமாக மாறி வழுக்கலை அளிக்கிறது. சட்டையின் வால் பக்கத்தை சொரசொரப்பான குச்சிகளில் ஒட்டச் செய்து அதிலிருந்து தன் உடலை மெல்ல வெளியே இழுத்துக் கொள்கிறது.
மணிபர்ஸ், பெல்ட் இவை செய்வதற்காக சிலர் பாம்பின் தோலை உரிப்பதும் உண்டு.
*தீயிலோ, கொதிக்கும் நீரிலோ கைப்பட்டால் படக் என்று எடுத்து விடுகிறோமே, அது எப்படி?
- பழ. வீரபாண்டியன், பேரளம்.
உடலில் பெருமூளையின் முடிவு இல்லாமலேயே நிகழும் செயல்களை அனிச்சைச் செயல்கள் என்பார்கள். உணர்ச்சி நரம்புகளுக்கும், தண்டுவடத்துக்கும் இணைப்பு ஏற்படுவதால் இத்தகைய அனிச்சைச் செயல்கள் நிகழ்கின்றன.
உடலின் அனிச்சைச் செயல்கள் பல, உடலுடன் கூடப் பிறந்தவையாகும். அதாவது அவை இயல்பாக, பயிற்சி இல்லாமல் நிகழ்கின்றன. மேலும் பயிற்சியின் மூலம் அனிச்சைச் செயல்களை உடல் கற்றுக்கொள்ளும்.
துõங்கும் போது கொசு கடிக்கிறது. உடனே கை கொசுவை அடிக்கிறது. இந்த செயல் துõக்கத்திலேயே நடைபெறுகிறது. இதுவும் அனிச்சைச் செயல் தான்.
இந்த அனிச்சைச் செயல் செயல்படும் விதம் எப்படி எனில்,
கொதிநீரில் விரலை வைத்த செய்தி பெருமூளைக்குச் சென்று, அது நரம்புகள் மூலம் கைத்தசைகளை ஏவிவிட்ட பிறகு கையை எடுப்பது மூளையின் கட்டளைப்படி நடப்பதாகும். ஆனால், நீரின் சூடு விரல்களில் பட்டதுமே நரம்புகள் அச்செய்தியைத் தண்டுவடத்துக்கு அனுப்புகின்றன. தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மூலம் கைத்தசைகளுக்குக் கட்டளை போகிறது. உடனே கைத்தசைகள் சுருங்கிக் கரத்தை நீரில் இருந்து எடுத்துவிடுகின்றன.
*நம் நாட்டின் தேசிய கீதம், தேசிய பாடல் இவற்றுக்கு உள்ள வித்தியாசம் என்ன?
- எஸ். தங்மிஸ்தான், திருவேட்டக்குடி.
தேசிய கீதத்தை எழுதியவர் ரவீந்திர நாத் தாகூர்.
தேசியப் பாடலை எழுதியவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. தேசிய கீதம் 19ம் நுõற்றாண்டில் எழுதப்பட்டது. தேசிய பாடல் 18ம் நுõற்றாண்டில் எழுதப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ‘ஜன கண மன’ பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது.
1911 டிசம்பர் 27ல் கோல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது.
1912ல் தாகூரின் ‘தத்துவ போதினி’ பத்திரிகையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது. இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.
தேசிய கீதத்தை விட ‘வந்தே மாதரம்’ எனத் தொடங்கும் தேசியப்பாடல் பழமையானது. 1882 ல் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்த மடம்’ நுõல் வெளியானது. எனவே அதற்கு முன்பே இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.
1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இது முதன்முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் ரவீந்திர நாத் தாகூர்.
*************************************************************************************************
குட்டீஸ் கேள்வி பதில்கள் 5

குட்டீஸ் கேள்வி பதில்கள் 4
குட்டீஸ் கேள்வி பதில்கள் 4
அடிக்கடி தாகம் எடுப்பது எதனால்? /6.1.12/
- ஆர். பாலா, பள்ளூர்.
உடலில் திரவப்பொருட்கள் குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும் போதோ தாக உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மூளை வேகமாக செயல்பட்டு தாக
உணர்வை ஏற்படுத்துகிறது.
உடலில் தொடர்ந்து நீரிழப்பு இருக்குமானால் அது பலவகையான சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் நரம்பியல் கோளாறுகளின் விளைவாக மூளையின் செயல்திறன் குறையும்; சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். அளவுக்கதிகமான தாக உணர்வை பாலிடிஸ்பிசியா என்றும் அதிகப்படியாக சிறுநீர் போதலை பாலியூரியா என்றும் கூறுகின்றனர்.
தாக உணர்வு மைய நரம்பு மண்டலத்தினால் உணரப்படுகிறது. எக்ஸ்ட்ரா செல்லுõலர் தர்ஸ்ட் என்பது உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். இன்ட்ரா செல்லுõலர் தர்ஸ்ட் என்பது உடலில் உப்பின் அடர்த்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும்.
இரண்டுவகையான தாக உணர்வுகளுமே மூளையின் மைய நரம்புமண்டலத்தால்தான் உணரப்படுகின்றன.
மீன் தண்ணீரில் அசைவற்று நிற்பது எப்படி?
- டி. சிவகாம சுந்தரி, ஈரோடு.
அசைவற்று நிற்கக்கூடிய திறமை மீனுக்கு உண்டு.
மீன்கள் இப்படி தண்ணீரில் நிலையாக நிற்பதற்கு, அவற்றின் உடலுக்குள்ளே உள்ள பிரத்யேகமான வாயு பை உதவி செய்கிறது. ஒரு பலுõனின் வடிவில் உள்ள இந்த வாயு பை, மீனின் வயிற்றுக்கும்,
குடலுக்கும் மேலே அமைந்திருக்கிறது. மீனின் மொத்த உடற்பரப்பில் 5-லிருந்து 6 சதவீதம் வரை இந்தப் பை இருக்கும். ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆகிய வாயுக்களின் கலவை
இந்தப் பையில் நிறைந்திருக்கும். பைக்குள் உள்ள வாயுவின் பரப்பை அதிகரிப்பதாலும், குறைப்பதாலும் தன் உடல் எடையை முறைப்படுத்துகிறது. அதனால், தண்ணீருக்குள் அசைவற்று ஆழ்ந்திருக்கிறது. வாயுப்பை முழுமையாக நிறைந்திருக்கும்போது, மீன் தண்ணீரின் மேல் தளத்தில் மிதந்துகொண்டிருக்கும். ஓரளவு வாயுவை வெளியே விடும்போது கீழே வந்து தண்ணீருக்குள் தங்கி நிற்க மீனால் முடியும். தண்ணீரின் ஆழத்திற்கு ஏற்ற வகையில் வாயு பையின் பருமனையும், அதில் அடங்கியுள்ள வாயுவின் அளவையும் முறைப்படுத்துவதற்கான தன்மைகள் மீனின் உடலில் உண்டு.
மோட்டார் வைக்காமலேயே மரத்தின் அவ்வளவு உயரத்திற்குத் தண்ணீர் ஏறுகிறதே, அது எப்படி?
- எஸ். தையல்நாயகி, வடக்காலத்துõர்.
மரங்கள் மற்றும் தாவரங்களில் உள்ள வேர் முடிச்சுகளில் சர்க்கரைக் கரைசலும், உப்புப் பொருட்களும் இருக்கும். இதனால், வேர்களின் உள்ளே அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக, வெளியே இருக்கும் தண்ணீர் வேருக்குள் செல்கிறது. இதற்கு சவ்வூடு பரவல் என்று பெயர். இப்படி வேர் முடிச்சுகளில் தண்ணீர் சேர்ந்துகொண்டே இருக்கும்.
இதனால் அதிகரிக்கும் தண்ணீரின் அழுத்தம் காரணமாக, தண்ணீர் மேல் நோக்கி உயரும். அடி மரம் வழியாக, கிளை வழியாக இலைகளுக்கு, ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல் வழியாகத் தண்ணீர்
எடுத்துச் செல்லப்படுகிறது. அத்துடன் ஊட்டச் சத்துக்களும் சென்று சேர்கின்றன.
மரங்கள், வளரும் காலத்தில் இலைகள் மூலமாக ‘டன்’ கணக்கான தண்ணீரை வளி மண்டலத்தில் வெளியேற்றுகின்றன. ஆவியாதல் எனும் செயல்பாடு மூலமாக இப்படிப் பல மடங்கு தண்ணீர் வெளியேறுகிறது.
இதன் காரணமாக, இலைகளில் ஏற்படும் தற்காலிக வெற்றிடத்தை அடியிலிருந்து வேர் வழியாக வரும் தண்ணீர் நிரப்புகிறது. தண்ணீர் மூலக்கூறுகள் எப்போதும் நெருக்கமாகப் பிணைந்து கிடக்கும்.
ஆவியாதலால் தண்ணீர் மூலக்கூறு வெளியேறும் நிலையில், கீழ்ப்படியிலிருந்து மேல் படிக்கு இழுக்கப்படுவது போல்,புதிய தண்ணீர் மூலக்கூறுகள் சங்கிலித் தொடர்போல மேலே வந்து சேர்கின்றன. இப்படித்தான் மரத்தினுள் தண்ணீர் கீழிருந்து மேலே வருகிறது.
இப்படிப் பல அடி துõரம் மேலே ஏறிய தண்ணீர்தான் இளநீராகவும் பதநீராகவும் நம்மை வந்தடைகின்றன.
********************************************************************************************
குட்டீஸ் கேள்விபதில்கள் 3
குட்டீஸ் கேள்விபதில்கள் 3
மனித இனத்தைச் சேர்ந்ததா மனித குரங்கு?
- பிரபு, கள்ளக்குறிச்சி
மனிதக் குரங்கு என்பது ஹொமினோய்டியே இனம் சேர்ந்த ஒரு உயர் விலங்கினம். பொதுவாக இது மனித இனத்தைச் சேர்ந்தது என்று கருதுவதில்லை. எனினும், அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையில் மனிதரும் இவ்வகையுள் அடங்குபவர். மனித குரங்கு இனத்தில் இரண்டு ஹொமினோய்டு உள்ளன
ஹைலோபட்டிடே குடும்பம்: லார் கிப்பன் , சியாமாங் என்னும் குரங்கினம் குறிப்பிடத்தக்கவை. இந்த குரங்கினத்தை ‘குறைந்த மனிதக் குரங்குகள்‘ என அழைப்பர்.
ஹொமினிடே குடும்பம்: இது ஒராங்குட்டான்கள், கொரில்லாக்கள் சிம்ப்பன்சிகள் என்பவற்றுடன் மனிதர்களையும் உள்ளடக்கும். இவை பெரு மனிதக் குரங்குகள் . பார்பேரி மனிதக் குரங்குகள் போன்ற சில உயர் விலங்குகளில் வாலில்லாத் தன்மையை வைத்து மனிதக் குரங்குகள் எனப்பட்டாலும், இவை உண்மையான மனிதக் குரங்குகள் அல்ல.
மனிதரையும், கொரில்லாக்களையும் தவிர்த்துப் பிற உண்மையான மனிதக் குரங்கு இனத்து விலங்குகள் அனைத்தும் சுறுசுறுப்பாக மரம் ஏறும்.
இவை விதைகள், இலைகள், பழங்கள் பல சந்தர்ப்பங்களில் முதுகெலும்பிலிகளின் ஓரளவு இறைச்சி, எளிதில் செரிமானம் அடையக்கூடிய எல்லாவற்றையும் உண்ணும். ஆபிரிக்காவும் ஆசியாவும் இவற்றின் தாயகம் .
*
ஜி.யு. போப், வீரமாமுனிவர் போன்றவர்கள் தமிழ் இலக்கியம் எழுதியுள்ளார்கள். நம் இந்தியர்கள் ஆங்கில இலக்கியம் எழுதியிருக்கிறார்களா?
- விமலா, திருச்சேரை.
பலர் எழுதி இருங்காங்க விமலா.
ஆர்.கே.நாராயணன், புக்கர் பரிசு வென்ற அரவிந்த் அடிகா, விக்ரம் சேத். சஷி தரூர், அருந்ததி ராய், குஷ்வந்த் சிங், அனிதா தேசாய், இந்திய வம்சாவளியினரான சல்மான் ருஷ்டி, வி.எஸ்.நேய்பால், போன்றவர்கள் இந்தியர்கள் தான்! இன்னும் சிலர் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
******************

குட்டீஸ் கேள்விபதில்கள் -2
குட்டீஸ் கேள்விபதில்கள் -2
*புரை ஏறுதல் எப்படி ஏற்படுகிறது?
- பா.கிருத்திகா, அரையபுரம்.
உணவுக்குழலும் மூச்சுக்குழலும் வாய்க்குக் கீழ்புறம் அடுத்தடுத்து உள்ளன. உணவை விழுங்கும்போது, மூச்சுக் குழல் தானாக மூடிக்கொள்ளும். உணவு மூச்சுக் குழலில் போய்விடாமல் இருக்கவே இயற்கையாக அமைந்துள்ள ஏற்பாடு இது. சில சமயம் தப்பித் தவறி உணவுத் துணுக்கு அல்லது நீர்த்துளி மூச்சுக்குழலில் சென்று விடுகிறது. அப்போது மூச்சுக்குழலின் தசைகள் அதை வெளியேற்றத் தீவிரமாக இயங்குகின்றன. இதைத்தான் புரை ஏறுதல் என்கிறோம். புரை ஏறினால் யாரோ நினைத்துக் கொள்கிறார்கள் என்று தலையில் தட்டுவார்கள். யாரோ நினைத்துக் கொள்வதற்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை.
* போலீஸ் துறையின் முன்னோடி
ரோமாபுரியை ஆட்சி செய்த அகஸ்டஸ் சீசர் தான் போலீஸ் துறையின் முன்னோடி என்று கூறலாம். இவர் தனது நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தனியாக ஒரு படையை முதன் முதலாக ஏற்படுத்தினார்.
இந்த முறை ஏழாம் நுõற்றாண்டிற்கு பிறகு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் பரவியது. இந்தியாவில் 1792 ம் ஆண்டு டிசம்பர் 7 ம் தேதி கிழக்கிந்திய கம்பெனியரால் காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முக்கியமான ஊர்களில் காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
அந்த காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு உதவி இன்ஸ்பெக்டரும் 10 போலீசரும் ஒரு எழுத்தரும் இருந்தனர். இவர்கள் அனைவரும் இணைந்த குழுவிற்கு காவல்குழு என்று பெயர் வைத்தனர். 1867 ல் முதலாவது காவல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி காவலர்களின் சீருடை, சம்பளம், மற்றும் பணி தொடர்பான விதி முறைகள் வகுக்கப்பட்டன.
*யானையை ஜம்போ என்று சொல்லக்காரணம் என்ன? / டிச.23/
- எஸ். தையல்நாயகி, ராமந்தீஸ்வரம்.
மிகப் பெரியனவற்றை ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றபோது ஜம்போ என்பர்.
மிகப்பிரபலமான ஒரு யானையின் பெயர்‘ஜம்போ’ சூடானிலிருந்து இந்த ஜம்போ யானை பாரிஸ் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் 1865ம் ஆண்டு லண்டன் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஆப்பிரிக்க யானை. இந்த யானையின் எடை 6.5 டன்.
லண்டன் மிருகக்காட்சி சாலையில் இருந்தபோது இந்த யானை எல்லாரையும் கவர்ந்தது. குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இதற்கு அமோக வரவேற்பு இருந்தது.இந்த யானை மிகவும் அழகாகவும், எல்லோராலும் விரும்பப்பட்டதாகவும் இருந்ததாம்.
இந்த யானை, 1882ம் ஆண்டு சர்க்கஸ் நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டது. இயல்பிலேயே குறும்புக்கார குணம் கொண்ட ஜம்போ யானை சர்க்கசில் பல சாகசங்கள் செய்து ரசிகர்களையும் , குழந்தைகளையும் கொள்ளை கொண்டது .
ஜம்போ யானை மிகவும் பிரபலமானதால், ஒரு பணக்காரர் அதைப் பணம் கொடுத்து வாங்க முன்வந்தார் . ஆனால் அது தடுக்கப்பட்டுவிட்டது.
1885ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, இந்த யானையை ரயிலில் ஏற்றிச் சென்றபோது விபத்தில் இறந்தது.
ஜம்போ இறந்த பிறகு, அதன் நினைவாக ஒரு சிலை இங்கிலாந்தில் நிறுவப்பட்டது.
*******************************************************************************************************
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)