ஞாயிறு, 16 டிசம்பர், 2012
சாந்தம்! /63/18.11.2012/
சாந்தம்! /63/18.11.2012/
தட்சணாமூர்த்தியை குருவாக, ஞானம் போதிப்பவராக நினைத்து வணங்குவர். தென் திசையை நோக்கி,ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தட்சணாமூர்த்தியின் வடிவ அழகை தரிசிக்கும் போதெல்லாம் எனக்கு அவர் சாந்தத்தின் குறியீடாக, அமைதியின் இலக்கணமாகத்தான் தெரிகிறார்.
தட்சிணாமூர்த்திக்கு பேசாமல் பேசும் தெய்வம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. பேசாமல் இருப்பது என்பது மவுனம் அல்ல; அது சாந்தம்!
உலக வாழ்க்கையில் ஒருவர் எதை அடைகிறாரோ இல்லையோ, சாந்தத்தை அடைந்து விட்டால் போதும். அவர் எல்லாம் அடைந்தவராக திருப்தி பெறலாம். சாந்தத்தின் முதிர்வில் இறைவனையும் புரிந்துகொள்ளலாம்!
சாந்தம் என்பது சாது போல் இருக்கும். அதை எதிர்க்க எந்த சக்திக்கும் சக்தி கிடையாது. எல்லா சித்திகளும் இதனாலே கிடைக்கப்பெறும்.
எந்தநிலையிலும்,எந்தநேரத்திலும்பதட்டமில்லாமலும்,கோபப்படாமலும், எதற்கும் கலங்காமல், தெளிவான மனத்துடன் செயல்படுவது சாந்தத்தின் குணமாகும்.
வெற்றி, தோல்வி, இன்ப, துன்பத்தில் மனம் அடிமையாகாமல் இருப்பது, மனக்கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை கொண்டிருப்பது சாந்தத்தின் அடையாளங்கள்.
எதுவும்,எப்பொழுதும் நம் விருப்பப்படி எல்லாம் நடக்காது. அதுதான் உண்மையும்கூட. வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்ப அலைபாயும் தன்மையுடையது மனம். இந்த அலைபாயும் தன்மை, இந்த வாழ்க்கை, இந்த உலகம் பொய் என்ற உண்மை புரியவிடாமல் தடுத்துவிடும்.
சாந்தம் இருப்பின் மனம் புத்தியின் கட்டளைபடி செயல்படும். சாந்தம் இல்லாத மனம் புலன்களின் இழுப்புக்கு கட்டுப்பட்டு விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் வேலைசெய்யும்.
ஒருவர் நம்மை முட்டாள் என்று திட்டினால் உடனடியாக கோப படாமல்,அவர் யார், எதற்காக அவ்வாறு கூறினார் என்று ஆராய்ந்து, தேவைப்பட்டால் மன்னிப்பது என்ற நிலை ஏற்பட்டால், நீங்கள் சாந்தத்தை அடையும் முதல் படியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
செய்த தவறுகளுக்காக தன்னைத்தானே வருத்திக்கொள்வது, நமது சக்திக்கு மீறிய செயல்களை செய்யமுடியவில்லையே என்று குற்ற உணர்வு இல்லாமல் இருப்பது சாந்தத்தின் அடுத்தநிலை தகுதி.
இந்த வாழ்க்கை, இந்த உலகம் உண்மையானது, நிலையானது என்று நினைத்தால், எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலை தினம் தினம் இருந்து கொண்டே இருக்கும். இதுவே மனதை பாழ்படுத்திவிடும்.
ஆழ்ந்த உறக்கத்தில் மனம் முழு அமைதியாக இருப்பதுபோல இருக்கக்கூடிய அனுபவம் கிடைத்து விட்டால், விழித்திருக்கும் நேரத்திலும் மனம் முழுமையான சாந்தத்துடன் இருக்கும்.
இந்தஆனந்த நிலைதான் இறைவனுக்கு சமீபத்தில் அழைத்துச் செல்லும்.
சாந்தம் கொண்டு ஓரடி நீங்கள் எடுத்து வைத்தால், இறைவன் உங்களை நோக்கி நுõறடி எடுத்து வைத்து உங்களை அணைத்துக்கொள்ள ஆர்வமாக இருப்பான்.
- தேவராஜன்.
*******************
சமயத்தின் மேன்மை!/62/11.11.2012/
சமயத்தின் மேன்மை!/62/11.11.2012/
ஒரு சாதாரணமனிதன் – உயர்ந்தவனாக, சிறந்தவனாக, மேம்பட்டவனாக ஆவதற்கு உதவுவது சமயம்.
‘ உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்கிறது தொல்காப்பியம். உலகம் உயர்ந்தோர்களின் பண்பை வைத்தே அளவீடப்படுகிறது.
சமூகத்தில் வாழும் மனிதன் சில கொள்கைகளை ஏற்பதினாலும் அவற்றில் நம்பிக்கை வைப்பதினாலும் ஒரு மேலான நிலைக்கு செல்கிறான். அதற்கு நம் முன்னோர்கள் காட்டிய வாழ்வியல் முறை அடித்தளமாக இருக்கிறது. முன்னோர்களை வழிய நடத்திய பாதையாக சமயம் இருந்து வருகிறது.
இப்படித் தான் வாழவேண்டும் என்று வழிகாட்டும் சமயத்தினை சார்ந்து வாழ்பவன், சமயத்தினைச் சார்ந்து ஒழுக்கமானவன் ஆகின்றான்.
இன்ப துன்பங்களை ஏற்பதால் அவனது மனம் பக்குவப்படுகிறது.
சமயம் என்னும் சொல் கொள்கை, கோட்பாடு, குறிக்கோள்
என்னும் பொருளைத் தருகிறது.
ஆனால், சமயத்தின் உண்மையான பொருள் அனுபவம் சார்ந்தே உணரக்கூடியது. அதாவது, ஒருவர் பசிக்கு உணவு பொருளை நேரடியாக உண்ணாமல், சமைத்த பிறகே அதாவது அவித்து, வேகவைத்துச் உண்ணுகிறோம்.
அது போல் பக்குவமில்லாத, பண்பில்லாத, ஒழுக்கமில்லாத நிலையில் வாழும் மனிதனை,அன்பு, இரக்கம், கருணை, செய்யதக்கன, செய்யத்தகாதனவைகளை எல்லாம் சொல்லி, அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மனதை சமைத்துப்பக்குவப்படுத்த தோன்றியவை சமயம் என்று பொருள் கொள்வதே சரியாக இருக்கும்.
கடவுள்- மனித வாழ்வு என்ற இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பு ,
வாழ்விலிருந்து கடவுளை அடையும் நெறிமுறைகளை தெளிவுப்படுத் உதவுவது சமயம்.
மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றியது சமயநெறி.
துõயவாழ்க்கை முறை, மனிதனை நெறிப்படுத்திப் பக்குவப்படுத்தும் வாழ்வியல் அனுபவமுறை,மனிதனுடைய குறை நீக்கத்திற்கும், புலன்களை பக்குவப்படுத்தவும், அன்பு பெருகவும், அருள் பெருகவும். சமயம் உதவும்.
சமயத்தின் முக்கிய நெறி அன்பை மையமாக் கொண்டது.
‘ஆருயிர்க் கெல்லாம் அன்பு செயல் வேண்டும்’ என்னும் வள்ளலார் காட்டிய வாழ்வு நெறிதான் சமயம் காட்டும் நெறி.
அன்பின் வழியே , ஆண்டவனை அடையமுடியும் என்கிறது நமது சமயம்.
காலம் மாறலாம். நாகரீகம் மாறலாம். நம் வாழ்க்கை முறை மாறலாம். ஆனால் சமயம் சொல்லும் வாழ்வியல் உண்மைகள் என்றும் மாறாதவை.
கட்டுபாடு நிறைந்திருக்கலாம். கசப்பாக இருக்கலாம். நடைமுறை வாழ்கையில் பின்பற்ற இயலாமல் போகலாம். ஆனால், சமயம் வலியுறுத்தும்படி வாழ்பவர்கள் என்றுமே இறைவனுக்கு பிரியமானவர்களாக, வாழும் போது நிம்மதியாக வாழலாம்! வாழ்ந்து பாருங்கள் புரியும்!
- தேவராஜன்.
****************************
பிரம்மார்ப்பணம்/61/4.11.12/
பிரம்மார்ப்பணம்/61/4.11.12/
‘எதை செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதை ஹோமம் செய்கிறாயோ, எதை தானம் செய்கிறாயோ அவற்றை எல்லாம் எனக்கு அர்ப்பணம் செய். இதனால், புண்ணிய, பாவங்களிலிருந்து நீ விடுபடுவாய்’ என்கிறார் பகவான்.
அதாவது,நாம் செய்யும் காரியங்களை எல்லாம் பகவானுக்கு அர்ப்பணமாக செய்வது பிரம்மார்ப்பணம்.
பிரம்மார்ப்பணம் என்பது முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும் முதல்படி. முதல்படியில் ஏறுவது எளிது அல்லவா?
இறைவனுக்கு நாம் அன்புடன், ஆசையுடன், ஆர்வத்துடன் எதை சமர்ப்பித்தாலும் அதை உள்ளன்போடு இறைவன் ஏற்றுக்கொள்கிறார். அது மட்டும் உண்மை.
’எவன் பக்தியுடன் ஒரு பச்சிலையோ, புஷ்பமோ, தீர்த்தமோ சமர்ப்பிக்கிறானோ அவற்றை எல்லாம் உள்ளன்புடன், பிரியமாய் நான் ஏற்கிறேன்’ . என்கிறார் கீதையில் பகவான்.
அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
குசேலர் பக்தியுடன் தந்த ஒருபிடி அவல், திரவுபதி தந்த ஒரு சிட்டிகை கீரை, கஜேந்திரன் துதிக்கையால் எடுத்து அளித்த புஷ்பம், சபரி அளித்த பழம் என இப்படி பக்தியுடன் வழங்கப்பட்ட எளிய பொருள்களை இறைவன் ஏற்றுக்கொண்டான் என்பதற்கு ஆதார பட்டியல் நீளும்.
இறைவன் நம்மிடமிருத்து பெரிதாக எந்தப் பொருளையோ, கஷ்டமான காரியத்தையோ எதிர் பார்ப்பதில்லை. ஆகையால் நாம் உடலாலோ, மனதாலோ, வாக்காலோ, தர்ம செயல்களாலோ, பக்தியினாலோ, இயற்கை வசப்பட்டு சுவபாவத்தாலோ எது எதைச் செய்கிறோமோ அது எல்லாவற்றையும் இறைவனுக்கே என அர்ப்பணிக்க வேண்டும்.
இப்படி நாம் நாளும் செய்கின்ற சின்ன சின்ன அர்ப்பணங்கள் நமக்கும் இறைவனுக்குமான உறவை வலுப்படுத்திக்கொண்டே இருக்கும்.
ஒரு சிறு கம்பி கிடைத்தால் கூட அதைப் பற்றிக் கொண்டு மின்சார சக்தி அதன் வழியாக எளிதில் பாய்ந்து செல்வது போல, இறைவனின் அருளும் நாம் செய்கின்ற சிறு அர்ப்பணப் பொருள் வழியே நம்மிடம் பாய்கிறது.
‘எவன் என்னை எங்கும் பார்க்கிறானோ, என்னிடத்தில் எல்லாவற்றையும் பார்க்கிறானோ, அவனுக்கு நான் காணாமல் போவதில்லை. அவனும் எனக்கு காணாமல் போவதில்லை. அவன் எந்த நிலையில் இருந்தாலும், எத்தொழிலைப் புரிந்தாலும் என்னிடத்திலே இருப்பான்.’ என்று கீதையில் பகவான் உறுதியளித்திருக்கிறார்.
ஆதலால், நம்பிக்கையோடு ஒவ்வொரு பொழுதையும் பகவானுக்காக அர்ப்பணம் செய்துவருவோம். நம் அன்றாடம் செய்கின்ற கடமையில் உண்மையுடன் சிரத்தையுடன் இருப்போம். இறைவனின் ஆசி கிடைக்கும் வரை பொறுத்திருப்போம். நம்பினார் கெடுவதில்லை. நிச்சயம் நல்லதே நடக்கும்!
- தேவராஜன்.
**************************
செல்வம் சினிமா மாதிரி/ 60/ 28.10.2012
செல்வம் சினிமா மாதிரி/ 60/ 28.10.2012
நாம் சேர்த்து வைக்கும்செல்வம் நிலையானது அல்ல. அது வரும், இருக்கும், போகும். செல்வம் இருக்கும் போதே அதை நல்வழிகளில் செலவிட வேண்டும்.
‘கூத்தாட்ட அவை குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அது விளிந்த அற்று’ இது வள்ளுவர் கணிப்பு.
கூத்தாடும் நாடக கொட்டகையில் உள்ள கூட்டம் போல் செல்வம் வரும், போகும், அழியும் அல்லது கை விட்டு போய் விடும் என்கிறார் வள்ளுவர்.
சினிமா தியேட்டருக்கு வரும் கூட்டம், படம் ஆரம்பிக்கும் முன்னால். கொஞ்சம் கொஞ்சமாய் வரும். படம் முடிந்தவுடன் மொத்தமாய் போய் விடும். அது போல், செல்வம் வரும் போது கொஞ்சம் கொஞ்சமாய் வரும். போகும் போது மொத்தமாய் போய் விடும்.
சினிமா தியேட்டருக்கு வரும் கூட்டத்திற்கு, வரும் போது ஒரு ஆவல் இருக்கும், படத்தை பார்க்கும் போது ஒரு சுவை இருக்கும், படம் முடிந்து போகும் போது, ஒரு சோர்வு இருக்கும். அது போல், செல்வம் வரும்போது ஒரு சுகம், அதை அனுபவிக்கும் போது ஒரு சுகம். அது விட்டு போகும் போது ஒரு சோர்வு இருக்கும்.
கூத்தாட்ட அவை எனில் அது அங்கு உள்ள நடிகர்கள், அந்த மேடை அலங்காரம், வேடம் என்று எல்லாவற்றையும் குறிக்கும். நாடக மேடையில் எல்லாமே பொய் தானே. கதா பாத்திரங்களும், வேடங்களும், மேடை அமைப்பும் எல்லாமே உண்மை போல் தெரியும், ஆனால் உண்மை அல்ல. அது போல் செல்வமும் உண்மை போல் தெரிந்தாலும், உண்மை அல்ல.
நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு குட்டி கதை :
தாங்க முடியாத வெயிலில் ஒருவன் களைத்தபடி நடந்து கொண்டிருந்தான். சாலை ஓரத்தில் ஒரு மரம். அதன் நிழலில் ஒதுங்கி நின்றபோது அங்கே ஏதோ எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தான்.
நண்பர்களே! வேலிக்கு அருகில் ஓர் கிணறு இருக்கிறது. தாகமாக இருந்தால் வந்து பருகவும் என்று எழுதி இருந்தது.
ஓடிச் சென்று தண்ணீரைக் குடித்தபோது, இன்னொரு வாசகத்தைப் பார்த்தான். களைப்பாக இருந்தால் அதோ அருகில் இருக்கும் மரக்கட்டிலில் ஓய்வெடுங்கள்.
ஓய்வெடுத்தபோது அங்கே ஒரு வாசகம்எழுதி இருந்தது. பசியாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் கூடையில் பழங்கள் இருக்கின்றன எடுத்து சாப்பிடுங்கள்.
சாப்பிட்டபோது அங்கு ஒருவர் வந்தார்.
‘நீர் பயன்படுத்தாவிட்டால் நீர் அசுத்தமடைந்துவிடும். படுக்காவிட்டால் கட்டிலில் துõசி படிந்துவிடும். நிறைய காய்க்கும் பழங்களை யாராவது சாப்பிடாவிட்டால் காய்த்த மரத்திற்கு பெருமையில்லை’என்றார்.
தன் கிணற்றில் குளிக்கவிடாது,
தன் கட்டிலில் படுக்க விடாது,
தனக்கு தேவையற்ற உணவை மற்றவருக்கு கொடுக்க மனமில்லாது
வாழும் மனிதனாக ஒருவன் இருந்தால் அவனைப் படைத்ததற்காக கடவுள் வருத்தப்படுவார்.
- தேவராஜன்
*************************
செல்வம் சினிமா மாதிரி/ 60/ 28.10.2012
செல்வம் சினிமா மாதிரி/ 60/ 28.10.2012
நாம் சேர்த்து வைக்கும்செல்வம் நிலையானது அல்ல. அது வரும், இருக்கும், போகும். செல்வம் இருக்கும் போதே அதை நல்வழிகளில் செலவிட வேண்டும்.
‘கூத்தாட்ட அவை குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அது விளிந்த அற்று’ இது வள்ளுவர் கணிப்பு.
கூத்தாடும் நாடக கொட்டகையில் உள்ள கூட்டம் போல் செல்வம் வரும், போகும், அழியும் அல்லது கை விட்டு போய் விடும் என்கிறார் வள்ளுவர்.
சினிமா தியேட்டருக்கு வரும் கூட்டம், படம் ஆரம்பிக்கும் முன்னால். கொஞ்சம் கொஞ்சமாய் வரும். படம் முடிந்தவுடன் மொத்தமாய் போய் விடும். அது போல், செல்வம் வரும் போது கொஞ்சம் கொஞ்சமாய் வரும். போகும் போது மொத்தமாய் போய் விடும்.
சினிமா தியேட்டருக்கு வரும் கூட்டத்திற்கு, வரும் போது ஒரு ஆவல் இருக்கும், படத்தை பார்க்கும் போது ஒரு சுவை இருக்கும், படம் முடிந்து போகும் போது, ஒரு சோர்வு இருக்கும். அது போல், செல்வம் வரும்போது ஒரு சுகம், அதை அனுபவிக்கும் போது ஒரு சுகம். அது விட்டு போகும் போது ஒரு சோர்வு இருக்கும்.
கூத்தாட்ட அவை எனில் அது அங்கு உள்ள நடிகர்கள், அந்த மேடை அலங்காரம், வேடம் என்று எல்லாவற்றையும் குறிக்கும். நாடக மேடையில் எல்லாமே பொய் தானே. கதா பாத்திரங்களும், வேடங்களும், மேடை அமைப்பும் எல்லாமே உண்மை போல் தெரியும், ஆனால் உண்மை அல்ல. அது போல் செல்வமும் உண்மை போல் தெரிந்தாலும், உண்மை அல்ல.
நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு குட்டி கதை :
தாங்க முடியாத வெயிலில் ஒருவன் களைத்தபடி நடந்து கொண்டிருந்தான். சாலை ஓரத்தில் ஒரு மரம். அதன் நிழலில் ஒதுங்கி நின்றபோது அங்கே ஏதோ எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தான்.
நண்பர்களே! வேலிக்கு அருகில் ஓர் கிணறு இருக்கிறது. தாகமாக இருந்தால் வந்து பருகவும் என்று எழுதி இருந்தது.
ஓடிச் சென்று தண்ணீரைக் குடித்தபோது, இன்னொரு வாசகத்தைப் பார்த்தான். களைப்பாக இருந்தால் அதோ அருகில் இருக்கும் மரக்கட்டிலில் ஓய்வெடுங்கள்.
ஓய்வெடுத்தபோது அங்கே ஒரு வாசகம்எழுதி இருந்தது. பசியாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் கூடையில் பழங்கள் இருக்கின்றன எடுத்து சாப்பிடுங்கள்.
சாப்பிட்டபோது அங்கு ஒருவர் வந்தார்.
‘நீர் பயன்படுத்தாவிட்டால் நீர் அசுத்தமடைந்துவிடும். படுக்காவிட்டால் கட்டிலில் துõசி படிந்துவிடும். நிறைய காய்க்கும் பழங்களை யாராவது சாப்பிடாவிட்டால் காய்த்த மரத்திற்கு பெருமையில்லை’என்றார்.
தன் கிணற்றில் குளிக்கவிடாது,
தன் கட்டிலில் படுக்க விடாது,
தனக்கு தேவையற்ற உணவை மற்றவருக்கு கொடுக்க மனமில்லாது
வாழும் மனிதனாக ஒருவன் இருந்தால் அவனைப் படைத்ததற்காக கடவுள் வருத்தப்படுவார்.
- தேவராஜன்
*************************
திருநாமத்தின் மகிமை!/59/ 21.10.2012/
திருநாமத்தின் மகிமை!/59/ 21.10.2012/
இறைவனும் அவருடைய திருநாமமும் வெவ்வேறு அல்ல. திருநாமம் என்பதே இறைவன்தான்! இறைவனுடைய திருநாமம் மனதில் நிரம்பியவுடன், உள்ளம் இறைவனின் சந்நிதியாகிடும்.
நமது சிந்தனைகளை இறைவன்பால் நிறுத்த, அவருடைய திருநாமத்தை இடையறாமல் நினைவு கூர்வது எளிமையான வழி.
‘திருநாமத்தின் மீது உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து, கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முக்திநெறிக்குக் கூட்டுவிப்பது திருநாமம். அது நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனாகிய சிவபெருமானின் திருநாமமான நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தாகும்.
இம்மந்திரம் அனைத்து உயிர்களின் துன்பங்களையும் சொன்னமாத்திரத்தில் நீக்கவல்ல அற்புத மந்திரமாகும்’ என்கிறார் திருஞானசம்பந்தர்.
‘நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
என்று தொடங்கி, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப்பணிந்து’ என்கிறார் மாணிக்கவாசகர்.
‘இம்மந்திரத்தை பொருள் உணர்ந்து சொல்லுவோர் சிவனடிக்கீழ் ஆனந்தம் பெறுவது உறுதி. இம்மந்திரத்தை பொருள் உணர்ந்தோ உணராமலோ எப்படி சொல்லினும் உயர்வு உறுதி’ என்கிறார் அவர்.
திருநாமம் ஒருவனை ஆன்மிக வாழ்வின் உச்ச நிலைக்கு இட்டுச் செல்கிறது. இருளில் மூழ்கிய குருட்டு ஜீவனுக்கு வெளிச்சமாக இருக்கிறது. திருநாமத்தின் சக்தி வெல்ல முடியாதது. வெல்லற்கரியது. மனதில் திருநாமம் நிறையும்போது மனம் பணிவுள்ளதாகவும் மென்மையாகவும் இணக்கமுள்ளதாகவும் மாறுகிறது. நாம மகிமையால் மனமே இறைவனாக மாறுகிறது. திருநாமத்தில் தஞ்சம் அடைந்தவன் பல அதிசயங்களை ஆற்ற முடியும்.
நீங்கள் எந்த இனம், ஜாதி, கொள்கை கொண்டவராயினும் இறைவனின் நாமத்தை சொல்லி சொல்லி திருநாமத்துடன் இனிய உறவை ஏற்படுத்தி கொள்ளுங்கள். நாமம் என்னும் நதியில் நாளும் மூழ்கும் உங்கள் ஆன்மா துõய்மை அடைவது மட்டும் அல்லாமல், யாவும் அறிந்த எங்கும் நிறைந்த இறைவனின் அருளாலும், அன்பாலும் ஈர்க்கப்படும் என்பது உறுதி. திருநாமத்தை இடையறாமல் ஓதும் பயிற்சியினால் ஆசாபாசங்களில் அலைபாயும் மனதை இறைவனின் நினைப்பில் கட்டிப்போடும். திருநாமத்தை ஒருவன் சிரத்தை, நம்பிக்கை, மனதை ஒருநிலையில் வைத்துக்கொண்டு தியானம் செய்யும் போது முகமும் உடலும் ஒரு அசாதாரண ஒளியுடன் பிரகாசிக்கும்.
இமைப்பொழுதும் நீங்காமல் திருநாமத்தை சொல்ல முடியாவிட்டாலும் கூட, காலையில் எழும்போதும், இரவு துõங்கச் செல்லும்போதும், இடையில் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ‘நமச்சிவாய’ என்று சொல்லி வாருங்கள்! வாழ்க்கை சுகப்படும்.
- தேவராஜன்
*****************************
புதன், 26 செப்டம்பர், 2012
முதன்மை பெறும் முன்னோர் வழிபாடு
முதன்மை பெறும் முன்னோர் வழிபாடு
நீத்தார் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, குலகுரு வழிபாடு என்ற மூன்றும் முக்கியமானவை. இவற்றைச் செய்யாமல் மேற்கொள்ளும் எந்த வழிபாட்டாலும் பயன் ஏற்பட்டுவிடாது.
முன்னோர் வழிபாடே நீத்தார் வழிபாடு. வாழும் காலத்தில் வயதான பெற்றோரைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இது அடிப்படைக்கடமை. வாழும் காலத்தில் சோறுபோடாøவ் செத்தபின் செய்யும் வழிபாடு சிரார்த்தமாகாது. நாடகமாகவே அமையும். உள்ளன்புடன் செய்ய வேண்டியது. சிரத்தையுடன் செய்யப்படுவது எனவேதான் திவசத்தை ‘சிரார்த்தம்’ என்றார்கள்.
தமிழர் நெறி
முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்தது தமிழரின் நெறியாகும். தன் குலமுன்னோரை மட்டுமல்லாமல் நாடுகாக்க நல்லுயிர் ஈந்த பெரு வீரர்களுக்கும் கல் நட்டு வழிபாடு செய்த வழக்கத்தை புறநானுõறு புலப்படுத்தும். வள்ளுவரும் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு ஐம்புல்தாறு ஓம்பல் தலை - என்ற குறளில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மை தந்திருக்கிறார். முதலில் முன்னோர் வழிபாடு. தெய்வ வழிபாடு. பிறகுதான் திதிதர்ப்பணம் தந்த பின்புதான் நித்யபூஜை செய்வதே முறை.
முதலாம் ஆண்டில் மட்டும்
இறந்துபோன உடலை எரியூட்டுதல் அக்னி சம்ஸ்காரம் ஒருவகை கேள்விதான். அதனால்தான் அனாதை ப்ரேத சம்ஸ்காரம் ஆயிரம் அசுவமேத பலன் தரக்கூடியது. அனாதைப்ரேத சம்ஸ்காரம் அஸ்வமேத பலம்வபேத் என்கிறது தர்மசாத்திரம்.
செத்துப்போனவருக்காக குடும்ப வழக்கப்படி அமையும் 10 நாள், 16 நாள் காரியங்களைத் தவறாமல் செய்யவேண்டும். அதனைச் செய்யாவிட்டால் உயிரைப்பற்றியுள்ள பிரேத கரு நீங்காது என்பது கருட புராணத் தகவல்.
இறந்து போனவனின் உயிர் ஒருவருட காலம் சஞ்சாரத்தில் இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.
இவற்றில் கருடபுராணம் மிக விரிவாகச் சொல்கிறது. எனவே, அந்த ஆண்டில் மட்டும் மாதச் சிரார்த்தம், ஊனமாசிகம் வருஷாப்தி எனப்பல சிரார்த்தங்கள் தரவேண்டும்.
எப்படிச் சாத்தியம்?
இருப்பவரைக் காப்பாற்றுவது சரி. இறந்துபோனவனுக்குச் சோறு போடுவதும் அது அவனைச் சென்றடைவதும் எப்படி சாத்தியம் என்று சிலர் கேட்கலாம்.
பையனுக்கு மணியார்டர் அனுப்பவேண்டி உள்ளது. போஸ்ட் ஆபிசுக்குப் போய் பணம் செலுத்துகிறோம். போஸ்ட் மாஸ்டர் நம் பணத்தை வாங்கிக் தன் பெட்டியில் போட்டுக்கொள்கிறார். நாம் கொடுத்த பணம் சென்று சேர வேண்டிய இடத்துக்குப் போய் சேர்கிறது. பையன் வெளிநாட்டில் இருந்தால் இந்திய ரூபாய் டாலராக மாறிச் சேர்கிறது. அதுபோலத்தான், திவசம் கொடுத்தால் இறந்து போனவர் மாடாகப் பிறந்திருந்தால் நாமிட்ட உணவு வைக்கோலாக மாறி அவரைச் சேரும் என்கிறார் காஞ்சி மகாசுவாமிகள்.
என்றெல்லாம் செய்யலாம்?
முன்னோர்களை அவர் இறந்த நாளில் ஆங்கில காலண்டர் நாள் அல்ல. தமிழ் மாதம் வளர்பிறை அல்லது தேய்பிறையில் அவர் இறந்த திதி நாளில் திவசம் தந்து நினைவு கூர்வது கட்டாயமானதாகும். இந்த நாள் மட்டும் அல்லாமல் 96 நாட்கள் முன்னோர் வழிபாட்டுக்கு உரியவை. அவை அமாவாசைகள், மாதப்பிறப்பு, மாளயபட்ச நாட்கள், வியதிபாத யோக நாட்கள் முதலியவை.
எப்படி வழிப்படுவது?
முன்னோரை வழிபடும் முறையில் குடும்ப பழக்கப்படி உரியவரை அழைத்து உணவிடுதல் ஒருமுறை. உரியவர்க்கு தானியங்கள் தருதல், கொஞ்சம் பணம் கொடுத்தல் என்ற முறைகளும் உண்டு. உரிய நாளில் கொஞ்சம் எள்ளுடன் நீர்வார்த்தல், தர்ப்பணம் தருதல் என்பர். நீர்க்கடன் தருதல் முக்கியம்.
சுகம் பெறச் சுலபமான வழி
முன்னோர் அருள் இருந்தால் போதும் எல்லா நலமும் எளிதில் கிடைக்கும். எனவே நீர்க்கடன் தரவேண்டும். 96 நாட்கள் முடியாவிட்டாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை யுடன் மாளயபட்ச நாட்கள் எல்லாவற்றிலும் நீர்க்கடன் செய்யலாம். 15 நாட்களில் சிலநாட்கள் முக்கியம். மாளய அமாவாசை மிக முக்கியமான நாள். அன்றாவது திததர்ப்பணம் தர வேண்டும்.
மகிமை மிகுந்த மாளயபட்சம்
புரட்டாசி மாத அமாவாசைக்கு முன்னால் வரும் பட்சம் 15 நாட்கள் மாளய பட்சம் ஆகும். இந்த நாட்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. நாம் ஆண்டு விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதுண்டல்லவா? இது போல நம் முன்னோர்கள் தாம் வாழ்ந்த ஊருக்குத் தம்மரபினர் உள்ள ஊருக்கு வருடா வருடம் வருகிறார்கள். 15 நாட்கள் இருக்கிறார்கள். அந்த நாட்களே மாளயபட்ச நாட்களாகும்.
இப்படி வந்தவர்கள் தாம் விரும்பும் வேறிடங்களுக்கும் சென்றுவிட்டு ஐப்பசி அமாவாசையில் தான் பிதுர்லோகம் செல்கிறார்கள். இவ்வகையில் மாளய நாட்கள் மகிமை மிக்கவை.
முன்னோரின் ஆசை
முன்னோர்களின் ஆசைகளைக் காட்டும் சில பாடல்கள் விஷ்ணுபுராணத்தில் உண்டு. பித்ரு கீதங்கள் என்று பெயர். இவற்றை அவர்கள் பாடுவார்கள். புரட்டாசி மாத கிருஷ்ணபட்சத்திரயோதசி நாளில் செய்யப்படும் திவசம் மாசி அமாவாசையில் செய்யப்படும் திலதர்ப்பணம் எங்களுக்கு இன்பம் தரும் என்று அவர்கள் பாடுவதாக உள்ள ஒரு கீதம். முன்னோரை வழிபட எந்த வகையிலும் வழியில்லாமல் போனவர்கள் சூரியனை மனதாரப் பிரார்த்தனை செய்து தெற்கு நோக்கி இரண்டு கைகளையும் உயரத்துõக்கி மனதாரச் சரணடையுங்கள். மன மகிழ்வோம் என்று சொல்லப்படுவதாக அமைகிறது இன்னொரு பாடல்.
மாளயபட்சத்தில் இவை முக்கியம்
மாளயபட்ச நாட்கள் 15ல் சில நாட்களுக்கு முக்கியத்துவம் உண்டு. இந்த நாட்களிலாவது திதிதர்ப்பணம் முக்கியம்.
1. மகாபரணி ( 03-10-2012)
மகாளய பட்சத்தில் பரணி நட்சத்திரம் அமையும் நாள். இது மகாபரணி எனப்படும்.
2. மகாவியதீபாதம் (06.10.2012)
வியதீபாதம் யோகங்களில் ஒன்று. எல்லா வியாதீபாதங்களும் நீர்க்கடன் ஆற்றுவதற்கு உரியவை. மாளய பட்சத்தில் அமையும் வியதிபாத நாள் மகாவியதீ பாதம் எனப்படும்.
3. மத்யாஷ்டமி (08.10.2012)
மாளயபட்சத்தில் அமையும் அஷ்டமி திதிநாள் மத்யாஷ்டமி. 15 நாட்களுக்கு இடையில் அமைவதால் சிறப்பு பெறுகிறது. நடுநாயகமாகிறது.
4. சன்யஸ்த மாளயம் (12.10.2012)
துவாதசி திதிநாள். மற்ற நாட்களில் 7 தலைமுறைக்கு மட்டும் தர்ப்பணம். இந்த நாளில் அதற்கு மேலும் இருப்பவர்க்குத் தர்ப்பணம் தரப்படும். தம் குடும்பத்தைச் சேர்ந்த சந்நியாசிகளுக்கும் தர்ப்பணம் தருவதால் இது யதிமாளயம் எனப்படும்.
5. கஜச்சாயா புண்யகாலம் (13.10.2012)
மாளய பட்சத்தில் 13வது திதிநாள். இந்த நாளில் செய்யப்படும் சிரார்த்தத்தை சிறப்பானது என்கிறது விஷ்ணுபுராணம்.
6. சஸ்த்ர ஹத பித்ருமாளயம் (14.10.2012)
சதுர்த்தசி திதி நாள்.
7. மாளய அமாவாசை
மிக முக்கியமான நாள். வசதி உள்ளவர்கள் முன்னோர் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டிய நாள்.
முன்னோரை வழிபட
மாதுர் தேவோ பவ: பிதுர் தேவோ பவ: என்ற சாத்திர தொடர் முன்னோர் வழிபாட்டிற்கு பெருமையைக் காட்டுவதாகும். காசி, கயா, திருக்கோகர்ணம், பத்ரிநாத் முதலியன வடநாட்டில் இருக்கும் முன்னோர் வழிபாட்டுத் தலங்கள். ராமேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம் உள்ளிட்ட கடல்துறைகள், காவிரிக்கரையில் உள்ள திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கும்பகோணத்து மகாமக தீர்த்தம், திருவள்ளூர் முதலான தலங்கள் தமிழகத்தில் உள்ள முன்னோர் வழிபாட்டுத் தலங்களாகும். அருகில் இருக்கும் தலத்திற்குச் சென்று நீராடி, நீர்க்கடன் தந்து தானங்களை மகாளய அமாவாசையில் செய்வது நல்லது.
தடைகள் தகரும் ஐயமில்லை
ஒரு ஜாதகரின் ஜாதகம் பல யோகங்களை உடையதாக இருந்தாலும் பிதுர் சாபமோ தோஷமோ இல்லாமல் இருந்தால் தான் பலன் கிட்டும். பிதுர் தோஷம் எல்லா யோகங்களையும் முறித்துவிடும். பிதுர்களின் ஆசீர்வாதம் எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடும். எனவே மாளய நாட்களில் மகாளய அமாவாசையில் நீர்க்கடன் தருவதும் முன்னோர் அருள் பெறுவதும் முக்கியம். மிகமுக்கியம்.
***********************************
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)