வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

தங்க புதையல் மலையும் மர்ம மலையும்... -தேவராஜன்


தங்க புதையல் மலையும் மர்ம மலையும்... -தேவராஜன் 35 வாரங்களாக உலகின் சில விநோதங்கள், மர்மங்கள், ஆச்சரியங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் படித்து வந்தீர்கள். உலகில் பல மர்மங்கள் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றன. அவைகள் ஏராளம். அவைகள் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த அத்தியாயத்தில் ஒரு மர்ம மலைப்பற்றிய தகவல்களுடன் இத்தொடர் முற்று பெறுகிறது. மர்மத்தையும் மூடநம்பிக்கையையும் சேர்த்து பிடித்தது போல ஒரு மர்மம் ஒன்று இருப்பது உலகில் ஒரு ஆச்சரியமே! இந்த மர்மத்தை தனக்குள் வைத்திருக்கும் அது ஒரு மலை! மூட நம்பிக்கைகளின் மலைத்தொடர் என பொருள் பட அழைக்கப்படும் “குதணீஞுணூண்tடிtடிணிண Mணிதணtச்டிணண்” (சூப்பர்ஸ்டிடிஷன் மவுன்டைன்ஸ்) மலைத்தொடர்தான் அது. அமெரிக்காவின், அரிசோனா பகுதியில் இருக்கும் ஒரு மலைத்தொடர்தான் இது. அதை சுற்றி நிகழும் சம்பவங்களும் நம்பிக்கைகளும் மர்மங்களும் காலத்தால் நம்பமுடியாதபடி இருந்து வருகிறது. 1800 ம் ஆண்டில் ஒச்ஞிணிஞ ஙிச்டூtத் (ஜேக்கப் வால்ட்ஸ்) என்பவர் இந்த மலைத்தொடரை முதல் முதலாக கண்டுபிடித்தார். அந்த மலையில் மிகப்பெரிய ஒரு தங்கப்புதையல் கொண்ட ஒரு சுரங்கம் இருப்பதை அறிந்தார். இருந்தாலும் அவர் அதுபற்றி யாருக்கும் தெரிவிக்கவில்லை. கடைசி காலத்தில் நோயின் தாக்கத்தால் மரணப்படுக்கையில் இருந்தார் அவர். அந்த நிலையில் அவர், தனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் தங்கமலை ரகசியத்தைக் கூறினார். பின்னர், அந்த சிலரில் ஒருவரால் அவர் கொல்லப்பட்டார். இதனால், அந்த புதையல் எங்கே இருக்கிறது என்ற சரியான இடம் யாருக்கும் தெரியவில்லை. ஜேக்கப் இறப்புக்குப் பிறகு, புதையல் இருக்கும் கதை அதை சுற்றி இருந்த பகுதிகளில் பரவியது. பிறகென்ன சும்மா இருப்பார்களா? தங்க ஆசை யாரை விட்டது? எல்லாரும் கூட்டம் கூட்டமாக புதையலைச் தேடிச் சென்றார்கள். அந்த மலைக்குச் சென்றவர்களில் பலர் திரும்பி வரவில்லை. சிலர் மர்மமான முறையில் இறந்து போனார்கள்! வந்தவர்களும் தங்கத்தை காணவில்லை, முன்னையவர்களின் எலும்புக்கூடுகளை ஆங்காங்கே கண்டு, அதை சொல்லி திகிலை உண்டுபண்ணினார்கள்! தப்பி வந்தவர்கள் பலர், அந்த மலையில் குள்ளமனிதர்கள் வாழ்வதாகவும். அவர்களே அந்த புதையலை பாதுகாப்பதாகவும் கூறினார்கள். அங்கு ஏலியன்ஸ் வந்து செல்லும் இடம் எனவும் கதைகள் பரவின. அந்த மலைத்தொடர்களின் இடுக்கில் தான், நரகத்திற்கான நுழைவாசல் இருக்கிறது என அந்த வளாக மத குருக்கள் ஒரு கதையை எடுத்து விட்டார்கள்! அந்த மலைத்தொடர் இருக்கும் பிரதேசம் முழுவதும் 115-125 பாரன்ஹீட் வரை வெப்பம் வீசும். அதாவது பாலைவனம். நீர் நிலைகள் இல்லை. மழை பெய்தாலும், மழை பெய்த குறுகிய நேரத்தில் நீர் வற்றிவிடும்! மலைத்தொடர் பல ஏற்ற இறக்கங்களைக்கொண்டது. பல குறுகிய குகைகளையும் கொண்டது. இப்படி இருக்கும் குறுகிய மலைஇடுக்குகளில் சிக்கியும், நீர் இன்றியும் பலர் இறந்திருப்பார்கள் என்றும் சொல்கிறார்கள்! இருந்தாலும் இன்றுவரை பலர் அந்த தங்கப்புதையலை குறிவைத்து அந்த பகுதியில் தேடல் வேட்டை நடத்தத்தான் செய்கிறார்கள். அதில் பலர் இன்னமும் திரும்பவில்லை என்பது விநோதம் மட்டுமல்ல; மர்மமும் கூட. மர்ம மலை ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் 23 வது கிலோ மீட்டரில் ஊசி மலை உள்ளது. கூடலூர் செல்லும் சாலையில் ஊட்டியில் இருந்து செல்லும் பொது பைக்கார, நடுவட்டம் தாண்டி 23 வது கிலோ மீட்டரில் தவளை மலை இருக்கிறது. அதற்கடுத்து ஊசி மலை உள்ளது. அதன் தொடர்ச்சியாக அதற்கடுத்து ஒரு பெயரிடப்படாத ஒரு மலை உள்ளது. இந்த மலையின் மேல் பகுதியில் ஆள் நடமாட்டமோ விலங்குகள் நடமாட்டமோ கிடையாது . இந்த மலையின் குறிப்பிட்ட பகுதியை தாண்டி மேல்பகுதிக்கு செல்ல முயன்ற எத்தனையோ பேர் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல முடியாமலே மாயமாக மறைந்துவிட்டார்களாம்! இதுவரை பல ஆராய்ச்சிகள் உள்நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் வெளிநாட்டினரால் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த மர்மத்தை பற்றி அறியமுடியவில்லை. பலபேர் காணாமல் போயுள்ள நிலையில் கடைசியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த இருவர் இந்த மலையை பற்றி ஆராய வந்தனர். வனத்துறை காவலர் ஒருவர் உட்பட மூவர் வீடியோ கேமராவுடன் அந்த மலையின் உச்சிக்கு செல்ல போனவர்கள் இது வரை திரும்ப வில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த மலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு விதமான மூலிகை செடி உள்ளது எனவும் அது அங்கு செல்லும் ஆட்கள் மற்றும் விலங்குகளை மறைத்து விடுகிறது எனவும் இங்குள்ளவர்கள் கூறுகின்றனர். எது உண்மை என்பது மர்மமாகவே இருந்து வருகிறது! முற்றும். ******************************