புதன், 26 செப்டம்பர், 2012

முதன்மை பெறும் முன்னோர் வழிபாடு

முதன்மை பெறும் முன்னோர் வழிபாடு நீத்தார் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, குலகுரு வழிபாடு என்ற மூன்றும் முக்கியமானவை. இவற்றைச் செய்யாமல் மேற்கொள்ளும் எந்த வழிபாட்டாலும் பயன் ஏற்பட்டுவிடாது. முன்னோர் வழிபாடே நீத்தார் வழிபாடு. வாழும் காலத்தில் வயதான பெற்றோரைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இது அடிப்படைக்கடமை. வாழும் காலத்தில் சோறுபோடாøவ் செத்தபின் செய்யும் வழிபாடு சிரார்த்தமாகாது. நாடகமாகவே அமையும். உள்ளன்புடன் செய்ய வேண்டியது. சிரத்தையுடன் செய்யப்படுவது எனவேதான் திவசத்தை ‘சிரார்த்தம்’ என்றார்கள். தமிழர் நெறி முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்தது தமிழரின் நெறியாகும். தன் குலமுன்னோரை மட்டுமல்லாமல் நாடுகாக்க நல்லுயிர் ஈந்த பெரு வீரர்களுக்கும் கல் நட்டு வழிபாடு செய்த வழக்கத்தை புறநானுõறு புலப்படுத்தும். வள்ளுவரும் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு ஐம்புல்தாறு ஓம்பல் தலை - என்ற குறளில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மை தந்திருக்கிறார். முதலில் முன்னோர் வழிபாடு. தெய்வ வழிபாடு. பிறகுதான் திதிதர்ப்பணம் தந்த பின்புதான் நித்யபூஜை செய்வதே முறை. முதலாம் ஆண்டில் மட்டும் இறந்துபோன உடலை எரியூட்டுதல் அக்னி சம்ஸ்காரம் ஒருவகை கேள்விதான். அதனால்தான் அனாதை ப்ரேத சம்ஸ்காரம் ஆயிரம் அசுவமேத பலன் தரக்கூடியது. அனாதைப்ரேத சம்ஸ்காரம் அஸ்வமேத பலம்வபேத் என்கிறது தர்மசாத்திரம். செத்துப்போனவருக்காக குடும்ப வழக்கப்படி அமையும் 10 நாள், 16 நாள் காரியங்களைத் தவறாமல் செய்யவேண்டும். அதனைச் செய்யாவிட்டால் உயிரைப்பற்றியுள்ள பிரேத கரு நீங்காது என்பது கருட புராணத் தகவல். இறந்து போனவனின் உயிர் ஒருவருட காலம் சஞ்சாரத்தில் இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. இவற்றில் கருடபுராணம் மிக விரிவாகச் சொல்கிறது. எனவே, அந்த ஆண்டில் மட்டும் மாதச் சிரார்த்தம், ஊனமாசிகம் வருஷாப்தி எனப்பல சிரார்த்தங்கள் தரவேண்டும். எப்படிச் சாத்தியம்? இருப்பவரைக் காப்பாற்றுவது சரி. இறந்துபோனவனுக்குச் சோறு போடுவதும் அது அவனைச் சென்றடைவதும் எப்படி சாத்தியம் என்று சிலர் கேட்கலாம். பையனுக்கு மணியார்டர் அனுப்பவேண்டி உள்ளது. போஸ்ட் ஆபிசுக்குப் போய் பணம் செலுத்துகிறோம். போஸ்ட் மாஸ்டர் நம் பணத்தை வாங்கிக் தன் பெட்டியில் போட்டுக்கொள்கிறார். நாம் கொடுத்த பணம் சென்று சேர வேண்டிய இடத்துக்குப் போய் சேர்கிறது. பையன் வெளிநாட்டில் இருந்தால் இந்திய ரூபாய் டாலராக மாறிச் சேர்கிறது. அதுபோலத்தான், திவசம் கொடுத்தால் இறந்து போனவர் மாடாகப் பிறந்திருந்தால் நாமிட்ட உணவு வைக்கோலாக மாறி அவரைச் சேரும் என்கிறார் காஞ்சி மகாசுவாமிகள். என்றெல்லாம் செய்யலாம்? முன்னோர்களை அவர் இறந்த நாளில் ஆங்கில காலண்டர் நாள் அல்ல. தமிழ் மாதம் வளர்பிறை அல்லது தேய்பிறையில் அவர் இறந்த திதி நாளில் திவசம் தந்து நினைவு கூர்வது கட்டாயமானதாகும். இந்த நாள் மட்டும் அல்லாமல் 96 நாட்கள் முன்னோர் வழிபாட்டுக்கு உரியவை. அவை அமாவாசைகள், மாதப்பிறப்பு, மாளயபட்ச நாட்கள், வியதிபாத யோக நாட்கள் முதலியவை. எப்படி வழிப்படுவது? முன்னோரை வழிபடும் முறையில் குடும்ப பழக்கப்படி உரியவரை அழைத்து உணவிடுதல் ஒருமுறை. உரியவர்க்கு தானியங்கள் தருதல், கொஞ்சம் பணம் கொடுத்தல் என்ற முறைகளும் உண்டு. உரிய நாளில் கொஞ்சம் எள்ளுடன் நீர்வார்த்தல், தர்ப்பணம் தருதல் என்பர். நீர்க்கடன் தருதல் முக்கியம். சுகம் பெறச் சுலபமான வழி முன்னோர் அருள் இருந்தால் போதும் எல்லா நலமும் எளிதில் கிடைக்கும். எனவே நீர்க்கடன் தரவேண்டும். 96 நாட்கள் முடியாவிட்டாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை யுடன் மாளயபட்ச நாட்கள் எல்லாவற்றிலும் நீர்க்கடன் செய்யலாம். 15 நாட்களில் சிலநாட்கள் முக்கியம். மாளய அமாவாசை மிக முக்கியமான நாள். அன்றாவது திததர்ப்பணம் தர வேண்டும். மகிமை மிகுந்த மாளயபட்சம் புரட்டாசி மாத அமாவாசைக்கு முன்னால் வரும் பட்சம் 15 நாட்கள் மாளய பட்சம் ஆகும். இந்த நாட்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. நாம் ஆண்டு விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதுண்டல்லவா? இது போல நம் முன்னோர்கள் தாம் வாழ்ந்த ஊருக்குத் தம்மரபினர் உள்ள ஊருக்கு வருடா வருடம் வருகிறார்கள். 15 நாட்கள் இருக்கிறார்கள். அந்த நாட்களே மாளயபட்ச நாட்களாகும். இப்படி வந்தவர்கள் தாம் விரும்பும் வேறிடங்களுக்கும் சென்றுவிட்டு ஐப்பசி அமாவாசையில் தான் பிதுர்லோகம் செல்கிறார்கள். இவ்வகையில் மாளய நாட்கள் மகிமை மிக்கவை. முன்னோரின் ஆசை முன்னோர்களின் ஆசைகளைக் காட்டும் சில பாடல்கள் விஷ்ணுபுராணத்தில் உண்டு. பித்ரு கீதங்கள் என்று பெயர். இவற்றை அவர்கள் பாடுவார்கள். புரட்டாசி மாத கிருஷ்ணபட்சத்திரயோதசி நாளில் செய்யப்படும் திவசம் மாசி அமாவாசையில் செய்யப்படும் திலதர்ப்பணம் எங்களுக்கு இன்பம் தரும் என்று அவர்கள் பாடுவதாக உள்ள ஒரு கீதம். முன்னோரை வழிபட எந்த வகையிலும் வழியில்லாமல் போனவர்கள் சூரியனை மனதாரப் பிரார்த்தனை செய்து தெற்கு நோக்கி இரண்டு கைகளையும் உயரத்துõக்கி மனதாரச் சரணடையுங்கள். மன மகிழ்வோம் என்று சொல்லப்படுவதாக அமைகிறது இன்னொரு பாடல். மாளயபட்சத்தில் இவை முக்கியம் மாளயபட்ச நாட்கள் 15ல் சில நாட்களுக்கு முக்கியத்துவம் உண்டு. இந்த நாட்களிலாவது திதிதர்ப்பணம் முக்கியம். 1. மகாபரணி ( 03-10-2012) மகாளய பட்சத்தில் பரணி நட்சத்திரம் அமையும் நாள். இது மகாபரணி எனப்படும். 2. மகாவியதீபாதம் (06.10.2012) வியதீபாதம் யோகங்களில் ஒன்று. எல்லா வியாதீபாதங்களும் நீர்க்கடன் ஆற்றுவதற்கு உரியவை. மாளய பட்சத்தில் அமையும் வியதிபாத நாள் மகாவியதீ பாதம் எனப்படும். 3. மத்யாஷ்டமி (08.10.2012) மாளயபட்சத்தில் அமையும் அஷ்டமி திதிநாள் மத்யாஷ்டமி. 15 நாட்களுக்கு இடையில் அமைவதால் சிறப்பு பெறுகிறது. நடுநாயகமாகிறது. 4. சன்யஸ்த மாளயம் (12.10.2012) துவாதசி திதிநாள். மற்ற நாட்களில் 7 தலைமுறைக்கு மட்டும் தர்ப்பணம். இந்த நாளில் அதற்கு மேலும் இருப்பவர்க்குத் தர்ப்பணம் தரப்படும். தம் குடும்பத்தைச் சேர்ந்த சந்நியாசிகளுக்கும் தர்ப்பணம் தருவதால் இது யதிமாளயம் எனப்படும். 5. கஜச்சாயா புண்யகாலம் (13.10.2012) மாளய பட்சத்தில் 13வது திதிநாள். இந்த நாளில் செய்யப்படும் சிரார்த்தத்தை சிறப்பானது என்கிறது விஷ்ணுபுராணம். 6. சஸ்த்ர ஹத பித்ருமாளயம் (14.10.2012) சதுர்த்தசி திதி நாள். 7. மாளய அமாவாசை மிக முக்கியமான நாள். வசதி உள்ளவர்கள் முன்னோர் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டிய நாள். முன்னோரை வழிபட மாதுர் தேவோ பவ: பிதுர் தேவோ பவ: என்ற சாத்திர தொடர் முன்னோர் வழிபாட்டிற்கு பெருமையைக் காட்டுவதாகும். காசி, கயா, திருக்கோகர்ணம், பத்ரிநாத் முதலியன வடநாட்டில் இருக்கும் முன்னோர் வழிபாட்டுத் தலங்கள். ராமேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம் உள்ளிட்ட கடல்துறைகள், காவிரிக்கரையில் உள்ள திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கும்பகோணத்து மகாமக தீர்த்தம், திருவள்ளூர் முதலான தலங்கள் தமிழகத்தில் உள்ள முன்னோர் வழிபாட்டுத் தலங்களாகும். அருகில் இருக்கும் தலத்திற்குச் சென்று நீராடி, நீர்க்கடன் தந்து தானங்களை மகாளய அமாவாசையில் செய்வது நல்லது. தடைகள் தகரும் ஐயமில்லை ஒரு ஜாதகரின் ஜாதகம் பல யோகங்களை உடையதாக இருந்தாலும் பிதுர் சாபமோ தோஷமோ இல்லாமல் இருந்தால் தான் பலன் கிட்டும். பிதுர் தோஷம் எல்லா யோகங்களையும் முறித்துவிடும். பிதுர்களின் ஆசீர்வாதம் எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடும். எனவே மாளய நாட்களில் மகாளய அமாவாசையில் நீர்க்கடன் தருவதும் முன்னோர் அருள் பெறுவதும் முக்கியம். மிகமுக்கியம். ***********************************
குழந்தைகள் உலகமும் ஹைமாவதி பாட்டியும் இயல், இசை, நாடகம் மற்றும் கல்விக்கு அப்பாற்பட்ட பல துறைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தி, அந்த குழந்தைகளின் திறமைகளை வானொலி, தொலைகாட்சி, மேடை நிகழ்ச்சிகளில் வெளிபடுத்தி, அக்குழந்தைகளுக்கு தேசபக்தியையும், தெய்வபக்தியையும் வளர்த்து, 50 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது சுதோதயா சிறுவர் சங்கம். இது வடசென்னை புது வண்ணாரப்பேட்டையில் உள்ளது. இந்த சங்கத்தின் செயலாளர் செல்வி. எஸ்.வி. ஹைமாவதி தன் முதுமையிலும் குழந்தைகளின் குதுõகலத்தில் தானும் ஒரு குழந்தையாக மாறி அவர்களுடன் பழகி வருவதால் அவர் முதுமையிலும் இளமை மனசுடன் இருக்கிறார். தனக்கென்று குடும்பமோ, குழந்தைகளோ இல்லாத தனிமரமாக இருக்கிறோம் என்ற எண்ணம் எப்போதும் அவருடைய மனதில் எட்டி பார்க்காமல் செய்துவிட்டது இவரை சுற்றி மொய்க்கும் குழந்தை நட்சத்திரங்கள். சுதோதயா சங்கக் குழந்தைகளுக்கு இயல், இசை,நாடகம் வழியாக தெய்வ பக்தியையும், ஒழுக்கத்தையும் பயிற்றுவித்து, பக்தி பாடல்கள், சுலோகங்கள் கற்பித்து , பஜனை ஆகிய நற்பணிகளில் குழந்தைகளை ஈடுபட வைப்பதில் பெருமைபடுகிறார் எஸ்.வி. ஹைமாவதி . சுதோதயா சங்கம் உருவானது எப்படி என்ற கேள்விக்கு, அது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு என்று மலரும் நினைவில் மூழ்குகிறார் ஹைமாவதி பாட்டி. அது ஒரு தீபாவளித்திருநாள். அன்று ஊரெங்கும் ஒளிமயம். குழந்தைகளின் சிரிப்பு ஒலி, பட்டாசு சத்தம், வாண வேடிக்கை இவைகளுக்கு இடையே சென்னை மயிலையில் அப்பர் சுவாமிகள் கோயில் அருகில் உள்ள சிதம்பர சுவாமிகள் இரண்டாவது தெரு எட்டாம் எண்ணுள்ள சுதோதயா என்ற வீட்டில் தம்பி, தங்கைகள் ஒன்று கூடி இயல் இசை நாடகத்தினை சிறப்பாக தயார் செய்துகொண்டிருந்தனர். கமலா புதுமைபித்தன், ஆர்.வெங்கட்ராமன் தலைமையில் 23.10. 1957ல் சுதோதயா சிறுவர் சங்கம் உருவானது. அன்று தொடங்கிய இந்த சிறுவர் சங்கம் நண்பர்கள் உதவியுடன் அன்று முதல் இன்று வரையிலும் நல்ல ஆன்றோர்கள், சான்றோர்கள் வாழ்த்துகள், பாராட்டுகளுடன், பல கலைஞர்களின் சந்திப்பு, பல தலைவர்கள் முன்னிலையில் நடிப்பு, கோயில்களில் பாடல் நடனம்போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றிகரமாக பொன்விழாவைக்கடந்து தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது என்கிறார் முதுமையின் தள்ளாமையில் மூச்சிறைக்க. ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்கிறார்: வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் எங்கள் சங்க குழந்தைகள் பங்கு கொண்டு சிறப்பித்த நிகழ்ச்சிகள் எண்ணிக்கை எண்ணிமாளாது. 1960களில் 70 குழந்தைகளுடன் செயல்பட்ட சுதோதயா சங்கம், இந்தச்சங்கத்தை நிறுவிய வேங்கட்ராமன் வசித்த வடசென்னை புது வண்ணாரப்பேட்டைக்கு மாற்றப்பட்டது. மிகவும் பின்தங்கிய பகுதியாக விளங்கிய இந்த இடத்தில் வசித்தவர்கள் இச்சங்கத்தைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகள் வரத்து குறையத்தொடங்கியது. அந்த சமயத்தில் ஒரு முறை சங்க குழந்தைகள் கந்த சஷ்டி விழாவில் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடினர். விழாவிற்கு வந்த அனைவரும் குழந்தைகளை பாராட்டினர். இந்த கந்த சஷ்டி விழாதான் வட சென்னை பகுதியில் வசித்த பெற்றோர்களை தட்டி எழுப்பியது. அதன்பிறகு நிறைய குழந்தைகள் சங்கத்தில் சேர்ந்தனர். இந்தப்பகுதியில் வசித்த பெற்றோர் கல்வியறிவு குறைந்தவர்களாகவும் குழந்தைகள் படிப்பில் ஈடுபடாமல் அந்தக்காலக்கட்டத்தில் இருந்தனர். அவர்களின் குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்தவும், ஒழுக்கம், பண்பு குணங்களை வளர்க்கவும் இந்த சங்கம் பாடுபட்டது. 1975ம் ஆண்டு சென்னையில் தொலைகாட்சி நிலையம் துவங்கப்பட்டபோது முதல் நிகழ்ச்சியாக ‘கண்மணிப்பூங்கா’வில் சுதோதயா சிறுவர் சங்கம் பங்கு கொண்டது. அதன் பிறகு படிப்படியாக வானொலியில் இளையபாரதம், ரத்தினமாலை, வினாடி வினா நிகழ்ச்சிகள் என்று நுõற்றுக்கும் அதிகமான நிகழ்ச்சிகளும் தொலைகாட்சியில் பல நிகழ்ச்சிகளையும் மேடைகளில் வண்ண வண்ண நிகழ்ச்சிகளையும் நடத்தி அனைவரின் பாராட்டைப் பெற்று வளர்ந்தது. வளர்ந்துகொண்டுவருகிறது. சிறுவர் நாடகவிழா, நாடக விழா, நவமணிமாலை போன்ற மேடை விழாக்களில் எங்கள் சங்கம் சாதனைப்படைத்தது. பூவண்ணன் எழுதிய எழுத்து மாறாட்டம் என்ற நாடகத்தினை சென்னையிலும் பல மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தியுள்ளோம். 52 முறை நடைபெற்ற இந்த நாடகத்தினை ஒருமுறை தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதா ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் கண்டு, ரசித்து, சங்கக்குழந்தைகளைப் பாராட்டி, பரிசும் வழங்கியுள்ளார். எங்கள் சங்கம் ஆன்மிக வழிபாட்டிலும், தேசபக்தியிலும் முன்னோடியாக உள்ளது. எங்கள் சங்க குழந்தைகள் கோயில் விழாக்களில் பங்கேற்று தெய்வபக்தி, தேசபக்தி பாடல்களை இன்றும் பாடி வருகின்றனர். காஞ்சி மகாபெரியவர் முன்பு பாடல்கள் பாடி வெள்ளி டாலர்களையும் ஆசியையும் பெற்றுள்ளனர். சமுதாய வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட எங்கள் சங்கம்,ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதியன்று குழந்தைகள் கலைநிகழ்ச்சி, பாராட்டு பரிசு என்று மட்டும் இல்லாமல் நலிவுற்ற மாணவர்களுக்கு சீருடை வழங்கி வருகிறது என்கிறார் ஹைமாவதி. - தேவராஜன். ( தினமலர்- பெண்கள் மலரில் வெளியான என் கட்டுரை) ****************************************

நாகத்தின் தலையில் நாமம் வந்தது எப்படி?

நாகத்தின் தலையில் நாமம் வந்தது எப்படி? /55/ 23.9.2012 (தினமலர் வாரமலர்) ராமன் இலங்கை செல்ல கடலில் பாலம் அமைக்கும் பணியில் வானரங்கள் ஈடுபட்டன. அந்தப் பணியில் அணிலும் ஈடுபட்டது. அதனுடைய சேவையை பாராட்டிய ராமர், அணிலை வாஞ்சையோடு வருடிக்கொடுத்தார். அந்த அடையாளம்தான் அதன் உடம்பில் மூன்று கோடுகளானது. இப்படி ஒரு கர்ணபரம்பரை கதை உண்டு. இக்கதையின் நீதி: நீ பிறருக்கு உன்னால் முடிந்தளவு உதவினால் கடவுளின் அருள் உனக்கு நிச்சயம் உண்டு என்பது தான். அணிலுக்கு மூன்று கோடு வந்தது போல, நல்ல பாம்புக்கு தலையில் நாமம் வந்தது பற்றி செவிவழிக்கதை உண்டு. விஷமுள்ள நாகமான காளிங்கனை அழிக்க வந்தார் கிருஷ்ணர். “ உன் விஷம் யமுனை நதியைப் பாழாக்குகிறது. மாடுகளும் மாடு மேய்ப்பவர்களும் இறக்கவேண்டி வருகிறது. நீ இந்த நதியை விட்டுப் போய்விடு!” என்றார் கிருஷ்ணர். காளிங்கன் மறுத்தது. “இதுதான் எனக்குப் பாதுகாப்பான இடம். நதியை விட்டு நான் போய்விட்டால், என்னை கருடன் எளிதாக வந்து தாக்குவான். அதனால் நான் இங்கேயே இருக்கிறேன். எனக்கு நீரை விஷமாக்குவதில் விருப்பமில்லை. ஆனால், அதற்கு நான் என்ன செய்வது? எங்கே போவது?” என்றது. கெட்டவன் ஏன் உருவாகிறான் என்பது குறித்து நாம் யோசித்துப் பார்ப்பதில்லை. யாருமே பிறந்தவுடன் குற்றவாளி ஆகிவிடுவதில்லை. தேவையும், ஆசையும், சூழ்நிலையும்தான் ஒருவனைக் குற்றவாளி ஆக்குகிறது. இதை நாம் உணர்வதற்குள், அது நமக்குப் பழகிப் போய்விடுகிறது. காளிங்கனுக்கு கருடன்மீது பயம். கருடனால் தனது உயிருக்கு தீங்கு ஏற்படுமோ என்ற அச்சம். அதனால் யமுனை நதியிலேயே இருக்க கிருஷ்ணரிடம் அனுமதி வேண்டியது. அதே நேரம், காளிங்க நாகமானது தனது விஷத்தன்மையால் நதியையே விஷமாக்கிறது. கிருஷ்ணர் இதை உணர்ந்தார். காளிங்கனுக்கும், யமுனைவாசிகளுக்கு நல்லது செய்ய நினைத்த கிருஷ்ணர், தன் திருப்பாதத்தின் சுவடுகளை காளிங்கனின் தலை மீது பதித்தார். விமோசனம் கொடுத்தார். அந்தப் பாதச் சுவடுதான் நாகப்பாம்பின் மீது காணப்படும் நாமம் அடையாளம். பிறருக்கு தீங்கு செய்யும் காளிங்கனை கிருஷ்ணர் கொன்று விட்டதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் கிருஷ்ணர் காளிங்கனுக்கு வாழ்க்கையிலிருந்து விடுதலை அளிக்கிறார். பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் காப்பாற்றப்பட வேண்டியவர்கள்தான் என்பதை கிருஷ்ணர் காளிங்கன் தலைமீது திருபாதம் வைத்து உணர்த்துகிறார். நாமோ தப்பு செய்கிறவர்களை திருத்தாமல், அடிக்கிறோம், உதைக்கிறோம், தண்டனை கொடுக்கிறோம்; சிறையில் தள்ளுகிறோம். மனிதன் மனிதனுக்கு தரும் தண்டனை இது. ஆனால் கடவுளின் தண்டனை விமோசனம் என்கிற விடுதலை! - தேவராஜன். *********************************

கடவுளுக்கு விருப்பமான பக்தி

கடவுளுக்கு விருப்பமான பக்தி/ 54/16.9.12. (தினமலர் வாரமலர்) பக்தி செய்வது என்பது காவி அணிவது, மந்திரங்கள் ஜெபித்துக்கொண்டிருப்பது, பூஜை புனஸ்காரங்கள் செய்வது மட்டும் அல்ல. கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைப்பதும், அவனே சரணம் என்று இருப்பதே கடவுளுக்கு விருப்பமான பக்தி. பக்தி செய்வது என்பது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். கடவுள் என்பது இருக்கா, இல்லையா என்ற விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். இதை விளக்கும் ஒரு சின்னக்கதை: ஒரு ஊரில் இரண்டு பக்தர்கள் இருந்தார்கள். ஒருவர் சாதாரண தொழிலாளி. வீட்டில் சாமிபடத்துக்கு விளக்கேற்றி, கும்பிட்டுவிட்டு அவர் வேலையை கவனிக்க சென்றுவிடுவார். எல்லாம் கடவுள் செயல் என்பதில் உறுதியாக இருப்பவர். நிம்மதியான வாழ்க்கை அவருக்கு. இன்னொருவர் பெரிய செல்வந்தர். பெரிய பங்களாவில் ஆடம்பரமாக வசிப்பவர். தினமும் குளித்து, கோயில் அர்ச்சகரை அழைத்து பூஜை, வழிபாடுகள் செய்பவர். இருந்தும் ஏனோ செல்வந்தர் நிம்மதியில்லாமல் இருந்தார். பூலோகத்தில் இதை கவனித்த நாரதர் விஷ்ணுவிடம் சந்தேகம் கேட்டார். அதற்கு விஷ்ணு, ‘நீங்கள் பூலோகம் செல்லுங்கள். என்னுடைய இரண்டு பக்தர்களையும் சந்தித்து, என்னை விஷ்ணு அனுப்பி வைத்துள்ளார். மேல் உலகில் இப்போது விஷ்ணு ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா? என்று கேட்டு வரச்சொன்னார் என்று சொல்லுங்கள். அவர்கள் சொன்ன பதிலை அப்படியே என்னிடம் வந்து கூறுங்கள். நீங்கள் கேட்ட சந்தேகத்திற்கு அதில் பதில் இருக்கும்’ என்றார் விஷ்ணு. நாரதர் செல்வந்தர் வீட்டுக்குச் சென்றார். பூஜையில் இருந்த அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு விஷ்ணு சொன்னதை அப்படியே சொன்னார். அதைக்கேட்டு கலகலவென சிரித்த செலவந்தர்,‘ அது எப்படி முடியும்? ஊசிதுளையில் யானையை நுழைப்பது நடக்கிற காரியமா?’ என்றார். அடுத்து தொழிலாளி பக்தரிடம் சென்றார் நாரதர். விஷ்ணு சொன்னதைச் சொன்னார். ‘ இதெல்லாம் பெரிய விஷயமா அந்தக்கடவுளுக்கு? ஒரு பெரிய ஆலமரத்தை ஒரு விதைக்குள் அடக்கியவர். இந்த உலகத்தை வாயிக்குள் விழுங்கி காட்டியவர். விஷ்ணுவில் சக்தி அளவிடக்கூடியதா, என்ன?’ என்று சொல்லி வியந்தார். இரு பக்தர்களின் பதிலை அப்படியே விஷ்ணுவிடம் நாரதர் சொன்னார். ‘உண்மையான பக்திக்கு சந்தேகம் வராது. பூர்ண நம்பிக்கையும், இறைவனே கதி என அடைக்கலம் ஆவதுதான். அது அந்த ஏழைக்கு இருந்தது. அதனால் அவன் நிம்மதி இருக்கிறான். செல்வந்தனுக்கு சந்தேகம்; விசாரணை எல்லாம் இருப்பதால் குழப்பம். குழப்பம் உள்ள மனதில் எப்படி நிம்மதி ஏற்படும்?’ என்றார் விஷ்ணு. --- தேவராஜன். ********************************

பஞ்ச மகா புண்ணியம்!

பஞ்ச மகா புண்ணியம்!/ 53/ 9.9.2012 தேவராஜன் (தினமலர் வாரமலர்) நம் சமயத்தில் இல்லறம் என்பது மனித வாழ்வில் இரண்டாம் நிலை. இல்லற வாழ்வில் ஈடுபட்டு அறம் தவறாமல் தான தர்மங்களைச் செய்து வாழ்தல், மக்களைப் பெற்றெடுத்து கல்வி புகட்டி, நன்னிலை அடையச் செய்தல். அவர்களுக்கு மணம் செய்வித்து நல்வாழ்வு வாழச் செய்வதுமான காலம். இந்தக்காலப்பகுதி ஏறகுறையஇருபத்தைந்துக்கு மேற்பட்டு அறுபதுக்கு உட்பட்ட காலம். இந்தக்கால இடைவெளியில் தான் ஒரு இல்லறத்தான் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். பஞ்ச மகா யக்ஞங்கள் செய்வது சிறந்தது என சமயம் கூறுகிறது. தேவர்களின் ப்ரீதிக்காக ஆற்றப்படும் யாகங்கள், பூஜைகள். தேவர்களின் பிரியத்திற்காக நம்மால் முடிந்த ஸ்தோதிரங்கள் சொல்லி துதி பாடுவது தேவ யக்ஞம். இன்வார்த்தைகள் பேசுதல், பிறரை வாக்கால், மனதால், செயலால், துன்புறுத்தாமை, விருந்தோம்பல் முதலியன மனுஷ்ய யக்ஞம். பித்ருக்களுக்கான கடன், அமாவாசை தர்பணங்கள், திதிகள் முதலியன பித்ரு யக்ஞம். வேதம் கற்றல், அதை பிறருக்கு கற்பித்தல், பிரம்ம ஞானத்தை பிறருக்கு எடுத்துரைத்தல் ப்ரம்ம யக்ஞம். எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட கர்மம் பூத யக்ஞம் அதாவது மனுஷ்ய ஜீவனாக இல்லாத ஜீவராசிகளுக்குக்கூட நம் அன்பைத் தெரிவித்து உணவூட்டுகின்ற காரியம். நம் அன்றாட வாழ்வில், நம் ஜீவனத்திற்காக பல நுண்ணுயிர்கள், பூச்சிகள் முதலியன கொல்லப்படுகின்றன. நம் மூச்சுக்காற்றில் பல கிருமிகள் மடிகின்றன. நம் ஆரோக்கிய வாழ்விற்காக நம்முள்ளும் புறமும் வாழும் பல கிருமிகளை நாசம் செய்கிறோம். நடக்கும் போது சிறிய உரு கொண்ட பூச்சிகள் கொல்லப்படுகின்றன. நம் பசிக்காக வெட்டப்படும் மரங்கள், செடிகள், காய்கள் கனிகளில் உள்ள நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றிற்காக செய்யும் பிராயச்சித்த கர்மாவாக பூத யக்ஞம் செய்யப்படுகிறது. தானம் தர்மம் செய்தல் உயர்ந்த பண்பு, புண்ய காரியமாகவும், பலனை எதிர்பார்த்து செய்தாலும் கூட பலன் தர வல்லது என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. அப்படிப்பட்ட தான தர்மங்கள், மனுஷனுக்கு செய்யும் போது, அது மனுஷ கர்மாவாக பாவிக்கப்படுகிறது. தெய்வத்திற்கும் தேவர்களுக்கும் செய்யப்படவேண்டிய கர்மா, யக்ஞங்கள் யாகங்கள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. திருமூலர் தம் திருமந்திரத்தில் யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. எனக்கூறுகிறார். -தேவராஜன். *********************************

இருப்பின் இல்லாமை

இருப்பின் இல்லாமை- 52/2.9.2012/ தேவராஜன் (தினமலர் வாரமலர்) ஒருவர் நோய் காரணமாக இறந்துவிட்டார். தன்னைக் காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பலநாள் பிரார்த்தனை செய்தார். இருந்தும் அவர் பிழைக்கவில்லை. ஒரு மனிதனை நம்பியிருந்தால் கூட அந்த மனிதன் இயன்ற உதவியைச் செய்திருப்பார். காப்பாற்றுவார் என்று நம்பிக்கை வைத்த கடவுள் காப்பாற்றவில்லையே! உண்மையில் கடவுள் என்று ஒருவர் உண்டா உலகில்? இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம் இருக்கிறது, தீயவைகள் இருக்கின்றன. இவைகள் எங்கேயிருந்து வந்தன? இவற்றை தடுக்க கடவுளால் முடியாதா? கடவுளை பார்க்க முடியுமா? அவர் பேசுவதைக் கேட்க முடியுமா? வேறு எப்படி அவரது இருப்பை உணர இயலும்? இப்படி சில சூழ்நிலையில் மனதில் இப்படி கேள்விகள் அறியாமையால் எழுந்து விடுகின்றன! பரிசோதிக்கத்தக்க வகையிலோ, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறையிலோ கடவுளை யாரும் காட்ட இயலாது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் பாலத்தின் பெயர்தான் நம்பிக்கை. இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கைபடி கடவுள் இருக்கிறார் என்பதை உணரலாம். கடவுள் பேசுவதை கேட்பதற்கு இயலாவிட்டாலும், அவர் வழிநடத்துதலை, சொந்த அனுபவங்கள் வழியாக அறியலாம் எதிர்பாராத சில நிகழ்வுகளை வாழ்கையில் கடந்து செல்லும் போது உணரப்படும் அனுபவத்தால் கடவுள் இருக்கிறார் என்பதை உணரமுடியுமே தவிர, விளக்கமாக சொல்ல இயலாது. கடவுள் என்பது ஒரு இருப்பின் இல்லாமை. அதை புரிந்து கொள்ள அறிவு, சிந்தனை எல்லாம் உதவாது. இருட்டு, வெளிச்சம். இதில் இருட்டு என்பது நிரந்தரம். ஆனால் வெளிச்சம் என்பதற்கான எதிர்பதம் தரும் பொருள் அல்ல அது. இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பின் இல்லாமைதான். வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, அதிக ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பல வகைகளில் வெளிச்சத்தை வகைப்படுத்த இயலும். ஆனால் இருட்டை அளக்கவோ, வகைப்படுத்தவோ இயலாது. கடவுளும் இருட்டு போலதான். அதை வரையறுக்க இயலாது. அதே சமயம் ஒரே சமயத்தில் வெளிச்சத்தையும் இருட்டையும் பார்க்க முடியாது. ஒரு இருப்பின் இல்லாமைதான் வெளிச்சமாக அல்லது இருட்டாக இருக்கிறது. வெளிச்சம் இல்லாமை தான் இருட்டு என்பது போல, உலகமும், உயிரினமும் இருக்கும் போது இந்த இருப்பின் இல்லாமையாக அதை படைத்த கடவுள் இருக்கிறார். அப்படி என்றால் கடவுள் இருப்புநிலையில் உலகமும் உயிரினமும் தெரியாது. உலகமும் உயிரினமும் தெரியும் போது கடவுள் தெரிவதில்லை. ஒரே சமயத்தில் இரண்டும் வெளிபடுவதில்லை என்ற தத்துவம் புரிந்தால் எங்கே கடவுள் காட்டு என்று யாரும் கூப்பாடுபோடவேண்டியதில்லை. - தேவராஜன். **************************

சனி, 8 செப்டம்பர், 2012

THIRUKKANNAPURAM திருக்கண்ணபுரத்தின் கதை/ ச. தேவராஜன்

திருக்கண்ணபுரத்தின் கதை/ ச. தேவராஜன் நான் பிறந்து, வளர்ந்து, படித்து, ஆடி திரிந்து இருபதின் இளமை வரை சந்தோஷமாக கழித்தது இந்த ஊரில் தான். இருபதுக்குப் பிறகு, கொஞ்சம் பெங்களூர் நிறைய சென்னை வாசம். இப்போது காஞ்சிபுரம் வாசம். எனது வயதின் பாதி காலம் தொப்புள் கொடி உறவாய் அமைந்தது இந்த ஊர். இருபதுக்குப் பிறகு ஊரின் உறவும், வரவும், தொடர்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே இருந்தது. பண்டிகை நாட்கள், பிறந்த நாள் இப்படி வருகை இருந்தது ஒரு காரணமாக. தந்தை மறைவுக்குப்பிறகு(31.12.2011) திருக்கண்ணபுரம் எனக்கு ஏனோ அந்நியப்பட்டுவிட்டது. அம்மாவுக்காக வருகை இருந்தாலும், அம்மா சென்னைக்கு வந்து விட்டால் அதுவும் இருக்காதோ என்ற வாஞ்சை மனதில் சுட்டது. அந்த தாக்கம் தான் ‘திருக்கண்ணபுரத்தின் கதை’யை எழுத துõண்டியது. என் ஊரைப்பற்றி தெரிந்து கொள்ள நிறைய படித்தேன்; படித்ததை ரசித்தேன்; மகிழ்ந்தேன். இத்தனை பெருமையும் சிறப்பும் கொண்டதா? அப்பாடா வியந்தேன்! என் ஊரின் கதையை ஒரு நாள் என் மகன்(டி.சி. சிவசண்முகம்) படிக்கலாம். பாட்டன் ஊர், அப்பாவின் பிறந்த ஊர் என்று பெருமை அறியலாம் என்பதற்காகவும் இப்பதிவு. அமைவிடம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல், சன்னாநல்லுõர் அருகே நான்கு கிலோமீட்டார் தொலைவில் திருக்கண்ணபுரம் உள்ளது. வடக்கே திருமலைராயன் ஆறும், தெற்கே வெட்டாறும் ஓடிக் குளிர்விக்க இடையே கிழக்கு மேற்காக அமைந்துள்ளது இந்த ஊர். ஊர் சிறப்பு! பூலோக வைகுந்தம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் திருக்கண்ணபுரம். 108 வைணவ தலங்களில் வடக்கே திருவேங்கடம் என்றும், தெற்கே திருமாலிருஞ்சோலைமலை என்றும், திருவரங்கம் மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரம் கீழை வீடு என்றும் அழைக்கப்படுகிறது. கம்பீர கோபுரம்! 95அடி உயரமும் 7 நிலைகளையும் கொண்டு கம்பீரமாய்க் காட்சி தருகிறது. ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவரை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள். சௌரிராஜப் பெருமாள்: திருக்கண்ணபுரக் கோயில் உற்சவருக்கு ‘சௌரிராஜ பெருமாள்‘ என்று பெயர். இவ்வாறு இவர் அழைக்கப்படுவதற்கான வரலாறு மிகவும் சுவையானதும், இறைவன் தீன தயாபரன் என்பதை நிரூபிப்பதாகவும் உள்ளது. ஸ்ரீசௌரி வந்த கதை... பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம்செய்ய இறையிலியாக நிலங்களை மான்யமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். இதற்கு நன்றியாக இறைவனுக்கு அடுத்த நிலையில் மன்னர்களை மதித்து மரியாதை செய்துவந்தனர் கோயில் நிர்வாகிகள். இறைவனுக்கு அணிவித்த மாலையை மன்னனுக்களித்து மரியாதை செய்வர். கோயில் அர்ச்சகர் வழக்கம்போல் ஒரு நாள் உத்சவருக்கணிவித்த மாலையை மன்னரிடம் கொண்டுபோய்க் கொடுக்க அதில் ஒரு தலைமுடியைக் கண்டு அர்ச்சகரிடம் அது பற்றிக் கேட்ட போது, மன்னர் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக ‘தலைமுடி இறைவனுடைய முடிதான்’ என்று கூறிவிட்டார். மன்னன் இதை நம்ப மறுத்து நேராகக் கோயிலுக்குச் சென்றான். உத்சவருடைய தலையிலிருந்த நீண்ட குழற்கற்றையைக் கண்டான். அது உண்மையான முடியா என்றறிய தலையிலிருந்து ஒரு முடியை எடுத்துக் காண்பிக்குமாறு அர்ச்சகரைக் கேட்டான். அவரும் ஒரு முடியைப் பிடித்திழுக்க அந்த இடத்திலிருந்து ரத்தம் பீரிட்டுத் தெறித்தது. அஞ்சி நடுங்கிய மன்னன் தன் தவறினை உணர்ந்தான். திருக்கடவூரில் அபிராம பட்டருக்கு அமாவாசையை பௌர்ணமியாகத் திகழச் செய்த இறைவனின்அருளுக்கு ஒப்ப, இங்கும் அர்ச்சகர் இயலாமைக்கு இரக்கப்பட்டு திருமால் சௌரி முடியுடன் காட்சி தந்தார். அன்று முதல் உத்சவருக்கு தலையலங்காரம் சௌரிமுடியுடன் தான், பெயரும் சௌரிராஜப் பெருமாள் என்று வழங்கப்படலாயிற்று. நடையழகு! *இராவண வதம் முடிந்தபின் அயோத்தி திரும்பும் இராமனைப் பிரிய மனமில்லாது வருந்திய விபீஷணனுக்கு இராமபிரான் தன் நடை அழகைக்காட்டி அருள் செய்த தலம் இத்திருக்கண்ணபுரம் . இதனை நிறுவுவதுபோல் இக்கோயிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சன்னிதி உள்ளது. இராமானுஜருக்கும் தனிக்கோயில் உள்ளது. சக்கரத்தின் பெருமை! *அரக்கர் தொல்லையிலிருந்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்ட முனிவர்களுக்காக பெருமாள் தன் சக்ராயுதத்தைப் பிரயோகித்து’வீகடாக்ஷன்’ என்ற அசுரனை அழித்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் வலக்கரத்தை நீட்டி சக்ராயுதத்தை வீசுவதுபோல் காட்சி தருவது மற்றொரு விசேஷம். முனையதரையன் பொங்கல் வந்த கதை... *முனையதரையன் என்ற பக்தன் ஒருவன் இரவு தான் உண்ணக் கையில் எடுத்த பொங்கலின் நறுமணத்தை வியந்து, இது இறைவன் சுவைக்க வேண்டிய பொங்கல் என்று எண்ணிய மாத்திரத்தில் மானசீகமாக அவனால் அது இறைவனுக்கு நிவேதனம் ஆயிற்று. அடுத்த நாள் காலையில் இறைவன் மேனியில் முந்தைய நாளின் மானசீகமாய் நிவேதனமான பொங்கல் நெய்யோடு வழிந்திருப்பது கண்டு மக்கள் திகைத்ததுடன் அன்று முதல் தினமும் அர்த்தசாம பூஜையின் போது இந்த பக்தன் செய்து தரும் பொங்கலையே நிவேதனம் செய்ய ஏற்பாடாயிற்று. ஆழ்வார்கள் பாடிப்பரவிய தலம் : தமிழ்க் குடும்பங்களில் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டு பாடும் தாய்மார்கள் குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டைத்தான் பாடுவார்கள் ‘மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே‘ என்று தொடங்கி 10 பாசுரம் பாடியுள்ள குலசேகர ஆழ்வார் இத்திருத்தலத்து பெருமாளைத்தான் தாலாட்டிப் பாடியுள்ளார். ‘சிலைவலவா சேவகனே‘ என்றும், ‘ஏ மருவும் சிலை வலவா‘ என்றும் ‘ஏ வரி வெஞ்சிலை வலவா‘ என்றும் இராமபிரான் வில்லாற்றலைத்தான் புகழ்ந்து பாடுகிறார். கண்ணனைக் குழந்தையாகவும் தன்னை யசோதையாகவும் பாவித்து கண்ணனை சீராட்டி, நீராட்டி தாலாட்டிப் பெரியாழ்வார் பாடும் பாசுரங்கள்தாம் பிற்காலப் பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கியத்திற்கு வித்திட்டது. பிள்ளைத்தமிழில் கூறப்படும் 10 பருவங்களில் செங்கீரைப் பருவம் தவழ்ந்துவரும் குழந்தை தலை நிமிர்த்தி முன்னும் பின்னும் ஆடும் அழகைப் பாடுவதாகும். பெரியாழ்வாரும் இத்தலத்து இறைவனை அழைத்து, ‘கண்ணபுரத்தமுதே ஆடுக செங்கீரை ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே‘ என்று பாடுகிறார். தந்தை பாடி மகிழ்ந்த அதே கண்ணபுரப் பெருமாளை மகள் கோதை நாச்சியாரும் ’நாச்சியார் திருமொழி’யில் கூடலிழைத்துப் பார்த்துப் பாடுகிறாள். தான் எண்ணிய எண்ணம் நிறைவேறுமா என்பதைக் கூடலிழைத்துப் பார்க்கும் வழக்கம் உண்டு. கோதையும் தான் கண்ணனை மணத்தல் சாத்தியமா என்றறிய ‘காட்டில்வேங்கடம் கண்ணபுரநகர் வாட்டமின்றி மகிழ்ந்துறைவாமனன் ஒட்டாரவந்து என்கைப்பற்றி தன்னோடும் கூட்டுமாகில் நீகூடிடுகூடலே‘ என்று பாடுகின்றாள். திருக்கண்ணபுரத்தைப் போற்றி அதிக எண்ணிக்கையில் பாசுரங்கள் பாடியிருப்பவர் திருமங்கை ஆழ்வார்.100க்கும் மேற்பட்ட பாசுரங்கள் இவர் பாடியவை. நம்மாழ்வாரும் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். பூலோக வைகுந்தம் ! *திருமால் இத்தலத்தில் எட்டு அக்ஷரங்களிலும் உருக்கொண்டு உறையும் தலமாதலால் ‘அக்ஷ்டாக்ஷர மகா மந்திர ஸித்தி ஷேத்திரம்‘ என்று பேசப்படுகிறது. பூலோக வைகுந்தம் என்பதால் இங்கு சொர்க்க வாசல் தனியாகக் கிடையாது. திருவிழாக்கள்: 15 கி.மீ.தூரத்திலுள்ள திருமலைராயன்பட்டினக் கடற்கரையில் மாசி மாத பௌர்ணமி தினத்தில் பெருமாளைத் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசிமாதத்தில் பிரம்மோத்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாதப் பிறப்பு, ஏகாதசி மாதத்தில் இரண்டு நாள்களில் திருமஞ்சனமும் உத்சவர் புறப்பாடும் உண்டு. இத்தலத்து அமாவாசை உத்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று. விபீஷணனுக்கு பெருமாள் தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தது ஒரு அமாவாசை நாளில் என்பதை நினைவுகூறும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் திருமஞ்சனம் செய்து சௌரிமுடி அணிவித்து உற்சவர் புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. துயர் துடைக்கும் ஊர்! ‘பாதம்நாளும் பணியத்தணியும்பிணி ஏதம்சாரா எனக்கேலல் இனியென்குறை? வேதநாவர்விரும்பும் திருக்கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லலில்லையே “இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில் சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே” திருவாய்மொழி 9-10-10 (3665) திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே எனது துயர்கள் எல்லாம் பாழடைந்துவிட்டன. **************************************** தமிழ் வருடப்பிறப்பு திருமஞ்சனம் ஒவ்வொரு வருடமும் தமிழ் வருடப்பிறப்பு அன்று மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். சரியாய் நண்பகல் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த உபயம் வம்சாவளியாக தொடர்ந்து முதலியார் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். என் தந்தை இரா. சண்முக முதலியார் மற்றும் என் தந்தையின் பங்காளி பஞ்சு முதலியார் இரு குடும்பமும் ஒரு ஆண்டு விட்டு ஒரு ஆண்டு என சுழற்சி முறையில் உபயம் செய்து வருகின்றனர். என் பெரியப்பா பஞ்சு முதலியார் மறைவுக்குப் பிறகு அவரது மகன் மணி என்கிற சுப்பபிரமணியன் செய்து வருகிறார். என் தந்தை இரா. சண்முக முதலியார் மறைவுக்குப்பிறகு அவரது மகன்களாகிய ச. ராமகிருஷ்ணன், ச. முத்துராமன், ச. லட்சுமணன், ச. தேவராஜன் (நான்), ச. சந்தானகிருஷ்ணன் செய்து வருகிறார்கள். *********************************************** புராணமும் திருக்கண்ணபுரமும் பாத்ம புராணத்தின் ஐந்தாவது காண்டத்தில் 96 முதல் 111 வரை உள்ள அத்தியாயங்களில் இத்தலம் விதந்து விதந்து பேசப்படுகிறது. விரைந்துமோட்சம் அளிக்க வல்லவர் யாரென்று நைமி சாரண்ய முனிவர்கள் ஒருங்கே திரண்டு ஸு த முனிவரைக் கேட்க, அவர் இத்தலத்துப் பெருமையைப் பரக்கப் பேசுகிறார். வஸு என்னும் ஒரு மஹராஜன் வானத்தில் பறக்கும் சக்தி பெற்றிருந்ததால், அவன் உபரிசரவசு என்றழைக்கப்பட்டான். ஒரு காலத்தில் தேவர்கட்கும் அசுரர்கட்கும் நடந்த யுத்தத்தில் தோற்றுப்போன தேவர்கள் உபரிசரவசுவின் உதவியை நாட இம்மன்னின் உதவியால் தேவர்கள் வெற்றிபெற்றனர். போர் முடிந்து திரும்பிய வசு தாகவிடாய் தீர்க்க கிருஷ்ணாரண்யத்தில் இறங்க அங்கு (“ஒரு விரலில் தம் உலர்ந்த சரீரத்தை உலர்த்துமாப் போல்”) மெலிந்த தேகத்தினரான முனிவர்கள் தவம் செய்துகொண்டிருக்க, அவர்களைச் சாமைக் கதிர்கள் என்று எண்ணிய உபரிசரவசுவின் வீரர்கள் தம் வாளால் கொய்ய, முனிவர்களின் அபயக் குரல் கேட்ட எம்பெருமான் 16வயது பாலகனாய் வந்து படையைத் துவம்சம் செய்ய அசுரர்களை வென்ற நமக்கு இச்சிறுவன் ஒரு பொருட்டோ என்றெண்ணிய உபரிசரவசு பல அஸ்திரங்களையும் ஏவி அதிர்ந்து போக இறுதியில் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து நாராயணஸ்திரத்தை ஏவ அது சுழன்று சுழன்று அப்பாலகனின் காலடியில் சரணடைய தன்னோடு போரிட்டவன் மஹாவிஷ்ணுவே என்றறிந்த வஸு மன்னன், பாலகனின் பாதத்தில் வீழ்ந்து பாவமன்னிப்பு வேண்டினான். என் பக்தர்களான மஹரிஷிகள் உலர்ந்த மாமிசத்தை உடையவர்களாய் தபஸ் பண்ணி இந்த விமானத்தைச் சேவிப்பதால் இதற்கு உத்பலவதாக விமானம் என்றும் இங்கு ஸாநித்யம் கொண்ட எனக்கு சௌரி என்றும் திருப்பெயர். உமது தவறை மன்னித்தோம். நீ வேண்டிய வரம்கேள் என்று பெருமாள் அருள, தன் மகளை திருமணம் புரிய வேண்டும் என்று மன்னன் கேட்க, மாயவனும் அதற்கிசைந்து அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு. ************************************** மூலவர் நீலமேகப் பெருமாள், சௌரிராஜன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். உற்சவர் சௌரி ராஜாப் பெருமாள் தாயார் கண்ணபுர நாயகி தீர்த்தம் நித்ய புஷ்கரிணி விமானம் உத்பாலவதாக விமானம் காட்சி கண்டவர்கள் கன்வ முனிவர், கருடன், தண்டக மஹரிஷி உபரிசரவசு. ************************************ சிறப்புக்கள் இத்தலம் எண்ணற்ற சிறப்புக்களைக் கொண்டது. விமான தரிசனம் செய்ய முடியாத கோயில்! விமான தரிசனம் சுவாமியை தரிசனம் செய்த பலன்களைத் தரக்கூடியது. கோயில்களில் கருவறைக்கு மேல் இருக்கும் விமானத்தை சுவாமியின் வடிவமாகவே கருதுவர். ஆனால் திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயிலில் கருவறைக்கு மேல் உள்ள விமானத்தை தரிசனம் செய்ய முடியாது. உத்பலாவதகம் எனப்படும் இவ்விமானத்தில் மகரிஷிகள் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, இவ்விமானத்தை தரிசனம் செய்ய முடியாத வகையில் சுற்றிலும் உயரமான சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. இத்தலம் திவ்யதேசங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது விபீஷணர் சன்னதி! ருவாரூர் மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயில் ராமபக்தரான விபீஷணருக்கு தனிசன்னதி உள்ளது. மனித அவதாரமாக வந்த மகாவிஷ்ணுவிற்கு சேவை செய்த விபீஷணர், அவரது தெய்வ நடையைக் காண வேண்டுமென அவரிடம் வேண்டினார். மகாவிஷ்ணுவும் அவ்வாறே நடந்து காட்டினார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் விபீஷணருக்கு, விஷ்ணு நடையழகு காட்டும் நிகழ்ச்சி ஒவ்வொரு அமாவாசையன்றும் நடக்கிறது. சுவாமியின் நடையழகை தரிசிப்போரின் பாவம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 1. முக்தியளிக்கும் ஸ்தலங்களான வேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம், தோத்தாத்ரி, ஸாளக்கிராமம், பத்ரிகாச்ரமம். நைமிசாரண்யம் இவற்றில் ஒவ்வொன்றிலும் அஷ்டாச்சரத்தின் ஒவ்வோர் எழுத்தாக இயங்கும் பெருமாள் இவ்விடத்து திருவஷ்டாச்சர எழுத்துகளின் மொத்த சொரூபமாக இலங்குகிறார். இதைப்பற்றி பாத்ம புராணத்தில் 5 ஆம் காண்டத்தில் 110வது அத்தியாயத்தில் 44, 45, 46 ஆம் சுலோகங்களில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிஞ்ச முஷ்ணம் தோதபர்வம் ஸாளக்கிராம புஷ்கரஞ்ச நரநாரயணச்ரமம் நைமிசம் சேதிமே ஸ்தாநா ந்யஷ்டௌ முக்தி பரதாநிவ ரதேஷ் வஷ்டாசஷரை கை வர்ணுமுர்திர், வஸாம்யகம் திஷ்டாமி க்ருஷ்ண சேஷத்ர புண்ய ஸ்பதக யோகத அஸ்டாச் சரஸ்யை மந்தரஸ்ய சர்வாட்ச்சர மயந்த்ஸதா. 2. சௌரி, சௌரி என்னும் சொல்லுக்கு யுகங்கள் தோறும் அவதாரம் எடுப்பவன் என்பது பொருள். 75 சதுர்யுகங்களைக் கொண்டது. இந்த ஸ்தலம் என்றும் கூறுவர். 3. இவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார். வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் “ஸ்திதி காத்தருளும்” நிலையில் மஹாவிஷ்ணுவாகவும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரை புஷ்ப மத்தியில் ச்ருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும், அன்றே விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் (3 3/4 மணி நேரம்) ஸம்ஹாரம் செய்யும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு. 4. நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காணவேண்டும் என்று வீபிஷணர் கேட்க, கண்ணபுரத்தில் காட்டுவோம் வாவென்ன வீடணணுக்கு நடையழகு காட்டியதாக ஐதீகம். இன்றும் அமாவாசை தோறும் இந்நிகழ்சியை சித்திரிக்கும் திருவிழா இங்குண்டு. 5. தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஸ்தலம். இவ்வமைப்புள்ள இடத்தில்தான் அஷ்டாச்சர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம். 6. கிருஷ்ணாரண்யம் என்றும், தண்டகாரண்யம் என்றும் இத்தலம் வழங்கப்படும். 7. இத்தலத்திற்கு எதிரில் இரண்டு யோஜனை தொலைவில் (ஒரு யோஜனை என்பது 10 மைல்) ஒரு மலை கடலுள் அமிழ்ந்துள்ளது. கருடனின் வடிவங்கொண்ட இம்மலை கருடபர்வதமென்றே அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் இறக்கைகளை வெட்ட இம்மலை மட்டும் கடலுக்குள் மூழ்கி இந்திரனுக்குத் தப்பித்து விட்டதாம். இவ்விதம் தப்பித்ததால் இறுமாப்புக் கொண்ட கருடன் இறுமாப்போடு இங்குமங்கும் பறக்க, இத்தலத்தின் விமானத்தின் மீது பறக்க, இத்தலத்து பாலகர்கள் இவன் நிழலைப் பற்றியிழுக்க கீழே விழுந்த கருடன் தன் தவறு உணர்ந்து கருட பர்வதத்தின் மீதமர்ந்து இப்பெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி மோச்சம் பெற்றான், என்றும் இத்தலத்தைப் பற்றி புராணங்கள் கூறும். 8. சித்த சரவசு என்னும் பாண்டிய மன்னன் மணலூரைத் தலநகராகக் கொண்டு ஆண்டான். அவன் தனது மகள் உத்தமையுடன் தாமிரபரணியில் நீராட இறங்கும் தருவாயில் திடீரென்று வெள்ளம் உயர்ந்து உடனே வடிந்து காணாமல் போய்விட்டது. மன்னனைக் காணாது அவன் மனைவி மக்களும், மந்திரி பிரதானிகளுந் திகைத்து நிற்க, பாண்டியனின் அவைக்கு வந்த சகல லோக சஞ்சாரியான அகத்தியரின் சீடர், மந்திரி பிரதானிகளை நோக்கி, மன்னனும் அவன் மகள் உத்தமையும் பிரம்ம லோகத்தில் இருக்கிறார்களென்று பின்வரும் நிகழ்வைச் சொன்னார். கங்கை முதலான சகல தீர்த்தங்களும், தம்மிடம் பல தரப்பட்ட மக்களும் நீராடி தமது புண்ணியங் குறைந்து பாவம் பெருக்கெடுத்துவிட்டதெனவும், இம் மாசினைப் போக்க யாதாயினுமோர் உபாயங்கூறு மென்றும் பிரம்மாவைக் கேட்க, சகல பாவங்களையும் போக்கும் பெருமாள் எழுந்தருளியுள்ள கண்ணபுரத்தில் உள்ள நித்ய புஷ்கரணியில் நீராடி அப்பெருமானைத் துதித்தால் எல்லாப் பாவங்களும் உடனே தீருமென்று பிரம்மா உரைக்க, சகல தீர்த்தங்களும், இப்புஷ்கரணியில் புகுந்தன. அப்போது தாமிரபரணி தீர்த்தமும் இந்த புஷ்கரணியில் புக அதனால் பூலோகத்தை அடைந்த பாண்டியனும் அவன் மகளும் இப்பெருமானை வழிபாடு செய்து நிற்க, இவ்வரலாறு உணர்ந்த சோழன், பாண்டியனை எதிர் கொண்டழைத்து தன் அரண்மனையில் விருந்தினனாய்த் தங்க வைத்து இறுதியில் பாண்டியன் மகள் உத்தமையை சோழராஜனின் மகன் சுசாங்கனுக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் வரலாறுண்டு. பாண்டி நாட்டின் வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நிகழ்ச்சி ஒரு ஆய்வுக்குரிய விஷயமாகும். 9. வசு என்னும் மன்னன் (உபரிசரவஸு ) விஸ்வகர்மாவைக் கொண்டு இக்கோயிலை கட்டுவித்தான். அவன் புத்திரப் பேறு இன்மையால் இத்தலத்தில் அசுவமேதயாகம் செய்யயாக குண்டலியிலிருந்து தோன்றிய ஒரு புருஷன் இரண்டு செங்கழு நீர் மலர்களைத் தர அவற்றை முகர்ந்த வசுவன் மனைவி சுந்தரி அழகிய பெண்மகவைப் பெற்று பத்மினி (பதுமினி) என்று பெயரிட்டழைக்க, அப்பெண்தான் சௌரிராஜனையே மணவாளனாக ஏற்க வேண்டுமென்று, தவமியற்ற பெருமாளும் அவ்விதமே செய்து பத்மினியைத் தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார் என்பது பாத்ம புராணம் செப்பும் செய்தியாகும். 11. இவ்வூரில் வாழ்ந்த “முனைய தரையர்” என்பவர், பெருமாளுக்கு வேண்டிய திருப்பணிகளை செய்து உண்மை பக்தராயிலங்கி வந்தார். அவர் பெருமாளுக்கு திருவாராதனம் செய்யாமல் ஒரு நாளும் உண்பதில்லை. அவ்வாறிருக்கையில் ஒரு நாள் வெளியூருக்குச் சென்று விட்டு அர்த்த சாமத்தில் திரும்ப, அவர் மனைவி ஆக்கி வைத்த பொங்கலை மானஸிகமாக இறைவனுக்குப் படைக்க, மறு நாள் காலை கோவில் திறக்கும் போது பொங்கல் மணம் எங்கும் வீச, தம் அடியார் பொருட்டு பகவான் அப்பொங்கலை உகந்து ஏற்றுக் கொண்டார் என்றும் முனியோதரம் பொங்கல் என்றே பெயர் கொடுத்து, இன்றும் அர்த்த சாமத்தில் இப்பெருமானுக்கு முனியோதரம் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 12. இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்தைப் போன்று மதில்கள் இருந்தன என்றும் சோழ மன்னன் ஒருவன் இம்மதில்களை இடித்து கருங்கற்களை அருகிருந்த இன்னொரு கோயிலுக்கு எடுத்துச் சென்றான் எனவும். இது கண்டு மனம் வருந்திய இப்பெருமானின் பரம பக்தர் அறையர் என்பர் “பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது பொய்த்ததோ என்று தம் கையில் உள்ள தாளத்தை பெருமானின் மீது விட்டெறிய, பெருமாள் தமது பிரயோகச் சக்கரத்தை யேவி, மன்னனைக் கொன்றார். இதனால் இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டு புண்ணான “நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம். 6 மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான். 13. விருத்திரன் என்னும் அரக்கன் தேவலோகத்தையழிக்க அவனைக் கொன்று இந்திரனுக்கு மீண்டும் இந்திர போகத்தை இப்பெருமாள் அளித்தார் என்றும் புராணம் கூறும். 14. இப்பெருமாளைப் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்களிலும், திருமங்கையாழ்வார் 100 பாசுரங்களிலும், குலசேகர ஆழ்வார் 10 பாசுரங்களிலும், ஆண்டாள் ஒரு பாசுரத்தாலும், பெரியாழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். 15. 108 திவ்ய தேசங்களில் “கீழைவீடு” என்று குறிக்கப்படுவது இத்தலம்தான். 16. இங்கே ஸ்ரீமணவாள மாமுனிகள் ஓராண்டு காலம் எழுந்தருளியிருந்து மங்களாசாசனம் செய்தருளினார். ****************************************** ஆண்டாளும் திருக்கண்ணபுரமும் நோய் தீர மருந்து... செங்கமலக்காவிலுள்ள சீராரிளங்கோதை அங்கதனை நோக்கி அடி வணங்கி தெண்டனிட்டு என்னுள்ளம் நோய்தீர மருந்துண்டோ சொல்தோழீ என்னஉண்டுண்டு ஆய்ச்சியரே ஒரு மருந்து சொல்கிறேன் கேள் தென்னன்குறுங்குடி திருமாலிருஞ்சோலை யென்னும்சுக்கைத்திகழத்தட்டி ஸ்ரீசைலேச பாத்திரத்தில் சேர்த்து வஞ்சி நகரமென்னும் இஞ்சியை நறுக்கி மண்டங்குடி என்னும் வஸ்திரத்தில் வடிகட்டி பிருந்தாவனமென்னும் அடுப்பை வைத்து திருவேங்கடமென்னும் விறகை முறித்துவைத்துஓம் நம: என்னும் உமியைத்தூவி திருநீர்மலையென்னும் நெருப்பை மூட்டிதிருமாமணிக்கூடத்தில் இறக்கி வைத்து திருவாய்மொழி என்னும் தேனைக்கலந்துஅமலனாதிபிரான் என்று அழுத்தி பிசைந்து கண்ணபுரம் என்று கலக்கி எடுத்துச் சாப்பிட்டால் இந்நோய் தீருமம்மா ஆண்டாள் சொல்வது இது நல்ல மருந்து தோழீ : இதை எங்கிருந்து நீ கொண்டு வந்தாய்? இது ஊரில் இல்லாத மருந்து உல்கோர் அறியாத மருந்து ஆழ்வார்களும் ஆசார்யர்களும் விரும்பும் மருந்து இது பற்றற்ற ஞானியர் பருகும் மருந்து பாகவதோத்தமர்கட்குகந்த மருந்து நாராயணனே நமக்கே பறைதருவானென்று பாடிப்பறைகொள்ளும் மருந்து போய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில்தூசாகும் மருந்து செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமாலால்எங்கும் திருவருள் பெற்று இன்புறும் மருந்து எருதுக்கொடியானும் பிரமனும் இந்திரனும் மற்றும் யாரும் அறியாத மருந்து நோய் மூப்பு ,பிறப்பிறப்பு பிணி வீயுமாறு செய்யும் மருந்து கொண்டபெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை என்பவர்கள் கருதும் மருந்து ஊரிலேன்காணியில்லை உறவு மற்றொருவரில்லை பாரில் நின் பாத மூலம் பற்றினேன் என்பவர்கள்பகரும் மருந்து அணியனார்செம்பொன் ஆய அறுவரை அனைய கோயில் மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கும் மருந்து தாயே தந்தையென்றும் தாரமே கிளையென்றும்நோயில்படவொட்டாத மருந்துஇம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் சேமம் இன்னோய்க்கும் ஈதே மருந்துஉன்னுள்ளம் நோய் தீர்வதற்குஇதுவேஉகந்த மருந்தம்மா ** ********************************** * காளமேக புலவரும் திருக்கண்ணபுரமும் கடவுளிடமே இந்தக் கவிதை விளையாட்டை நிகழ்த்தியவன் அவன். ஒருமுறை அவன் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கனமழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தான். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவன் தீவிர சிவபக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளானே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், ‘எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்‘ என்றனர். காளமேகம் பார்த்தான். ‘சரி, உங்கள் பெருமாளைத்தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ...‘ என்று சொல்லி ‘கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்‘ என்று முதலடியைப் பாடினான். தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவனை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, ‘என்ன சொன்னேன்.? என் கடவுப்ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்: ‘கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்‘ என்று சொல்லி நிறுத்தினான். வைணவர்கள் திகைத்து ‘அதெப்படி?‘ என்றார்கள். ‘ஓன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொளலையாதே‘ என்று புதிரை விடுவித்தான். ’சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?’ என்று விளக்கம் சொன்னான். கன்னபுர மாலே .....கடவுளிலும் நீ அதிகம் உன்னை விட நான் .....அதிகம்- ஒன்று கேள் உன் பிறப்போ பத்தாம் .....உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை என் பிறப்போ .....எண்ணத் தொலயாதே. கண்ணபு கோயில் கதவடைத்து... கண்ணபுரம் கோயில் கதவுஅடைத்துத் தாழ் போட்டார் மண்ணை உண்டார் வெண்ணெய்உண்ட மாயனார் என்னும் சிரக்கப் புரைஏந்திச் செங்காட்டில் ஈசர் இரக்கப் புறப்பட்டார் என்று. திருக்கண்ணபுரம் சவுரி நாராயணப் பெருமாள் பிறந்த நாள் இதுவாம் எனப் பாடியது: உத்திரத்துக்கு ஓர்நாள் உரோகணிக்குப் பத்தாம்நாள் சித்திரைக்கு நேரே சிறந்தநாள் - எத்திசையும் கார்ஆரும் பூஞ்சோலைக் கன்னபுரம் வாழ்சவுரி நார யணன்பிறந்த நாள். ****************************************** எழுத்தாளர் சாண்டில்யனும் திருகண்ணபுரமும் பெரும் புகழ் பெற்ற சரித்திர நாவலாசிரியர் திருக்கண்ணபுரத்தில் தமிழ் இலக்கிய, இலக்கணம் படித்துள்ளார். சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன. பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் < நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் < உள்ள பச்சையப்பா < மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி < செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் <தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் <இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் <உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார். தொழில் வாழ்க்கை கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி <நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் <எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் <வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் ஆரம்ப முதல் சம்ஸ்கிருதமே படித்திருந்தவருக்கு, தமிழின் இந்த ருசி பிடித்துப் போயிற்று. முப்பதிலிருந்து ஒரு நான்கு வருஷங்கள் திருக்கண்ணபுரம் ஸ்ரீனிவாசாச்சாரியார் என்ற வித்துவானிடம் தமிழ் பயில ஆரம்பித்து, திருவாய் மொழி ஆயிரமும், நம்பிள்ளையின் முப்பத்து ஆறாயிரப்படி வியாக்கியானத்துடன் மற்றும் பல தமிழ்க் காப்பியங்களையும் கற்றார் ***************************************** திருக்கண்ணபுரமும் வடுவூர் சிலை அழகும் திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு என்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில் கூறுவார்கள். முதலிரண்டு விஷயங்களும் பெருமபாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். அது என்ன வடுவூர் சிலை அழகு....அறிந்து கொள்ள தொடருங்கள்... திருவாரூர் - தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல்வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ள ஊர் வடுவூர். இதில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் சிலையைத்தான் மக்கள் இப்படி அழைக்கிறார்கள். மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ? பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார். வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு, ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம். இந்த சிலை இங்கு வந்ததுக்கு கூறப்படும் செவி வழிக் கதை, ஸ்ரீ ராமர் வனவாச காலத்தின் முடிவில் அயோத்திக்கு செல்ல ஆயத்தமாகிறார். அப்போது காட்டில் உள்ள ரிஷிகள் ராமர் மீது கொண்ட பிரியத்தால் தங்களுடனே ராமர் இருக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்களின் அன்பு கட்டளையில் சிக்குண்ட நிலையில் ராமர், தனது உருவத்தை சிலையாக வடித்து ஆசிரம வாயிலில் வைக்கிறார். அடுத்த நாள் அங்கு வரும் ரிஷிகள் சிலையின் அழகில் மயங்கி நிற்கிறார்கள். அப்போது ராமர் தங்களுடனேயே தங்க மீண்டும் வேண்டுகிறார்கள். இதை மறுக்க முடியாமல் தவிக்கும் ராமர், நான் வேண்டுமா? இந்த சிலை வேண்டுமா ? என்கிறார். ஏற்கனவே சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், சிலையை வாங்கிக் கொள்கிறார்கள். இதை பல ஆண்டுகளுக்கு பிறகு திருக்கண்ணபுரம் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சிலை, இத்துடன் இருந்த சீதை, லட்சுமணர், பரதன், ஹனுமன் சிலைகளையும் தலைஞாயிறு என்ற ஊரில் உள்ள ஒரு ஆலமரத்துக்கு அடியில் புதைத்து வைக்கிறார்கள். கால ஓட்டத்தில் இது பற்றி மக்கள் மறந்து விட்ட நிலையில், அப்போது தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி பரம்பரை மன்னர் ஒருவர் கனவில் ராமர் வந்து, ஆலமரத்து அடியில் தான் புதையுண்டு இருக்கும் தகவலை சொல்லி, தன்னை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறார். திடுக்கிட்டு எழும் அந்த மன்னர், அந்த நள்ளிரவு நேரத்தில் தனது படைகளுடன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு செல்கிறார். சிலைகளை மண்ணில் இருந்து வெளியில் எடுக்கிறார். அப்போது மன்னரை சூழ்ந்து கொள்ளும் அப்பகுதி மக்கள் சிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். அவர்களை சமாதானம் செய்து, பரதன், லட்சுமணர் சிலைகளை மட்டும் அங்கே பிரதிஷ்டை செய்கிறார். சிலைகளைக் கொண்டு தஞ்சாவூர் செல்லும் வழியில் வடுவூரில் தங்குகிறார். இது பற்றி தகவல் அறிந்து இந்த ஊர் மக்கள், ராமர் சிலையை அங்கிருந்த கோபாலன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்ய வேண்டுகிறார்கள். மன்னர் மறுக்கவே, பக்தர்கள் சிலர் கோயில் கோபுரத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்போம் என்றதும், மன்னர் சம்மதிக்கிறார். அன்று முதல் கோபாலன் கோயில் ஸ்ரீ கோதண்டராமர் கோயிலாக மாறியது. (இன்றும் இதை பெருமாள் கோயில் என்றே அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்). சிலையில் உள்ள கலை நுணுக்கம், பார்த்தவரை மயக்கும் மந்தகாச புன்னகை, மக்கள் கொண்டுள்ள பக்தி இவற்றைக் கொண்டு மேற்சொன்ன செவிவழிச் செய்தி உண்மைதான் என்கிறார்கள் ஊர் பெரியவர்கள். மேலும் ராமர் சிலைக்கு அருகில் வைக்க லட்சுமணர் சிலை வடிக்கப்படுகிறது. இது பெண் வடிவமாக அமைந்து விடுகிறது. இதனால் அந்த சிலையை அருகில் அழகிய சுந்தரி அம்மன் (பிடாரி கோயில்) என்று பிரதிஷ்டை செய்துள்ளார்கள். வேறு லட்சுமணர் சிலை வடிக்கப்பட்டு, தற்போது ஸ்ரீ கோதண்ட ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர், ஹனுமன் சமேதராய் காட்சியளிக்கிறார். இதை கண்வ மகரிஷி, குலசேகர பெருமாள் மற்றும் பல ஆன்மீக பெரியோர்கள் தரிசித்துள்ளனர். ****************************************** அரசனும் திருக்கண்ணபுரம் தாசியும் தனிப்பாடல்கள் என்ற வகையில் நாம் சாதாரணமாகக் கேள்விப் படாத பெயர்களும் பாட்டுக்களும் காணப்படுகின்றன. இவற்றின் கால கட்டத்தை அறிவது கஷ்டம் தான். அவசியமும் இல்லை. ஆனால் இவையெல்லாம் 17, 18-ம் நூற்றாண்டுகளில் சிற்றரசர்கள் ஆண்டுவந்த காலகட்டத்தியவையாக இருக்கும். முனையதரையன் என்ற அரசனுக்கு திருக்கண்ணபுரம் தாசி சொல்கிறாள்: இன்றுவரி லென்னுயிரை நீ பெறுவை இற்றைக்கு நின்று வரிலதுவும் நீயறிவை - வென்றி முனையா கலவி முயங்கியவா றெல்லாம் நினையாயோ நெஞ்சத்து நீ. ********************************************** ராமநந்தீஸ்வரம் ஸ்ரீராமநாதர் கோயில் மாரத வீரர் மலிந்த நன்னாடு, மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு” என்று பாடிய பாரதி இறுதியில், “பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே போற்றுவம் ஈதை எமக்கிலை ஈடே” என்று முடிக்கிறான். உலகின் பழைமையான இதிகாசங்களும், புராணங்களும், உபநிஷத்துகளும், இவற்றையெல்லாம் விட முக்கியமாக நாலு வேதங்களும் ஆறு சாஸ்திரங்களும் இந்தியாவில்தான் தோன்றின. பல முனி ஸ்ரேஷ்டர்கள் வாழ்ந்து இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாசங்களை எழுதினார்கள். இது ஒரு கர்ம பூமி என்பது அறிஞர்கள் கூற்று. பெருமாளின் ஒன்பது அவதாரங்களும், ஈசனின் திருவிளையாடல்கள் அறுபத்திநான்கும் இங்குதான் நடைபெற்றன. பெருமாளின் நிறைவான அவதாரங்களாய்க் கருதப்படுவது, இராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமுமே. இராமாவதாரத்தில் பால காண்டம் அயோத்தியா காண்டம் தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகள், நிகழ்வுகள் எல்லாம் விந்திய மலைக்குத் தெற்கில் நடந்தவை. சீதையுடன் கானகம் வந்தது, சீதை இராவணனால் அபகரிக்கப்பட்டது, வாலி வதம், அனுமானின் வருகை, இராவண வதம், பிறகு அயோத்திக்குத் திரும்பிச் சென்று பட்டாபிஷேகம் ஆகும் வரை நிகழ்வுகள் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் நடந்தவை. இராமன் இலங்கைக்குச் செல்லப் பாலம் கட்டியது, இராமேஸ்வரத்தில் மற்றும் அநேகத் தலங்களில் பூஜித்தது, எல்லாம் நம் தமிகழகத்தில் நிகழந்தவையே. இராமன் ஓர் அவதார புருஷன் என்றாலும், அவன் ஒரு சாதாரண மனிதனாக நடமாடி வாழ்ந்து காட்டினான். இராவண வதத்துக்கு முன்னும் பின்னும், இராமனும் மற்றும் அநேக இராமாயண கதா பாத்திரங்களும் சிவன் கோவில்களுக்குச் சென்று ஆங்காங்கே சிவ பூஜை செய்தனர் என்று அறிகிறோம். இந்த இராம நாடகத்தில் முரண் பட்ட கதாபாத்திரங்களாகச் சித்தரிக்கப் படும் இராவணனும், வாலியும், விபீஷணனும் கூட மிகச் சிறந்த சிவ பக்தர்களாய் இருந்தார்கள். அது மட்டுமில்லை. கிஷ்கிந்தா காண்டத்தில் இருந்து இராமாயணத்தை நடத்திச் செல்லும் ஆஞ்சநேயனும் ஒரு சிறந்த சிவ பக்தன். அனுமான் சாலிஸாவின் இறுதி வரிகள் இக் கூற்றை மெய்ப்பிப்பன. ஆகவே, தசரதர். இராமன், வாலி, ஜடாயு, அனுமான், இராவணன், விபீஷணன் என்று பலரும் பல சிவத்தலங்களில் வழிபட்டிருக்கிறார்கள் என்பது அதிசயம் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம். நமது சிவாலயங்கள் எல்லாம் அநேகமாக ஆகம விதிகளுக்கு ஏற்ற வகையில் எழுந்தவைதான். ஆலய விமானம் அமைக்கும் போது, அது சிவாலயமாக இருந்தாலும் மேற்குப் பக்கம் சுதை வேலையைக் கவனித்தால், அநேகமாக மகாவிஷ்ணுவின் உருவம் இருக்கும். பல சிவத்தலங்களில், கிழக்குப் பார்த்த மூலவரின் கர்ப்பக் கிருகத்தின் பின் புறம், மேற்குப் பார்த்தபடி, லிங்கோத்பவர் அல்லது அண்ணாமலையார் சிற்பத்துக்குப் பதில், மகா விஷ்ணுவின் திருவுருவத்தைக் காணலாம். இம்முறை, பல்லவர் காலத்தியது என்பது அறிஞர்களின் கருத்து. பல சிவன் கோவில்களில், அர்த்த மண்டபத்தை ஒட்டிய வாயிற் படியில், மகாலட்சுமியின் உருவம் உள்ளது. இவை பொது விதி என்றாலும், தசாவதாரத்தில் ஒன்றான இராமாவதாரத்தைச் சம்பந்தப் படுத்தி இராமாயணத்துடன் இணைந்த நிகழ்ச்சிகளை நினைவூட்டும் வகையில் பல சிவன் கோவில்கள் நம் தமிகழத்தில் அமைந்துள்ளது ஆச்சரியமாய் இருக்கிறது. அவற்றில் ஒன்று திருக்கண்ணபுரத்தின் கிழக்கு பகுதியில் இருக்கும் ராமந்நதீஸ்வரம் ராமநாதர் கோயில். இறைவன் இராமநாதீஸ்வரர். இராமர் இத்தலத்தில் வந்து வழிபட்டுள்ளார். இராமர் இத்தலத்தை வழிபட வந்த போது, நந்தி இராமர் உள்ளே செல்வதைத் தடுக்க முயன்றார். ஆனால், அம்பிகை இராமன் பேரில் கருணை கொண்டு அனுமதித்தார். இதலால், இராம நந்தீஸ்வரம் என்ற பெயர் திரிந்து, இராமநாதீஸ்வரமாயிற்று. வரலாறு : ராமர், சீதையை மீட்க இலங்கை சென்றபோது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இந்த தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவவழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே திரும்பினார். ஒரு மரத்தின் அடியில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய ஆயத்தமானார். நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அப்போது அம்பிகை தோன்றி, நந்தியை தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, ராமர் சிவபூஜை செய்ய உதவினாள். ராமர் சிவவழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. ராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி, ‘ராமநாதேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். திருவிழா : மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி. சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம். திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். பொது தகவல் : பிரகாரத்தில் காசி பைரவருக்கு அருகில் வணங்கிய கோலத்தில் அகத்தியர் காட்சி தருகிறார். இந்த பைரவரை அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக சொல்கிறார்கள். பிரார்த்தனை : செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்களும், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்களும் சிவனுக்கு ருத்ர ஹோமம் மற்றும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். அம்பாளிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன் : சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தலாம். தல சிறப்பு : சரிவார் குழலி: முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு புத்திரப்பேறு இல்லை. சிவபக்தரான அவர் குழந்தை வேண்டி சிவனுக்கு யாகம் நடத்தினார். சிவன், அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்று அருளினார். ஒருசமயம் மன்னர் வனத்திற்கு வேட்டையாடச் சென்றபோது ஓரிடத்தில் 4 பெண் குழந்தைகளை கண்டார். குழந்தைகளை எடுத்து வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார். இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை சரிவார் குழலியாகவும், திருச்செங்காட்டங்குடியில் வாய்த்த திருகுகுழல் நாயகி, திருப்புகலூரில் கருந்தாழ்குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார்குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள். கரு காத்த அம்பிகை: நான்கு அம்பிகையருக்கும், ‘சூலிகாம்பாள்’ என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமடைந்தாள். ஒருநாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக்கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்ப முடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் ‘சூலிகாம்பாள்’ என்ற பெயர் ஏற்பட்டது. ‘சூல்’ என்றால் ‘கரு’ என்று பொருள். ‘கரு காத்த அம்பிகை’ என்றும் இவளுக்கு பெயர் உண்டு. பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள் செல்லாமல் வெளியிலேயே நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அர்த்தஜாம பூஜையில் மட்டும் அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத நைவேத்யம் படைப்பது விசேஷம். புனர்பூச பூஜை: இங்குள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ மூர்த்தி) மிக விசேஷமானவர். இச்சிலை ராமர், சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. ராமர் கோயில்களில் அவரது திருநட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும். ராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. தற்போதும் சாயரட்சை பூஜையை ராமரே செய்வதாக ஐதீகம். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்வது விசேஷம். சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். திருச்செந்தூரில் முருகப்பெருமான், வலது கையில் மலர் வைத்தபடி காட்சி தருகிறார். இத்தலத்தில் இவர் இடதுகையில் மலர் வைத்து, வலது கையால் ஆசிர்வதித்த கோலத்தில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர். ராமர் வழிபட்ட தலம் என்பதால், ‘ராமநாதீச்சரம்’ என்று அழைக்கப்படுகிறது. ராமரை நந்தி மறைத்ததால், ‘ராமநந்தீச்சரம்’ என்ற பெயரும் உண்டு. சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம். பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம் தழைமயி லேறவன் தாதையோதான் மழைபொழி சடையவன் மன்னுகாதில் குழையது இலங்கிய கோலமார்பின் இழையவன் இராமன தீச்சரமே. -திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 77வது தலம். இவ்வூர் இன்று மக்கள் வழக்கில் ’கண்ணபுரம் ’ என்று வழங்கப்படுகிறது. இராமன் (இராவணனைக் கொன்ற கொலைப்பாவம், நீங்க) இறைவனை வழிபட்டத் தலம் - இராமனது ஈச்சுரம். இராமர் இத்தலத்திற்கு வந்தபோது நந்தி தடுத்ததாகவும், அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்து, காட்சித் தந்ததாகவும் பின்பு இராமன் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இராம - நந்தீச்சரம் என்பது மருவி இராமனதீச்சரம் ஆயிற்று என்பர். இதற்குச் சான்றாக இத்தலத்திற்குரிய சோமாஸ்கந்த மூர்த்தத்தில் நந்திதேவர் (அம்பாள் கரத்தில்) உள்ளார். (இப்போது இம்மூர்த்தம், பாதுகாப்புக் கருதித் திருப்புகலூர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.) சிறப்புக்கள் மூலவர் - பெரிய திருவுருவம்; உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணம். சுவாமியின் விமானம் ’வேசர ’ அமைப்புடையது. கல்வெட்டில் சுவாமியின் பெயர் ’இராமனதீச்சர முடையார் ’ என்று காணப்படுகிறது. குலோத்துங்கன் இக்கோயிற் பூசைக்காகச் ’சிவபாதசேகர மங்கலம் ’ என்னும் பெயருடைய நிலப்பகுதியைத் தானமாக அளித்த செய்தியும் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது. கல்வெட்டு: இத்தலம் திருக்கண்ணபுரம் கல்வெட்டுக்களிற்சேர்த்தே அரசியலாரால் படியெடுக்கப்பெற்றுள்ளது. ஐந்து கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவன் இராமனதீச்சரமுடையார் என வழங்கப்பெறுவர். குலோத்துங்கசோழன் இக்கோயில் பூசைக்காகவும், அமுதுபடிக்காகவும் நிலம் அளித்தான். இந்நிலம் பின்னர் சிவபாதசேகரமங்கலம் என்று வழங்கப்பெற்றது. கோயிலைத் திருப்பணிசெய்தவனும் இவனே(533 ணிஞூ 1922). பின்னர், திருமலைதேவமகாராயரின் (சகம் 1397) விக்ரமாதித்தன் என்னும் அரசகாரியம் பார்ப்பவன் கோயிலைப் பழுதுபார்த்திருக்கிறான். பூசைக்கும், அமுதுக்கும் நிலம் அளித்திருக்கின்றான்(534). கோனேரின்மை கண்டான் (யார் என்று அறியக்கூடவில்லை) காலத்தில் அருச்சகருக்குள் உரிமைப்போர் நிகழ்ந்திருக்கின்றது. அதனை நீக்கி, திருமன்னுசோழ பிரமராயனுக்கும், மானவரையனுக்கும் பூசை உரிமைகள் வழங்கப்பெற்றன(536). தனியூரான தில்லையிலிருந்த மாகேசுவரர்களால் இக்கோயில் நிலம் பஞ்சத்தால் விளையாதுபோக, இராஜராஜபாண்டிமண்டலம், வீரசோழமண்டலம், நடுவில்நாடு, ஜெயங்கொண்டசோழமண்டலம் முதலியவற்றில் உள்ள கோயில்களிலிருந்து நெல்லும் பொன்னும் கொடுத்துதவும்படி உத்தரவிட்டிருக்கின்றனர். இது கோயில் நிர்வாகத்தின் தனிச்சிறப்பைக் குறிப்பதாகும்(537 ணிஞூ 1922). *************************************** *இந்த நுõலைத் தேடி தேடியும் கிடைக்கவில்லை. ஸ்ரீபராபர பட்டர் அருளிச்செய்த திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் விஷயமான அலங்கார ச்லோகம் அதtடணிணூ பராபர பட்டர் <ஜகன்மோகினி பிரஸ், 194 12 ணீச்ஞ்ஞுண் *********************************** திருக்கண்ணபுரத்தின் சிறப்பை கூறும் பாடல்கள்: பாடல் 1: கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் நின்றமணித் திருக்கோலம் நினைவினிலே நிறைந்திருக்கும் என்றும் அவன் திருப்பாதம் நெஞ்சிலே உறைந்திருக்கும் கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் .. முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நின்றிருக்கும் முடியழகும் சடையழகும் ஒன்றை ஒன்று வென்றிருக்கும் தன்னழகு ஈடில்லா தனியழகு சிறந்திருக்கும் மன்னவனின் சன்னிதியில் மற்றதெல்லாம் மறந்திருக்கும் கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்திடுவான் செக்ற்நிற பட்டாடை தக்கபடி உடுத்திடுவான் சங்கு முழங்குதற்கு செங்கை பிடித்திடுவான் சக்கரம் சுழற்றிடவே தனிக்கரம் எடுத்திடுவான். கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … பூமாதும் புவிமாதும் புடை சூழ கண்ணனுக்கு பூமாலை சூட்டியவள் புகழ் மாலை பாடிவர வேறோர் வலைச்சி வலை வீசிட நால்வருடன் விளையாடும் கோமானை வேறேங்கும் கண்டதுண்டோ கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … * கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன். கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன். திருக்கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன். வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன் எண்ணமெல்லாம் அவனின் இணையடியே என்பேன். கண்ணபுரம்... நித்திய புஷ்கரனி நீரினிலே குளிப்பேன் நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன் உத்பலாவதக விமானத்தை நினைப்பேன் உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன். கண்ணபுரம்... கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன் கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன். பெருமான் சன்னிதி முன் பித்தாகி நின்றிடுவேன் பிறவிப் பிணி அறுத்து உலகை வென்றிடுவேன். கண்ணபுரம்.. எட்டெழுத்தைச் சொல்லி கிட்ட நெருங்கிடுவேன். ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா என்ற என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன். கட்டி அணைத்தெனக்கு கை கொடுப்பான் கண்ணன். கற்பூரம் மணக்கின்ற கால் பிடித்தே உய்வேன். ********************************************* செருத்துணை நாயனாரும் திருக்கண்ணபுரமும் செருதுணை நாயனார் அவதரித்தது தலம் திருக்கண்ணபுரம். இந்துமதம் மிகத் தொன்மையானது. அதன் பெரும்பிரிவான சைவம் பல அடியார்களால் வளர்க்கப்பட்டு மேன்மையுற்றது. சிவ வழிபாடு என்பது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. கி. பி.- ஏழாம் நூற்றாண்டை சைவ சமயத்தின் பொற்காலம் எனலாம்.இந்த நூற்றாண்டில்தான் அப்பரும், ஞான சம்பந்தரும் தோன்றி நலிவுற்ற சைவத்தை நிலைபெற்று ஓங்கச் செய்தனர். இவர்கள் காலத்தில், சைவமும் பக்தியும் சிறக்க வாழ்ந்தோரையே நாம் நாயன்மார்கள் என்கிறோம். நாயன்மார்கள் தொண்டினைப் போலவே, வாழ்க்கை முறையிலும் தனிப்பட்ட சிறப்பினைக் கொண்டவர்கள். நாயன்மார்கள் எத்தகைய துன்பங்கள் வந்த போதும் தனது சிவத்தொண்டிலும், பக்தியிலும் எத்தகைய மாறுபாடும் காட்டாது, பக்தியே பரமானந்தம் என்று, ஒரே நிலையில் உறுதிபட இருந்தார்கள். அவர்கள் பொதுத் தொண்டில் ஈடுபாடு கொண்டிருந்த காலங்களில், அவர்களோடு, அவர்தம் மனைவிமார்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாயன்மார்களின் வரலாறான பெரிய புராணம் சைவத்தின் முக்கிய ஆவணம். தமிழின் இலக்கிய மேம்பாட்டுக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம். சேக்கிழார் தமது 4281 பாடல்களில் விரித்துரைத்த திருத்தொண்டர் புராணம். (பெரிய புராணம்) . செருத்துணை நாயனார் வேளாளர் திருக்கண்ணபுரம் ( இந்த நாயன்மார் திருக்கண்ணபுரத்தில் அவதரித்தவர்) செருத்துணைநாயனார் புராணம் இரைத்தணையார் புனற்பொன்னி மருத நன்னாட் டெழிலாருந் தஞ்சைநக ருழவ ரேத்துஞ் செருத்துணையார் திருவாரூர் சேர்ந்து வாழ்வார் செல்வமிகும் பல்லவர்கோன் றேவி வீழ்ந்த மருத்துணையார் மலரெடுத்து மோப்பக் கண்டு வனமலிபூங் கத்தியா லவண்மூக் கீர்ந்த கருத்துணையார் விறற்றிருந் தொண்டினையே செய்து கருதலரு மமருலகங் கைக்கொண் டாரே. சோழமண்டலத்திலே, மருகனாட்டிலே, தஞ்சாவூரிலே வேளாளர் குலத்திலே, சைவசிரோமணியாகிய செருத்துணை நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருவாரூரை அடைந்து, காலந்தோறும் வன்மீகநாதரை வணங்கித் திருத்தொண்டுகள் செய்துகொண்டிருந்தார். இருக்கு நாளிலே. அங்கே சுவாமி தரிசனஞ் செய்யவந்த கழற் சிங்கநாயனாருடைய மாதேவி பூமாலை கட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தாள் என்று நினைத்து, கத்தியினாலே அவளுடைய மூக்கை அரித்தார். பின்னும் நெடுங்காலத் திருத்தொண்டின் வழி நின்று சிவபதத்தை அடைந்தார். அறம் வழுவாத நெறியினைக் கொண்ட பழங்குடி பெருமக்கள் வாழும் சீரும், செல்வமும் ஒருங்கே அமையப் பெற்றது தஞ்சாவூர். இத்தலத்தில் வீரமிகும் வேளாண் மரபில் செருத்துணை நாயனார் என்னும் சிவத்தொண்டர் வந்தார். இவரது தூய வெண்ணீற்று உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளை எல்லாம் எம்பெருமான் பாதகமலங்களின் மீது செலுத்தினார். ஆராக்காதலுடன் சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி வந்தார். அடியார்களைக் காப்பதில் பணிவோடு மிக்கத் துணிவையும் பெற்றிருந்தார். அடியார்களுக்கு யாராகிலும் அறிந்தோ அறியாமலோ அபச்சாரம் ஏதாகிலும் செய்தால் உடனே அவர்களைக் கண்டிப்பார்; இல்லாவிடில் தண்டிப்பார். ஆலயத்துள் நடைபெறும் இறைவழிபாடு எவ்வித இடையூறுமின்றி நடைபெற அரும் பாடுபட்டார். அடியார்களின் நலனுக்காகத் தம் <உடல்பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்யவும் துணிந்த நெஞ்சுரம் படைத்தவர். இச்சிவனடியார் திருவாரூர்த்த தியாகேசப் பெருமானுக்கு இடையறாது எத்தனையோ வழிகளில் அருந்தொண்டாற்றி வந்தார். ஒருமுறை ஆலயத்து மண்டபத்தில் அமர்ந்து செருத்துணை நாயனார், பகவானுக்காக பூ தொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்தது. ஆலய வழிபாட்டிற்காக வந்திருந்த பல்லவப் பேரரசன் காடவர்கோன் கழற்சிங்கனுடைய பட்டத்து ராணி மண்டபத்தருகே கிடந்த பூவை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அம்மண்டபத்தருகே அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த செருத்துணை நாயனார் அரசியாரின் செயலைக் கவனித்துச் சினங்கொண்டார். அரசியாயிற்றே என்றுகூடப் பார்க்காமல் அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்த குற்றத்திற்காக பட்டத்துப் பெருந்தேவியாரின் கார்குழலைப் பற்றி இழுத்துக் கீழே தள்ளினார். வாளால் மூக்கை சீவிவிட்டார். அங்கு வந்த அரசரிடம் அஞ்சாமல் நடந்தவற்றைப் பற்றி உரைத்து தமது செயலின் திறத்தினை விளக்கினார். ஆண்டவன் மீது அடியார் காட்டும் பக்தியைக் கண்டு அரசன் தலைவணங்கினான். ஆண்டவர் அடியார்களின் பக்திக்குத் தலைவணங்கி, அரசர்க்கும், அரசிக்கும், அடியார்க்கும் அருள் செய்தார். இவ்வாறு வால்மீகிநாதரின் தூய திருவடிகளுக்கு இடையறாது திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த செருத்துணை நாயனார் எம்பெருமானின் திருவடி நீழலில் ஒன்றினார். குருபூஜை: செருத்துணையார் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர் நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த வேரி மலர்ந்த பூங்கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் எனப் பாரில் நிகழ்ந்த செருத் துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார் (4121) திருமருகல் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர் எனும் திருப்பதியில், குலம் வழுவாது சிவபெருமானது திருவடியை அடைதலே இலக்கு என்ற ஒருமை நெறியில் வாழும் சீரிய வேளாண்மைத் தொழில் செய்யும் குடியில் தோன்றி, தலைவராய் விளங்கினார் செருத்துணை நாயனார். உலகு நிகழ்ந்த பல்லவர் கோச் சிங்கர் உரிமைப் பெருந்தேவி நிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்தது ஒரு மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழித் தொண்டர் இலகு சுடர்வாய்க் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி (4123) அங்கே வழிபாட்டிக்கு வந்த கழற்சிங்க நாயனாருடைய மனைவியார் பூமண்டபத்தின் பக்கத்திலே கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தார். அதைச் செருத்துணையார் பார்த்தார். மிகுந்த சினம் கொணைடார். விரைந்து ஒடி கத்தியை எடுத்தார். அம்மையார் கூந்தலைப்பிடித்து ஈர்த்தார். கீழே தள்ளி அம்மையாரின் மூக்கை அறுத்தார். அடுத்த திருத் தொண்டு உலகறியச் செய்த அடல் ஏறு அனையவர்தாம் தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமைத் தொண்டு கடல் உடுத்த உலகில் நிகழச் செய்து உய்ய செய்ய பொன் மன்றுள் எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார் (4125) செருத்துணை நாயனார் பலநாள் தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார். குரு பூசை : ஆவணி மாதம், பூசம் நட்சத்திரம். ********************************************* திருக்கண்ணபுரமும் இந்த மண்ணின் முக்கியஸ்தர்களும்: இவர் கும்பகோணத்தில் பிறந்த கணிதமேதை ராமாநுஜன் போல கணிதத்தில் மேதை. சமகாலத்தவர்கள். இங்கிலாந்தில் தங்கள் கணித புலமையை நிரூபித்தவர்கள். *திருக்கண்ணபுரம் விஜயராகவன் ( பிறப்பு:30.11.1902/ இறப்பு :20.4.1955) இந்தியாவின் கணித மேதைகளில் ஒருவர். கணிதமேதை ராமனுஜத்திற்கு இணையான கணித புலமைப் பெற்றவர். திருக்கண்ணப்புரத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் உபன்யாசக திருக்கண்ணபுரம் பட்டப்பா சுவாமி. அக்காலத்தில் இவர் வைஸ்ணவ சம்பிரதாயத்தில் முன்னோடியாக இருந்தவர். விஜயராகவன் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நன்கு புலமைப் பெற்றவராக இருந்தார். இவர் எச் ஹார்டி என்பவரின் பணியாற்றகினானர். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு 1920களின் மத்தியில் பணபுரிந்தார். 1934ம் ஆண்டில் இந்தியன் அகாடமி அறிவியல் உறுப்பினராக இருந்தார். ஆண்ட்ரே வெய்ல் இவரது நெருங்கிய நண்பர். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழணகத்தில் பணியாற்றினார். விஜயராகவனின் உட்பொதிவு ரேடிகல்ஸ் தேற்றம் சிறப்பு நிரூபித்தது. ************************************ இரா. நெடுஞ்செழியன் இரா. நெடுஞ்செழியன் (சூலை 11 , 1920 - தமிழக அரசியல்வாதி மற்றும் இலக்கியவாதி ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி விளங்கினார். இவர் ‘நாவலர்‘ என்றும் அழைக்கப்படுவார். குடும்பம் நாகை மாவட்டத்தில் திருக்கண்ணபுரத்தில் 11-7-1920 ந்தேதி பிறந்தார். இவருக்கு விசாலாச்சி என்ற மனைவியும், அறிவழகன் என்னும் மகனும் உள்ளனர். இவரது பேரன் ஜீவன் நெடுஞ்செழியன் இந்திய டென்னிஸ் வீரராக விளங்குகிறார். நெடுஞ்செழியன் என்கிற நாராயணன் என் அம்மாவின் சொந்த ஊரான வடக்காலத்துõரில் பிறந்தவர். அப்பா ஊரான திருக்கண்ணபுரத்தில் வளர்ந்தவர். அம்மாவழி உறவினரும் கூட. அரசியல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த இவர், பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். பேரறிஞர் அண்ணா , 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய போது அக்கட்சியின் துவக்கத்தில் இருந்து பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்கு பின்பு கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடுகள் காரணமாக அ.தி.மு.க.வில் இணைந்து எம்.ஜி.ஆர்.அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். அண்ணா இறந்த பொழுது பிப்ரவரி 3 , 1969 முதல் பிப்ரவரி 10 1969 காலமும் எம்.ஜி.ஆர் இறந்த பொழுது டிசம்பர் 24 1987 முதல் ஜனவரி 7,1988வரை இடைக்கால முதலமைச்சராக பதவி வகித்தார். இவர் இறுதியில் 12-1-2000ல் காலமானார். தமிழ்நாட்டு நிதியமைச்சர்பதவியில் 1967-1976,1977-1988,1991-1996 தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை தொகுதி ஆத்தூர் அரசியல் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி பொறுப்பு அவைத் தலைவர் இறப்பு ஜனவரி 12, 2000 (அகவை 79) **************************************** இரா. செழியன்: அரசியல் களத்தில் முதிர்ச்சியும், அனுபவமும், தெளிவும் நிறைந்து, 50 ஆண்டுகளாக சேவையாற்றியவர் முதுபெரும் அரசியல்வாதி இரா. செழியன். பல முகங்கள் கொண்ட, அரசியல்வாதிகளிடையே இவர் தனி முகம் கொண்டவர். இவரை அரசியல்வாதி என்று நம்புவதே கடினம். நாவலர் என்றுபோற்றப்பட்ட இரா. நெடுஞ்செழியனின் தம்பி இவர். பேரறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவங்கியபோது, அவருடன் இருந்த எண்ணற்ற தம்பிகளில் இவரும் ஒருவர். நாடாளுமன்ற உறுப்பினராக 22 ஆண்டுகள் பணியாற்றிய பழுத்த அரசியல்வாதி. நாட்டில் பல்வேறு ஜாதி மதங்கள், அவற்றினால் ஏற்படும் ஜாதிபூசல்களைக் காரணம் காட்டி அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். செழியனாக மாறிய சீனிவாசன் .. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணபுரம் கிராமத்தில் பிறந்த செழியனின் இயற்பெயர் சீனிவாசன். ராஜகோபாலுக்கும், மீனாட்சிக்கும் மகனாகப்பிறந்த இவர், பெரியாரால் ஈர்க்கப்பட்டு தன் பெயரை செழியன் என்று மாற்றிக் கொண்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஈன்றெடுத்த அரசியல் நட்சத்திரங்களில் செழியனும் ஒருவர். துணை ஜனாதிபதி இதாயதுல்லாவாலும், முஸ்லீம் தலைவர்காயிதே மில்லத்தாலும் பாராட்டப்பட்டவர் இவர். நாடாளுமன்றத்தின் நம்பிக்கை ஒளி என பாராட்டப்பட்டவர் செழியன். படிக்கும்போதே திராவிட சேவை .. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த போது, திராவிட மாணவர் பேரவை என்ற அமைப்பை நடத்தினார். இவர்களது வீட்டில் நடந்த அனைத்துதிருமணங்களும் பெரியார் முன்னிலையில் நடந்த சீர்திருத்தத் திருமணங்களாகும். 44 ம் ஆண்டில் அண்ணாவால் ஈர்க்கப்பட்டார். பின்னர் 49 ல் திமுக வில்இணைந்தார். 1967 ம் ஆண்டில் அண்ணா நடத்தி வந்த நம்நாடு என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். உலக நாடாளுமன்றங்களில் ஜனநாயக நெறிமுறைகள் என்ற ஆய்வுக்கட்டுரையை எழுதினார். இவர் எழுதிய கதை பணம் பந்தியிலே என்ற பெயரில் திரைப்படம் ஆனது. பகுத்தறிவு கொள்கைகள், மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமூக விழிப்புணர்வுஆகியவற்றை மையமாக வைத்தே இவர் எழுதிய புத்தக்கங்கள் இருந்தன. கலை, இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட செழியன், தீவிர அரசியலில் ஈடுபட்டதால், நேரமின்மை காரணமாக தொடர்ந்து அவரால்எழுத்துலகுக்கு வரமுடியவில்லை. பின்னர், அண்ணாவுடன் இவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து பிரிந்தார். அப்போது செழியன் கூறுகையில், பிரச்சனைகளால் அண்ணாவிடமிருந்துபிரியவில்லை. கருத்து வேறுபாடுதான் அவரிடமிருந்து பிரியக் காரணம். அண்ணா அரசியல் நாகரீகம் மிகுந்தவர் என்று குறிப்பிட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் .. 1962 ம் ஆண்டு முதல்முறையாக பெரம்பலூர் தி.மு.க எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார். 67 மற்றும் 71 ம் ஆண்டுகளில் தி.மு.க எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் துவக்கப்பட்ட ஜனதா கட்சியில் 1974 ம் ஆண்டு சேர்ந்தார். அப்போது ஜனதா கட்சி சார்பில் அமைக்கப்பட்ட 14பேர் கொண்ட போராட்டக் குழுவில் இவரும் ஒருவர். அந்த குழுவில் வாஜ்பாய், அத்வானி, மொராஜி தேசாய் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். வி.பி.சிங் காலத்தில் ஆளுநர் பதவி இவரைத் தேடி வந்தது. ஆனால் இவரோ ஆளுநர் பதவி தேவையில்லை என்று மறுத்தார். லோக் சக்தியில் .. பெங்களூரில் ராமகிருஷ்ண ஹெக்டே லோக் சக்தி கட்சியை 1997 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ம் தேதி தொடங்கினார். அப்போது லோக் சக்தி கட்சியின்தேசியத் துணைத் தலைவராக இரா.செழியன் நியமிக்கப்பட்டார். **************************************** குறுந்தொகை பதிப்பித்தவர்: திருக்கண்ணபுரம் திருமாளிகைச் சௌரிப்பெருமாளரங்கனார் குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் (1915) இவரேயாவார். சங்க நுல்களைப் பதிப்பித்த உ.வே.சா., தாமோதரம் பிள்ளை, பின்னத்தூர் நாராயண சாமி அய்யர் போன்றோர் தம் பதிப்புகளில் ஆங்காங்கே பாடவேறு பாடுகளையும் குறிப்பிட்டுள்ளனர். குறுந்தொகையை முதன்முதலாக 1915 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்ட திருக்கண்ணபுரம் திரு மாளிகை சௌரிப் பெருமாளரங்கனார் இடக்கரடக்கல் என்று தாம் கருதிய சொற்களை திருத்தி வெளியிட்டுள்ளார். ******************************************* திருவருட்பிரபந்தம் - அருட்கவி. சீதாராமய்யங்கார். திருவருட்பிரபந்தம் என்ற இந்நூல் அருட்கவி திரு. சீதாராமய்யங்கார் அவர்கள் சாற்றியுய்ந்த கவிதைகளின் தொகுப்பு அருட்கவி. திரு சீதராமய்யங்கார் அவர்கள் தாம் இயற்றிய இந்த கவிதைகளில் தமிழ் இலக்கணத்தின், முக்கியமாக யாப்பிலக்கணத்தின் பெருமையையும், பக்தி, ஞான யோகத்தையும், பகவானை அடைய வேண்டிய சிறந்த மார்க்கங்களையும், அரும்பெரும் கருத்துக்களையும் வெளியிட்டிருக்கிறார். மன்னரா யுற்றாலும் மாநிதியைப் பெற்றாலும் அன்னவர் மாட்சிதா னந்தனன்முன் - மன்னுமோ சென்னிநடு வோங்குந் திருக்கண் ணபுரமுற்ற பொன்னின் புருடனைப் போற்றி. *********************************** எத்தனை கண்ணபுரம்? தமிழகத்தில் காங்கேயம் அருகே- கண்ணபுரம் என்ற ஊரும், சமயபுரத்திற்கு (புராணப்பெயர் கண்ணபுரம்) என்றும், கருவூர் அருகே- கோவை சிவானந்தா காலனி அருகே கண்ணபுரம் ஊரும், சென்னை- மாதவரம் அருகே கண்ணபுரம் என்ற ஊரும் மதுரை மாட்டுத்தாவணி அருகே கண்ணபுரம் என்ற ஊரும் கேரளாவில் கண்ணுõர் அருகே கண்ணபுரம் என்ற ஊரும் இலங்கையில் மட்டகளப்பு பகுதியில் கண்ணபுரம் என்றும் உள்ளது. (இதற்கு மேலும் இருக்கலாம். என்னுடைய தேடலில் தெரியவந்த ஊர்கள் இவை) ******************************* திருக்கண்ணபுரமும் பிறகு கோயில்களும் வடசாரி பிள்ளையார்கோயில். இதுதான் ஊர் எல்லையின் நுழைவில் இருக்கும் பிள்ளையார் கோயில். ஆற்றோரம் அமைந்திருக்கிறது. ஆழ்வார்கோயில். இது இன்று பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. பள்ளியில் படிக்கும் போது இந்த கோயிலில் நண்பர்களுடன் விளையாடி இருக்கிறேன். மன்மதன்கோயில். இது இப்போது இருக்கிறதா என்றே நினைவில்லை. பக்கத்தில் வாடி இருந்தது. அதுவும் இல்லை. தாமரைக்குளம் பிள்ளையார் கோயில். இந்தப்பிள்ளையார் கோயிலுக்கு ஆண்டு ஒருமுறை விதைநெல் பூஜிக்கும் நிகழ்ச்சிக்கு அப்பாவுடன் வைகறைபொழுதில் சென்றிருக்கிறேன். ஆஞ்சினேயர்கோயில். இந்த கோயில் வந்த கதை உருக்கமானது. பெருமாள் கோயிலில் ஒரு குரங்கு இருந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்தக் குரங்கு தெற்கு தெரு பக்கம் நீர்நிலைக்கு சென்று உள்ளது. நாய்கள் துரத்த, குரங்கு அந்த நீர் நிலையில் குதித்து, சேற்றில் சிக்கி, பரிதாபமாக இறந்து விட்டது. அந்தக் குரங்குக்கு நினைவாலயமாக சொக்குபிள்ளை அவர்கள் கோயில் அமைத்தார். அது தான் இந்த ஆஞ்சநேயர் கோயில். பூதம் பல ஆண்டுகளாக ஆஸ்பத்திரி முனையில் வேப்பமரத்துக்கு கீழ் கவுந்தபடி கிடக்கும் ஒரு சிலை. இதை பூதம் என்று சொல்வார். மழைவர வேண்டி இந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்வார்கள். இன்று நான் பார்த்த வரையில் அந்தச்சிலை அங்கு இல்லை. எங்கு இருக்கிறதோ தெரியவில்லை. மடம் வடக்குத் தெருவில் இருக்கிறது. நிறைய சாமிபடங்கள் இருக்கும். மார்கழி மாதம் இங்கிருந்து நஜனை செய்து வீதி வருவார்கள். இன்று இந்த பஜனை மடம் வழிபாடு இல்லாமல் இருக்கிறது. மாரியம்மன்கோயில் பிரசித்தப்பெற்ற கோயில். ராமலிங்கசாமி மடம் மடம் இருக்கிறது. வழிபாடு இல்லை. ஐயனார்கோயில் ஊரின் எல்லைப்பகுதியில் இருக்கும் கோயில். கீழத்தெரு பிள்ளையார் கோயில் கோயில் இடிக்கப்பட்டது. அரசமரத்தின் கீழ் இப்போது பிள்ளையார் இருக்கிறார். பிடாரிகரை பிரம்மநந்தீஸ்வரம் பிரம்மா வந்து நந்திக்கு பூஜித்த கோயில். சிறுவனாக இருந்த போதே சிதிலமடைந்து கிடந்தது. இப்போது அங்கு கோயில் இருப்பதாகவே தெரியவில்லை. அங்காளம்மன்கோயில் என் வீட்டுக்கு எதிர் தெருவில் அமைந்துள்ளது. என்னவோ தெரியவில்லை அந்தக்கோயிலுக்குச் சென்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. மற்றும்அக்ரகாரம் ஆழ்வார்கோயில், கவரத்தெரு பாம்பிலியம்மன் கோயில். ********************************************** அயிரை மேட்டில் ஓரிரவு சந்த வசந்தம் மடற்குழுவில் நான் எழுதி வந்த பாடல்கள் ‘காணவொரு காலம் வருமோ‘ அதில் பதிகத்தின் இரண்டாம் பாட்டு, காரழகுத் திருமேனியின் அயிரை மேட்டு நிகழ்வை அப்படியே நினைவு கூர்கிறது.- இராம.கி. அயிரை மேட்டில் ஓரிரவு வரையாத அழகோடு, வடிவான உருவோடு, வலையரின் பத்து மினியாள்; வளையாத வில்லையும், வகிடாத வாளையும், பழிக்கின்ற புருவ எழிலாள்; புரையாத திருமகளின் தோற்றரவில் முன்ஒருநாள் புலம்காட்டி நின்ற போது, புல்லியே வதுவையுறப் போனதை இன்றளவும் புவனத்தில் யாரும் அறிய, நுரையோடு திரைஓங்கும் திருமலையின் பட்டினத்தில் நுளையோரின் மருக னாக, நுண்அயிரை மேட்டிலே இரவெலாம் களிப்பதை, நோக்குநாள் எந்த நாளோ? கரையோடு ஊர்உலவும் காரழகுத் திருமேனி காணஒரு காலம் வருமோ? காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் சௌரி ராசா! இரண்டாவது பாடல் பத்மினி நாச்சியார் என்னும் செம்படவ நாச்சியார் பற்றிப் பேசுகிறது. கண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலை ராயன் பட்டினத்தில் மீனவத் தலைவன் மகளாக திருமகளே வந்து பிறந்ததாய் ஒரு தொன்மம் உண்டு. இந்தத் தோற்றரவில் (அவதாரத்தில்), தாயாரின் பெயர் பத்மினி. கண்ணபுரம் மாசித் திருவிழாவின் ஒரு நிகழ்வாய், பெருமாள் பத்மினி நாச்சியாரைக் கைப் பிடிக்கும் விழா நடக்கிறது. பெருமாளுக்குச் சரம் (கைலி) கட்டி மீனவனாய் மாற்றி, ஊருலவுத் திருமேனி (உற்சவ மூர்த்தி) திருமலை ராயன் பட்டினம் போய்ச் சேரும். கடற்கரை மேட்டில், திருமாலை இருத்தி, மீனவர்கள் சுற்றி வந்து, கும்மாபம் போட்டு, இரவு முழுக்க தங்கள் மாப்பிள்ளையோடு கூத்தாடிக் கோலாகலமாய் இருப்பது வழக்கம். ‘எங்கள் மாப்பிள்ளை, எங்கள் மாப்பிள்ளை‘ என்று ஊரே மெய் சிலிர்த்துப் போவது, சில காலம் முன்பு வரை இருந்திருக்கிறது. பூதேவி சீதையாகவும் ஆண்டாளாகவும் பிறந்த தோற்றரவுகள் (அவதாரங்கள்) பலரும் அறிந்தது போல், சீதேவியின் தோற்றரவுகள் பலராலும் அறியப்படுவதில்லை. புரைதல் = ஒப்புதல், பொருந்துதல்; புரையாத திருமகள் = ஒப்பு இல்லாத, தனக்கு நேர் இல்லாத திருமகள்; கரையோடு ஊருலவும் திருமேனி = கண்ணபுரத்தில் இருந்து காவிரிக் கரையோரம் போய் பின் கடற்கரை ஓரத்தில் ஊருலாவும் பெருமாள். *********************************** திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திருப்பாதகேசம் திருக்கண்ணபுரம் பண்டித ரத்நம் உபய வேதாந்த வித்வான் டி.எஸ். ஸ்ரீநிவாஸ ஐயங்கார் ஸ்வாமி(சிரோமணி) அருளிய ஸ்ரீசௌரிராஜஸ்தவத்தின் பகுதி ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திருப்பாதகேசம் உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம்! சௌரிராஜ மஹம் வந்தே ஸதா- ஸர்வாங்க-ஸீந்தரம்!! பத்மா-பயோதர-தடீ- பாடீர- த்ரவ- ரஞ்ஜிதம்! பாது ஸ்ரீசௌரிராஜக்யம் ஜ்யோதி: பத்ம- விலோசநம்! 1. திருமேனி ப்ரபுல்ல- முக- பங்கஜம் ஸ்மித- விகாஸி- தந்த ப்ரபம் விகாஸ-நயநோஜ்வலம் விகஸித-ப்ரவாளாதரம்! ஸமுந்நத- சதுர்புஜம் வித்ருத-சங்க-சக்ரம் மஹ: ஸஹஸ்ர- தபந-ப்ரபம் சௌரி-ஸ்ஜ்ஞம் ஹ்ருதி!! அலர்ந்த முகமாகிற தாமரை, புன்முறுவலால் விளங்குகின்ற பற்களின் காந்தி, மலர்ந்த கண்களின் ஒளி, பவளுமும் தோற்கும்படியான அதரம், எடுப்பான நான்கு தோள்கள், தரித்துள்ள சங்குச்சக்கரம், ஆயிரம் சூர்யர்களின் ஒளி இவை வாய்ந்த, சசௌரி என்ற பெயருடையதான சோதி என் மனத்தில் விளங்குக. 2. யாவர்க்கும் அரியன் தண்டகாதி- யோகி-ப்ருந்த- வந்திதாங்க்ரி-பங்கஜம் பஞ்சபாண- பீதயேவ பத்மயாச்ரிதோரஸம்! ஸ்ரீபராங்குசாதி- பஞ்ச-ஸீரிபிஸ் ஸமீடிதம் பாவயேய சௌரி மத்ய க்ருஷ்ணபத்த நாதிபம்!! தண்டகரிஷி முதலிய முனிவர்களது கணங்களால் வணங்கப்படும் திருவடித் தாமரைகளை உடையவனும், மன்மதனால் அஞ்சுபவன் போல லட்சுமிதேவி தன் உறைவாகக்கொண்ட திருமார்பை உடையவனும், நம்மாழ்வார் முதலிய ஐந்து ஆழ்வார்களால் துதிக்கப்பட்டவனும், திருக்கண்ணபுரத்திற்கு அதிபனுமான ஸ்ரீசௌரிராஜனை இப்போது மனத்தால் நினைப்போமாக. 3. திருமேனி அழகு, ஒளி நீரத்ந-மய-பூதராக் ருதிஸ் த்வம் ஸஹஸ்ரகர-பாஸீரார்சிஷா! ப்ராஜஸே பவி-வரேண பாநுமாந் நீலவர்ண இவ ஸாநுமாந் புவி!! பெருமானே! நீ நீலக்கல் மயமான மலையின் உருவை உடையவன். ஆயிரம் கிரணங்கள் வாய்ந்த சூர்யன் போலே ஒளிச் சுடரை உடைய சிறந்த கதாயுதத்தை உடையவனாய், சூர்யனோடு கூடிய கருநிறமுடைய மலைபோலே நீ இவ்வுளகில் விளங்குகிறாய். 4. திவ்யாயுதங்களால் திருமேனி மேலும் விளங்குதல் நீலாத்ரி-ச்ருங்க- விஹரத்-தபநேந்து- முக்யைர் ஜ்யோதிர்கøணைரிவ தநுஸ் தவ பூஷணைர் ஹி! ரம்யை:கிரிட-வர- குண்டல- சுந்தரஹார- ஸ்ரீகௌஸ்துபாதிபி ரஹோ ப்ரவிபாதி தீப்தா!! நீலபர்வதத்தின் கொடுமுடியில் உலாவுகின்ற சந்த்ர, சூர்யர்கள் முக்கியமாக வாய்ந்த நட்சத்திரங்களின் திரள் போலே அழகியவான கிரீடம், சிறந்த குண்டலங்களை,சந்தரஹாரம், ஸ்ரீகௌஸ்துபம் முதலான ஆபரணங்களாலே உனது திருமேனி ஒளிர்ந்து விளங்குகிறது. ஆச்சர்யம்! 5. திருவடிகள் யத்பாத-பத்ம-யுசுளம் ம்ருதுலம் ஹி தேவ்ய: பத்மா-தரா-வஸீஸீதாஸ் ஸதயம் ஸகோதா: ஸம்வாஹயந்தி ஸீகுமாரதரை: கரைஸ் தத் சௌரே! விதாத்ரு- விநதம் மம சேதஸி ஸ்யாத்!! ஸ்ரீதேவி, பூமிதேவி, வஸீவின் திருமகளான பத்மிநி இவர்கள் ஆண்டாளுடன் மிகவும் ஸீகுமாரமான தங்களது கரங்களாலே தயையுடன் மிருதுவான உனது திருவடிகள் இரண்டையும் பிடிக்கின்றனர். ஸ்ரீசௌரிராஜனே! ப்ரஹ்மாவால் வணங்கப்படும் அப்படிப்பட்ட அந்த இரண்டு திருவடிகளும் எனது மனத்துள்ளே உறைக. 6. திருவடிகள் யத்-பாத-பல்லவ மிதம் தவ காம- தப்தா கோப்யோ ததுஸ் ஸ்தந-யுகே விஜஹீச் ச தாபம்! சௌரே! விதாய மம மூர்த்தநி தந் துராபம் ஸம்ஸார தாப மபநோதய மாமகீநம்!! காமத்தால் தாபங் கொண்ட கோபிமார்கள் உனது பாதங்களாகிய தளிரைத் தம் ஸ்தனங்களில் தரித்துத் தமது தாபம் நீங்கினர். சௌரிராஜனே! கிடைத்தற்கு அரிதான அந்தப் பாதங்களாகிய தளிரை நீ எனது தலையில் வைத்து எனது ஸம்ஸார தாபத்தை நீக்கி அருளவேணும். 7 திருவடிகள் யத்-க்ஷாள நாம்பு-பரிபூத-சிராச் சிவோபூத் யத்வந்தநம் விதி-சிவேந்த்ர-துராப மாஹூ:! யச்சிஹ்நிதாநி ஹி சிராம்ஸி ஸதர் ப்ரபந்நா வாஞ்சந்த்யமீ பதயுகம் தவ தந் நதாஸ்ம:!! உனது திருவடிகளை விளக்கிய தீர்த்தத்தினால் சிவன் புனிதமான சிரத்தையுடையவனாவன்,(இத்) திருவடிகளை வணங்குதல் என்பது பிரம்மன், சிவன், இந்திரன் இவர்களுக்கும் பெறற்கு அரிது எனக் கூறுகின்றனர். உன்னையே சரணாகாக பற்றிய ப்ரபந்நர்கள் தம் சிரங்கள் இத்திருவடிகளாலே அலங்கரிக்கப்பட விரும்புகின்றனர். அப்படிப்பட்ட திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம். 8.திருப்பாதுகைகள் சௌரே!(அ)வநம் யே (அ)குருதாம் தரித்ர்யா வதே(அ)டதஸ் தே கில பாதுகே த்வே! ஸீவர்ண-ரத்நாதி-விபூஷிதே தே சுபே சிரச்சேகரதா முபேதாம்!! ஸ்ரீசௌரிராஜனே! நீ (இராமபிரானால்) வனத்தில் சஞ்சாரம் செய்தபோது உனது பாதுகைகள் இரண்டும் பூமியை ரக்ஷித்தன. தங்கத்தாலும் ரத்தனங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவை இரண்டும் என் தலைக்கு அலங்காரமாகுக. 9.பாதபத்ம பீடம் சௌரே!! ஸீகந்தித்வ-ம்ருதுத்வ-முக்யைர் குணைர் ஜிதம் த்வத்-பதயோர் யுகேந! தத்தே கிமப்ஜம், பதபத்ம-பீடீ- மிஷேண தே பாத-யுகம் துராபம்!! ஸ்ரீசௌரிராஜனே! நறுமணம், மென்மை முதலிய பண்புகளால் உன் திருவடிகள் இரண்டாலும் ஜயிக்கப்பட்ட தாமரைமலர், (உனது) பாதபீடம் என்ற வியாஜத்தாலே (கிடைத்தற்கரிய) உன் திருவடிகள் இரண்டையும் சுமக்கின்றவா என்ன? 10. திருவடிகளின் சோதி யத்வாத்ர சௌரே! பவத:பதாப்யா மதோ விஸாரீ மஹதாம் ஹி ராசி:! புல்லாரவிந்தாக்ருதி-பாக் கிலாயம் ஸ்புடாப்ஜ-பீடத்வ முபைதி நுõநம்!! ஸ்ரீசௌரிராஜனே! அன்றியும் பூஜ்யனான உனது திருவடிகளினின்றும் கீழே பரருவுகின்ற இந்தச் சோதியின் பிழம்பு, அலர்ந்த தாமரையின் வடிவம்போல மலர்ந்த அந்த பத்மபீடமாயிருத்தலைப் பெற்றுள்ளது; நிச்சயம்! 11. திருவடி நகங்கள் சௌரே! தவ ப்ரபத-சும்பி-நகார்த்த-சந்த்ர- ஸம்சீதிதாயி நகரேப்ய இஹ ப்ரவ்ருத்தா:1 ஜ்யோத்ஸ்நாஸ் தரிவிக்ரம-பத-ப்ரதம-ஸ்ருதாநாம் கங்காம்பஸாம் சரதியம் ரசயந்தி ஹந்த!! ஸ்ரீசௌரிராஜனே! உனது திருவடிகளின் நுனியில் உள்ள விரல்களில் விளங்குவனவும் புதிய அஷ்டமி சந்த்ர்களோ என்ற சந்தேகத்தை உண்டுபண்ணும்வனவுமான நகங்களிலிருந்து வெளிவருகிறது சந்திரிகையாகிய ஒளி: இங்கு திரிவிக்ரமானாகிய பெருமானது திருவடிகளினின்றும் முதலில் பெருகிய கங்கா ஜலத்தின் வெள்ளமோ எனகிற எண்ணத்தை (எங்களுக்கு) இது விளைவிக்கின்றது. ஆச்சரியம்! 12. திருத்தொடைகள் சௌரே தலேஹ ஜங்க்கே மந்மத துõணீர-யுகள-கர்வமுஷீ ஊர்வோர் யுகளி சேயம் ரம்பாஸ்தம்பாதி-கம்பீரா!! ஸ்ரீசௌரிராஜனே (இங்கு) உனது முழந்தாள்கள் இரண்டும் மன்மதனது அம்புறாப்பையின் கர்வத்தைக்கவர வல்லன. உனது தொடைகள் இரண்டும் வாழைமரத்தின் சிறப்பை ஒத்தன. 13. அரை (கடி), இடை தே ச்ரோணீ-பலக மேதத் காங்கம் புளிநம் திரஸ்குருதே! அவலக்நம் சாபிக்ருசம் சௌரே! ஸ்மாரயதி நோ டக்காம்!! ஸ்ரீசௌரிராஜனே! உனது இந்தக் கடிதடம் இரண்டும் கங்கையின் மணற்குன்றுகளை அவமதிக்கின்றன; உனது மெலிந்த உள்ளடங்கிய இடை எங்களுக்கு உடுக்கையை நினைவூட்டுகின்றது. 14. இடது திருக்கை வாமோரு- விந்யஸ்த-கரோ ஹி சௌரே! ஸத்வம் ஜநாநாம் ஸ்வபதாச்ரிதாநாம்! ஸம்ஸார வாராம்நிதி ருருதக்ந இதீவ ஸந்தர்சயவஸிஹ தேவ!! தேவனாகிய சௌரிராஜனே! இடது தொடையில் வைக்கபப்பட்டுள்ள உனது இடது திருக்கை உனது திருவடிகளையே தஞ்சமாகப் பற்றும் ஜனங்களுக்கு, ஸம்ஸாரமாகிய கடல் தொடையளவே ஆகும். (அஞ்சவேண்டா) என்று நீ அறீவிக்கிறாய் போலும். 15. வலது திருக்கை நநு வதாந்யதமஸ்ய பலேர் மகே த்ரிபுவந-ஸ்வ-வசீகரணோத்யதாம்! ப்ரகடயம் ஸ்தவ வாமநதாம் விபோ ப்ரஸ்ருத-தக்ஷிண-ஹஸ்த இஹாஸி கிம்?!! பெருமானே! மிகச்சிறந்த கொடைவள்ளலாகிய மகாபலியின் யாகத்தில் மூன்று உலகங்களையும் ஸ்வாதீனமாக வாங்கிக்கொள்ள முயன்ற உனது வாமனத் தன்மையை வெளியிடுபவனாய் நீ இங்கு நீட்டிய(குவிந்த விரல்களோடுகூடிய) வலது திருக்கை உடையவனாய் இருக்கிறாயா, என்ன? 16. வலது திருக்கை உபாயநம் பக்த-ஜநாதிஸ்ருஷ்டம் க்ரஹீது முத்யுக்த இவேஹ சௌரே! வாமேதரம் ஹஸ்த மிஹ ப்ரஸார்ய த்வம் ப்ராஜஸே பக்த-ஜநாநுகம்பீ!! ஸ்ரீசௌரிராஜனே! பக்த ஜனங்களால் கொடுக்கப்படும் காணிக்கைளை வாங்கிக் கொள்வதை விரும்புவன்போல் வலது திருக்கையைக்குவித்த விரல்கள் உடையதாய் நீட்டி, நீ பக்த ஜனங்களிடம் தயவுடையவனாய் இங்கு விளங்குகிறாய். 17. வலது திருக்கை ஆதாது-காம இவ யத் ப்ரஸ்ருதே ஸ்வஹதம் வாமேதரம் வஹஸி தத் வஸீபுத்ர்யவேக்ஷ்ய! அந்யாம் கிமேஷ பரிணேஷ்யதி மாத்ருசீமித்- யாசங்கயேவ ஸவிதம் ந ஜஹாதி ஸா தே!! ஸ்ரீசௌரிராஜனே!(கொடுப்பதை) பெற்றுக்கொள்ள விரும்புவதுபோல் நீ உனது வலது திருக்கரத்தை நீட்டிக் குவிந்த விரல்களுடன் விளங்குகிறாய். அதை வஸீவின் திருமகளான பத்மிநிதேவி நன்கு பார்த்து, ‘நம்போன்ற வேறொரு பெண்ணை இவர் மணந்துகொள்ளப்போகிறாரா?’ என்ற சங்கையால் உனது ஸமீபத்தை ஒருபொழுதும் விட்டு அகல்வதில்லை போலும்? 18. திருநாபி தவத்-திவ்ய-ஸீந்தர-வபு:ப்ரபவஸ்து சௌரே! காந்த்யா சர:கலு தநௌ தவ மயத்தேவே! ஸ்ங்கோச மேத்ய விஸரந் கிமு ஸப்ரமோய மேதீதி ஹந்த திய மாதநுதே சத்ய நாப்யா!! ஸ்ரீசௌரிராஜனே! உனது அழகிய திருமேனியிலிருந்து உண்டாகும் காந்தியின் வெள்ளம், ஒடுங்கிய உனது இடையில் குறுகியப் பாய்வதாய்க்கொண்டு உனது திருக்கொப்பூழின் சுழியோடு கூடியதாய் விளங்குகிறதோ என்ற எண்ணத்தை உண்டாக்குகின்றது; ஆச்சரியம். 19. திருநாபி மலர் த்வத் வாம-தக்ஷிண-த்ருசோர் ஹி விலோகநேந தந்நாபி-பங்கஜ மீகார்த்த-விகாஸ மேத்ய! தத்வா பயஸ் ஸ்வ-சிசவே த்ருஹிணாய சங்கோ லக்ஷ்ம்யா விஸ்ருஷ்ட இதி ஹந்த தியம் தநோதி!! ஸ்ரீசௌரிராஜனே! உனது இடக்கை,வலக்கண் இவற்றின் பார்வையாலே, உலகிற்குக் காரணம் எனப் புகழ் பெற்ற உனது திருக்கொப்பூழின் தாமரை பாதி மலர்ந்தும் பாதிமூடியும் உள்ள நிலையில் உள்ளது. ஸ்ரீலக்ஷ்மிதேவி தன் குழந்தையாகிய பிரம்மனுக்குப் பால் ஊட்டிக் கீழே வைத்த பாலாடைச் சங்குதானோ இது என்ற எண்ணத்தை நமக்கு விளைவிக்கின்றது. ஆச்சரியம். சந்தர ஸூர்யென ச நேத்ரே என்பது குறிப்பு. 20. திருநாபி மலர் த்வதீய- நேத்ரத்வ முபேயிவத்ப்யாம் ஸமம் நிசா-நாத- திநேச்வராப்யாம்! த்வந்-நாபி-பத்மம் லபதே விகாஸ- ஸங்கோச-தௌஸ்த்யம் ஸததம்ஹி சௌரே!! ஸ்ரீசௌரிராஜனே! சந்த்ரஸூர்யர்கள் இருவரும் உனக்குக் கண்களாய் விளங்குவதைப் பெற்றுள்ளனர். அவர்களால் ஒருங்கே பார்க்கப்படும் உனது திருக்கொப்பூழ் தாமரையானது எப்போதும் மலர்வதும் குவிவதுமாய் ஒரு நிலை பெறாது விளங்குகின்றது; இதனால் துஸ்திதி ஒருநிலை பெறாமை பெற்றுள்ளது. 21. திருவயிறு த்வயா நிகீர்ணம் ப்ரளயேப்யண்ட ஜாதம் த்ருத்வாபி லோயம் க்ருசதா முபேத:! குக்ஷிர் கிமண்டாநி பஹூநி பூயோ தர்த்தும் ச வாங்சத்யவநாய தேஷாம்!! ஸ்ரீசௌரிராஜனே! பிரளய காலத்தில் உன்னால் விழுங்கப்பட்ட அண்டங்களின் கணங்கள் பலவற்றை உள்ளே தரித்துக் கொண்டிருந்தாலும் வற்றுதலை அடைந்து விளங்கும் இந்த உன் திருவயிறு, மீண்டும் பல அண்டங்களை விழுங்கி உள்ளே தரித்துக்கொள்ள விரும்புகிறதா, என்ன? 22. அரை வடம் உபகுக்ஷிதடே கலிதா ரசநா- நவ-கிங்கிணிகா-ததி ரத்ர புந:! கிமிஹாண்ட- ததிர் கிரணே ஸ்கலிதா லபநா திதி நோ திய மாத நுதே!! ஸ்ரீசௌரிராஜனே! உனது திருவயிற்றின் கீழ்பாகத்தில் அணிந்துள்ள அரை வடத்தின் புதிய சிறு சதங்கைகளின் திரள், நீ அண்டங்களை விழுங்கியபோது முன்புறத்தில் முகத்திலிருந்து சிதறி விழுந்த அண்டங்களின் திரளோ என்ற எண்ணத்தை இங்கு நமக்கு விளைவிக்கின்றது. 23. திருவரை கௌசேய-புஷ்பித-கடிம் பரிவேஷ்ட்ய பட்ட பந்தேந சித்ர-பரிகர்ம-பரிஷக்குருதே ந! தஸ்மிந் நிகாய கலு நந்தக மஞ்ஜநாத்ரிர் பாபாஸி கைரிகவிசித்ர இவாத்ய சௌரே!! ஸ்ரீசௌரிராஜனே! பட்டு உடுத்தி, அதனாலே பூத்தாற்போன்ற உனது திருவரையில் இறுகக்கட்டிச் சுற்றி நன்கு அலங்கரிப்பது பட்டுக் கச்சு, அதில் நாந்தகம் என்ற கத்தியைச் சொருகிக் கொண்டு நிற்கும் நீ, நீலத்தடவரை ஒன்று (தன்னிடமுள்ள) மனச்சிலை முதலிய பல நிறங்கள் வாய்ந்த தாதுப் பொருட்களால் விளங்குவதுபோல் பிரகாசிக்கிறாய்! 24. திருக்கைகள் ஹந்த! கல்பக-தரோஸ் ஸமுதீர்ணாஸ் ஸ்பீததா முபகதா:கிமு சாகா:! இத்யமீ பரிக- தைர்க்யம்- ஜூஷஸ் த்வத் பாஹவோ விரசயந்தி தியம் ந:!! உழல்தடிபோல் மிகவும் நீண்ட உன் கைகள் கற்பகத் தருவினின்றும் மேலே எழுந்தவையும், செழிப்பை உடையவுமான அதன் கிளைகளோ என்ற எண்ணத்தை நமக்கு விளைவிக்கின்றன; ஆச்சரியம். 25. திருமார்பில் பிராட்டி ரம்ய- மோக-சிலாதல-பாஸ்வத்- வக்ஷஸீஹ கமலா கநகப்ரபா! கௌஸ்துபேந மணிநா கிமு ரக்தா பாஸதே ப்ரியதமா இவ சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! அழகிய இந்திர நீலக் கல் மயமான கற்பாறைபோல் விளங்குகின்றது உனது திருமார்பு. அதில் வீற்றிருக்கிறாள் பொன்னிறமான லட்சுமிதேவி. உன் திருமார்பிலுள்ள கௌஸ்துபம் என்னும் ரத்தினத்தால் அவள் சிவப்புடையவளாய் (ஆசையுடையவளாய்) உனது பிரியத்திற்கு விஷயமாக விளங்குகிறாளா, என்ன? 26. திருமார்பில் பிராட்டி கமலாலயா ஹி கலிதாவஸதா ருசிரம் கடவாட- ஸீத்ருடம் விபுலம்! ந ஜஹாதி ஜாத்வபி யதீய முரஸ் ஸஹி சௌரி ரத்ர லஸதீ ஹ புர:!! தாமரை வாழ்விடமாகக் கொண்ட லட்சுமீதேவி, கதவுபோல் மிகத் திண்ணியதும் விசாலமுமான ஸ்ரீசௌரிராஜனது திருமார்பைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு, அதை ஒருபோதும் விடுவதில்லை. அந்த ஸ்ரீசௌரிராஜன் திருவுறை மார்பனாக நமக்கு எதிரில் விளங்குகிறான். 27. ஸ்ரீகௌஸ்துபம் வக்ஷஸீஹ விபுலே தவ சௌரே! கௌஸ்துபம் மணிவரம் ருசி- தீப்ரம் த்வம் பிபர்ஷி கமலா-ப்ரியகாமஸ் ஸோதரம் பரிஸரே கிம முஷ்யா:? ஸ்ரீசௌரிராஜனே! நீ லட்சுமி தேவியின் விருப்பத்தைச் செய்வதில் ஆசையுடையவனாகி,மிகவும் அகலமான உன்திருமார்பில், அவளுக்கு ஸஹோதரத்தன்மை பெற்றதும், காந்தியால் ஜ்வலிப்பதுமான கௌஸ்துபம் என்னும் சிறந்த இரத்தினத்தை அங்கு அவளுடைய பக்கத்திலேயே (அமையும்படி) தரித்துக்கொண்டிருக்கிறாயா,என்ன? 28. திருமார்பில் முத்துவடங்கள் நீல-சிலாதல-பாஸ்வர- வக்ஷஸ்- ஸங்கி-மநோஹர=மௌக்திக-ஹாரா:! தே ஹி விபாந்தி கிரேர் நிபதந்த்யஸ் ஸித-சிசிரா இவ நிர்சர-தாரா:!! கறுப்பான மணிப்பாறைபோல் விளங்கும் உன்திருமார்பில் சாத்தப்பட்டுள்ள அழகிய முத்துவடங்கள் மலையினின்றும் கீழே விழுவதும் வெளுத்தும் குளிர்ந்துமிருக்கிற மலையருவியின் தாரைகள் போல ஒளிர்கின்றன. 29. திருப்பூணுல் த்வத்-காந்தி-பூர-ப்ரஹதா நிவ்ருத்தா: அபீஹ ச தே பக்த- த்ருசஸ்து சௌரே த்வத்-யஜ்ஞஸூத்ரந் த்வவலம்ய தேந பவந்தி வக்த்ரேந்த்வலோக-த்ருப்தா:!1 ஸ்ரீசௌரிராஜனே! உனது பக்தர்களின் கண்கள் உன்திருமேனியின் காந்தி வெள்ளத்தாலே தள்ளுண்டு திரும்பிய போதிலும், உனது யஜ்ஞோபவீதமாகிய ஸூத்ரத்தைப் பற்றிக்கொண்டு, மீண்டும் மேலே சென்று உனது சந்திரன் போன்ற முகத்தைப் பார்த்து, அதனால் திருப்தி பெற்றனவாக ஆகின்றன. 30.வனமாலை ஆப்ரபதீநா தே வநமாலா சித்ர-ஸீமா த்வத்-கண்ட முபேதா! கல்பக-துல்யம் த்வாம் விததாநா கஸ்ய மநோ நாகர்ஷதி சௌரே?!! ஸ்ரீசௌரிராஜனே! நுனிக்கால் வரையில் தொங்குவதும், பல நிறமலர்கள் வாய்ந்ததும் உனது திருக்கழுத்தை அடைந்ததுமான வனமாலை, கல்பக தருவோடு சாம்யம் உள்ளவனாக உன்னைச் செய்துகொண்டு விளங்குகின்றது. அது எவருடைய மனத்தைத்தான் கவர்வதில்லை. 31. பாஞ்ச சந்நியம் சௌரே! சிரோதிரேஷா ஸமுந்நதா த்வத்-த்ருதம் சங்கம்! பரிஹஸதீவாக்ருத்யா கம்பீரேணாபி கோஷேண!! ஸ்ரீசௌரிராஜனே! உயர்ந்து எடுப்பான உனது திருக்கழுத்து, உன்னாலே கையில் தரிக்கப்படும் பாஞ்சசந்நியம் என்ற சங்கின் வடிவாலும் கம்பீரமான ஒலியாலும் அந்தப் பாஞ்சசந்நியத்தை பரிஹாசஞ் செய்வதுபோல் இருக்கிறது. 32. சக்ராயுதம் த்வத்-ஸம்ச்ரிதாநாம் ஹ்யவநே விலம்பம் த்வம் ஹாதுகாம: கிமு தேவ! சௌரே! பஞ்சாயுதீ மாபரணைர் விகல்ப்யாம் கரைர் பிபர்ஷீஹ ஸதா விநேதா!! தேவனே! சௌரிராஜனே! ரக்ஷகனாகிய நீ உன்னைப் பற்றியவர்களது ரக்ஷணத்தில் கால விளம்பத்தை நீக்க விருப்பமுள்ளவனாகி, ஆபரணங்கள் என்று கருதுமாறு அழகுடைய சக்கரம் முதலான ஐந்து ஆயுதங்களையும் உனது திருக்கரங்களில் எப்போதும் ஏந்துகிறாயா, என்ன? 33.ப்ரயோக சக்கரம் ஸம்ஹ்ருதே சபி ஸகணே விகடாக்ஷே தாநவே ச்ரித-விரோதி-நிவ்ருத்தைய! ஹேதிராஜ மிஹ தீப்தி-விதீப்த- முத்யதம் னஹஸி க்ருஷ்ணபுரேச!! திருக்கண்ணபுரத்தரசே! விகடாக்ஷன் என்ற அசுரன் தனது பரிவாரங்களோடு முன்பு உன்னாலே கொல்லப்பட்டான். எனினும் நீ எப்போதும் சக்கரத்தைப் பிரயோகநிலையில் கையில் ஏந்திக் கொண்டிருக்கிறாய். ஆயுதங்களுக்கு அரசாய், காந்தியால் ஜ்வலிக்கும் அந்தச் சக்கராயுதத்தைக் கையில் ஏந்தி நிற்பது உன்னை அண்டியவர்களது விரோதிகளை அகற்றும் பொருட்டே. 34. பாஞ்சசந்நியம் ஸ்வாதிதாதர-ஸீதா-மதுரிம்ணச் ச்லாகநாதய தவ க்ருஷ்ணபுரீச! ஸவ்ய-கர்ண-நிகடம் ஸமவாப் ய சங்க ஏவ லஸதீவ கராப்ஜே!! திருக்கண்ணபுரத்தரசே! இந்தச் சங்கு, தன்னால் சுவைக்கப்பட்ட உனது அதர அமுத இனிமையை உன்னிடம் தெரிவிப்பதற்கே. உனது இடக் காதின் பக்கத்தில் வந்தடைந்து, தாமரை போன்ற உனது இடக்கரத்தில் விளங்குகின்றது போலும். 35. திருவதரம் குந்த-துல்ய தர-சுப்ர-ரோசிஷஸ் த்வத்ஸ்மிதாதஹஹ! பக்தகோசராத்! பக்வ-பிம்ப-பல-துல்ய-ரக்திமா பாடலீ பவதி தேசதர: புந:!! பழுத்த கோவைக் கனிபோல் நல்ல சிவப்புடைய உனது திருவதரம் (கீழுதடு), பாடல வர்ணமாகின்றது(வெளுப்பும் சிவப்பும் கலந்ததாக). இது உனது புன்முறுவலால், குந்தமலர்கள் போல் வெளுத்த பற்களின் காந்தி உடையதாய் இதனால் பக்தர்களை விஷயமாக்கிக் கொள்வது(அதாவது அவர்களது மனத்தைக் கவர்வது) இந்தப் புன்முறுவல். 36.புன்முறுவல் த்வத்-ஸ்மிதே ஹ்யதர-ரக்த- ருசைதே குந்த-குட்மல-நிபாஸ் தவ தந்தா:! பீஜபூர-பல பீஜ-ஸமாநா பாந்தி ரம்ய-ருசய: கலு சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! குருக்கத்தி அரும்புபோலே வெளுப்பானவை உன் பற்கள். நீ புன்முறுவல் செய்யும்போது உன் அதரத்தின் சிவப்பால் இப்பற்கள், மாதுளம்பழத்தின் விதைகளைப்போல் அழகிய காந்தியை உடையவனாவாய் விளங்குகின்றன. 37. திருச்செவிகள் ஸகுண்டலே தே ச்ரவஸீ கபோல மூலே சமலே தர்பண-துல்ய- சோபே! ஸபுஷ்ப-கல்ப-த்ரும- பல்லவாப்யாம் ஸமே விபாத: ப்ரதிபிம்ப்யமாநே!! கண்ணாடி போன்ற சோபை உடைய உனது நிர்மலமான கன்னத்தில் கீழ்பாகத்தில் குண்டலங்கள் அணிந்த உன் திருச்செவிகள் பிரதிபலிக்கின்றன. மலர்களோடு கூடிய கற்பகத் தருவின் தளிர்களுக்குச் சமமாக இவை பிரகாசிக்கின்றன. 38. திருக்கண்கள் சபர-ஸ்புரிதாபிபாவுகே ஹ்யருணாபாங்க-விலோசநே தவ! மம பாபததேர் நிபர்ஹணம் குகுதாம் த்ருஷ்டி-ஸீதாபிவர்ஷணாத்!! உனது திருக்கண்கள் கெண்டையின் துடிப்பை அவமதிப்பன. செவ்வரி ஓடிய கடைப்பகுதி உடையன. இவை கடாக்ஷமாகிற அம்ருதத்தைப் பொழிவதால் எனது பாவக் குவியலை நாசஞ் செய்யட்டும். 39. திருப்புருவங்கள் அநீகபஸ் தே கலு கார்யஜாதம் யதீய-சேஷ்டாபி ரிஹா வகத்ய! தநோதி தே காம-சராஸ-கர்வ- முஷௌ ப்ருவௌமே லஸதாம் ஹ்ருதப்ஜே!! உனது புருவங்களின் நெறிப்பாலே உனது காரியங்கள் யாவற்றையும் சேனை முதலியார் அறிந்து முடிக்கின்றார். அப்புருவங்கள் மன்மதனுடைய வில்லின் கர்வத்தை நீக்குவன; இவை எனது மனமான தாமரை மலரில் அமர்ந்து விளங்கட்டும். 40. திருநெற்றி தவாஷ்டமீ- சந்த்ர- நிபோ லலாடஸ் ஸ்வநிஸ் ஸ்ருதை: காந்தி சரைஸ் ஸீதாபி:! தாபத்ரயீ தாபித ஜீவ- வர்கா- நாந்யாயந் ஹந்த! திநோதி சௌரே!1 ஸ்ரீசௌரிராஜனே! அஷ்டமி சந்திரனுக்கு நிகரான திருநெற்றியிலிருந்து வெளிவருகின்றது காந்தியின் ப்ரவாஹங்களகிற அம்ருதம். தாபத்ரயத்தாலே வாட்டப்படும் ஜீவராசிகளை இந்த அம்ருதம் போஷித்துக் களிக்கச் செய்கிறது. 41. திலகம் புவிசந்த்ர-கோடி ஸத்ருசம் ருசிரம் தவ தேவ! திவ்ய வதநம் விமலம்! இஹ துஷ்ட-த்ருஷ்டி-விஷயம் ந பவே திதி கிம் பிபர்ஷி திலகம் த்வஸிதம்!! தேவனே! இப்புவியில் கோடி சந்திரர்களுக்கு நிகரானதும், அழகியதும், களங்கமற்றதுமான உனது திவ்ய முகத்தில் நெற்றியில் கறுத்த நிறமுள்ள திலகத்தை தரித்திருக்கிறாய். பொல்லாங்கு படைத்த கண்களால் த்ருஷ்டி தோஷம் வாராமைக்காககஇதை தரித்திருக்கிறாயா, என்ன? 42. திருமுக மண்டலம் பாலம் கலு சந்த்ரம் த்வாந்தம் பரிபூய காடம் புவி கீர்ணம் சௌரே! லபநம் தே! பூர்ணம் த்விஜராஜம் மத்வா கிமு பீத்யா பூத்வா தவ கைச்யம் நந்தும் ஸமுபைதி!! ஸ்ரீசௌரிராஜனே! இளம்பிறைச் சந்திரனை அவமதித்து பூமியில் எங்கும் அடர்ந்து பரந்துள்ள இருட்டானது, உனது திருமுக மண்டலத்தைப் பூர்ணசந்திரனாக மதித்து, பயத்தினால், உனது கேச சமுகமாக மாறி (அந்த முகத்தை) வணங்க வந்துள்ளதா, என்ன? 43. திவ்யபீடம் அநேக- கோட்யண்ட-மஹாதிபத்ய ஸம்ஸூசகேநார்யமகோடி- பாஸா! ஸர்வாங்க-ஸௌந்தர்ய-பவம் ஹி தேஜஸ் ஸஞ்சாத்யதே தே முகுடேந சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! அநேக கோடி அண்டங்களுக்கும் நீ பெரிய அதிபன் என்பதை குறிப்பாகக் காட்டுகின்றது உனது கிரீடம். அது கோடி சூர்யர்களின் காந்தி வாய்ந்தது. உனது திருமேனியின் அங்கங்கள் எல்லாவற்றின் அழகால் உண்டாகும் ஒளியானது, இந்தக் கிரீடத்தால் முட்டாக்கிடப்படுகிறது(மூடப்படுகிறது). 44. திருக்கழல் சௌரே! கநீபுத-தமிஸ்ர- ஸம்ஜ்ஞ- கார்ப்பாஸிகா-புஞ்ஜ-விநிர்காத யே! தே ஸம்யதாஸ் தந்தவ ஏவ நுõநம் த்ம்மில்லதாம் ப்ராப்ய லஸந்தி பச்சாத்!! ஸ்ரீசௌரிராஜனே! அடர்ந்த இருளென்னும் பஞ்சுப்பட்டையிலிருந்து வெளிவந்த நுõல்கள் எவையோ, கறுத்துத்திரண்ட அந்த நுõல்களே துõக்கிக் கட்டப்பட்டவையாகித் தலைக்கொண்டையாய் உன் பின்புறத்தில் துலங்குகின்றன. ஸ்ரீமத்- க்ருஷ்ணபுரீ சாநா- நயநாநந்த-தாயிநே- உத்பலாவதகேசாய சௌரிராஜாய மங்களம்!! **************************************** திருக்கண்ணபுரம்- சௌரிராஜப் பெருமாளுக்கு ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி 535 காட்டில் வேங்கடம் கண்ண புரநகர், வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன், ஓட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னோடும் கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே. ***************************************** திருக்கண்ணபுரம்- சௌரிராஜப் பெருமாளுக்குபெரியாழ்வார் அருளிச்செய்தது உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும் கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக் கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ் சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே. என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 8. ******************************************* திருக்கண்ணபுரம் -சௌரிராஜப்பெருமாளை பற்றி குலசேகர ஆழ்வார் பாடியது மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே! தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர் கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே! என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ! நிலைத்த புகழைக் கொண்ட கோசலையின் பெருமை மிக்க வயிற்றில் வாய்த்தவனே! தென்னிலங்கை அரசனின் மகுடங்கள் தரையில் சிந்தும் படி செய்தவனே! செம்பொன்னால் அமைக்கப்பட்டு யாராலும் (எந்தப் பகைவராலும்) தொடப்படாத கன்னிநன்மா மதில் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கரிய மாணிக்கமே! என்னுடைய இனிய அமுதமே! இராகவனே! தாலேலோ! புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே! திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்! கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே! எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ! தாமரை மலர் மேல் அமர்ந்து இந்த உலகை எல்லாம் பிரமன் உருவில் படைத்தவனே! மிகுந்த வலிமை கொண்ட தாடகையின் வலிமை எல்லாம் அழியும் படி வில்லை வளைத்தவனே! உன்னைப் பார்த்தவர் எல்லாம் தங்கள் மனத்தை உன்னிடம் வழங்கும் படி பேரழகுடைய, திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! எட்டு திசைகளையும் ஆளும் வல்லமையுடையாய்! இராகவனே! தாலேலோ! கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்! தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ! கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே! எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ! தேனும் மகரந்தங்களூம் நிறைந்த பூக்களைச் சூடியதால் அவை நிறைந்த கருங்குழலை உடைய கோசலையின் குலத்தில் உதித்த குழந்தையே! என்றும் தங்கும் பெரும் புகழ் கொண்ட சனகனின் மருமகனே! தசரதனின் மகனே தாசரதீ! கங்கையை விட புனித மிக்க தீர்த்தங்கள் நிறைந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! எங்கள் குலத்தின் இன்னமுதே! இராகவனே! தாலேலோ! தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன் மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே! ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ! தாமரை மேல் நான்முகப் பிரமனைப் படைத்தவனே! தசரதனின் பெருமை மிக்க குழந்தையே! மிதிலை இளவரசியின் மணவாளனே! வண்டு கூட்டங்கள் பூக்களில் மது உண்டு இசை பாடும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! வலக்கையில் மிகப் பெரிய வில்லினை ஏந்தியவா! இராகவனே! தாலேலோ! பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே! சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே! தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ! நாட்டை ஆளும் உரிமையையும் அதோடு பெரும் செல்வத்தையும் பரத நம்பிக்கே அருளி தீராத அன்பு கொண்ட இளைய பெருமாள் இலக்குவனோடு அரிய காட்டை அடைந்தவனே! அழகை ஆளும் மலை போன்ற மார்பினை உடையவனே! திருக்கண்ணபுரத்தரசே! தார் (மாலை) அணிந்த நீண்ட திருமுடியை பூண்ட என் தசரதன் மகனே! தாலேலோ! தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்! வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே! களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே! இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ! சுருண்டு விழும் நறுமணம் கொண்ட முடியை உடைய தயரதன் தன் குலத்தில் உதித்த குழந்தையே! வளைந்து நிற்கும் ஒரு வில்லைக் கொண்டு மதிள் சூழ்ந்த இலங்கையை அழித்தவனே! கழுநீர்ப்பூக்கள் எல்லாத் திசைகளிலும் அலரும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! பக்தர்களுக்கு அருள் தருபவனே! இராகவனே! தாலேலோ! தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே! காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே! ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ! தேவர்கள், அசுரர்கள், திசைகள் என்று எல்லாவற்றையும் படைத்தவனே! எல்லோரும் வந்து திருவடிகளை வணங்க திருவரங்க நகரில் துயில் கொண்டவனே! காவிரி என்னும் நல்ல நதி பாயும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! நெடிய சிறந்த வில்லை வலக்கரத்தில் உடையவனே! இராகவனே! தாலேலோ! கன்னி நன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன் தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை கொல் நவிலும் வேல் வலவன் குடைக்குலசேகரன் சொன்ன பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே! பகைவர்களால் என்று தொடப்படாத பெரிய மதில்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் காகுத்தன் தன் திருவடி மேல் தாலேலோ என்று சொன்ன தமிழ்மாலையாம், பகைவரைக் கொல்லத் துடிக்கும் வேலை வலக்கையில் ஏந்திய வெண்கொற்றக் குடையைக் கொண்ட குலசேகர மன்னன் (சேர மன்னன்) சொன்ன இந்த வேத நூலைப் போன்ற பத்து பாடல்களும் வல்லவர்கள் இறைவனுடன் என்றும் தோழமை கொண்ட பக்தர்கள் ஆவார்கள்! ***************************************** திருக்கண்ணபுரம்- சௌரிராஜப் பெருமாளுக்கு நம்மாழ்வார் பாடியது 9.10 3771 அவனைவிட் டகன்றுயிர் ஆற்ற கில்லா அணியிழை ஆய்ச்சியர் மாலைப் பூசல், அவனைவிட் டகல்வதற் கேயி ரங்கி அணிகுரு கூர்ச்சட கோபன் மாறன், அவனியுண் டுமிழ்ந்தவன் மேலு ரைத்த ஆயிரத் துள்ளிவை பத்தும் கொண்டு, அவனியுள் அலற்றிநின் றுய்ம்மின் தொண்டீர். அச்சொன்ன மாலை நண்ணித் தொழுதே. 9.11 3772மாலைநண் ணித்தொழு தெழுமினோ வினைகெட, காலைமா லைகம லமலர் இட்டுநீர், வேலைமோ தும்மதிள் சூழ்திருக் கண்ணபுரத்து, ஆலின்மே லாலமர்ந் தானடி யிணைகளே. 10.1 3773கள்ளவி ழும்மலர் இட்டுநீ ரிறைஞ்சுமின், நள்ளிசே ரும்வயல் சூழ்கிடங் கின்புடை, வெள்ளீயேய்ந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரம் உள்ளி,நா ளும்தொழு தெழுமினோ தொண்டரே. 10.2 3774தொண்டர்.நுந் தந்துயர் போகநீர் ஏகமாய், விண்டுவா டாமலர் இட்டுநீ ரிறைஞ்சுமின், வண்டுபா டும்பொழில் சூழ்திருக் கண்புரத் தண்டவா ணன்,அம ரர்பெரு மானையே. 10.3 3775மானைநோக் கிமடப் பின்னைதன் கேள்வனை, தேனைவா டாமலர் இட்டுநீ ரிறைஞ்சுமின், வானையுந் தும்மதிள் சூழ்திருக் கண்ணபுரம், தான் நயந் தபெரு மான் சர ணாகுமே. 10.4 3776சரணமா கும்தன தாளடைந் தார்க்கெலாம், மரணமா னால்வைகுந் தம்கொடுக் கும்பிரான், அரணமைந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரம், தரணியா ளன்,தன தன்பர்க்கன் பாகுமே. 10.5 3777அன்பனா கும்தன தாளடைந் தார்க்கெலாம், செம்பொனா கத்தவு ணனுடல் கீண்டவன், நன்பொனேய்ந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரத் தன்பன்,நா ளும்தன் மெய்யர்க்கு மெய்யனே. 10.6 3778மெய்யனா கும்விரும் பித்தொழு வார்க்கெலாம், பொய்யனா கும்புற மேதொழு வார்க்கெலாம், செய்யில்வா ளையுக ளும்திருக் கண்ணபுரத்து ஐயன்,ஆ கத்தணைப் பார்கட் கணியனே. 10.7 3779அணியனா கும்தன தாளடைந் தார்க்கெலாம், பிணியும் சாரா பிறவி கெடுத்தாளும், மணிபொனேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம் பணிமின்,நா ளும்பர மேட்டிதன் பாதமே. 10.8 3780பாதநா ளும்பணி யத்தணி யும்பிணி, ஏதம்சா ராஎனக் கேலினி யென்குறை?, வேதநா வர்விரும் பும்திருக் கணபுரத்து ஆதியா னை,அடைந் தார்க்கல்லல் இல்லையே. 10.9 3781இல்லையல் லலெனக் கேலினி யென்குறை?, அல்லிமா தரம ரும்திரு மார்பினன், கல்லிலேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம் சொல்ல,நா ளும்துயர் பாடுசா ராவே. 10.10 3782பாடுசா ராவினை பற்றற வேண்டுவீர், மாடநீ டுகுரு கூர்ச்சட கோபஞ்சொல், பாடலா னதமிழ் ஆயிரத்து ளிப்பத்தும் பாடியா டிப்,பணி மினவன் தாள்களே. ***************************************** திருக்கண்ணபுரம்- சௌரிராஜப் பெருமாளுக்கு திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி 1648 சிலையிலங்கு பொன்னாழி திண்படைதண் டொண்சங்கம் என்கின் றாளால், மலையிலங்கு தோள்நான்கே மற்றவனுக் கெற்றேகாண் என்கின் றாளால், முலையிலங்கு பூம்பயலை முன்போட அன்போடி யிருக்கின் றாளால், கலையிலங்கு மொழியாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. (2) 8.1.1 1649 செருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ கைத்தலத்த தென்கின் றாளால், பொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி மற்றொருகை என்கின் றாளால், ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலர் என்னப்பா என்கின் றாளால், கருவரைபோல் நின்றானைக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. (2) 8.1.2 1650 துன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல் தோன்றுமால் என்கின் றாளால், மின்னுமா மணிமகர குண்டலங்கள் வில்வீசும் என்கின் றாளால், பொன்னின்மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின் றாளால், கன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.3 1651 தாராய தண்டுளப வண்டுழுத வரைமார்பன் என்கின் றாளால், போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின் றாளால், ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக் கென்கின் றாளால், கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.4 1652 அடித்தலமும் தாமரையே அங்கையும் பங்கயமே என்கின் றாளால், முடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத் துள்ளகலா என்கின் றாளால், வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின் றாளால், கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.5 1653 பேரா யிரமுடைய பேராளன் பேராளன் என்கின் றாளால், ஏரார் கனமகர குண்டலத்தன் எண்தோளன் என்கின் றாளால், நீரார் மழைமுகிலே நீள்வரையே ஒக்குமால் என்கின் றாளால், காரார் வயலமரும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.6 1654 செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் சிவளிகைக்கச் சென்கின் றாளால், அவ்வரத்த வடியிணையு மங்கைகளும் பங்கயமே என்கின் றாளால், மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழைமுகிலோ என்கின் றாளால், கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.7 1655 கொற்றப்புள் ளொன்றேறி மன்னூடே வருகின்றான் என்கின் றாளால், வெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனே ஒக்குமால் என்கின் றாளால், பெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம் உய்யோமோ என்கின் றாளால், கற்றநூல் மறையாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.8 1656 வண்டமரும் வனமாலை மணிமுடிமேல் மணநாறும் என்கின் றாளால், உண்டிவர்பா லன்பெனக்கென் றொருகாலும் பிரிகிலேன் என்கின் றாளால், பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில் யாம் என்றே பயில்கின் றாளால், கண்டவர்தம் மனம்வழங்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.9 1657 மாவளரு மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று, காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத் தம்மானைக் கலியன் சொன்ன, பாவளரும் தமிழ்மாலை பன்னியநூல் இவையைந்து மைந்தும் வல்லார், பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ்தக் கோரே. (2) 8.1.10 1658 தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள் கள்வியோ, கைவளை கொள்வது தக்கதே? (2) 8.2.1 1659 நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள், காணுமோ கண்ண புரமென்று காட்டினாள், பாணனார் திண்ண மிருக்க இனியிவள் நாணுமோ, நன்றுநன் றுநறை யூரர்க்கே. 8.2.2 1660 அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய் வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள், பெருகுசீர்க் கண்ண புரம் என்று பேசினாள் உருகினாள், உள்மெலிந் தாள் இது வென்கொலோ. (2) 8.2.3 1661 உண்ணும்நா ளில்லை உறக்கமுந் தானில்லை, பெண்மையும் சால நிறைந்திலள் பேதைதான், கண்ணனூர் கண்ண புரம்தொழும் கார்க்கடல் வண்ணர்மேல், எண்ண மிவட்கிது வென்கொலோ. 8.2.4 1662 கண்ணனூர் கண்ண புரம்தொழும் காரிகை, பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள், வெண்ணெயுண் டாப்புண்ட வண்ணம் விளம்பினாள், வண்ணமும் பொன்னிற மாவ தொழியுமே. 8.2.5 1663 வடவரை நின்றும்வந்து இன்று கணபுரம், இடவகை கொள்வது யாம் என்று பேசினாள், மடவரல் மாதரென் பேதை யிவர்க்கிவள் கடவதென், கண்டுயி லின்றிவர் கொள்ளவே. 8.2.6 1664 தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும், இரங்குமோ எத்தனை நாளிருந் தெள்கினாள் துரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மை ஊர் அரங்கமே என்ப திவள்தனக் காசையே. 8.2.7 1665 தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா கண்டு,தான் கணபுரம் கைதொழப் போயினாள் வண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம் கொண்டுதான், கோயின்மை செய்வது தக்கதே? 8.2.8 1666 முள்ளெயி றேய்ந்தில, கூழை முடிகொடா, தெள்ளிய ளென்பதோர் தேசிலள் என்செய்கேன், கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும் பிள்ளையை, பிள்ளையென் றெண்ணப் பெறுவரே? 8.2.9 1667 கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை, பார்மலி மங்கையர் கோன்பர காலன்சொல், சீர்மலி பாட லிவைபத்தும் வல்லவர், நீர்மலி வையத்து நீடுநிற் பார்களே. (2) 8.2.10 1668 கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும், திரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும், விரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயர வரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே. (2) 8.3.1 1669 அரிவிரவு முகிற்ஞூகணத்தா னகில்புகையால் வரையோடும் தெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும், வரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண், கரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே. 8.3.2 1670 துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகைபோம் திங்கள்மா முகில்துணிக்கும் திருக்கண்ண புரத்துறையும் பைங்கண்மால் விடையடர்த்துப் பனிமதிகோள் விடுத்துகந்த செங்கண்மா லம்மானுக் கிழந்தேனென் செறிவளையே. 8.3.3 1671 கணமருவு மயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில், திணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும், மணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய் உரலோடும் புணர்மருத மிறநடந்தாற் கிழந்தேனெ ன் பொன்வளையே. 8.3.4 1672 வாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள் தீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும் தாயெடுத்த சிறுகோலுக் குளைந்தோடித் தயிருண்ட, வாய்துடைத்த மைந்தனுக் கிழந்தேனென் வரிவளையே. 8.3.5 1673 மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம், திடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ண புரத்துறையும், அடலடர்த்தன் றிரணியனை முரணழிய அணியுகிரால், உடலெடுத்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே. 8.3.6 1674 வண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம், தெண்டிரைகள் வரத்திரட்டும் திருக்கண்ண புரத்துறையும், எண்டிசையு மெழுசுடரு மிருநிலனும் பெருவிசும்பும், உண்டுமிழ்ந்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே. 8.3.7 1675 கொங்குமலி கருங்குவளை கண்ணாக தெண்கயங்கள் செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ண புரத்துறையும், வங்கமலி தடங்கடலுள் வரியரவி னணைத்துயின்றா, செங்கமல நாபனுக் கிழந்தேனென் செறிவளையே. 8.3.8 1676 வாராளு மிளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை, சீராளும் வரைமார்வன் திருக்கண்ண புரத்துறையும், பேராள னாயிரம்பே ராயிரவா யரவணைமேல் பேராளர் பெருமானுக் கிழந்தேனென் பெய்வளையே. 8.3.9 1677 தேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும் வாமனனை, மறிகடல்சூழ் வயலாலி வளநாடன், காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை, நாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே. (2) 8.3.10 1678 விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன், மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலிபுகழ்சேர், கண்ண புரத்தெம் பெருமான் கதிர்முடிமேல், வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. (2) 8.4.1 1679 வேத முதல்வன் விளங்கு புரிநூலன், பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி, காதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான், தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.2 1680 விண்டமல ரெல்லா மூதிநீ யென்பெறுதி, அண்ட முதல்வ னமரர்க ளெல்லாரும், கண்டு வணங்கும் கண்ணபுரத் தெம்பெருமான் வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. 8.4.3 1681 நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய், சீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி, கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான், தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.4 1682 ஏரார் மலரெல்லா மூதிநீ யென்பெறுதி, பாரா ருலகம் பரவப் பெருங்கடலுள், காராமை யான கண்ணபுரத் தெம்பெருமான், தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.5 1683 மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன், பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி, காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல், தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.6 1684 வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார்மன்னு தாச ரதியாய தடமார்வன், காமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான், தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.7 1685 நீல மலர்கள் நெடுநீர் வயல்மருங்கில், சால மலரெல்லா மூதாதே, வாளரக்கர் காலன் கண்ணபுரத் தெம்பெருமான் கதிர்முடிமேல், கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 8.4.8 1686 நந்தன் மதலை நிலமங்கை நல்துணைவன், அந்த முதல்வன் அமரர்கள் தம்பெருமான், கந்தம் கமழ்காயா வண்ணன் கதிர்முடிமேல், கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 8.4.9 1687 வண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன், கண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை, கொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை, தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ. (2) 8.4.10 1688 தந்தை காலில் விலங்கறவந்து தோன்றிய தோன்றல்பின், தமியேன்றன் சிந்தை போயிற்றுத் திருவருள் அவனிடைப் பெறுமள விருந்தேனை, அந்தி காவலனமுதுறு பசுங்கதி ரவைசுட அதனோடும், மந்த மாருதம் வனமுலை தடவந்து வலிசெய்வ தொழியாதே. (2) 8.5.1 1689 மாரி மாக்கடல் வளைவணற் கிளையவன் வரைபுரை திருமார்பில், தாரி னாசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன், ஊரும் துஞ்சிற்றுலகமும் துயின்றது ஒளியவன் விசும்பியங்கும், தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வதொன் றறியேனே. 8.5.2 1690 ஆயன் மாயமே யன்றிமற் றென்கையில் வளைகளும் இறைநில்லா, பேயின் ஆருயி ருண்டிடும் பிள்ளைநம் பெண்ணுயிர்க் கிரங்குமோ, தூய மாமதிக் கதிர்ச்சுடத் துணையில்லை இணைமுலை வேகின்றதால், ஆயன் வேயினுக் கழிகின்ற துள்ளமும் அஞ்சேலென் பாரிலையே. 8.5.3 1691 கயங்கொள் புண்தலைக் களிறுந்து வெந்திறல் கழல்மன்னர் பெரும்போரில், மயஙகவெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும் வந்திலன், மறிகடல்நீர் தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனியென்னும் தழல்முகந் திளமுலைமேல், இயங்கு மாருதம் விலங்கிலென் ஆவியை எனக்கெனப் பெறலாமே. 8.5.4 1692 ஏழு மாமரம் துளைபடச் சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த ஆழி யான்,நமக் கருளிய அருளொடும் பகலெல்லை கழிகின்றதால், தோழி. நாமிதற் கென்செய்தும் துணையில்லை சுடர்படு முதுநீரில், ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவதோர் அந்திவந் தடைகின்றதே. 8.5.5 1693 முரியும் வெண்டிரை முதுகயம் தீப்பட முழங்கழ லெரியம்பின், வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என்செய்கேன், எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணைநெடுங் கண்துயிலா, கரிய நாழிகை ஊ ழியில் பெரியன கழியுமா றறியேனே. 8.5.6 1694 கலங்க மாக்கடல் கடைந்தடைத் திலங்கையர் கோனது வரையாகம், மலங்க வெஞ்சமத் தடுசரம் துரந்தவெம் மடிகளும் வாரானால், இலங்கு வெங்கதி ரிளமதி யதனொடும் விடைமணி யடும்,ஆயன் விலங்கல் வேயின தோசையு மாயினி விளைவதொன் றறியேனே. 8.5.7 1695 முழுதிவ் வையகம் முறைகெட மறைதலும் முனிவனும் முனிவெய்தி, மழுவி னால்மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால், ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை யடங்கவஞ் சிறைகோலி, தழுவு நள்ளிருள் தனிமையிற் கடியதோர் கொடுவினை யறியேனே. 8.5.8 1696 கனஞ்செய் மாமதிள் கணபுரத் தவனொடும் கனவினி லவன்தந்த, மனஞ்செ யின்பம்வந் துள்புக வெள்கியென் வளைநெக இருந்தேனை, சினஞ்செய் மால்விடைச் சிறுமணி ஓசையென் சிந்தையைச் சிந்துவிக்கும், அனந்த லன்றிலின் அரிகுரல் பாவியே னாவியை யடுகின்றதே. 8.5.9 1697 வார்கொள் மென்முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து, ஆர்வத் தாலவர் புலம்பிய புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த, கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி யொலிவல்லார், ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கிமை யவரொடும் கூடுவரே. (2) 8.5.10 1698 தொண்டீர். உய்யும் வகைகண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன் திண்டோள் நிமிரச் சிலைவளையச் சிறிதே முனிந்த திருமார்பன், வண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மாநோக்கம் கண்டாள், கண்டு கொண்டுகந்த கண்ண புரம்நாம் தொழுதுமே. (2) 8.6.1 1699 பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற அன்று புள்ளூர்ந்து, பெருந்தோள் மாலி தலைபுரளப் பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை, இருந்தார் தம்மை யுடன்கொண்டங் கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப, கருந்தாள் சிலைகைக் கொண்டானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.2 1700 வல்லி யிடையாள் பொருட்டாக மதிள்நீ ரிலங்கை யார்கோவை, அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுந்த ஆற்றலான், வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட முனிதன் வேள்வியை, கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.3 1701 மல்லை முந்நீ ரதர்பட வரிவெஞ் சிலைகால் வளைவித்து, கொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று, தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ, கல்லால் கடலை யடைத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.4 1702 ஆமை யாகி அரியாகி அன்ன மாகி அந்தணர்தம் ஓம மாகி ஊழியாய் உலகு சூழ்ந்த நெடும்புணரி சேம மதிள்சூழிலங்கைக்கோன் சிரமுங்கரமும் துணித்து முன் காமற் பயந்தான் கருதுமூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.5 1703 வருந்தா திருநீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா முன் திருந்தா அரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்தொருநாள், பெருந்தோள் வாணற் கருள்புரிந்து பின்னை மணாள னாகி முன் கருந்தாள் களிறொன் றொசித்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.6 1704 இலையார் மலர்ப்பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு, கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக் கருள்புரிந்தான், அலைநீ ரிலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற் கரசை யருளி,முன் கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.7 1705 மாலாய் மனமேயருந்துயரில் வருந்தா திருநீ வலிமிக்க காலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும், மாலார் விடையும் மதகரியும் மல்லர் உயிரும் மடிவித்து, காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.8 1706 குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியே ரிடையாள் பொருட்டாக, வன்றாள் விடையே ழன்றடர்த்த வானோர் பெருமான் மாமாயன், சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகாற்ஞூ சகடம் சினமழித்து, கன்றால் விளங்கா யெறிந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.9 1707 கருமா முகில்தோய் நெடுமாடக் கண்ண புரத்தெம் அடிகளை, திருமா மகளா லருள்மாரி செழுநீ ராலி வளநாடன், மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்த னொலிவல்லார் இருமா நிலத்துக் கரசாகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே. (2) 8.6.10 1708 வியமுடை விடையினம் உடைதர மடமகள், குயமிடை தடவரை யகலம துடையவர், நயமுடை நடையனம் இளையவர் நடைபயில், கயமிடை கணபுரம் அடிகள்தமிடமே. (2) 8.7.1 1709 இணைமலி மருதினொ டெருதிற இகல்செய்து துணைமலி முலையவள் மணமிகு கலவியுள், மணமலி விழவினொ டடியவர் அளவிய, கணமலி கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.2 1710 புயலுறு வரைமழை பொழிதர மணிநிரை, மயலுற வரைகுடை யெடுவிய நெடியவர், முயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல், கயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.3 1711 ஏதலர் நகைசெய இளையவர் அளைவெணெய் போதுசெய் தமரிய புனிதர்நல் விரைமலர் கோதிய மதுகரம் குலவிய மலர்மகள் காதல்செய் கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.4 1712 தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுதெழ அண்டமொ டகலிடம் அளந்தவர் அமர்ச்செய்து விண்டவர் படமதி ளிலங்கைமுன் னெரியெழ கண்டவர் கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.5 1713 மழுவியல் படையுடை யவனிடம் மழைமுகில், தழுவிய உருவினர் திருமகள் மருவிய கொழுவிய செழுமலர் முழுசிய பறவைபண் எழுவிய கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.6 1714 பரிதியொ டணிமதி பனிவரை திசைநிலம் எரிதியொ டெனவின இயல்வினர் செலவினர் சுருதியொ டருமறை முறைசொலு மடியவர் கருதிய கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.7 1715 படிபுல்கு மடியிணை பலர்தொழ மலர்வைகு கொடிபுல்கு தடவரை அகலம துடையவர் முடிபுல்கு நெடுவயல் படைசெல அடிமலர் கடிபுல்கு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.8 1716 புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய நிலமக ளெனவின மகளிர்க ளிவரொடும் வலமனு படையுடை மணிவணர் நிதிகுவை கலமனு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.9 1717 மலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை வலிகெழு மதிளயல் வயலணி மங்கையர் கலியன தமிழிவை விழுமிய இசையினொடு ஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே. (2) 8.7.10 1718 வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம், வலியுருவில் மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்டா மரைக்கண்ணன், ஆனா வுருவி லானாயன் அவனை யம்மா விளைவயலுள், கானார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. (2) 8.8.1 1719 மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கோர் வரைநட்டு இலங்கு சோதி யாரமுதம் எய்து மளவோர் ஆமையாய், விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை, கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.2 1720 பாரார் அளவும் முதுமுந்நீர் பரந்த காலம், வளைமருப்பில் ஏரார் உருவத் தேனமாய் எடுத்த ஆற்ற லம்மானை, கூரார் ஆரல் இரைகருதிக் குருகு பாயக் கயலிரியும், காரார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.3 1721 உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து, விளைந்த சீற்றம் விண்வெதும்ப வேற்றோன் அகலம் வெஞ்சமத்து, பிளந்து வளைந்த வுகிரானைப் பெருந்தண் செந்நெற் குலைதடிந்து, களஞ்செய் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.4 1722 தொழுநீர் வடிவில் குறளுருவாய் வந்து தோன்றி மாவலிபால், முழுநீர் வையம் முன்கொண்ட மூவா வுருவி னம்மானை உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும் கழுநீர் மலரும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.5 1723 வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூவெழுகால், படியார் அரசு களைகட்ட பாழி யானை யம்மானை, குடியா வண்டு கொண்டுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும், கடியார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.6 1724 வைய மெல்லா முடன்வணங்க வணங்கா மன்ன னாய்த்தோன்றி, வெய்ய சீற்றக் கடியிலங்கை குடிகொண் டோட வெஞ்சமத்து, செய்த வெம்போர் நம்பரனைச் செழுந்தண் கானல் மணநாறும், கைதை வேலிக் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.7 1725 ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்றத் தான்தோன்றி, வெற்றித் தொழிலார் வேல்வேந்தர் விண்பாற்ஞூ செல்ல வெஞ்சமத்து, செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் மில்லிருப்ப, கற்ற மறையோர் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.8 1726 துவரிக் கனிவாய் நிலமங்கை துயர்தீர்ந் துய்யப் பாரதத்துள், இவரித் தரசர் தடுமாற இருள்நாள் பிறந்த அம்மானை, உவரி யோதம் முத்துந்த ஒருபா லொருபா லொண்செந்நெல், கவரி வீசும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.9 1727 மீனோ டாமை கேழலரி குறளாய் முன்னு மிராமனாய்த் தானாய் பின்னு மிராமனாய்த் தாமோ தரனாய்க் கற்கியும் ஆனான் றன்னை கண்ணபுரத் தடியேன் கலிய னொலிசெய்த தேனா ரின்சொல் தமிழ்மாலை செப்பப் பாவம் நில்லாவே. (2) 8.8.10 1728 கைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை, எம்மானை யெம்பிரானை யீசனை யென்மனத்துள் அம்மானை, அடியே னடைந்துய்ந்து போனேனே. (2) 8.9.1 1729 தருமான மழைமுகிலைப் பிரியாது தன்னடைந்தார், வருமானம் தவிர்க்கும் மணியையணியுருவில், திருமாலை யம்மானை அமுதத்தைக் கடற்கிடந்த பெருமானை அடியே னடைந்துய்ந்து பிழைத்தேனே. 8.9.2 1730 விடையேழன் றடர்த்து வெகுண்டு விலங்கலுற படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி, மடையார் நீலம்மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன் றுடையானுக்கு அடியேன் ஒருவர்க் குரியேனோ? (2) 8.9.3 1731 மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. (2) 8.9.4 1732 வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை, எந்தாய். போயறியாய் இதுவே யமையாதோ கொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த மைந்தா உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே. 8.9.5 1733 எஞ்சா வெந்நரகத் தழுந்தி நடுங்குகின்றேற்கு, அஞ்சேலென் றடியேனை ஆட்கொள்ள வல்லானை, நெஞ்சே நீநினையாது இறைப்பொழுதுமிருத்திகண்டாய், மஞ்சார் மாளிகைசூழ் வயலாலி மைந்தனையே. 8.9.6 1734 பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும்நின் றடியேனுக்கு, உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை, முற்றா மாமதிகோள் விடுத்தானை யெம்மானை எத்தால் யான்மறக்கேன் இதுசொல்லெனனேழைநெஞ்சே. 8.9.7 1735 கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை வற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப் பெற்றேன் பெற்றதும் பிறவாமை பெற்றேனே. 8.9.8 1736 கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும் தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள் விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ. (2) 8.9.9 1737 செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன் கருநீர் முகில்வண்ணன் கண்ண புரத்தானை இருநீ ரின்தமிழ் இன்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர், வருநீர் வையமுய்ய இவைபாடி யாடுமினே. (2) 8.9.10 1738 வண்டார்பூ மாமலர் மங்கை மணநோக்கம் உண்டானே உன்னை யுகந்துகந் துன்றனக்கே தொண்டானேற்கு என்செய்கின் றாய்சொல்லு நால்வேதம் கண்டானே கண்ண புறத்துறை யம்மானே. (2) 8.10.1 1739 பெருநீரும் விண்ணும் மலையு முலகேழும் ஒருதாரா நின்னு ளொடுக்கிய நின்னையல்லால் வருதேவர் மற்றுளரென் றென்மனத் திறையும் கருதேன்நான் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.2 1740 மற்றுமோர் தெய்வ முளதென் றிருப்பாரோ டுற்றிலேன் உற்றது முன்னடி யார்க்கடிமை மற்றெல்லம் பேசிலும் நின்திரு வெட்டெழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே. (2) 8.10.3 1741 பெண்ணானாள் பேரிளங் கொங்கையி னாரழல்போல் உண்ணாநஞ் சுண்டுகந் தாயை யுகந்தேன்நான் மண்ணாளா. வாள்நெடுங் கண்ணி மதுமலராள் கண்ணாளா கண்ண புரத்துறை யம்மானே. 8.10.4 1742 பெற்றாரும் சுற்றமு மென்றிவை பேணேன்நான் மற்றாரும் பற்றிலே னாதலால் நின்னடைந்தேன் உற்றானென் றுள்ளத்து வைத்தருள் செய்கண்டாய் கற்றார்ச்சேர் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.5 1743 ஏத்தியுன் சேவடி யெண்ணி யிருப்பாரை, பார்த்திருந் தங்கு நமன்றமர் பற்றாது சோத்தம்நாம் அஞ்சுது மென்று தொடாமை நீ காத்திபோல் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.6 1744 வெள்ளைநீர் வெள்ளத் தணைந்த அரவணைமேல் துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே வள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர் கள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.7 1745 மாணாகி வைய மளந்ததுவும் வாளவுணன் பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்திருந்தேன் பேணாத வல்வினை யேனிட ரெத்தனையும் காணேன்நான் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.8 1746 நாட்டினா யென்னை யுனக்குமுன் தொண்டாக மாட்டினே னத்தனையே கொண்டென் வல்வினையை பாட்டினா லுன்னையென் நெஞ்சத் திருந்தமை காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.9 1747 கண்டசீர்க் கண்ண புரத்துறை யம்மானை கொண்டசீர்த் தொண்டன் கலிய னொலிமாலை பண்டமாய்ப் பாடு மடியவர்க் கெஞ்ஞான்றும் அண்டம்போ யாட்சி யவர்க்க தறிந்தோமே. (2) 8.10.10 ****************************** -திரு கண்ண புர அனுபவம் ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் பஞ்ச பிரகாரம் அவனுக்கு -அர்ச்சையில் கல்யாண குணங்கள் நிறைந்து விளங்குகிறான்.. தென்னன் உயர் பொருப்பும் வட தென் திரு மலைகள்/ கீழ் மேல் வீடு..-உத்சவங்கள் எல்லாம் அடியார்களுக்கு தான் உன் அடியார்க்கு என் செய்வன் என்று இருத்தி -அவாப்த சமஸ்த காமன்-தனியனாகி ஆனந்தம் இல்லை.. -கலை இலங்கு மொழி யாளர் கண்ண புரத் தம்மானை கண்டார் கொலோ ..அடியாரை தொடர்ந்து வேத வேதாந்தம் போகுமா..போத எந்த பரஸ்பரம் துஷ்யந்த ரமந்தக -ஜன்மம் கர்மம் மே திவ்யம்-சரீரம் கழித்து மோட்ஷ தரும் முகுந்தத்வம்..நாராயணன் ஸ்ரீ மான் ஏஷ- திரு பாற் கடலில் சயனித்து -எழுந்து இருந்து மதுரா நகர் வந்து சேர்ந்தான். தனி ஸ்லோஹா வியாக்யானம் -பெரிய வாச்சான் பிள்ளை..வராக சரம ஸ்லோஹம்-ஹரி வம்ச ஸ்லோஹம்-ஸ்ரீ ராமாயண ஸ்லோஹம் -பல அர்த்தங்கள் அருளி விட்டு அன்றிக்கே -வேறு விதம்-ஸ்ரிய பதி படி மூன்று ஈட்டில் இருப்பது போல்-வேறு மாதிரியான பிரவேசம்-அவதாரிகை..அடி முதல் நுனி வரை திரு கண்ண புரம் சொல்ல வந்த ஸ்லோஹம்.. -எஷா தொடங்கி மதுரா புரி வரை-அடி முதல் எல்லா சப்தங்களும் ஆரும் -சௌரி பெருமாளை தான் சொல்லும்..-ஏஷ//நாராயண //ஸ்ரீ மான்// ஷீராப்தி சயன //ஆகாத //மதுரா புரிம் ஆரு தலைப்பு..ஆரு நாளுக்கு பார்ப்போம்…இன்பம் மிகு ஆறாயிரம் திரு குருகை பிரான் பிள்ளான்-அபிமான புத்ரர் ஸ்வாமி ராமானுஜருக்கு ..- ஓர் ஆண் வழியாக பெற்ற உபதேசம்-கிருஷ்ணனாக திரு அவதாரம் செய்தான்-இதை சொல்ல வந்த ஸ்லோஹம்..விஷ்ணு ரூபாய வரைய -இன்றும் கல்யாணத்தில் சொல்லும் மந்த்ரம்- ஜீவாத்மா அனைவரையும் பாணி கிரகணம் பண்ணும் புருஷோத்தமன்.. தத்வ த்ரய ஞானம் இருக்க வேண்டும்..அசித்-ஒரு படி இருக்காது..சொரூப ச்வாபம் ஷட் பாவம் விட தக்கது -சித் ஞான சொரூபம் -ஈஸ்வரன் இரண்டுக்கும் நியாமகன் -அசித் கை விட்டு சித்தை கொண்டு ஈஸ்வரனை அடையணும்..-பிறப்பித்து வழி காட்ட-அரு சமயம்-17 மதங்கள் உண்டு.. -சப்த பங்கி வாதம் ஜினான்..இருக்கு/இல்லை/இருக்கு என்றும் இல்லை/இருக்கு சொல்ல முடியும்/ .இல்லை சொல்ல முடியும் இருக்கு என்றும் இல்லைஎன்றும் சொல்ல முடியும் .எப்படியும் சொல்லலாம் போல..சூன்யமான இடத்தை சூன்யம் கொண்டு பவ்தன்/சாரு வாத-லோகாயுத உடம்பு மட்டும்/ஜீவாத்மா யானைக்கு யானை அளவு.இப்படி பல விதம்.. வேதம் கொடுத்து திருத்த பார்த்தான்..வேதத்துக்கு தப்பான அர்த்தம்-பத்ரம் கர்நேபி ..வேத மந்த்ரம் தேவர்கள் ஆச்சார்யர் அர்த்தம் தேவ சப்தம்-திரு வாக்கினால் பகவத் விஷயத்தை காத்து கொண்டு கேட்க்க வேண்டும் அர்த்தம்..-நல்லதை பார்க்க வேண்டும்..சௌரி பெருமாளை காட்ட நாம் பார்க்க வேண்டும்..பிறந்து கார்யம் பண்ண அவதரித்தான்..கொண்டால் வண்ணனாய் கோவலனாய்-கண்ணன் என்னும் கரும் தெய்வம்- பிறந்த வாரும்-ஆனை காத்து ஆனை கொன்று மாயம் என்ன மாயம்.. தெய்வ தேவகி புலம்பல்.. அனைவரும் ஆழம் கால் பட்டது கிருஷ்ணா அவதாரம் -இவனுக்கு வயிறு பிடிப்பார்கள்-பிதா பந்தி இதன் - திக்குகளிலும் -பட்ட மகிஷி இவனுக்கு சிறை சாலை இருந்த அப்பா அம்மா ..அச்சு தாலி ஆமை தாலி ஆமை புலி நகம் போட்டு -அங்கு தம்பி உடையான் படைக்கு அஞ்சான்/ எல்லாம் ஓன்று இங்கு எல்லாம் இரண்டு ..ஒருத்தி மகனாய் எது ஆய குளம் ருக்மிணி சத்ய பாமை சொல்லும் பல ஏலா பொய்கள் உரைப்பான்..ராமன் எல்லாம் அங்கு இங்கு அசுரர் எல்லா விதமும்..பெருமையும் எளிமையும் -சாஸ்திரம் கொடுத்த அவதாரம் கிருஷ்ணா அவதாரம் ஒன்றே.. அதை சொல்ல வந்த ஸ்லோஹம் இது-ஏஷ -இவரை பார்த்து ஏஷ-அவர் தூரமாய் இருந்தால்..கை காட்டி ஏஷ-ஜகத் காரண முழு முதல் கடவுள் சொல்லி வந்து -எட்டா கனி இல்லை நமக்கு அணியன் காட்ட ஏஷ இதோ-இருக்கிறான்..தவ்லப்ய விசேஷம் காட்ட ஏஷ-ஆயிரம் திரு நாமம்சொல்லி தர்ம புத்ரனுக்கு பீஷ்மர் -தேவகி நந்தனன் காட்டியது போல்-ஸ்ரீ ராமாயண தனி ஸ்லோஹம்-மண்டோதரி -வ்யக்தம் ஏஷ -கைதொட்டு காட்டுகிறாள் அங்கும் அவஜானந்தி மாம் மூட -எவ்வளவு பெரியவன் இங்கு வந்து இருக்கிறான் -பெரியவன் காட்ட எட்டா கனி ஓடுகிறார்கள் எளியவன் காட்டினால் இவ்வளவு தான் என்று விலகுகிறான் பெருமை குறையாமல் -ஏஷ -மனுஷ்ய தேகம் தான் நாராயண .. எளிமை தோற்ற ஏஷ ..ஏஷ சௌரி-அர்ச்சையின் எளிமை..பூர்த்தியும் ச்வாதந்த்ர்யமும் குலைத்து கொண்டு அர்ச்சக பராதீனமாக இருக்கிறான் ..-சதுர் கதி-குகை சிங்கம் நடை/ரிஷப கதி ..நிரந்குச ச்வந்த்ரன் -கெடுத்து கொண்டு நடக்க அசை பட்டாலும் அம்மா வாசை கை தல சேவைக்கு காத்து இருக்கிறான்.. வானுளார் அறியலாகா வானவா -ஏஷ-இங்கு வந்து காட்ஷி கொடுகிறானே-பிரத்யட்ஷ பிரமாணத்தால் அறியலாம் ..அனுமானம் -ஒன்றை கொண்டு வேறு ஒன்றை காட்டுவது -புகை மலை மேல் பார்த்து நெருப்பு பட்ஷம் மலை சாத்தியம் நெருப்பு ஹேது புகை..-இதற்க்கு அனுமானம் பிரமாணம்..ஆகமம் -சப்தம்-வேதம் கொண்டு..கண்ணுக்கு நேராக -அர்தா பத்தி- தேவ தத்தன் பருத்து இருக்கிறான் பகல் வேளையில் சாப்பிட வில்லை -இரவில் சாப்பிடுவான் அனுபலப்தி-இல்லை என்பதால் சாதிப்பது ..திரு கண்ண புரத்து அரையரால் அடி பட்ட எளிமை.. -சிலை அன்றோ கை தலத்து ஆபரணமா ஆயுதமா ..தழும்பு இன்றும் சேவிக்கலாம்…என்றும் பிரத்யட்ஷம்..சௌரி பெருமாள் ..நீணிலா முற்றத்து -காணுமோ கண்ண புரம்- என்று காட்டினாள்- இதோ பாருங்கோ -வஸ்துநிர்தேசம்-..ஏஷ -கண்ணுக்கு திரு கண்ண புரம் ஓன்று தான் தெரியும்..அர்ஜுனன் மீன்-சக்கரம் மண்டபம் தெரிய வில்லை. லஷ்யத்தில் நோக்கு -போல்//திரு ஆலி திரு நகரி இருந்தும் திரு கண்ண புரம் ஒன்றே தெரிகிறதாம் -பிரான் இருந்தமை காட்டினீர் -தெய்வம்-அடியார்களுக்கு திவ்ய தேசம் காட்டினாள் -திவ்ய தேசமே பெருமாளை விட ஏற்றம்..கண்ணை திறந்து பாருங்கோ-அஞ்சலி பண்ணுங்கோ-காட்டின உடன் தழு தழுத்து -சைகையால் காட்டி -நா எழாமல்.. இவன் பெருமையை சொல்லி முடிக்க முடியாது-அவளும் நின் ஆகத்து -இவளை- குவலம் கன்னி கொல்லி அம் பாவை -நின் தாள் நயந்து இருந்த பெருமைகளை அடுக்கி -சொல்லி முடிக்க முடியாமல் இவளை.காட்டினது போல் ஏஷ..-பண்டு இவரை கண்டு அறிவது எவ் ஊரில் என்று பயிகின்றாளால் -.உண்டு இவர் பால் அன்பு -தெரிந்து பிரிகிலேன் -ஜகத்துக்கு ஸ்வாமி-நினைப்போம்-முதலில்- யார் என்று புரிந்து கொள்ள முடிய வில்லையே.. முதலில் தெரியும் 100 தடவை தெரியாதது என்போம்-மயக்கி அறிந்து கொள்ள பண்ணுவான் புதுசாக புதுசாக காட்டுவான்..பயிகின்றாளால் நிகழ்காலம் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்..-வாக்குக்கிம் மனசுக்கும் எட்டாதவன் -ஏஷ -உளன் சுடர் மிகு சுருதியுள் உளன். இருந்தும் எங்களால் ஏஷ சொல்லும் படி இருக்கிறான். பர்மா அறியாதவன் தயிர் பானை காரி அறிந்தவள்..அவரே இவர்- இவர் நமக்கு என்று இராம்கி -பரத்வம் சௌலப்யம் காட்டும்- பட்டு உடுக்கும் அயர்த்து - -எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்.. தலைவி-புணர்ச்சி காந்தர்வ விவாகம் பண்ணி கொண்டவர்கள்..எம்பெருமான்- வுஊர் எப்படி அறிந்தால் பிரிந்தால் தரிக்க முடியாது -திரு அரங்கம் சொன்னான் -எங்கே என்னும்.. அழுகை -தெரிந்து இருந்தாலும் விச்லேஷத்தால் ஸ்ரமம்-அங்கு சந்தேகம் இங்கு கண்ண புரம் காணும்-என்று காட்டுகிறாள் -அவர் அவர் தான் ஏஷ -கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ண புரி-வட மதுரை பிறந்தான் 9 பதிகம் பல தடவை 9 பத்தில் சொல்லி திரு கண்ண புரம் பதிகம் சொல்வதால் ஆழ்வார் கருத்தும் இது தான் என்கிறார்.. கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்னும்.. யவனம் நித்யம்-யுவா குமாரன்-64 சதுர யுகம் கண்டு இருந்தாலும்..-பிடித்த கார்யம் பண்ணி கொண்டு இருந்ததால் யவனம் மாறாமல்-கன்று மேய்த்ததால் இனிது உகக்க -அதனாலே காளை-திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி-..கன்றுகளால் இனிது உகந்த -பசு மேய்த்தால் உவப்பு மட்டும்-கடி பொழில் சூழ் கண புரத்து என் கனியே என்னும்.. -கிருஷ்ண அவதாரம் அன்று இன்று சௌரி பெருமாள் பிரதிநிதி முன்னோர் நிர்வாகம் பட்டர்-பொழில் பார்த்து கண்ணனே தேடி இங்கு தங்க அதுவே திரு கண்ண புரம்-கனி-பரி பக்குவமான பழம்-பொழில் மரம் செடி கொடி காய் -உண்டு-அதில் கனி- திரு கண்ண புரம் தோட்டம் பழுத்த பழம் இவன்- திரு ஆய்ப்பாடி கோகுலம் ப்ருந்தானம் தோட்டம் பழுத்து கண்ணன் போல்..113 -62 ஸ்லோஹம் ஹரி வம்சம்-பார்த்து வருகிறோம்..நாராயணா சௌரி பாப்போம் அடுத்து .. அணியனாகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம்.. சேயன் அணியன் -அன்று ஓதிய வாக்கு அதனை கல்லாதோர் .. -பேசலாம் நினைக்கலாம் பார்க்க முடியாது சௌரி பெருமாளை பார்க்கலாம்.. ரொம்ப சுலபன் ஏஷ -நாராயண -பரத்வம்..மேரு பர்வதம்..பெருமைக்கும் எளிமைக்கும் எல்லை நிலம்-ஏஷ நாராயண ..உத்பாதகத்வன் காரணம்-தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் படைத்தவன் புண்டரீக மலர்-தாமரை மேல் அயன் அவனை படைத்தவன் புவனி எக்ல்லாம் படைத்தவன்-சௌரி பெருமாள் ஜகத் காரண பூதன்..-பெருமை சொல்ல வந்த -சப்தம்.. பரன் திறம் அன்றி மற்று தெய்வம் இல்லை..நாராயண திரு நாம அர்த்தம்-எல்லா வற்றிலும் நீக்கம் அர நிறைந்து இருக்கிறான் -அந்தபகித்ச -உள்ளும் வெளியிலும். வியாபித்து இருக்கிறான்.. ஜீவாத்மா சரீரம் உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்.. -வழி உணரும் தன்மை ஆத்மாவுக்கு தான் ஞானம் இருப்பதால்-அணு மாதரம்-உடம்பு முழுவதும் இருக்குமா ஜீவாத்மா -தீபம் -இருப்பது ஒரு இடம் ஒழி பிரகாசிக்கும் எங்கும். அது போல் ஞானம் பரவி இருக்கும்..தர்ம பூத ஞானம் வியாபித்து.. சொரூபத்தாலே நாராயணன் வியாபிக்கிறான்..தானான தன்மையால்-ச்வாபத்தால் தான் வியாப்தி ஜீவாத்மாவுக்கு..புஷ்பம் தான் கண்ணுக்கு தெரிகிறது-நாம் எல்லாம் ஹிரண்யன் போல்-கறந்த பாலில் நெய்யே போல்-பாலில் நே தெரியவில்லை-அது போல்-உரை குத்தி கடைந்து ஞானம் என்ற மத்தை நாட்டி கடைந்தால் தெரியும்.. இப்படி பார்த்த ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் சொல்லி நாம் அறிய வேண்டும்-நீக்கம் அற நிறைந்து இருக்கிறான் பிரகலாதன் எங்கும் உளன் என்றானே அசுர பாலகன் தெரிந்து கொண்டான்..-சர்வ வியாபகன் நாராயணன்.. சப்தம் உருவானது அறிய வேண்டும்-நார அயனம் -ர -நர நார நாராக பிரித்து -அழிவற்ற பொருள்களின் திரள்..கூட்டம் நித்ய வஸ்துகளின் திரள் //அயனம் ஆஸ்ரியம் இருப்பிடம்/தன்னை தவிர மற்று அனைத்துக்கும் அவனே இருப்பிடம்.நாரங்களை தானும் இருப்பிடமாக கொண்டவன் அந்தர்யாமி..-ஏராளும் இறையானும் . திசை முகனும் …கூராளும் தனி உடம்பன்..தரிக்கிறான் அவ லீலையாக மயிர் காலுக்கு கூட போதாது -அத்வதீயம் இவனொருவனே நாராயண -பானினி சூத்திரம்.அப்பைய தீஷிதர் -தீவிர சைவர் ..கப்யாசம் புண்டரீகம் எவம் அஷணீ-இரண்டு கண்கள் தாமரை போல் மலர்ந்தும் மூன்றாம் கண் மலராமலும் என்று வியாக்யானம் பண்ணினார் முக் கண்ணன் .. னத்வம்-ணத்வம் ஆனதால் கெட்டேன் இது நாராயணனை தான் குறிக்கும்..பிரளய காலத்திலும் -இவன் ஒருவனே இருந்தான்-ஏக ஏவ ஆஸீத்-ந பிரம்மா ந ஈசானாக -நாராயணனே ஆசீத ஸ்பஷ்டமாக -பிரளயங்களில் நாரமும் உண்டு-அவன் இடம் ஒட்டி கொண்டு ரூப நாம விவேகம் இன்றி -பிரித்து அறிய முடியாத படி சூஷ்ம நிலையில்-ஸ்தூல நிலையில் பின்பு-சிருஷ்டிக்கு பின்..நதிகள் கடலில் சேர்ந்த பின் பிரித்து பார்க்க முடியாது.. ஆனால் கடலில் நதிகள் இல்லை என்று சொல்ல முடியாது போல்..சூஷ்ம சேதன அசேதன விசிஷ்டன் -ஒன்றும் தேவும் -உலகும் உயிர் உம மற்றும் யாதும் இல்லா -பகவான் இடம் ஒன்றி கிடக்கும்.. இல்லாது ருந்தால் வெறும் அயன்-நாரம் =ஜலம் திரு பாற்கடலை இருப்பிடம் ஆக -மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளான் -எல்லா நீரிலும் உள்ளான்-நாரம் -உடலையும் உயிர் ரையும் போல் விட்டு பிரியாமல் இருக்கிறான் நாரம் -கல்யாண குணங்களுக்கு இருப்பிடம்..16 கல்யாண குணங்களும் ஸ்ரீ ராமன் இடம் இருந்தது போல்-அனைத்துக்கும் காரணம் அவனே..அவனை படைத்தவன் யாரும் இல்லை ஆதி மூலமே யானை தெரிந்து அகில காரணாய .. அத்புத காரணாய - நிஷ் காரணாய -திரி விதமும் அவன் ஒருவன் இடம் மட்டும் தான் நான்முகனை நாராயணன் படைத்தான்…முதலாம் திரு உருவம் மூன்று என்பர் ஒன்றாம் முதல் மூவருக்கும் என்பர் நாபி கமலம் பார்க்காமல் பேசுவார்கள்- நின் அகத்தே அன்று நாபி கமல பூ..தாமரை மேல் அயன் அவரை படைத்தவனே .. -புண்டரீக மலர் மே புவனி எக்ல்லாம் படைத்தவன் அயனம் =சரணம் ஆகும் புகல் இடம் ஆஸ்ரய்ம் -பிராப்ய பிராபகம் அவன் ஒருவனே ..திரு வாளன் திரு பதியே இருப்பாக பெற்றோம் -என்ன குறை நமக்கு.. லஷ்ம்யா சக ரட்ஷகன் ரிஷிகேசன்..-ஸ்ரீமான் -தவி காருண்யா ரூபை-காப்பானுயிர் உயர்கள் சால பல நாள் உகந்து உயிர் கள் காப்பான் கோல திரு மா மகள் உடன் சேர்ந்து -ஸ்ரீமான் சௌரி-பார்ப்போம்..ஸ்ரிய பதித்வம் ஒருவனுக்கே.. தனம் உடையவன் தனவான்/குணம் உடையவன் குணவான் போல் ஸ்ரீமான் ஸ்ரீ விட்டு பிரியாமல்-அகலகில்லேன் இறையும் என்று ..- ஐஸ்வர்யம் படிப்பு அனைத்துக்கும் அபிமானி ஸ்ரீ தேவி தான்..கற்கின்ற நூல் வலையில் பட்டு இருந்த நூலாட்டி கேள்வனார்..-அவளையே சொத்தாக கொண்டவன் ஸ்ரீமான்.. ஆஸ்ரனியத்வமும் போக்யத்வமும் -சென்றுபற்ற நம்பிக்கை கொடுத்து புகுந்த பின் போக்யமாய் இருக்கும். இவள் சம்பந்தத்தால் தான்..ஸ்ரீ ராமாயணத்தில் அவள் சந்நிதி இல்லாத பொழுது தான் முடித்தான்.. - திவளும் வெண் மதி போல் அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் -மூன்று உம்மை தொகை-ஆசை விடாளால் -பெரிய பிராட்டி புருவ நெருப்பு தான் பிரமாணம் முராரிக்கு -உயர்வு தாழ்வுக்கு இது தான் காரணம்..வேதாந்தம் தத்வ சிந்தனம் பண்ண திரு மார்பு பார்த்து -செம் பஞ்சு குழம்பு பதிந்து இருக்க -அவள் திருவடி சின்னம் கண்டதும் முடித்தனவாம்…போக்யத்வம் -இனியவள்-சுவையன் திருவின் மணாளன்.. அவள் சம்பந்தத்தால் தான் சுவையன்..மீனுக்கு தண்ணீர் பசை எங்கும் போல் ஸ்ரீ தேவி அவன் இடம்-ஆல் இலை தளிரில் -தாமரை திருவடியை தாமரை வாயில் தாமரை கை பிடித்து வைத்து கொண்டு..-நீ யார் மார்கண்டேயர்நின் செம் கேள் விரலிலும் கடை கண்ணிலும் காட்ட -திரு மார்பை காட்ட -சொரூப நிரூபக தர்மம்.. //மது பிரத்யம் நித்ய யோகம் காட்டும் -அபிமத அநுரூப -நித்ய அநபாயிநீம் நிரவத்யாம்-நமக்காக பிரியாமல் இருக்கிறாள் ..உணர்த்தி உரைத்து குற்றம் பொருப்பிக்க வைக்கிறாள் சந்நிதியால் காகம் தலை பெற்றது -தொட்டு அபசாரம் பண்ணினாலும்….வாமன மூர்த்தியும் திரு மார்பை மான் தோலால் மறைத்து போனதும் இவள் கடாஷம் மகா பலிக்கு கிடைக்காமல் இருக்க தான்..ராஜ்ஜியம் பறிக்க முடியாது போய் இருக்கும் கடாஷம் பெற்று இருந்தால் . ராமன் சீதை/கிருஷ்ணன் ருக்மிணி-பிரியாமல் நமக்குஉதவ//ஸ்ரீ சப்தம் ஆரு வித -ஸ்ரியதே ஸ்ரேயதே வணங்க படுகிறாள் எல்லோராலும் அவனை தான் வணங்குகிறாள்//ஸ்ருனோதி ஸ்ராயவது கேட்டு கொள்கிறாள் கேள்விப்பிகிறாள் ஸ்ருனாதி ஸ்ராயவதி குற்றம் அறுத்து செர்பிகிறாள் .புடாது புயஜோயோக பிராட்டி வைபவம் பெருமாள் கேட்டதும் கவசம் வெடிக்கும்.. -ஆயிரம் ஸ்லோஹம் பாடி ஆயிரம் கவசம் பண்ணுவேன் பட்டர்.. சாஸ்திரமும் கல்யாண குணமும் பார்க்க வேண்டும்..சரண் என்றவர்களுக்கு -தன அடியார் அது செய்யார் செய்தாலும் நல்லதே செய்தார் என்பான்-அவளே சேர்த்த பின்பு அசைத்து பார்த்தாலும் அசைக்க முடியாது ..வாலியும் -ஆவியை சனகம் பெற்ற அன்னத்தை ..பிரிந்ததால் செய்தனை-மாணிக்கம் ஒளி போல்-புஷ்பம் மணம் போல்.. தனியாக ஒளி மணம் கொடுக்க முடியாது போல் ..மிதுனம்-சேர்திக்கு தான் வைபவம்..ராவணன் சூர்பணகை போல் ஒருவரை மட்டும் -விபீஷணனுக்கு வாழ்வு மிதுனத்தை பற்றினால் கிடைத்தது -தரு மான மழை முகிலை பிரியாது வருமானம் தவிர்க்கும் மணியை வரும் அவமானம் தவிர்ப்பான் அணி உருவை திரு மாலை -அழகன் ஸ்ரிய பதி அம்மானை அமுதத்தை-திரு மாலை நடுவில் -முன் அணி உரு பின் அம்மானை அமுதத்தை அவளால் தான் அழகன் ஸ்ரிய பதி என்பதால் சர்வ சேஷி அமுதம் ஸ்ரிய பதி என்பதால்….வடி தடம் கண் மலர் அவள் ஆகத்து -விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்பன்-மார்வில் திருவன் வலம் ஏந்தும் சக்கரத்தான் வாரார் -சீராளும் திரு மார்பன் .. -மைதலி தன மணவாளா -குலசேகரர் -பிறப்பித்து தயரதன் தன மா முதலாய் பிறந்து சீதை கை பிடித்ததும் சந்தோசம் -திரு இல்லா தேவரை தேறன்மின் தேவ எம்பெருமான் விழுங்கிய எச்சில் தெய்வம் அனைவரும்..அனைவருக்கும் உத்பாதகன் அவன் ஒருவனே..- ஸ்ரிய பதயே சௌரி பெருமாள் ஸ்ரீரார்ணவ நிகேதன ஸ்ரீர =பால் ஆர்ணவம் = சமுத்ரம் சயனமாக கொண்டவன் பாற் கடல் பள்ளியான் .. பிறந்த இடம் பரிதி- வேட்டகம் என்பதால் அவன் பள்ளி கொண்டு இருகிறானாம்-படுக்கை அரை என்பதால் அவளுக்கு ஆசை..பிள்ளை வேட்டகத்தை ஆசை படும்..பெண் புக்ககத்தை ஆசை படும்….அர்ச்சிராதி- எதிர் கொண்டு வர வேற்ப்பது இதனாலஎன்கிறார் பிள்ளை லோகாசார்யர்..வெளுத்த பால் கடலில் நீர் உண்ட மேகம் போல்சாய்ந்து காள மேக வண்ணன்.. மின்னல் அவள். இந்திர ஜாலம் சாத்தி கொண்டு இருக்கும் திரு ஆபரணம் மழை கிருபா வர்ஷம்..-சீதள காள மேகம்..திரு அனந்த ஆழ்வானும் கருப்பு -ஸ்ரீ ரெங்க விமானமும் கருத்து -வெளுப்பாக தான் இருக்க வேண்டும் -அவனின் கருப்பு வீசுவதால்.. நீர் உண்ட மேகம் கருத்து -காந்தி வீச சுற்று புரம் அனைத்தையும் கருப்பாக ஆக்கி ..அந்த கருப்பு கண்களை ரட்ஷிக்கட்டும்.-வர்ணங்களின் பரி பாகம் அனுபவிகிறார்..-மேகமும் பகவானும்-முகில் வண்ணன் அடி மேல்/மின்னு மா மழை தவழும் மேக வண்ணா -வர்ணம் ஸ்வாபம்-ஒத்து - நாம் இருக்கும் இடத்தில் வந்து பொழியும்..அவனும் நாம் இருக்கும் -வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே -திரு கமல பாதம் வந்து என் கண்ணினுள் ஒக்கின்றதே ..-வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின்.. எதிர் சூழல் கொண்டு வருவான்.. மின்னல் போல் பிராட்டி/ஜலத்தை முகந்த இடத்திலும் பொழியும் வேறு இடத்திலும் பொழியும்.சான்தீபனுக்கும் வசிச்ஷ்டருக்கும் உபதேசம் பண்ணி இருக்கிறான்…நீர் உண்டு இருந்தால் மேதுவாகா சப்தம் இன்றி போகும் வெளுத்த மேகம் வெட்க்கி ஓடி போகும்.இடி இடித்து.. .அடியார்க்கு என்செய்வேன் என்று இருத்தி-திரௌபதி-இரு கையையும் விட்டேனோ திரௌபதி போலே-கடன் காரன் போலே மனம் நொந்து போனான் அவ்வளவும் செய்தாலும்…நேரில் வர வில்லை-வந்து இருந்தால் பாண்டவர்களை யும் பீஷ்மர் போன்றார்களையும் முதலில் முடித்து இருப்பான்-நம் சொத்து என்று அபிமானித்து இருந்தார்களே த்வாரகா நிலையா புண்டரீ காட்ஷா என்று கூப்பிட்டாலும் .. கோவிந்தா சொல் சொன்னது கடன்காரன்-வெட்கம் ..எனக்கே தன்னை தந்த கற்பகம்…தன்னை கேட்டால் தான் திருப்தி அவனுக்கு..நாங்கள் கொள்வான் அன்று- நீ கொள்ளாமல் போக முடியாது..ஆண்டாள் கைங்கர்யம் பெற்று கொள்ள தான் அவன்.. வந்தாய் போலே வாராதே வாராதே போலே வருவான்-மேகம் போலே..ஏரி வெட்டி வைத்தால் பெய்த மழை நீரை சேர்த்து வைக்கலாம்..கிருபை பொழிய மனசை தயார் படுத்தி வைத்து கொள்ள வேண்டும்-வனத்திடை ஏரி யாம் வண்ணம்-மாரி யார் பெய்விப்பார் மற்று -ஆம் ஆறு அறியும் பிரான் அவன் ஒருவனே-கிருபை எங்கும் அனாலோசித்த லோக சரண்யன்..பொழிவான்.. ஸ்தல ஜல விபாகம் இன்றி -வாரி வாரி வழங்குவான் சப்தம் இன்றி மழை பொழியும் பொழுது கர்ஜிக்காது விராட பர்வதம் பாராயணம் பண்ணினால் மழை பொழியும் இவனுக்கும் திரு வாய் மொழி பாட வருவான் .. திரு புலி ஆழ்வார் இடம் வந்து தாளம் கொடுத்து பாடல் வாங்கி போவான் சொல் பணி செய் ஆழ்வார்.. சொல்கள் வந்து நம்மை கொள்ளும் என்று பணி செய்தனவாம் ஆழ்வாருக்கு .. எய்தற்கு அரியமறைகளை ஆயிரம் இன் தமிழால் -ஏற்றம்-மழை பொலிந்து முத்து சிப்பியில் திவலை புகுந்து -கிருபை திவலை ஆழ்வார் சிலரை ஆக்கும்.. மேக விடி தூது -தூது விடுவார் கண்ணனையும் இன்னார் தூதுவன் என்று நின்றான்-எவ்வுள் கிடந்தான்.. -கிடந்தது திரு பாற்கடலில் அவதாரம் பண்ணி மீண்டும் திரு பாற்கடல்- கடலில் முகந்து பொழிந்து நீர் மீண்டும் கடலில் போவது போல்…கரை புரண்டு ஓடும் காவேரி ஆறே -அரவம் சுமப்பதே அஞ்சன மலையே -அம் மழை பூத்ததே அரவிந்த வனமே பெருமாள் தான் தாமரை பூ காடு-அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே ..-ஒண் மிதியில் -ஒரு கால் நிற்ப -ஒவ் ஒன்றும் அத்வதீயம் மற்று ஒரு கால் சொல்ல வில்லை -இதை போல் அது இல்லை வைபவம் வேறு -ஒருத்தி மகனாய் பிறந்து -ஒருத்தி மகனாய் ஒழித்து வளர போல்.. இருவருக்கும் தனி தனி பிரபாவம் அபயபிரதான திரு கை வலது/சார்ங்கம் தளும்புகொண்டது திரு கை/. இப் படி அனைத்துக்கும் ஏற்றம் சொல்லி திரு கண் -ஏற்றம் இருந்தாலும் ஞானம் இல்லாத அடியேனை கடாஷித்து ஏற்றம் மிக்கவை-கடல் போய் கடலில் படுத்ததாம் குண கடல் இவன்..சகல கல்யாண குண கடல்-ஏறும் புற கடல் சுருதி சாகரம் குறிக்கும் கடல்-ஷீரார்ணவ நிகேதன -முத்து பவளம் போல் -ஈறில-வன் புகழ் ஈறில ஒண் பொருள்-ஜீவாத்மாவும் எண்ணி தலை கட்ட முடியாது -பச்சை மா மலை போல் மேனி-பவள வாய்-கமல செம்கண் -குணம் விபூதி இல்லை என்போரின் மிடற்றை பிடிப்பது போல் அருளுகிறார் கழுத்தை-குணம் கிடையாது -துர் குணம் இல்லை-தோஷ ராகித்யம் குண சாகித்யம்- அகில ஹேய பிரத்நீயகன் கல்யாண ஏக ஸ்தானனாய்-அனந்தன் -தோஷமும் குணமும் எண்ண முடியாது -இதில் சாம்யம்-நமக்கு நம் தோஷமும் குணமும் எண்ண முடியாது ஆனந்தம் ஒன்றையே அளக்க முடியாது -வல் அரக்கர் தயரதன் பெற்ற -மரகத மணி தடம்-காவேரி நடுவில் ஜல பிரவாகம் குண பிரவாகம் சயனித்து -கிருபை ஆறு போல் பெருகி வர -நிலை பெற்று நிற்க -எதிர் நீச்சல் போடுவது கஷ்டம்தெப்ப கட்டை போல் திரு மண தூண்கள்.. மாயோனை மண தூணை பற்றி நின்று வாயார பாட ..உடல் உருகுமாலோ என்செய்வேன் உலகத்தீரே - நாராயண பர ஷீரான்வ வியூகம் //நார =அப்பு அயனம்- அதை பார் கடல் அர்த்தம் பண்ணி ஷீரார்ணவ நிகேதணன்-சௌரி பெருமாள்-.திரு மாலை -கடல் கிடந்த பெருமானை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேன் -கடல் அடைந்தார் -தீர்த்தவாரி -மாசி மகம்.. கிடந்தார் அடைத்தார் -சார்ங்கம் வைத்து இருக்கிறார் .. வங்க மலி தடம் கடலுள் …வரி அரவின் அணை துயின்ற செம் கமல நாதன் இழந்தேன் என் சேரி வழியே கொங்கு மலி-மனம் நிறைந்த -கரும் குவளை கண்ணாகா செம் கமலம் முகமாக கொண்ட திரு கண்ண புரம் -தாமரையை அலற்தது குவளையும் ஒரே காலத்தில் அலறாது-செம் கமலம் முகம் அலர்த்தும் -குவளை அலர அதை கண்ட பெண்கள் முகம் செம் கமல பூ போல் இருக்க -அர்த்தம்-வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு துள்ளு நீர் -திரு அடி தொட்டு போகிறதாம்-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஸ்ரீரானவ சௌரி பார்த்தோம் -நமக்காக கடலில் கிடக்கிறான்..-மந்திர ஆலோசனம் -திரு பார் கடல்-கூப்பாடு கேட்க்கும் இடம் -ராஜா தர்பார் ஸ்ரீ வைகுண்டம் -அடியோங்கள் கூக்குரல் கேட்க்க இங்கு வந்து சேவை சாதிக்கிறான் நாக பர்யங்க உத்திஷ்ட -உத்க்ருஷ்ட்ட -எழுந்து இருந்து திரு கண்ண புரம் வர ..மதுரா நகர் வந்து பின்பு திரு கண்ண புரம் கிருஷ்ணா புரி.. பல தலை இருக்கிற இடம் விட்டு ஒரு தலை இருக்கும் இடம் வந்தான் ..-அவனின் ஒரு தலை கீழ்; நாம் இருக்கிறோம். மதுரையிலும் அவன் கீழ் பலர் ..விஷம் விட்டு இனிப்பு வந்தான் மதுரா புரி மதுரம் இருக்கிறது ..மாதுர்யம் -ஜலம் விட்டு ஸ்தலம் வர எழுந்தான்..ஸ்திரமாக -நகரம் மதுரா புரி வந்தான்..ஆகதாக வந்து சேர்ந்தான்.. நடந்த நடை அழகு கோட்டம் கை வாமனனால் செய்த கூத்துக்கள்….பருத்தவன் படுத்து -மொசு மொசுப்பு ஏரி- வெள்ளி பரு மலை குட்டன் -பெயர்ந்து அடி இடுவது போல் ஆகதாக -பேர்ந்து உதற மூரி நிமிர்ந்து -இங்கனே போந்து அருளி- யானை போல் நடந்து சதுர் கதி சிம்கம் யானை புலி எருது பாம்பு-தேஜஸ்/பெருமை/கோபம்/கர்வம்/தோற்ற நடக்கிறான்..அர்ஜுனன் -தேர் முன் நின்று அம்பை தான் பெற -பார்த்த சாரதி திவ்ய முக மண்டலம்.. லவ தேசமும் கோபம் படாமல் அர்ஜுனனை தொட்டதும் ஆகதாக-ஓடி வந்து காட்டினான்..கள்வ பொருத்து அருள்-அனைவரும் சேவிக்க -ஆகாத -கோவிந்தன் காளை புகுத்த கனா கண்டேன்..பருவம் மேனானிப்பு தோற்ற..வந்தான் மதுரையில் புகவான் இளவரச வைகுண்ட குட்டன் ..வனுளர் அறியலாகா வானவா -கோப குமாரத்திகள் கூட பார்க்கும்படிஆகதக .. திரு கை தல சேவை..வட வரை நின்றும் வந்து -ஆகதாக இன்று கண புரம் - திரு கண்ண புரம் மதுரா புரி இனி பார்ப்போம் சன்மம் பல பல செய்து-மீனோடு -கற்கியும் ஆனான்..கிருஷ்ணன் பரம சுலபன்..வடவரைநின்றும் வந்து இன்று கண புரம்-அனுகரித்து தரிக்க பார்கிறார் திரு மங்கை இதில்..-கோபிமார்கள்/ஆண்டாள் நம் ஆழ்வாரும் இது போல் அனுகரித்தார்கள்..அவனை போல் நடித்து.. காளிங்கன் போலவும் கூட -பிரிவாற்றாமை தீர்த்து கொள்ள ..கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் ஆழ்வார்..ஆண்டாள் கொபிமார்களா அணு கரித்தார் திருமங்கை ஆழ்வாருக்கு எல்லாம் அர்ச்சை என்பதால் இப்படி அனுகரிகிறார் -பிடி தோறும் நெய் அரசகுமாரர் போல் அடி தோறும் அர்ச்சை சேர்த்து ..வடதிரு வேம்கடம் மேய மைந்தா -மன்றம் அர மகிழ்ந்தாய்- மண்டினார் உய்யல் அல்லால் மற்று யார் உய்யலாமே தூது ஊடல் எல்லாம் அர்ச்சை.-திரு வேம்கடம் உடையான் தான் -சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அனையான் இங்கும் அங்கு இருந்து கண புரம்..மெட்டு இடத்தில் குதித்து வந்தான் ஸ்ரீ வைகுண்டம் இருந்து வந்து ..கல்லும் கணை கடலும் வைகுண்ட மா நாடும் அர்ச்சைக்கு பிரதிநிதி .. திருவேம்கடம் மதுரா புரிம்-அதுவே திரு கண்ண புரம்-மதுரா நாம நகரி புண்யா-பாப ஹரி-சுப -மங்கலம் கொடுக்கும் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -இரண்டும் அருளும் மதுரா நகரம்.. கண்ணனுக்கு இதனால் ஆசை- அவனுக்கு ஆசை அடியார்கள் உடன் கூடுவது பிரிவு அநிஷ்டம் பிரிவு - இது திருபாற் கடலில் நடக்க வில்லை -இடையர் கோபிமார்களுக்கு -அங்கு ப்ரகுமாதிகள் மட்டுமே வருவர் -ஸ்ரீ வைகுண்டம் அயோதியை-முற்றுகை இட்டு தகர்க்க முடியாது ..ஹி -சப்தம் -நாக பர்யங்கம் -முன் வைத்தார்..அவன் தான் வந்தான்-அவன் அன்றோ -இதற்க்கு தானே வந்தான் -பூ பாரம் தீர்ப்பதற்கு அன்றோ வந்தான் பிரசித்திஎன்பதால் ஹி சப்தம்..நீக்குதற்கே வந்தான் ஏகாரம் ஹிஆகாத -நடந்து..பாற் கடல் ஜட பொருள் -சம்பந்தம் -நடக்கும் நடையிலே நாகரிகம் தோற்ற வந்தானாம் -நகர சம்பந்தம்.. நாராயணனோ என்னில் ஹி- மதுரா பதி வந்தான்.. அவரா வந்தார்-அது போல்-காரண பூதன் பரன் வந்தான்-வந்ததும் அலங்கார பண்ணி கொண்டான்..தனுர் யாகம் வியாஜ்யம் -விட்டில் பூச்சி விளக்கில் விழுந்து மடிவது போல் பூதனை கேசி போல்வார் மடிய..ஆயல் குளத்தில் தோன்றும் அணி விளக்கு வெம் கதிரோன் அணி விளக்கு ஸ்ரீராமன்..போனவர் வர வில்லை-பக்தர்கள் அங்கெ அவனுக்கே என்று இருக்க -ஸ்ரீ ராமன் சத்ருகளை மிச்சம் வைத்தே முடித்தான்.. யாகம் சம்ரட்ஷனம் பொழுது மாரீசனை ஒட்டி சுபாகு முடித்தான்….கர தூஷணர் -சூர்பனகை காதையும் மூக்கையும்/ /அகம்பனனை 14000 பெயரில் ஒருவனை விட்டான் நடுக்கம் இல்லாதவன் ராவணன் முன் ராமன் பெருமை பேசி நடுக்கம் இல்லாதவன்..வந்து வந்து வல் அரக்கர் புக்கு அழுந்த -வில் யாகம் -தவள மால் யானை கொன்ற -ஆசை உடன் பிறந்த தேசம் வந்தான் ஆகத-கயல் விழி வேல் மான் கெண்டை விழி கொண்டு பருக.. சந்தானம் அலங்காரத்தில்-நாறிய சாந்தம் நமக்கு நல்க -கேட்டு சாத்திக் கொண்டான் முன்பு -கூனி திரி விக்ரா இடம்..காதல் காமம் பிரேமமே சந்தானம்.. -மாலா காரர் குடிசை- ஏஷா நாராயண ஸ்லோஹம் சொல்லி கொள்கிறான் அங்கு -என் குடிசைக்கு எதை இல்லாம் விட்டு வந்தாயே பிரசாதம் -அலமந்து போக -தாய் தந்தையர் உடன் சேர்ந்தது இஷ்ட பிராப்தி கம்சனை முடித்து அநிஷ்ட நிவ்ருத்தி../ஸ்ரீ மான் ஹி ஆகாதா மதுரா புரி- அடுத்து -திரு மகள் கேள்வன்-விரதம் குலைத்து பல தாரம் திரு மனம் கொள்ள -16008 பெயரையும்..சுப்ரபாதகி ரஜனி-வண்டுகள் தேனை பருக -கண்ணனின் திரு முக தாமரையில் வழியும் தேனை பருக -வண்டுகள் போல் மதுரா பெண்கள்..எல்லாம் கண்ணனுக்கு பல .. தேர் அணிந்த அயோத்தியர் கோன் பெரும் தேவி கேட்டு அருளாய்-பெருமை உடைய தேவி -சிறிய தேவி யாரும் இல்லை..அவனின் பெருமைக்கு தக்க தேவி -அவனுக்கே பெருமை கொடுக்கும் தேவி..இளவரசன் நாடு பிடித்து இள அரசிகளை திரு மணம் கொண்டவன்- கடலில் இருப்பவன் ஸ்ரீ மான் ஆனா பின்பு குடுத்தனம் பண்ண மதுரா புரம் வந்தான்.. திரு மேனி தர்சனம் காட்டி கொண்டு-சம்சாரம் கொடி அறுக்க -தந்தை காலில் பெரும் விலங்கு தான் அவிழ ..-புஜங்க சய்யை விட்டி புஜங்க சம்பர்தம் காமிநிகளின் நெருக்கம் வேண்டி வந்தான்…திரு கண்ண புரத்துக்கு வந்தான்-தாய் பேச்சு .உண்ணும் நாள் இல்லை - உறக்கம்,உம தான் இல்லை ..ஊன் இல்லை சொல்லாமல் நாள் இல்லை கண்ணனூர் கண்ண புரம் -இந்த்ரன் கொடுத்த அமிர்தம் உண்டாள் சீதை அந்த நாளும் இல்லை.. பர கால நாயகிக்கு ஏற்றம் -உறக்கமும் தான் இல்லை என்று கூட்டி சொன்னது .லஷ்மணன் கைங்கர்யம் -உறக்கம் வந்தது சிரமம் பட்டு ராமனை பார்த்து கொண்டான் வர வில்லை என்கிறார்..பெண்மையும் சால நிறைந்து இலள் பேதை தான் முதல் பருவம் - கண்ணன் நூற் கண்ண புரம் கார் கடல் வண்ணர் மேல் -இதில் தான் பர கால நாயகிக்கு வியாவர்த்தி கண்ணன் தாரகம் போஷகம் போக்கியம் ஆழ்வார் இவரோ கண்ண புரம் என்று இருக்கிறார் உம அடியார் எல்லோரோடும் ஒக்க எண்ணி இருந்தீரோ பாசுர அர்த்தம்.. -பரி மள ரெங்க நாதன் -வாழ்ந்தே போம்..பாரிப்பு உடன் சேவிக்க வந்தவருக்கு சேவை கிட்ட வில்லை ஊன் அத்யாயம் படிப்பது போல்-பரிமாற்ற வந்தவர் ஆண் பாவத்திலே ஊடல் பாசுரம் .தீ மணம் கெடுத்தாய் மருவி தொழும் மனமே தந்தாய் சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே -நடந்து காட்ட வேண்டாமா -அர்ச்சக பராதீனன் நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் -உம அடியாரோடும் எல்லோரோடும் ஒக்க -நம் ஆழ்வாரை கழிக்கிறார் -நான்கு பதிகம் விச்லேஷம் சம்ச்லேஷம் அருளுவார் மலையாள ஊட்டு போலேகுருக்கும் ஒக்கலை வாசனை வார்த்தை உடன் சேர்ந்து நிறைய பாடுவார் -தூது தூவிலய மலர் பதிகம் நான்கு பாசுரம் முடிந்த பின்பு ஒ மண் அளந்த தாடாளா நேராக பாடுவார் பர கால நாயகி-இவருக்கு எல்லாம் கண்ண புரம் ..ஆழ்வாருக்கு கண்ணன்.கண்ணனூர் கண்ண புரம் தொழும் காரிகை-திரு ஆய்ப்பாடி 10 வருஷம் திரு கண்ண புரம் 64 யுகம் நித்ய வாசம் இது தானே .. துவாரகையும் மதுரையும் கண்ண புரம் சொல்லலாமா கேள்வி..உறையும் கோனார் இங்கு தானே..மதுரமான புரி- கண்டவர் தம் மணம் வழங்கும் கண்ண புரம் மதுரா புரி..கம்சபோன்றோர் சேர் இடம்மதுரை .. கற்றார் சேர் கண புரம்..-தொன்மையூர் அரங்கம் -புது ஊர் எது-திரு கண்ணபுரம் புதுசாம்..இளமை ஆழ்வாருக்கு கீழ்வீட்டில் ஆசையாம் தானே உபாயம் உபயம் காட்டி கொண்டு திரு கண்ண புரம்- முடவன் தலையில் கங்கை நீர் விழுந்து அனுக்ரகம் பண்ணினது போல் இங்கே அனுபவித்து கிட்ட நித்ய வாசம் பண்ணுகிறான் பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் . திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் . ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . ******************************************* ஆங்கிலத்தில் சில குறிப்புகள்: Lord Indra sat on the banks of the temple tank here in penance, offering prayers to Vishnu. Performing yagna, he installed the images of the Navagrahas, who are faced by the presiding Deity under the main temple tower. As Indra was purified of his sins, devotees believe that prayers to Lord Vishnu here will give relief from all Navagraha doshas. This temple pushkarani (theertham) is the Nithiya Pushkarani tank. Sri: Dearest Sisters and Brothers, AzhwAr said, “ThirukkaNNapuram is Parama praapyam” Now he enjoys saying that one can enjoy all His avtaar anubhavams which we had not enjoyed during His appearance, now at this sthalam of ThirukkaNNapuram. 1. When the ocean grew huge to such an extent to immerse even the Deva lOkms and others, Emperumaan took Mathsyam (fish) avtaar and saved the beings and the worlds. He has the cool, dark eyes. He is the one who appeared as KaNNan with such a sowlabhyam as a cowherd Boy. Such greatest sowlabhyan- Emperumaan, adiyEn- His sEshan- eternal servant- is blessed to have enjoyed seeing Him at ThirukkaNNapuram. 2. Even the huge large fishes get scared and falters at the depths of this milky ocean; when it was churned Emperumaan, the most merciful Lord placed at the center of this deep ocean, the huge manthara mountain; Not only that. He took the huge Tortoise (Koormam) avtaar and carried the huge manthara mountain on His back till the amudham (nectar) was extracted from churning process. (Perhaps, he likes butter for having seen the churning process) This aaccharya bhoothan- the most wonderful Lord - Such greatest Emperumaan, adiyEn- His sEshan- eternal servant- is blessed to have enjoyed seeing Him at ThirukkaNNapuram., 3. When the BhUmi PiraaTTi was in troubled waters, in depths of waters, Emperumaan took the huge Varaaha Moorthy, (Boar) and on His bent horns, brought back the Mother. So strongest is He. Such greatest Emperumaan, adiyEn- His sEshan- eternal servant- is blessed to have enjoyed seeing Him at ThirukkaNNapuram. 4. Lord took the huge ferocious Lion faced Narasinga roopam, malking everyone get scared and run away with fear. He appeared from the pillar and tore open the strong chest of hiraNayan, the terror of Devas, and killed him with His sharp, bent nails. Such greatest Emperumaan, adiyEn- His sEshan- eternal servant- is blessed to have enjoyed seeing Him at ThirukkaNNapuram. 5. He took the small simple, Brahmin Boy form as Vaamanan, and obtained the entire Universe from Bhali. He has no change in Him and is always the Chief and Youthful. Such greatest Emperumaan, adiyEn- His sEshan- eternal servant- is blessed to have enjoyed seeing Him at ThirukkaNNapuram. 6. He appeared as Parasuraman, having His sharp axe as the weapon, killing the twenty-one generations of kings when the raja needhi started decaying. Such greatest Emperumaan, adiyEn- His sEshan- eternal servant- is blessed to have enjoyed seeing Him at ThirukkaNNapuram. 7. He is the One who appeared as Lord Raman, the unparalleled One, and was worshipped by everyone in all worlds. He is the Chief of all, why to talk of His equal..?. He fought angrily at lankA and made all families of asurAs run away shivering with fear. Such greatest Emperumaan, adiyEn- His sEshan- eternal servant- is blessed to have enjoyed seeing Him at ThirukkaNNapuram. 8. Lord appeared as Balaraman, with a shining ear stud in His ears, and the sharp plough in His Hand. He had victory as His very nature. Such most victorious Lord made many kings attain the Veera swargam in the battle filed. Such greatest Emperumaan, adiyEn- His sEshan- eternal servant- is blessed to have enjoyed seeing Him at ThirukkaNNapuram. 9. Emperumaan made the BhUmi PiraaTTi (one who has red bimbha fruit like mouth) happy by reducing and removing her burden by killing the kings in KusukshEthra field. For that, He appeared in the dark night of Krishna ashtami as Kutti KaNNan. Such greatest Emperumaan, adiyEn- His sEshan- eternal servant- is blessed to have enjoyed seeing Him at ThirukkaNNapuram. 10. Mathsyam, Koormam, Varaaham, Narasimham, Vaamanan, First Raman (Parasu), Raman, and latter Raman (Balaraman), KaNNan and then Kalki avtaar. He took all these avatars only for saving us and is here at ThirukkaNNapuram to enable all of us reach Him with such ease. This daasa bhUthan Kaliyan went and enjoyed seeing Him at ThirukkaNnapuram, composes this ten. Those who read this nectar like ten, will have no sins stay with them at all. ** SRI RAMATHARAKKAM 10. In later years Periavar had opportunities to move closely with great and reputed Tamil scholars and literary personalities viz . 'Rasigamani' Shri T.K. Chidhambaranatha mudaliar, who was popularly known as 'T.K.C' and Shri Thiru V.Kalyana sundaranar who was popularly known as 'Thiru vi ka'. The above-mentioned celebrities have done immense services to Tamil literatures. Other important religious service our periavar had done included the installation of 'Urchavamurthi' idols for Kumudavalli Nachiar in Thirukkannapuram temple and Kanakavalli Nachiar in Ekkadu temple situated at two kilometers distance from Thiruvallur Veera Ragava Perumal temple. . ** Vainava ācāriyarkal , Volume 3 Thirukkannapuram Srinivasa Rajagopala Iyengar Snār Piracuram, 1979 ** NAGAPATTINAM, June 11, 2011 Five panchaloha icons were excavated on Thursday from a construction site here at Thirukannapuram. The icons that included a chipped ‘kuthuvilakku', two Devis, a Yoga Narasimhar, and a Narthana Krishnan were found amid shards of earthen pottery. The site, classified as Natham (housing site) land category in revenue records, indicate a possibility of a mutt or a prominent person's house in the area, at the time of burial. The size and make of the icons also indicate that they were kept for worship before burial. The icons were unearthed at a depth of one and a half foot, indicating a possibility of distress burial in the wake of a probable invasion. According to Ramachandran, researcher with the Varalatru Arvalar Kuzhu, the skanda maalai, and karandha magudam adorning the Devis point to the later Chola-style depictions, presumably the 12th or 13th century AD. “Three other places in the district — Keezhaperumpallam, Adhirangam and Koil Kannapur – host stone-scuplted Yoga Narasimhar, similar to the one found here,” Mr. Ramachandran told The Hindu. Further, the Devis with a full-bloom lotus point to Vaishnavite worship, indicating a possible Perumal icon, perhaps buried in its vicinity. Under Saivite worship, the lotuses have a conical form.